Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 4.4 – விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

பாடம் 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 4.4 – “விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.

குறிப்புச்சட்டம்
அறிமுகவுரை
பேரண்டம்
விண்மீன்கள்
கதிர்வீச்சும் துகளும்
திரும்புதல்
நிறைவுரை

அறிமுகவுரை:-

இலக்கியங்களில் நிலவிய அறிவியல் கோட்டுபாடுகளைும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம்.

பேரண்டம்:-

பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். “இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியல் இருந்தார்” என்பதை மறுத்தார். “பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை” என்றார்.

விண்மீன்கள்:-

விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிகக் கொண்டிருந்தது. அப்போது ஹாக்கின் “நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிருகின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருக்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது என் விளக்கினார்.

கதிர்வீச்சும் துகளும்:-

“சில நேரங்களில் உண்மையானது புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். எபபடியெனில் கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளிவரமுடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டு கொண்டிருந்தன. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இல்லை என்பதே நேரில் கண்டோம். அப்போது ஹாக்கிங் கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிரவீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்து விடும் என்றார்.

முன்னர் அண்டவெளியல் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருப்பட்டது. ஆனால் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று எங்களிடம் ஹாக்கிங் விளக்கினார்.

திரும்புதல்:-

விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள் போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர்.

நிறைவுரை:-

விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு

  1. 1978
  2. 1988
  3. 1998
  4. 1968

விடை : 1988

2. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்திலுள்ள காட்சிக் கூடங்களின் எண்ணிக்கை

  1. 7
  2. 8
  3. 9
  4. 10

விடை : 10

3. ஸ்டீபன் ஹாக்கிங் _______ என புகழப்படுகிறார்.

  1. தற்காலத்தின் விடிவெள்ளி
  2. தற்காலத்தின் ஐன்ஸ்டைன்
  3. தற்காலத்தின் அரிஸ்டாட்டில்
  4. நம்பிக்கை மனிதர்

விடை : தற்காலத்தின் ஐன்ஸ்டைன்

5. பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர்

  1. வாட்சன்
  2. ஜான் வீலர்
  3. வேர்டுஸ்மித்
  4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

6. கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர்

  1. வாட்சன்
  2. ஜான் வீலர்
  3. வேர்டுஸ்மித்
  4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

7. நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் கணக்கியல் துறையில் லூகாசியன் பேராசிரியர் என்ற மதிப்பு மிகுந்த பதவியை வகுத்த பல்கலைக்கழகம்

  1. டிரான்ஸ்போர்டு
  2. கொலம்பியா
  3. ஆக்ஸ்போர்டு
  4. கேம்பிரிட்ஜ்

விடை : கொலம்பியா

8. ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைத் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னவர் 

  1. சார்லஸ் டார்வின்
  2. ஸ்டீபன் ஹாக்கிங்
  3. ஐன்ஸ்டைன்
  4. ஜான் வீலர்

விடை : ஐன்ஸ்டைன்

9. ஐன்ஸ்டைன் காலத்தில் _______ என்னும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை

  1. E = MC2
  2. E = CM2
  3. F = CM2
  4. F = MC2

விடை : E = MC2

10. ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் இருப்பதாக கூறியதை உலகம் _______ ஆண்டுகளுக்குப் பின் கண்டு கொண்டது.

  1. 50
  2. 100
  3. 150
  4. 200

விடை : 100

11. அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருதினை பெற்றவர்

  1. வாட்சன்
  2. ஜான் வீலர்
  3. வேர்டுஸ்மித்
  4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

12. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு வெளிவந்த ஆண்டு

  1. 1976
  2. 1978
  3. 1986
  4. 1988

விடை : 1988

13. திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை என்பதை குறிப்பிடப்படும் மாவட்டம்

  1. திருச்சி
  2. கரூர்
  3. தஞ்சாவூர்
  4. பெரம்பலூர்

விடை : கரூர்

14. அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் என்று கூறியவர்

  1. ஐன்ஸ்டைன்
  2. நியூட்டன்
  3. எடிசன்
  4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஐன்ஸ்டைன்

15. அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை

  1. ஐன்ஸ்டைன்
  2. நியூட்டன்
  3. எடிசன்
  4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

குறு வினா

1. ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள் யாவர்?

ஐன்ஸ்டைன், நியூட்டன்

2. ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் யாவை?

  • அமெரிக்காவின் உயரிய விருதான, அதிபர் விருது (Presidential medal of Freedom)
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
  • உல்ஃப் விருது (Wolf Foundation Prize)
  • காப்ளி பதக்கம் (Copley Medal)
  • அடிப்படை இயற்பியல் பரிசு (Fundamental Physics Prize)

3. ஸ்டீபன் ஹாக்கிங் பங்கேற்ற தொலைக்காட்சித் தொடர்கள் யாவை?

அடுத்த தலைமுறை

4. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் எந்நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

5. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு நூல் எதனைப் பற்றியது?

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதி 1988-ம் ஆண்டு “காலத்தின் சுருக்கமான வரலாறு” பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பற்றியது.

6. தலைவிதி பற்றி ஸ்டீபன் ஹாக்கிங் கருத்தினை எழுதுக

தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்?

7. கரூர் மாவட்டத்தின் கருவூர் (கரூர்) பற்றிய அகநானூறு வரிகளை கூறுக

“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திரு மா வியல நகரக் கருவூர் முன்துறை”

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment