பாடம் 7.1 சிற்றகல் ஒளி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 7.1 – “சிற்றகல் ஒளி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
- திருப்பதியும் திருத்தணியும்
- திருத்தணியும் திருப்பதியும்
- திருப்பதியும் திருச்செந்தூரும்
- திருப்பரங்குன்றமும் பழனியும்
விடை : திருப்பதியும் திருத்தணியும்
2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ………..
- திருக்குறள்
- புறநானூறு
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்
விடை : சிலப்பதிகாரம்
குறு வினா
1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
- ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்கும் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
- இவர் விரும்பமான புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்
- இவர் பல வேளைகளில் பட்னி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்
- செவி வழியாகவும் இலக்கிய அறிவை பெற்றார்.
2. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம.பொ.சி.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.
சிறு வினா
தலையைக் கொடுத்தேனம் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டி பொருள் விளக்குக
இடம்:-
ம.பொசி.யின் தன் வரலாற்றப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.
பொருள்:-
ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.
விளக்கம்:-
- மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்
- முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.
- 25.03.1953-ல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை நாடளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.
IV. நெடு வினா
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்” என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்
அறிமுகவுரை:-
அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.
பொருள்:-
- நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்டுகிறது என்றார் நேரு. கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
- சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்டு விழாக்களை கொண்டாடும் போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
- அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விறபனை, வெள்ளையேன வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை நாம் மறத்தல் கூடாது.
- செக்கடியில், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டுடாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
- மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப் பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்து கொண்டால் நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்.
- கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே
- நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பபம் போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
- சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
விளக்கம்:-
நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்களை செய்வேம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ம.பாெ.சி-க்கு பெற்றோர் இட்டபெயர் …………….
- சிவஞானம்
- ஞானப்பிரகாசம்
- பிரகாசம்
- பொன்னுசாமி
விடை : ஞானப்பிரகாசம்
2. காந்தியடிகள் சத்தியாகிரத்தை தொடங்கிய ஆண்டு …………….
- 1886
- 1896
- 1906
- 1916
விடை : 1906
3. ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் …………
- கலை, பண்பாடு
- கல்வி, கேள்வி
- கல்வி, ஓவியம்
- கலை, கேள்வி
விடை : கலை, பண்பாடு
4. இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை இந்திய பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள் …………
- 1941 ஜூலை 8
- 1941 ஆகஸ்ட் 8
- 1942 ஜூலை 8
- 1942 ஆகஸ்ட் 8
விடை : 1942 ஆகஸ்ட் 8
5. பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான நாள் …………
- 1952 அக்டோபர் 10
- 1954 அக்டோபர் 10
- 1955 அக்டோபர் 10
- 1957 அக்டோபர் 10
விடை : 1955 அக்டோபர் 10
6. ம.பொ.சிவஞானத்தின் சிறப்பு பெயர் …………
- சொல்லின் செல்வர்
- சிலம்பு செல்வர்
- சிலம்பு அறிஞர்
- நாவலர்
விடை : சிலம்பு செல்வர்
7. சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல் …………
- வள்ளலால் கண்ட ஒருமைப்பாடு
- மறுமுற் கண்ட வாசகம்
- வானம் வசப்படும்
- எனது போராட்டம்
விடை : வள்ளலால் கண்ட ஒருமைப்பாடு
8. ம.பொ.சி. சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..
- 1946
- 1956
- 1966
- 1976
விடை : 1966
9. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..
- 1906
- 1916
- 1926
- 1936
விடை : 1906
10. மார்ஷல் ஏ.நேசமணிக்கு சிலையோடு மணிமண்டபமும் அமைந்துள்ள ஊர் ……………..
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- நாகர்கோவில்
விடை : நாகர்கோவில்
11. ம.பொ.சி. அறிவு விளக்கம் பெற எடுத்துகொண்ட வழி ……………..
- கல்வி
- கேள்வி
- சிறுகதை
- கட்டுரை
விடை : கேள்வி
12. “தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்” என்று முழங்கியவர் ……………..
- ம.பொ.சி
- செங்கல்வராயன்
- மங்கலங்கிழார்
- மார்ஷல் ஏ.நேசமணி
விடை : ம.பொ.சி
13. “சிலம்புச் செல்வர்” எனப் போற்றப்பட்டவர் ……….
- ம.பொ.சி
- செங்கல்வராயன்
- மங்கலங்கிழார்
- மார்ஷல் ஏ.நேசமணி
விடை : ம.பொ.சி
14. தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் ……………..
- செங்கல்வராயன்
- மங்கலங்கிழார்
- ம.பொ.சி
- மார்ஷல் ஏ.நேசமணி
விடை : ம.பொ.சி
15. ம.பொ.சியின் “எனது போராட்ட நூல்” ஒரு …………….. நூல்
- கல்வி
- தன்வரலாறு
- சிறுகதை
- கட்டுரை
விடை : தன்வரலாறு
பொருத்துக
1. ஞானியாரடிகள் | அ. தமிழாசான் |
2. மங்கலங்கிழார் | ஆ. வழக்கறிஞர் |
3. மார்ஷல் ஏ. நேசமணி | இ. முதல்வர் |
4. இராஜாஜி | ஈ. திருப்பாதிரிப்புலியூர் |
விடை ; 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
பொருத்துக
1. வாஞ்சு | அ. மாநகரத்தந்தை |
2. செங்கல்வராயன் | ஆ. நீதிபதி |
3. தேவசகாயம், செல்லையா | இ. மொழிவாரி ஆணையத் தலைமை |
4. சாந்தார் கே.எம்.பணிக்கர் | ஈ. தமிழரசுக் கழகத் தோழர்கள் |
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – இ, 4 – ஈ |
குறு வினா
1. 1906-ம் ஆண்டின் சிறப்புகள் யாவை?
- ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906-ல் பிறந்தார்
- காந்தியடிகள் சத்தியாகிர அறப்போரினை தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார்
- ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கினார் வ.உ.சி
2. விடுதலைப் போரில் ஈடுபட தமிழர்க்கு ம.பொ.சி எவ்வாறு அழைப்பு விடுத்தார்?
- 30.09.1932இல் ‘தமிழா! துள்ளி எழு’ என்னும் தலைப்புடைய துண்டறிக்கை மக்களிடையே வழங்கினார்.
- பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுவித்தார்.
3. ம.பொ.சி வகித்த பதவிகளை குறிப்பிடுக
- சட்டமன்ற பேரவைத் தலைவர் (1952-1954)
- சட்ட மேலவை தலைவர் (1972 – 1978)
4. விடுதலைப் போரில் ஈடுபட்ட முன்னனித் தலைவர்களாக ம.பொ.சி குறிப்பிடுவோர் யாவர்?
காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
5. ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் யார்? அவரின் பெற்றோர் யாவர்?
- ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் ம.பொ.சிவஞானம்
- அவரின் பெற்றோர் : பொன்னுசாமி – சிவகாமி
6. ம.பொ.சிக்கு சிவஞானம் என்னும் பெயர் அமையக் காரணம் யாது?
- ம.பொ.சிக்கு பெற்றோர் எனக்கு இட்ட பெயர் ஞானப்பிரகாசம்.
- சரபையர் என்ற முதியவர் ஒருவர் என்னுடைய பெயரை மாற்றி
‘சிவஞானி’ என்றே அழைத்தார்.
- பின்னாளில் சிவஞானி என்னும் பெயரே சிறிது திருத்தத்துடன்
சிவஞானம் என்று நிலைபெற்றது.
7. அறிவு விளக்கம் பெற மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி யாது?
- அறிவு விளக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
- ஒன்று கல்வி; மற்றொன்று கேள்வி.
- ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ம.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி கேள்வியாகும்.
8. பொன்னெழுத்துக்களால் பொறிக்க தக்க புனித நாள் எது, ஏன்?
- 1942 ஆகஸ்டு 8
- இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றிய நாள்
9. சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம் எது?
சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம் – மலபார்
10. கேரளாவிலிருந்து சென்னை மாநிலத்திற்கு இணைந்த பகுதிகள் யாவை?
கல்குளம், விளவங்கோடு, தேவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை
11. ம.பொ.சி பற்றி குறிப்பு வரைக
- சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்
- இவர் விடுதலை பேராட்ட வீரர் (1906 – 1995)
- சட்டமன்ற பேரவைத் தலைவர் (1952-1954)
- சட்ட மேலவை தலைவர் (1972 – 1978)
- தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர்
- “வள்ளலால் கண்ட ஒருமைப்பாடு” என்ற இவரின் நூலுக்காக சாகித்தி அகாதெமி விருது பெற்றார்
12. சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவன பற்றி கூறுக
- ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர்.
- தலைநகர் காக்க தன் முதல்வர் பதவியை துறக்க முன் வந்தார் இராஜாஜி
- மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்
- முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.
இதுவே சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவனவாகும்.