Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 6.2 – பூத்தொடுத்தல்

பாடம் 6.2 பூத்தொடுத்தல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 6.2 – “பூத்தொடுத்தல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

நூல் வெளி

  • கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • தற்பாேது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
  • நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்
  • கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

  1. அள்ளி முகர்ந்தால்
  2. தளரப் பிணைத்தால்
  3. இறுக்கி முடிச்சிட்டால்
  4. காம்பு முறிந்தால்

விடை : தளரப் பிணைத்தால்

சிறு வினா

நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்- நவீன கவிதை
கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்
காம்பழுகிப் போகுமின்னு
விரலாலே பூவெடுத்தா – மாரிக்கு
வெம்பி விடுமென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்
தாங்கி மலரெடுத்தார்- நாட்டுப்புறப் பாடல்

விடை:-

நவின கவிதையில்

பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை, எதற்கும் வருந்தாமல் சிரிக்கும் மலரைப்ப பெண்ணோடு ஓப்பிட்டுள்ளார்.

நாட்டுப்புறப் பாடலில்

பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.

நவீன கவிதை கருத்துநாட்டுப்புறப் பாடல் கருத்து
பூவைக் இறுக்கி முடிச்சிட்டால் காம்பின் கழுத்து முறிவது போல பெண்களின் கழுத்து முறியும்.மரியாகிய பெண் தெய்வத்திற்குக் கையாலே பூப்பறித்தால் காம்பு அழுகிவிடும் என்று கையாலே பூப்பறிக்கவில்லை.
தளப்பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவுவது போல பெண் தளர்ந்தால் வாழ்வு நழுவும்.விரால் பூப்பறித்தால் பயனற்றதாய் வெம்பிவிடும் என்று விரலால் பூப்பறிக்கவில்லை.
வாசலிலே மரணம் வந்து நின்றாலும் வருந்தாமல் சிரிக்கும் பூவைப் போல பெண்ணும் வருத்தங்கள் வந்தபோது அவற்றைச் சுமையாகக் கருதாமல் கும்பத்தைக் காப்பாள்.மேற்கண்ட காரணத்தால் மாரியாகி பெண் தெயவத்துக்குத் தங்கத் துரட்டி கொண்டு பூப்பறித்தார்.

மேற்கண்ட இரு பாடலிலும் பெண்ணை மலரோடு ஒப்பிட்டுப் பாடுவதை அறிய முடிகிறது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • இறுக்கி – வினையெச்சம்
  • தளர – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

இறுக்கி = இறுக்கு + இ

  • இறுக்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

சிரிக்கும்  = சிரி + க் + க் + உம்

  • சிரி – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக.

1. ……………… மனித வாழ்விற்கு அழகூட்டுபவை

  1. கலைகள்
  2. செல்வம்
  3. கல்வி
  4. வெற்றி

விடை : கலைகள்

2. கவிஞர் உமா மேகஸ்வரி எங்குப் பிறந்தார்?

  1. திருநெல்வேலி
  2. தூத்துக்குடி
  3. கன்னியாகுமரி
  4. மதுரை

விடை : மதுரை

3. கவிஞர் உமா மேகஸ்வரி தற்போது வாழ்ந்து வருகின்ற மாவட்டம் ………………..

  1. திருநெல்வேலி, வெங்கடேஷ்வரபுரம்
  2. தூத்துக்குடி, வல்லநாடு
  3. கன்னியாகுமரி, அகத்தீஸ்வரம்
  4. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்

விடை : தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்

4. “இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?” என்ற கவிதையை எழுதியவர் ………………..

  1. இந்திர பார்த்தசாரதி
  2. உமா மேகஸ்வரி
  3. இரா. மீனாட்சி
  4. தாமரை

விடை : உமா மேகஸ்வரி

சிறு வினா

1. பூக்களை தொடுக்கும் போது இறுக்கி முடிச்சிடுவதாலும், தளரப் பினைப்பதாலும் நிகழ்வது என்ன?

  • இறுக்கி முடிச்சிடுவதால் காம்புகளின் கழுத்து முறியும்.
  • தளரப் பினைப்பதால் மலர்கள் தரையில் நழுவும்.

2. பூத்தொடுத்தல் என்னும் கவிதையில் பூவை என்ற சொல் யாரைக் குறிக்கிறது? அப் பூவைத் தொடுப்பது எப்படி?

  • பூவை என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது.
  • மனமாகிய நுட்பமான நூலால் மட்டுமே தொடுக்க முடியும்.

3. கவிஞர் உமா மேகஸ்வரி படைத்துள்ள  கவிதைத் தாெகுதிகளை கூறுக

  • நட்சத்திரங்களின் நடுவே
  • வெறும் பாெழுது
  • கற்பாவை

குறு வினா

கவிஞர் உமா மேகஸ்வரி பற்றி சிறு குறிப்பு வரைக

  • கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • தற்பாேது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
  • நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்
  • கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: