Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 1.4 – கோபல்லபுரத்து மக்கள்

பாடம் 1.4 கோபல்லபுரத்து மக்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 1.4 – “கோபல்லபுரத்து மக்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

  • புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி.
  • இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 – 1997).
  • இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.
  • அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம்.
  • அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
  • ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.
  • வேலைக்காக இந்தோனேசியா சென்றார்.
  • மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினாார்.
  • இவர் அன்றைைய சூழலில் அவருடைய சேமிப்பாான 7.5 இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினாார்.

மேலும் சில தகவல்கள்

  • கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை கோபல்லபுரத்து மக்கள்.
  • 1991-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது.
  • கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
  • 20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதை சொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
  • இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன;
  • இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
  • இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் கரிசல் இலக்கியம் என்று அழைக்கப்டுகின்றன.
  • எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடுகிறார்.

பாடம் 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 3.4 – “கோபல்லபுரத்து மக்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

  • கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை கோபல்லபுரத்து மக்கள்.
  • ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
  • இதன் ஒரு பகுதியே இங்கு பாடமாகத் உள்ளது.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது.
  • 1991-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது.
  • கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
  • 20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதை சொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
  • இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன;
  • இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
  • இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் கரிசல் இலக்கியம் என்று அழைக்கப்டுகின்றன.
  • எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடுகிறார்.

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

குறிப்புச்சட்டம்
முன்னுரை
அன்னமய்யாவுடன் வந்த வாலிபன்
நீச்சுத்தண்ணீர்
ஜீவ ஊற்று
அன்னமய்யாவின் மனநிறைவு
பெயர் பொருத்தம்
பரமேஸ்வரன் (மணி)
முடிவுரை

முன்னுரை:

கோபல்லபுரத்து மக்கள் என்ற கதை சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை இக்கதையில் காண்போம்.

அன்னமய்யாவுடன் வந்த வாலிபன்:

சுப்பையாபுவுடன் புஞ்சையில அன்று அருகு எடுக்கும் வேலை. அன்னமய்யா வேலைக்கு ஒரு ஆளை அழைத்து வந்தார். அன்னமய்யாவுடன் வந்து சன்யாசியோ, பரதேசியோ இல்லை. கிட்ட போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன். வாலிபனது தாடியும், அழுக்கு ஆடையும் தள்ளாட்டம் அவனை வயோதிபனைப் போலவும் சாமியாரைப் போலவும் காட்டியது.

நீச்சுத்தண்ணீர்:

அன்னமய்யாவைப் பாரத்த அவ்வாலிபன், குடிக்கத் தண்ணி கிடைக்குமா? எனக் கேட்டான். அதற்கு அன்னமய்யா நீச்சுத் தண்ணீ தரவா? எனக் கேட்டான். கரிசல் மண்ணில் பாதி புதைக்கப்பட்டு இருந்த கரிய மண் பாத்திரத்தின் வாய் கற்களால் மூடப்பட்டிருந்தது. அன்னமய்யா மண்பாத்திரத்தின் மேலிருந்த கல்லை அகற்றினான்.

ஜீவ ஊற்று:

அன்னமய்யா கலசத்திலிருந்து கஞ்சின் நீத்துப்பாகத்தைச் சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தான். நீத்துப் பாகமாகிய மேல் கஞ்சை வாலிபன் குடித்தும் கலயத்தை அலசி தெளிவு மறைந்த சோற்றின் மகுளி கஞ்சையும் வாலிபனுக்கு ஊற்றிக் கொடுத்தான் அன்னமய்யா. வாலிபனுக்குள் ஜீவ ஊற்று பொங்கியது. அவன் உற்சாகம் அடைந்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

கஞ்சியைக் குடித்த வாலிபன் வேப்ப மர நிழலைச் சொர்க்கமாய் நினைத்துத் தூங்கினான். இதைக்கண்ட அன்னமய்யாவுக்கு மனநிறைவு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்து அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் போலவே அவ்வாலிபனையும் பார்த்தான்.

பெயர் பொருத்தம்:-

தூக்கம் தெளிந்து எழுந்த வாலிபன் “உன் பெயர் என்ன?” என்று அன்னமய்யாவிடம் கேட்டான். அதற்கு அவன் அன்னமய்யா என்றார். எவ்வளவு பொருத்தம். “எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்” என் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது என்று மனதுக்குள் கூறினான் அவ்வாலிபன்.

பரமேஸ்வரன் (மணி):

அன்னமய்யா அந்த வாலிபன் பெயரைக் கேட்டார். அவன் தன் பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான். கம்மஞ்சோறும் துவையலும் கொடுத்தார்கள். பசியால் அதையும் உண்டு உறங்கினான்.

முடிவுரை:

அன்னமய்யா என்ற பெயருக்கு ஏற்ப அன்னமிட்டு மனிதநேயம் காத்த அன்னமய்யாவின் பெயர் அவனுக்கே பொருத்தமுடையதாக அமைகிறது. கம்மஞ்சோறும், துவையலும் கரிசல் மண்ணுடன் மணக்கின்றது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை 

  1. கோபல்லபுரத்து மக்கள்
  2. கோபல்லபுரத்து கோகிலா
  3. கோபல்ல சுப்பையா
  4. கோபல்லபுரம்

விடை : கோபல்லபுரத்து மக்கள்

2. கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்

  1. ஜெயமோகன்
  2. ஜெயகாந்தன்
  3. கி. ராஜநாராயணன்
  4. இந்திரா பார்த்தசாரதி

விடை : இந்திரா பார்த்தசாரதி

3. உறையூர் உள்ள மாவட்டம்

  1. பெரம்பலூர்
  2. தஞ்சாவூர்
  3. திருச்சி
  4. கரூர்

விடை : திருச்சி

4. கறங்கு இசை விழாவின் உறந்தை குறிப்பிடும் நூல்

  1. கலித்தெகை
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. நளவெண்பா

விடை : அகநானூறு

5. கி.ராஜநாராயணின் சொந்த ஊர் 

  1. கோபல்லபுரம்
  2. இடைசெவல்
  3. தஞ்சாவூர்
  4. கரூர்

விடை : இடைசெவல்

6. கோபல்லபுரத்து மக்கள் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற ஆண்டு

  1. 1988
  2. 1991
  3. 1994
  4. 1996

விடை : 1991

7. எழுத்துலகில் கி.ரா. என்றழைக்கப்படுபவர்

  1. ஜெயமோகன்
  2. ஜெயகாந்தன்
  3. இந்திரா பார்த்தசாரதி
  4. கி. ராஜநாராயணன்

விடை : நெருப்பு

8. கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர்

  1. ஜெயமோகன்
  2. கி. ராஜநாராயணன்
  3. தேவநேயப் பாவாணர்
  4. இந்திரா பார்த்தசாரதி

விடை : கி. ராஜநாராயணன்

9. வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகளை தொடங்கியவர்

  1. கி. ராஜநாராயணன்
  2. ஜெயமோகன்
  3. தேவநேயப் பாவாணர்
  4. இந்திரா பார்த்தசாரதி

விடை : கி. ராஜநாராயணன்

10. வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகள் _______ என்று அழைக்கப்படுகின்றன

  1. நாஞ்சில்
  2. நெய்தல்
  3. கரிசல்
  4. கொங்கு

விடை : கரிசல்

11. கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்

  1. நாஞ்சில் இலக்கியம்
  2. கரிசல் இலக்கியம்
  3. புதுக்கவிதை
  4. புதினம்

விடை : கரிசல் இலக்கியம்

12. கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய கரிசல் மண்ணின் படைப்பாளி

  1. பா.செயப்பிரகாசம்
  2. சோ. தர்மன்
  3. கு.அழகிரிசாமி
  4. பூமணி

விடை : கு.அழகிரிசாமி

13. கரிசல் இலக்கியப் பரம்பரைக்குத் தொடர்பில்லாதவர்

  1. வீரவேலுசாமி
  2. வேலராமூர்த்தி
  3. ந.பிச்சமூர்த்தி
  4. பூமணி

விடை : ந.பிச்சமூர்த்தி

பொருத்துக

1. பாச்சல்அ. சோற்றுக்கஞ்சி
2. பதனம்ஆ. மேல்கஞ்சி
3. நீத்திப்பாகம்இ. கவனமாக
4. மகுளிஈ.பாத்தி
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக

1. வரத்துக்காரன்அ. புதியவன்
2. சடைத்து புளித்துஆ. சலிப்பு
3. அலுக்கம்இ. அழுத்தம்
4. தொலவட்டையில்ஈ. தொலைவில்
விடை : 1 – அ, 2 – ஆ, 3 – இ, 4 – ஈ

குறுவினா

1. வட்டார வழக்குச் சொற்கள் சிலவற்றை தொகுத்து எழுதுக

  • பாச்சல் – பாத்தி
  • பதனம் – கவனமாக
  • நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
  • கடிச்சு குடித்தல் – வாய்வைத்துக் குடித்தல்
  • மகுளி – சோற்றுக் கஞ்சி
  • வரத்துக்காரன் – புதியவன்
  • சடைத்து புளித்து – சலிப்பு
  • அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)
  • தொலவட்டையில் – தொலைவில்

2. கோபல்லபுரத்து மக்கள் நூற்குறிப்பு தருக

  • கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை கோபல்லபுரத்து மக்கள்.
  • ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது.
  • 1991-ம் ஆண்டிற்கான “சாகித்திய அகாதெமி” பரிசினைப் பெற்றது.

3. கி.ராஜநாராயணன் குறிப்பு தருக

  • கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
  • 20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதை சொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
  • இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன;
  • இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
  • இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்டுகின்றன.
  • எழுத்துலகில் இவர் ‘கி.ரா.’ என்று குறிப்பிடுகிறார்.

4. திருச்சி மாவட்டம் உறையூர் பற்றி அகநானூறு வரிகள் பற்றி எழுதுக

“கறங்கு இசை விழவின் உறந்தை…..”

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment