Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 7.5 – மங்கையராய்ப் பிறப்பதற்கே…

பாடம் 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 7.5 – “மங்கையராய்ப் பிறப்பதற்கே…” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக

மகளிர் நாள் விழா

இடம் : பள்ளிக் கலையரங்கம்

நாள் : 08.03.2020

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – இதழாளர் கலையரசியின் சிறப்புரை –  ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத் தலைவரின் நன்றியரை

மகளிர் நாள் விழா

எம் பள்ளிக் கலையரங்கில் 08.03.2021 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. அவ்விழா பற்றிய அறிக்கையாவது

இடம் : பள்ளிக் கலையரங்கம்

நாள் : 08.03.2020

எம் பள்ளி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சரியாக மாலை 3.30 மணி அளவில் விழா நிகழ்விடமான பள்ளிக் கலையரங்கிற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்வுடன் வந்து அமர்ந்தனர். சரியாக 4.00 மணிக்கு சிறப்பு விருந்தினர் இதழாளர் கலையரசி வருகை புரிந்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்வுடன் ஆரவாரம் செய்து கைதட்டி சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்றனர்.

தலைமையாசிரியரின் வரவேற்பு:-

இதழியல் துறையில் பட்டம் பெற்று, பட்டப்படிப்புடன் அச்சுத்துறையில் முதுகலையும் பயின்று நாளிதழ் வார இதழ் படிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இதழாளர் திருமதி. கலையரசி அவர்கள் தான் பணிபுரியும் இதழில் செய்திகளை வெளியிடுவது, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை எழுதுவது, குழந்தைகளுக்கான பகுதிகளை வடிவமைப்பது. கேலிசித்திரம் வாயிலாக சமூக அவலங்களை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இதழியல் துறையில் பன்முகத்திறமை பெற்றவர். அவரை இவ்விழாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதழாளரின் சிறப்புரை:-

“காரிருள் அகத்தில் கதிரொளி பாய்ச்சுவதும், துயில்பவர்கள் நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்துவதும்” இதழ்களே என்றால் மிகையில்ல. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்களால் இயலும் என்பதை மகாகவி நமக்கு ஊக்க சக்தியாக தந்து சென்றிருக்கிறார். பெண்களே உங்களுக்கு முழுமையான கல்வி கட்டாயம் தேவை. எநத் ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கல்வியை விட்டுக் கொடுக்காதீர்கள். “கல்வியில்லா பெண் களர் நிலம்” என்றார் புரட்சிக்கவி. நாம் களர்நிலமாக பயனற்றுப் போக பிறக்கவில்லை. ஞானச் செருக்கும் உடையவர்களாய், புதிய உலகம் படைக்கும் வலிமை பொருந்தியவர்களாய் பிறந்திருக்கிறோம். எனேவ நன்கு படியுங்கள்; புதிய சமுதாயம் படையங்கள்;  புதுமைப் பெண்ணின் மகிழ்வு கண்டு இம்மண்ணுலம்கம் வியக்கட்டும் என்று சிறப்புரையாற்றினார்.

நன்றியுரை:-

நிறைவாக பள்ளியின் மாணவத் தலைவர் “மோகனா” நன்றி கூறினார். அழைப்பிற்கிணங்கி வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கும், அவரை அழைத்து வந்து விழாவினை ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும், உடன் ஒத்துழைத்த ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர்களும், அமைதி காத்த மாணவ நண்பர்களுக்கும் நன்றி கூறினாள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பொருந்தாத இணையைத் தேர்க

  1. ராஜம் கிருஷ்ணன் – வேருக்கு நீர்
  2. எம்.எஸ்.சுப்புலட்சுமி – மகசேசே
  3. சின்னப்பிள்ளை – களஞ்சியம்
  4. பாலசரஸ்வதி – மீரா

விடை : பாலசரஸ்வதி – மீரா

2. 1954-ல் தாமரையணி விருது பெற்றவர்

  1. சின்னபிள்ளை
  2. பாலசரசுவதி
  3. எம்.எஸ்.சுப்புலெட்சுமி
  4. ராஜம்கிருஷ்ணன்

விடை : எம்.எஸ்.சுப்புலெட்சுமி

3. வெங்கேடச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு ………………

  1. 1966
  2. 1963
  3. 1971
  4. 1976

விடை : 1966

4. இசைக்கு கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது …………….

  1. இந்தியமாமணி விருது
  2. மகசேசே விருது
  3. தாமரை விருது
  4. நோபல் பரிசு

விடை : மகசேசே விருது

5. கிருஷ்ணம்மாளுக்கு “வாழ்வுரிமை விருது” வழங்கிய நாடு …………….

  1. சுவிட்சர்லாந்து
  2. தாய்லாந்து
  3. மலேசியா
  4. சுவீடன்

விடை : சுவீடன்

6. படுகர் இனமக்களின் வாழ்வியல் மாற்றத்தை பேசும் புதினம் …………..

  1. குறிஞ்சித்தேன்
  2. சேற்று மனிதர்கள்
  3. கரிப்பு மணிகள்
  4. வேருக்கு நீர்

விடை : குறிஞ்சித்தேன்

7. பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர் ………….

  1. சின்னபிள்ளை
  2. பாலசரசுவதி
  3. கிருஷ்ணம்மாள்
  4. ராஜம்கிருஷ்ணன்

விடை : கிருஷ்ணம்மாள்

8. சமூக அவலங்களை உற்றுநோக்கி எழுத்தின் வழியாக உலகுக்குக் காட்டியவர் …………..

  1. சின்னபிள்ளை
  2. ராஜம்கிருஷ்ணன்
  3. பாலசரசுவதி
  4. கிருஷ்ணம்மாள்

விடை : ராஜம்கிருஷ்ணன்

9. களஞ்சியம் மகளிர் குழு முதன் முதலில் ஆரம்பித்தவர் ………….

  1. சின்னப்பா
  2. சின்னப்பிள்ளை
  3. சின்னத்துரை
  4. சரசுவதி

விடை : சின்னப்பிள்ளை

10. “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” தொடங்கியவர் ………………

  1. சின்னபிள்ளை
  2. பாலசரசுவதி
  3. கிருஷ்ணம்மாள்
  4. ராஜம்கிருஷ்ணன்

விடை : கிருஷ்ணம்மாள்

11. எம்.எஸ். சுப்புலட்சுமியை பிரபலபடுத்திய பாடல்  ………………

  1. சுப்ரபாதம்
  2. காற்றினிலே வரும் கீதம்
  3. இரகுபதி ராகவராஜாராம்
  4. மீரா பற்றி பாடல்

விடை : காற்றினிலே வரும் கீதம்

12. பால சரசுவதியின் நாட்டியக் கச்சேரியைப் புகழ்ந்தவர் …………………

  1. காந்தி
  2. பண்டிட் நேரு
  3. இயக்கநர் இரவிகுமார்
  4. பண்டிட் இரவிசங்கர்

விடை : பண்டிட் இரவிசங்கர்

13. கிருஷ்ணம்மாளக்கு “காந்தி அமைதி விருதினை” வழங்கிய நாடு …………….

  1. சுவிட்சர்லாந்து
  2. தாய்லாந்து
  3. மலேசியா
  4. சுவீடன்

விடை : சுவிட்சர்லாந்து

பொருத்துக

1. எம்.எஸ். சுப்புலட்சுமிஅ. ஒளவை விருது
2. பாலசரசுவதிஆ. வாழ்வுரிமை விருது
3. ராஜம்கிருஷ்ணன்இ. சாகித்திய அகாதெமி விருது
4. சின்னபிள்ளைஈ. இந்திய மாமனி விருது
விடை ; 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசையைப் பாராட்டியோர் யாவர்?

ஜவகர்லால் நேரு, சரோஜினி நாயுடு, காந்தியடிகள், ஹெலன் கெல்லர்

2. எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் இசைத்திறனை எம்மொழிகளிலெல்லாம் வெளிப்படுத்தினார்?

தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தன் இசைத்திறனை வெளிப்படுத்தினார்.

3. ராஜம்கிருஷ்ணனின் புகழ்பெற்ற சமூக நாவல்களைப் பட்டியிலிடுக

கரிப்பு மணிகள், குறிஞ்சித் தேன், குறிஞ்சித் தேன், சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர்

4. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?

  • சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் – ராஜம்கிருஷ்ணன்
  • வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக வழங்கப்பட்டது

5. கிருஷ்ணம்மாள் களப்பணிபுரிந்த இயக்கங்கள் யாவை?

  • ஒத்துழையாமை இயக்கம்
  • சட்டமறுப்பு இயக்கம்
  • வெள்ளையேன வெளியேறு இயக்கம்
  • பூதான இயக்கம்
  • உழுபவருக்கே நில உரிமை இயக்கம்

6. களஞ்சியம் மகளிர் குழு மூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?

  • விவசாய நிலத்தக் குத்தகைக்கு எடுத்தல்
  • கூலி வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்
  • நடவு, களையெடுப்பு, அறுவடை போன்ற வேலைகளைச் செய்தல்.
  • கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
  • வயதானவர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல்

6. சின்னப்பிள்ளை பெற்றுள்ள விருதுகள் யாவை?

  • ஸ்திரீ சக்தி புரஸ்கார் விருது
  • ஔவை விருது
  • பொதிகை விருது
  • தாமரைத்திரு விருது

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment