Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 2.2 – காற்றே வா!

பாடம் 2.2 காற்றே வா!

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 2.2 – “காற்றே வா!” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • மயலுறுத்து – மயங்கச்செய்
  • ப்ராண – ரஸம் – உயிர்வளி
  • லயத்துடன் – சீராக

நூல் வெளி

  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்.
  • எட்டையபுர ஏந்தலாக அறியப்பட்டவர்.
  • கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், ஆசிரியர், இதழாசிரியர் கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
  • சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தம் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்.
  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்.
  • இந்தியா, சுதேசிமித்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
  • பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;
  • இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

1. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

  1. உருவகம், எதுகை
  2. மோனை, எதுகை
  3. முரண், இயைபு
  4. உவமை, எதுகை

விடை : மோனை, எதுகை

குறு வினா

வசன கவிதை – குறிப்பு வரைக

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்
  • ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்
  • தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்

சான்று:-

இல்வுலகம் இனியத, இதிலுள் வான் இனிமை
யுடையது காற்றும் இனிது

 – பாரதியார்

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • சுமந்து, வீசி – வினையெச்சங்கள்
  • மிகுந்த – பெயரெச்சம்
  • நல்லொளி, நெடுங்காலம் – பண்புத்தொகைகள்
  • நல்லலயத்துடன் – குறிப்புப்பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. பாடுகிறோம் = பாடு + கிறு + ஓம்

  • பாடு – பகுதி
  • கிறு – நிகழ்கால இடைநிலை
  • ஓம் – தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி

2. வழிபடுகின்றோம் = வழிபடு + கின்று + ஓம்

  • வழிபடு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஓம் – தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

1. பொருந்தாத இணையைக் கண்டுபிடி

  1. மயலுறுத்து – மயங்கச்செய்
  2. ப்ராண – ரஸம் – உயிர்வளி
  3. லயத்துடன் – சீராக
  4. வாசனை – மனம்

விடை : வாசனை – மனம்

2. “நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா” என்று பாராட்டப்பட்டவர் …………..

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. கவிமணி
  4. சுரதா

விடை : பாரதியார்

3. “சிந்துக்குத் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் …………..

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. பாரதியார்
  4. சுரதா

விடை : பாரதியார்

4. “கேலிச்சித்திரம், கருத்துப்படம்” போன்றவற்றை உருவாக்கியவர் …………..

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. சுரதா
  4. பாரதியார்

விடை : பாரதியார்

5. “பாட்டுக்காெரு புலவன்” என்று பாராட்டப்பட்டவர் …………..

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கவிமணி
  4. சுரதா

விடை : பாரதியார்

6. “காற்று” என்னும் வசனத் தலைப்பில் வசன கவிதை எழுதியவர் ………………

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. பாரதியார்
  4. சுரதா

விடை : பாரதியார்

7. “ப்ராண-ரஸம்” என்ற சொல் உணர்த்தும் பொருள்………………

  1. சீராக
  2. அழகு
  3. உயிர்வளி
  4. உடல்உயிர்

விடை : உயிர்வளி

8. காற்று எதைச் சுமந்து கொண்டு வரவேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?

  1. கவிதையை
  2. விடுதலையை
  3. மழையை
  4. மகரந்ததூளை

விடை : மகரந்ததூளை

9. ஆங்கிலத்தில் Prose Poetry (Free Verse) என்றழைக்ப்படும் வடிவத்தை தமிழில் அறிமுகப்படுதியவர் 

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கவிமணி
  4. சுரதா

விடை : பாரதியார்

10. “புதுக்கவிதை” என்ற வடிவம் உருவாகக் காரணம் ………

  1. பாரதியின் வசன கவிதை
  2. ஜப்பானியரின் ஹைக்கூ
  3. வீரமாமுனிவரின் உரைநடை
  4. கம்பரின் கவிநயம்

விடை : பாரதியின் வசன கவிதை

11. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் ………

  1. இந்தியா, சுதேசமித்திரன்
  2. இந்தியா, எழுத்து
  3. சுதேசமித்திரன், எழுத்து
  4. கணையாழி, எழுத்து

விடை : இந்தியா, சுதேசமித்திரன்

குறு வினா

1. பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப் பெற்றவர்?

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன், மகாகவி, கலைமகள்

2. பாரதியாரின் பன்முகங்கள் யாவை?

கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், ஆசிரியர், இதழாசிரியர், கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்

3. பாரதியாரின் படைப்புகள் சிலவற்றைக் கூறு.

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி

4. பாரதியார் இதழாசியரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயர்களை எழுதுக

இந்தியா, சுதேசிமித்திரன்

5. வசன கவிதை என்றால் என்ன?

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்

6. புதுக்கவிதை உருவாக காரணம் யாது?

உணர்ச்சி பாெங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டு உள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

7. காற்றிடம் எதனைக் கொண்டுவந்து கொடுக்குமாறு பாரியார் வேண்டுகிறார்?

மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன், இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து மிகுந்த உயிர் வளியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு காற்றிடம் பாரதியார் வேண்டுகிறார்.

8. எப்படி வீசுமாறு காற்றைப் பாரதியார் பணிக்கிறார்?

காற்றை மெதுவாக, நல்ல முறையில் சீராக, நீண்ட காலம் நின்று வீசிக் கொண்டிருக்குமாறு பாரதியார் பணிக்கிறார்.

சிறு வினா

1. “காற்றே வா” பாடலில் பாரதியார் கூறும் செய்தி யாது?

  • மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன் வா
  • இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து வா
  • உயிர் வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாேத
  • நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
  • உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா என்ற பாடலில் பாடுகிறார்.

உனக்குப் பாட்டுகள் பாடுகின்றோம்.
உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்”

2. பாரதியார் குறிப்பு வரைக

  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்
  • கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், ஆசிரியர், இதழாசிரியர் கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி ஆகியன உலகிற்கு தந்த படைப்புகள்
  • இந்தியா, சுதேசிமித்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment