Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 7.2 – ஏர் புதிதா?

பாடம் 7.2 ஏர் புதிதா?

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 7.2 – “ஏர் புதிதா?” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

நூல் வெளி

  • ஏர் புதிதா? எனும் கவிதை கு.ப.ரா படைப்புகள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
  • 1902-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்
  • மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் மறைவுக்கு பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

  1. உழவு, மண், ஏர், மாடு
  2. மண், மாடு, ஏர், உழவு
  3. உழவு, ஏர், மண், மாடு
  4. ஏர், உழவு, மாடு, மண்

விடை : உழவு, ஏர், மண், மாடு

குறு வினா

முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

  • முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈர்த்தால் பண்பட்டது.
  • விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலே காளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடன், வலிமையுடன் உழைத்தனர். நாற்று நட்டனர்.
  • மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.

“முதல்மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகிவிட்டது
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ நண்பா!”

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • தொழுது, விரைந்து, அழுத்து – வினையெச்சங்கள்
  • நண்பா – விளி வேற்றுமை

பகுபத உறுப்பிலக்கணம்

விரைந்து = விரை + த்(ந்) + த் + உ

  • விரை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. சங்கத்தமிழரின் திணை வாழ்வு ………….. அடிப்படையாக கொண்டது.

  1. நெசவை
  2. போரினை
  3. கால்நடையை
  4. வேளாண்மையை

விடை : வேளாண்மையை

2. தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் நிகழ்வது ……….

  1. கல்வி
  2. உழவு
  3. நெசவு
  4. போர்

விடை : உழவு

3. தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது …………………

  1. பொன் ஏர் பூட்டுதல்
  2. நாகரிகம்
  3. உழுதல்
  4. கலை

விடை : பொன் ஏர் பூட்டுதல்

4. பொன் ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் …………………

  1. தை
  2. ஆனி
  3. ஆடி
  4. சித்திரை

விடை : சித்திரை

5. ஏர் புதிதா? என்னும் கவிதை இடம் பெற்றுள்ள நூல் …………………

  1. அகலிகை
  2. ஆத்மசிந்தனை
  3. கு.ப.ரா. படைப்புகள்
  4. ஏர்முனை

விடை : கு.ப.ரா. படைப்புகள்

6. கு.ப.ரா. பிறந்த ஊர் ………………… வருடம் …………….

  1. தஞ்சை, 1903
  2. கும்பகோணம், 1902
  3. நெல்லை, 1902
  4. மதுரை, 1903

விடை : கும்பகோணம், 1902

7. சுடுகி செல் – இதில் “சுடுகி” என்பதன் பொருள் ……………….

  1. விரைந்து
  2. செல்லுதல்
  3. மெதுவாக
  4. இயல்பாக

விடை : விரைந்து

8. உழுவோர் உலகத்தார்க்கு ____________ எனப் போற்றப்பட்டனர்.

  1. கற்போர்
  2. உழுவோர்
  3. போரிடுவோர்
  4. அச்சாணி

விடை : அச்சாணி

9. “வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா” என்று பாடியவர் ………………..

  1. ம.பொ.சி
  2. கு.ப.ராஜகோபாலன்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : கு.ப.ராஜகோபாலன்

10. கு.ப.ரா. ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில ஒன்று ………………..

  1. கிராம ஊழியன்
  2. தமிழ் ஊழியன்
  3. இந்தியா
  4. தினமணி

விடை : கிராம ஊழியன்

பொருத்துக

1. முதல் மழைஅ. பதமாகியது
2. மேல்மண்ஆ. முளைத்தது
3. வெள்ளிஇ. தொழு
4. பொன்னேர்ஈ. விழுந்தது
விடை ; 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

சிறு வினா

1. கு.ப.ராவின் படைப்புகள் அடங்கிய நூல் தொகுப்புகளைக் குறிப்பிடுக

அகலிகை, ஆத்மசிந்தனை

2. கு.ப.ரா. ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்கள் யாவை?

தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன்

3. தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?

வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

4. கு.ப.ராஜகோபாலன் பன்முகத் தன்மைகள் யாவை?

சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர்

5. “விரைந்து போ நண்பா” எனக் கவிஞர் கூறக்காரணம் யாது?

முதல் மழை விழுந்து விட்டதாலும், மேல் மண் பக்குவமானதாலும், வெள்ளி முளைத்தாலும் ஏறினைப் பூட்ட விரைந்த போ என்கிறார் கவிஞர்

6. மண் எப்போது புரளும்?

மாட்டைத் தூண்டி, கொழுவை (கலப்பை இரும்பை) அழுத்தினால் மண் புரளும்

7. பொன் ஏர் பூட்டுதல் என்றால் என்ன?

வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல் ஆகும்

சிறு வினா

கு.ப.ராஜகோபாலன் குறிப்பு வரைக

  • 1902-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்
  • மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் மறைவுக்கு பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment