Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 3.6 – திருக்குறள்

பாடம் 3.6 திருக்குறள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 3.6 – “திருக்குறள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

1. ‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப் படாதவன் – பிறருக்கு உதவி செய்யாதவன்

2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம்  – இன்னிசை அளபெடைகள்

பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்அ. ஒழுக்கத்தின் எய்துவர்
ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது.ஆ. உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்இ. நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

4. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பப்பாடு எது?

  1. கூவிளம் தேமா மலர்
  2. கூவிளம் புளிமா நாள்
  3. தேமா புளிமா காசு
  4. புளிமா தேமா பிறப்பு

விடை : கூவிளம் தேமா மலர்

சிறு வினா

வேலோடு நின்றான் இடஎன்றது போலும்
கோலோடு நின்றாள் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

இப்பாடலில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்:-

உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும், உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

உவமை:-

வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்தல்

உவமேயம்:-

ஆட்சி அதிகாரத்தை கொண்டு மன்னர் வரி விதித்தல்

உவம உருபு:-

போல (வெளிப்படை)

விளக்கம்:-

ஆட்சியதிகாரத்தை கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தை கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது ஆகும்.

கவியைத் தொடர்க.

தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
பதறுகிறது என் நெஞ்சமடி
வருங்கால சமுதாயம் என்னவாகுமடி
எப்போத தீரும் தன்படம் மோகமடி
மூழ்கியவன் மூச்சு நின்னுப்போச்சு
மனிதநேயம் செத்துப்போச்சு

திருக்குறள் பற்றிய கவிதை:

உரை(றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத போல்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்!

– அறிவுமதி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • எய்துவர், காண்பர் – வினையாலணையும் பெயர்கள்
  • எய்தாப் பழி, தமராக் கொளல், ஏமரா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
  • புகுத்தி – வினையெச்சம்
  • கொடுப்பதூஉம், தூய்ப்பதூஉம் – இன்னிசையளபெடைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

1. எய்துவர் – எய்து + வ் + அர்

  • எய்து – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • அர் – குறிப்பு வினைமுற்று விகுதி

2. புகுத்தி = புகுத்து + இ

  • புகுத்து – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. கீழ்காண்பனவற்றுள் பொருந்தாத இணை எது?

  1. உயிரினும் மேலானது – ஒழுக்கம்
  2. ஒழுக்கமுடையார் – மேன்மை அடைவர்
  3. உண்மைப் பொருளைக் காண்பது – அறிவு
  4. உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்

விடை : உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்

2. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

  1. அழிக்க வேண்டியவை – ஆசை, சினம், அறியாமை
  2. பெரியோரை துணையாக்கிக் கொள்ளுதல் – பெறும்பேறு
  3. நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் – பிறர் நன்மையைக் கருதுபவர்
  4. ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்

விடை : ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்

3. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி எது?

  1. உருவக அணி
  2. உவமையணி
  3. ஏகதேச உருவக அணி
  4. எடுத்துக்காட்டு உவமையணி

விடை : உவமையணி

4. உயிரினும் மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டியது ………….

  1. மெய் உணர்தல்
  2. கண்ணோட்டம்
  3. ஒழுக்கம்
  4. கல்வி

விடை : ஒழுக்கம்

5. “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” பாதுகாக்க வேண்டியது ………….

  1. எதுகை
  2. மோனை
  3. முரண்
  4. இயைபு

விடை : எதுகை

6. “பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்………….

  1. நூல்
  2. பேறு
  3. துணை
  4. அரிய

விடை : துணை

7. “முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்” இதில் “இன்மை” என்பதன் பொருள்………….

  1. இல்லை
  2. முயற்சி
  3. வறுமை
  4. இல்லை

விடை : வறுமை

பொருத்துக

1. மேன்மைஅ. சினம்
2. வெகுளிஆ. உயர்வு
3. மயக்கம்இ. வறுமை
4. இன்மைஈ. அறியாமை
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1.ஒழுக்கமுடைமைஅ. 36வது அதிகாரம்
2. மெய் உணர்தல்ஆ. 14வது அதிகாரம்
3. பெரியாேரைத் துணைக்கோடல்இ. 56வது அதிகாரம்
4. கொடுங்கோன்மைஈ. 45வது அதிகாரம்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. உயிரினும் ஓம்பப்படுவது எது? ஏன்?

  • உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம்
  • ஏனெனனில் ஒழுக்கமானது அனைத்து சிறப்புகளையும் தருகிறது.

2. ஒழுக்கத்தினால் கிடைப்பது எது? இழுக்கத்தினால் கிடைப்பது எது?

  • ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை
  • இழுக்கத்தினால் கிடைப்பது அடையக்கூடாது பழிகள்

3. பலகற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார்?

உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களை கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுபவர்.

4. எப்பொருளை காண்பது அறிவு ?

எந்தப் பொருள் எந்த இயல்பினதாய்த் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மைப் பொருளை காண்பது அறிவு

5. நாமம் கெடக்கெடும் நோய் பற்றி எழுதுக.

  • ஆசை, சினம், அறியாமை அழிதல் வேண்டும்.
  • இம்மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பம் அழியும்.

6. பெரும்பேறு எது?

பெரியோரைப் போற்றி துணையாக்கி கொள்ளுதலே கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.

7. கெடுப்போர் இலானும் கெடுபவர் யார்? ஏன்?

குற்றங்களை கண்டபோது இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்க பகைவர் இன்றி தானே கெடுவான்.

8. நல்லார் தொடர்பை கைவிடல் எத்தன்மையானது?

தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும். ஆகவே நல்லோர் நட்பைக் கைவிடல் கூடாது.

9. ஆட்சியதிகாரம் கொண்டுள்ள அரசன் குறித்துக் கூறப்பட்டுள்ள செய்தி யாது?

  • ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பான்.
  • அரசனது இச்செயலானது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும்.

10. ஆராயாது ஆட்சி செய்யும் மன்னனைக் குறித்து குறள் கூறும் செய்தி யாது?

தன் நாட்டில் நிகழும் நன்மை, தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடும்

11. இரக்கம் இல்லா கண்கள் எதனைப் போன்று பயனற்றது?

  • பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
  • அதைப் போல இரக்கம் இல்லாத கண்களினாலும் பயனில்லை

12. உலகமே உரிமையுதாகும் எப்போது?

நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

13. நஞ்சைக் கொடுத்தாலும்  உண்ணும் பண்பாளர் யார்? ஏன்?

  • விரும்பத்தக்க இரக்ககுணம் கொண்டவர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர்
  • ஏனெனில் பிறர் நன்மை கருத்திக் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவர்.

14. ஒருவருக்கு பெருமை தருவது எது?

  • ஒரு செயலை முடிப்பதற்கு இயலாது என்று எண்ணிச் சோர்வடையக் கூடாது.
  • அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.

15. “செல்வம் பெருகுதல்” “வறுமை வருதல்” எப்போது?

  • முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும்.
  • முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.

கற்பவை கற்றபின்…

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

“சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க…. யாராய் இருக்கும்….” மாட்டு வண்டிய
ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.

“தெரியலப்பா…”

“இறங்கி யாருன்னு பாரு….”

வாட்டசாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன்
ஒருவர் நின்றிருந்தார். .

“ஐயா..நீங்க…”

“வெளியூருப்பா.. வண்டி நின்னு போச்சு…!”

“அப்படியா… வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு.. ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது…”

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில இருந்தோம்.. சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம். இரவுல தூங்கப் போறப்ப… அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில.. கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க… பாவம் படிச்சவரா இருக்காரு…சூழ்நிலை புரியாம… வரமாட்டேன்னு சொன்னாரு, இப்ப வேதனைப்பட்டாரே…

அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
      கல்லார் அறிவிலா தார்.

ஆ) பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
       நாகரிகம் வேண்டு பவர்.

இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
      தாழாது உஞற்று பவர்.

விடை:- 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்.

காரணம்:- 

வண்டிக்காரரின் உடமையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்த சூட்டுக்காரன் உதவ வந்த அவனை ஒதுக்கித் தள்ளினான். உலகத்தானோடு பொருத்தி வாழும் தன்மையற்றவனாய் இருந்ததால் அவன் விபத்திற்குள்ளாக நேர்ந்தது. இவன் கற்றிந்தும் அறிவில்லாதவனே

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment