பாடம் 1.4 உரைநடையின் அணிநலன்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 1.4 – “உரைநடையின் அணிநலன்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- ம.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியல் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.
- குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராக பணி செய்தவர்.
- மரபுக்கவிதை, புதுக்கவிதை படைப்பதில் வல்லவர்
- இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்.
- புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- எழில்முதல்வன் எழுதிய புதிய உரைநடை என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் மாற்றித் தரப்பட்டுள்ளது.
பாட நூல் மதிப்பீட்டு வினா
ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்பு பற்றி உரையாடுதல்.
உறவினர் மகள் | வணக்கம் ஐயா |
தமிழன் | வணக்கம் |
உறவினர் மகள் | உரையாடல், உரைநடை என்றால் என்ன? |
தமிழன் | நீயும் நானும் பேசினால் உரையாடல். அதையே எழுதினால் உரைநடை. |
உறவினர் மகள் | உரை நடை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து யாது? |
தமிழன் | உரைநடையில் எதுகை, மோனை போன்ற அணிகளோ இல்லை. ஆனால் அடுக்கு மொழிகள் உண்டு. கவிதையானது செயற்கைத் தன்மை கொண்டது. உரைநடையோ இயல்பான ஒழுங்கில் அமையும். |
உறவினர் மகள் | தமிழ் உரை நடையின் வேறு வகைகள் உண்டா? |
தமிழன் | உண்டு. பொதுவாக உரைநடையினை ஆறு பிரிவுகளாக பிரிக்கலாம். விளக்க உரைநடை, அளவை உரைநடை, எடுத்துரை உரைநடை, வருணை உரைநடை, நாடக உரைநடை, சிந்தனை உரைநடை |
உறவினர் மகள் | எனக்கு வருணனை உரைநடைப் பற்றி கூற முடியுமா? |
தமிழன் | கூறுகிறேன். வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள், உயிரினங்கள், பொருள்கள் ஆகியவற்றை வருணிப்பது. |
உறவினர் மகள் | உரைநடையில் ஓசை இன்பம் ஏற்படுமா? |
தமிழன் | எதுகை, மோனை சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உரையாசிரியர்கள் பலர் உரையெழுதி உள்ளனர். எடுத்துக்காட்டாக இரா.பி. சேதுபிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலைக் கூறலாம். |
உறவினர் மகள் | உரைநடையில் இலக்கிய உத்திகள் உண்டா? |
தமிழன் | உண்டு. மு.வ. உரைநடையில் உவமை, எதுகை, மோனை சொல்லாட்சி போன்ற நான்கு உலக உத்திகளைக் கையாண்டுள்ளார். |
உறவினர் மகள் | உரைநடையில் மோனை நயம் உள்ளதா? |
தமிழன் | உள்ளது சான்றாக, இரா.பி. சேதுபிள்ளையின் “தமிழ் விருந்து” என்னும் நூலில் “கலையும் கற்பனையும்” என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் “மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது. |
உறவினர் மகள் | மோனையும், இயைபும் வருவது போல் உரைநடை சொல்லுங்கள் ஐயா! |
தமிழன் | சொல்கிறேன். இரா.பி.சேதுபிள்ளையின் “உமறுப்புலவர்” என்னும் கட்டுரையில் “பாண்டிய நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது. பஞ்சம் வந்தது. பசி நோயும் மிகுந்தது. |
உறவினர் மகள் | ஐயா கடைசியாக, முரண் நயம் பற்றி மட்டும் கூறுங்கள் ஐயா! |
தமிழன் | முரண் என்பது முரண்பட்ட இரண்டு சொற்கள் அருகே அருகே அடுக்கி வருதல். இரா.பி. சேதுபிள்ளையின் “ஊரும் பேரும்” என்னும் நூலில் “வாழ்வும் தாழ்வும்” நாடு நகரங்களும் உண்டு. “சீரும் சிறப்பும்” உற்று விளங்கி சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியங்கள் போல் பொலிவிழந்து உள்ளது. |
உறவினர் மகள் | மிக்க நன்றி ஐயா. தங்களிடமிருந்து உரைநடையின் சிறப்பினை நன்கு அறிந்த கொண்டேன். |
தமிழன் | வணக்கம். |
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1963
- 1973
- 1983
- 1993
விடை : 1983
2. முதல் தமிழ்க்கணினிக்கு சூட்டப்பட்ட பெயர்
- திருவள்ளுவர்
- தொல்காப்பியர்
- அகத்தியர்
- கம்பர்
விடை : திருவள்ளுவர்
3. புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
- க.அப்பாத்துரை
- எழில் முதல்வன்
- பாவாணர்
- இளங்குமரனார்
விடை : எழில் முதல்வன்
4. எழில் முதல்வனின் இயற்பெயர்
- க.அப்பாத்துரை
- மா. இராமலிங்கம்
- பாவாணர்
- இளங்குமரனார்
விடை : மா. இராமலிங்கம்
5. எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
- இனிக்கும் நினைவுகள்
- யாதுமாகி நின்றாய்
- புதிய உரைநடை
- எங்கு காணினும்
விடை : புதிய உரைநடை
6. உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றி பெறுவது உவமையை விட ________
- எதுகை
- மோனையே
- உருவகமே
- இயைபு
விடை : உருவகமே
7. சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?
- சங்க இலக்கியம்
- உரைநடை இலக்கியம்
- பக்தி இலக்கியம்
- சிற்றிலக்கியம்
விடை : உரைநடை இலக்கியம்
8. உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும் என்றவர்
- தொல்காப்பியர்
- அகத்தியர்
- கம்பர்
- தண்டி
விடை : தண்டி
9. இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல வடபுறமும் தென்புறமு் நிறைந்த கண்மாய்கள் என்று குறிஞ்சி மலர் நூலில் நா.பார்த்தசாரதி பயன்படுத்திய நயம்
- உவமை
- உருவகம்
- எடுத்துக்காட்டு உவமையணி
- பொருள் பின்வருநிலையணி
விடை : உவமை
10. எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில பயன்படுத்துவதை _____ என்பர்.
- முரண்படு மெய்மை
- இலக்கணை
- சொல் முரண்
- இணை ஒப்பு
விடை : இணை ஒப்பு
வினாக்கள்
1. உரைநடையின் பிரிவுகள் யாவை?
பொதுவாக உரைநடையினை ஆறு பிரிவுகளாக பிரிக்கலாம்.
- விளக்க உரைநடை
- அளவை உரைநடை
- எடுத்துரை உரைநடை
- வருணை உரைநடை
- நாடக உரைநடை
- சிந்தனை உரைநடை
2. வருணனை உரைநடைப் பற்றி கூறுக.
வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள், உயிரினங்கள், பொருள்கள் ஆகியவற்றை வருணிப்பது.
3. முரண் என்றால் என்ன?
முரண் என்பது முரண்பட்ட இரண்டு சொற்கள் அருகே அருகே அடுக்கி வருதல் முரண் எனப்படும்.
4. திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலையை குறிக்கும் அடிகள் பற்றி எழுதுக
“வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”
சிலப்பதிகாரம், காடுகாண் காதை : 53-55