Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 6.3 – முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

பாடம் 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 6.3 – “முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

 • பண்டி – வயிறு
 • அசும்பிய – ஒளிவீசுகிற
 • முச்சி – தலையுச்சிக் காெண்டை

இலக்கணக் குறிப்பு

 • குண்டலமும்  குழைகாதும் – எண்ணும்மை
 • ஆடுக – வியங்கோள் வினைமுற்று
 • கட்டிய – பெயரெச்சம்
 • வட்டச் சுட்டி – குறிப்பு பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

பதிந்து = பதி + த் (ந்) + த் + உ

 • பதி – பகுதி
 • த் – சந்தி
 • ந் – ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • உ – வினையெச்ச விகுதி

நூல் வெளி

 • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழினை குமரகுருபரர் இயற்றினார்.
 • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • இதில் இறைவனையாே, தலைவரையாே, அரசனையாே பாட்டுடைத் தலைவராகக் காெண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
 • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புகிறது.
 • பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
 • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகையாகப் பாடப்பெறும்.
 • குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.
 • இவர் தமிழ், வடெமாழி, இந்துஸ்தானி ஆகிய மாெழிகளில் புலமை மிக்கவர்
 • கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலா வல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்காேவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள்காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்)சிற்றில், சிறுபறை, சிறுதேர்
பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்)கழங்கு, அம்மானை, ஊசல்

பாடநூல் வினாக்கள்

சிறு வினா

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு

கிண்கிணி:-

கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.

அரைஞான் மணி:-

இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.

சிறு வயிறு:-

பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.

நெற்றிச் சுட்டி:-

பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்ட வடிமான சுட்டி பந்தாடியது.

குண்டலங்கள்:-

கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழுகளும் அசைந்தாடின.

உச்சிக் கொண்டை:-

உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டுப்பட்டுள்ள ஒளியுள் முத்துகளோடு ஆடியது.

ஆடுக:-

வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக

பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

 • செங்கீரை, செம்பொன்னடி, பைம்பொன், சிறுங்கிணி – பண்புத்தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

ஆடுக = ஆடு + க

 • ஆடு – பகுதி
 • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

1. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் …………………

 1. குமரகுருபரர்
 2. இராமலிங்க அடிகள்
 3. தாயுமானவர்
 4. செயங்கொண்டார்

விடை : குமரகுருபரர்

2. செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் ……………… பருவம்

 1. ஐந்தாவது
 2. நான்காவது
 3. மூன்றவாவது
 4. இரண்டாவது

விடை : நான்காவது

4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியவர்.

 1. இராமலிங்க அடிகள்
 2. குமரகுருபரர்
 3. தாயுமானவர்
 4. செயங்கொண்டார்

விடை : குமரகுருபரர்

5. குமரகுருபரின் காலம் …………….. ஆம் நூற்றாண்டு ஆகும்

 1. 14
 2. 15
 3. 16
 4. 17

விடை : 17

6. சிற்றிலக்கியங்களின் வகைகள் ……………

 1. 16
 2. 64
 3. 96
 4. 108

விடை : 96

7. பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் ………………….

 1. 8
 2. 10
 3. 12
 4. 7

விடை : 10

8. ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக

 1. சிற்றில்
 2. ஊசல்
 3. சிறுதேர்
 4. சிறுபறை

விடை : ஊசல்

9. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக

 1. சிற்றில்
 2. ஊசல்
 3. சிறுதேர்
 4. சிறுபறை

விடை : சிற்றில்

10. காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாகக் குழந்தை ஆடும் பருவம் ………..

 1. செங்கீரை
 2. தால்
 3. காப்பு
 4. சிறுபறை

விடை : செங்கீரை

10. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் ………..

 1. 12
 2. 8
 3. 7
 4. 10

விடை : 7

11. கிண்கிணி என்ற அணிகலன் அணியும் இடம் ………..

 1. நெற்றியில்
 2. இடையில்
 3. காலில்
 4. காதில்

விடை : காலில்

12. குமரகுருபர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?

 1. சுவாமிமலை முருகன்
 2. வைத்தியநாத முருகன்
 3. திருக்கழுக்குன்ற முருகன்
 4. திருச்செந்தூர் முருகன்

விடை : வைத்தியநாத முருகன்

13. “சிறு பண்டித சரிந்தாடப்”  என்பதில் “பண்டி” என்பதன் பொருள் ………………….

 1. பெருக்கம்
 2. சுருக்கம்
 3. வயிறு
 4. தலை

விடை : தலை

பொருத்துக

1. அரை நாண்அ. கால் தலையில் அணிவது
2. சுட்டிஆ. காதில் அணிவது
3. குண்டலம், குழைஇ. நெற்றியில் அணிவது
4. சூழிஈ. இடையில் அணிவது
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பிள்ளைத்தமிழ் இரண்டு வகைப்படும்

ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்

2. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் யாவை?

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

3. பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் யாவை?

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்

4. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் உரிய பாெதுவான பருவங்கள் எத்தனை? அவை யாவை?

ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் உரிய பாெதுவான பருவங்கள் ஏழு. அவை

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

5. செங்கீரைப் பருவம் குறிப்பு வரைக

 • செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6ம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.
 • இப்பருவத்தில் குழந்தை தன் இருகைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலினை நீட்டி தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

6. பிள்ளைத்தமிழில் குமரகுருபரர் குறிப்பிடும் அணிகலன்கள் யாவை?அவை எவ்விடங்களில் அணியப்படும் என்பதையும் பட்டியலிடுக

அணிகலன்கள்அணியப்படும் இடம்
சிலம்பு, கிணகிணிகால்
சுட்டிநெற்றி
அரை நாண்இடை (இடுப்பு)
குண்டலம், குழைகாது
சூழிதலை

7. பிள்ளைத்தமிழில் பாட்டுடைத் தலைவராக் கருதப்படுவோர் யார்?

இறைவனையாே, தலைவரையாே, அரசனையாே பாட்டுடைத் தலைவராகக் காெண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.

8. குமரகுருபரர் சுட்டி குறித்து கூறுவது யாது?

பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிமான சுட்டி பதிந்தாடட்டும்

குறு வினா

1. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் சிறு குறிப்பு வரைக

 • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழினை குமரகுருபரர் இயற்றினார்.
 • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • இதில் இறைவனையாே, தலைவரையாே, அரசனையாே பாட்டுடைத் தலைவராகக் காெண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
 • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புகிறது.
 • பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
 • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகையாகப் பாடப்பெறும்.

2. குமரகுருபரர் சிறு குறிப்பு வரைக

 • குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.
 • இவர் தமிழ், வடெமாழி, இந்துஸ்தானி ஆகிய மாெழிகளில் புலமை மிக்கவர்
 • கந்தர் கலிெவண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலா வல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்காேவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

3. பிள்ளைத்தமிழ் குறிப்பு வரைக

வகை:-

96 வகைச் சிற்றிலக்கியங்களள் ஒன்று

வரையறை:-

இறைவனையாே, தலைவரையாே, அரசனையாே பாட்டுடைத் தலைவராகக் காெண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.

வகைகள்:-

பிள்ளைத்தமிழ் இரண்டு வகைப்படும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்

பருவங்களின் எண்ணிக்கை:-

பிள்ளைத்தமிழின் பருவங்கள் பத்து. 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள் உள்ளன

ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள்:-

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

பெண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள்:-

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்

பாெதுவான பருவங்கள்:-

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment