Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 3.2 – காசிக்காண்டம்

பாடம் 3.2 காசிக்காண்டம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 3.2 – “காசிக்காண்டம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • அருகுறை – அருகில்
  • முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

பகுபத உறுப்பிலக்கணம்

1.  உரைத்த – உரை + த் + த் +அ

  • உரை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

2. வருக – வா(வரு) + க

  • வா – பகுதி
  • வரு – எனக் குறுகியத விகாரம்
  • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

இலக்கணக் குறிப்பு

  • நன்மொழி – பண்புத்தொகை
  • வியத்தல், நோக்கம், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
  • வருக – வியங்கோள் வினைமுற்று

நூல் வெளி

  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்
  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ளது.
  • ‘இல்லொழுக்கங்’ கூறிய பகுதியிலுள்ள பதினேழவது பாடல் பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.
  • முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
  • தமிழ்ப் புலவராக திகழ்ந்த இவர் இயற்றி நூல் காசிக்காண்டம்
  • இவர் இயற்றிய வெற்றி வேற்கை என்றழைக்கப்டும் நறுந்தொகை சிறந்த அறக் கருத்துகளை எடுத்துரைக்கிறது.
  • இவரின் பட்டப்பெயர்  சீவலமாறன்.
  • காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

காசிக்காண்டம் என்பது

  1. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
  2. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
  3. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
  4. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

விடை : காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

குறு வினா

விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக

  • வாருங்கள் ஐயா, வணக்கம்!
  • அமருங்கள்
  • நலமாக இருக்கிறீர்களா?
  • தங்கள் வரவு நல்வரவு.

கூடுதல் வினாக்கள்

பகுபத உறுப்பிலக்கணம்

1.  பரிந்து – பரி + த்(ந்) + த் +அ

  • பரி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

2. நோக்கல் = நோக்கு + அல்

  • நோக்கு – பகுதி
  • அல் – தொழிற்பெயர் விகுதி

3.  வந்து – வா(வ) + த்(ந்) + த் +அ

  • வா – பகுதி (வ) எனக் குறுகிறது விகாரம்
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

இலக்கணக் குறிப்பு

  • வந்து – வினையெச்சம்
  • நன்முகமன் – பண்புத்தொகை
  • பொருந்து – வினையெச்சம்

பலவுள் தெரிக

1. காசிக்கண்டத்தை இயற்றியவர் …………….

  1. துளசிதாசர்
  2. ஓளவையார்
  3. பெருஞ்சித்திரனார்
  4. அதிவீரராம பாண்டியர்

விடை : அதிவீரராம பாண்டியர்

2. காசிக்கண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?

  1. பதினோறாவது
  2. பதினேழாவது
  3. பன்னிரெண்டாவது
  4. பதினைந்தாவது

விடை : பதினேழாவது

3. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் ……………

  1. துளசிதாசர்
  2. அதிவீரராம பாண்டியர்
  3. ஓளவையார்
  4. பெருஞ்சித்திரனார்

விடை : அதிவீரராம பாண்டியர்

4. அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர் ……………

  1. சீவலமாறன்
  2. மாறவர்மன்
  3. கிள்ளிவளவன்
  4. மாறன்வழுதி

விடை : சீவலமாறன்

5. அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூல் ……………

  1. நைடதம்
  2. வாயு சம்கிதை
  3. சடகோபர் அந்தாதி
  4. திருக்கருவை அந்தாதி

விடை : சடகோபர் அந்தாதி

6. உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் என்று குறிப்பிடும் நூல் ………………

  1. நளவெண்பா
  2. மணிமேகலை
  3. சீவக சிந்தாமணி
  4. விவேக சிந்தாமணி

விடை : விவேக சிந்தாமணி

7. அருகுற என்பதன் பொருள் ……………….

  1. தொலைவில்
  2. அருகில்
  3. அழவில்
  4. அழுகிய

விடை : அருகில்

8. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் ……………….

  1. 6
  2. 7
  3. 8
  4. 9

விடை : 9

9. வெற்றிவேற்கை, நறுந்தொகை நூல்களின் ஆசிரியர் ……………..

  1. துளசிதாசர்
  2. அதிவீரராம பாண்டியர்
  3. ஓளவையார்
  4. பெருஞ்சித்திரனார்

விடை : அதிவீரராம பாண்டியர்

10. நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்

  1. கொன்றைவேந்தன்
  2. காசிகலம்பகம்
  3. வெற்றிவேற்கை
  4. காசிக்காண்டம்

விடை : வெற்றிவேற்கை

11. பொருந்தாதவற்றைக் கண்டறிக.

  1. நைடதம்
  2. வாயு சம்கிதை
  3. திருக்கருவை அந்தாதி
  4. விவேகசிந்தாமணி

விடை : விவேகசிந்தாமணி

குறு வினா

1. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் எது?

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்

2. காசிக்காண்டம் நூல் குறிப்பு வரைக

  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்
  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ளது

3. அதிவீராம பாண்டியர் இயற்றிய நூல்கள் யாவை?

காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை,  திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம் வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை

4. முகமன் என்னும் சொல் உணர்த்தும் செய்தி யாது?

ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.

5. “பொருந்து மற்றுஅவன் தன் அருகுற இருத்தல்” – தொடர் பொருள் விளக்கம் தருக

தொடர் இடம் பெறும் நூல் – காசிக்காண்டம்

தொடர் விளக்கம் – விருந்தினர் அருகிலேயே விருந்து மேற்கொள்பவர் அமர்ந்து கொள்ளுதல்

சிறு வினா

1. அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக

  • முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
  • தமிழ்ப் புலவராக திகழ்ந்த இவர் இயற்றி நூல் காசிக்காண்டம்
  • இவர் இயற்றிய வெற்றி வேற்கை என்றழைக்கப்டும் நறுந்தொகை சிறந்த அறக் கருத்துகளை எடுத்துரைக்கிறது.
  • இவரின் பட்டப்பெயர்  சீவலமாறன்.
  • காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

2. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் குறித்து காசிக்காண்டம் குறிப்பிடும் செய்தி யாது?

  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, “வீட்டிற்குள் வருக” என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியகா முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும்
  • மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்ககமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment