Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 5.2 – நீதிவெண்பா

பாடம் 5.2 நீதிவெண்பா

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 5.2 – “நீதிவெண்பா” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

நூல் வெளி

  • சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர்
  • இவர் வாழ்ந்த காலம் 1874 – 1950 ஆகும்
  • கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்
  • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
  • சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றார்.
  • அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. அருந்துணை என்பதைப் பிரித்தால் ………………….

அருந்துணை என்பதைப் பிரித்தறிய கிடைப்பது

  1. அருமை + துணை
  2. அரு + துணை
  3. அருமை + இணை
  4. அரு + இணை

விடை : அருமை + துணை

2.  அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

  1. தமிழ்
  2. அறிவியல்
  3. கல்வி
  4. இலக்கியம்

விடை : கல்வி

குறு வினா

செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழுக்கத் தொடர்களாக்குக

கற்போம்! கற்போம்!
அருளைப் பெருக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!
அறிவினைப் பெற கற்போம்!

கற்போம்! கற்போம்!
மயக்க விலக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!
உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • போற்று, பெருக்கி, திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
  • அருந்துணை – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. பெருக்கி = பெருக்கு + இ

  • பெருக்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. திருத்தி = திருத்து + இ

  • திருத்து – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக.

1.  “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி” – என்று இவ்வடிகளில் வரும் தொடை நயம் யாது?

  1. எதுகை
  2. மோனை
  3. இயைபு
  4. முரண்

விடை : மோனை

2. கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம்

  1. காப்பிய இலக்கியம்
  2. பக்தி இலக்கியம்
  3. சங்க இலக்கியம்
  4. நீதி இலக்கியம்

விடை : சங்க இலக்கியம்

3. செய்குதம்பிப் பாவலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்

  1. சதாவதானி
  2. தசதாவதானி
  3. மொழிஞாயிறு
  4. கவிமணி

விடை : சதாவதானி

4. செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை ………..

  1. ஆடல்
  2. பாடல்
  3. ஓவியம்
  4. சதாவனம்

விடை : சதாவனம்

5. ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறியவர் ………….

  1. ஒளவையார்
  2. திருவள்ளுவர்
  3. கபிலர்
  4. செய்குதம்பிப் பாவலர்

விடை : திருவள்ளுவர்

6. செய்குதம்பிப் பாவலர் …………….. வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்

  1. 11
  2. 13
  3. 15
  4. 17

விடை : 15

7. சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்

  1. பாரதியார்
  2. செய்குதம்பிப் பாவலர்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : செய்குதம்பிப் பாவலர்

9. சதாவதானி என்பது …………………..

  1. நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
  2. ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
  3. நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
  4. ஆயிரம் பேருக்கு உணவிடுவது

விடை : நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது

10. செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் பள்ளியும் அமைந்த இடம் …………………

  1. திருநெல்வேலி
  2. தென்காசி
  3. கன்னியாகுமரி
  4. இடலாக்குடி

விடை : இடலாக்குடி

11. தோண்டும் அளவு நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறுவது …………………

  1. நாலடியார்
  2. திருக்குறள்
  3. ஏலாதி
  4. திரிகடுகம்

விடை : திருக்குறள்

12. சதம் என்பதற்கு என்ன பொருள்

  1. ஒன்று
  2. பத்து
  3. நூறு
  4. ஆயிரம்

விடை : நூறு

13. போற்றிக் கற்க வேண்டியது ………………

  1. கல்வி
  2. நூல்
  3. ஒழுக்கம்
  4. பண்பு

விடை : கல்வி

சிறு வினா

1. ஏன் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும் என செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்?

அருளினைப் போக்கி, அறிவை சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்கு தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதனை போற்றி கற்க வேண்டும் என செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்.

2. சதாவதானம் குறிப்பு வரைக

சதம் என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையும், நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தேல சதாவதானம் ஆகும்.

3. செய்குதம்பிப் பாவலர் ஏன் சதாவதான் என்று போற்றப்படுகிறார்?

செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்ப்பெற்றார்.

அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

4. செய்குதம்பிப் பாவலர் குறிப்பு வரைக

  • சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர்
  • இவர் வாழ்ந்த காலம் 1874 – 1950 ஆகும்
  • கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்
  • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
  • சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றார்.
  • அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment