பாடம் 8.3 காலக்கணிதம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 8.3 – “காலக்கணிதம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- “காலக்கணிதம்” என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
- “முத்தையா” என்னும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
- இவரது பெற்றாெர் சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர்.
- 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனேம’’ என்ற பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
- திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
- சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தவர்.
- தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய காெண்டு சேர்த்தவர்.
- சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்………
- இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
- என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
- இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
- என்மனம் இறந்துவிடாது இகழ
விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
குறு வினா
‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’
அ) அடி எதுகையை எடுத்தெழுதுக.
கொள்வோர் – உள்வாய்
ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க
கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்று
நெடு வினா
காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
– கண்ணதாசன்
திரண்ட கருத்து:-
கவிஞன் நானே காலத்தை கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்த ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம் பொன்னை விட விலையுயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள். சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.
மோனை நயம்:-
காட்டுக்கு யானை, பாட்டுக்கு மோனை
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
கவிஞன் – கருப்போடு, இவை சரி – இவை தவறாயின்
என மோனை நயமும் உள்ளது.
எதுகை நயம்:-
மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை
செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
கருப்படு – பொருளை – உருப்பட
என எதுகை நயமும் உள்ளது.
முரண்:-
நாட்டுக்கு அரண், பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ, சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகும்
ஆக்கல் X அழித்தல்
என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுந்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.
இயைபு நயம்:-
அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத்தொடுப்பது இயைபு ஆகும்
…. புகழுடைத் தெய்வம் – …. பொருளென் செல்வம் – என இயைபு நயமும் உள்ளது
அணி நயம்:-
கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக
யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்
என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.
சந்த நயம்:-
சந்தம் தமிழக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- காலக்கணிதம் – உருவகம்
- ஆக்கல், அளித்தல், அழித்தல் – தொழிற்பெயர்
- கொள்க, எழுதுக – வியங்கோள் வினைமுற்று
- கொள்வோர் – வினையாலணையும் பெயர்
- அறிந்து – வினையெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
1. அமர்வேன் = அமர் + வ் + ஏன்
- அமர் – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஏன் – குறிப்பு வினைமுற்று விகுதி
2. அழித்தல் = அழி + த் + த் + அல்
- அழி – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- அல் – தொழில்பெயர் விகுதி
3. இறந்த = இற + த்(ந்) + த் + அ
- இற – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – பெயரெச்ச விகுதி
பலவுள் தெரிக
1. காலத்தைக் வெல்பவன் ……………
- ஆசிரியர்
- அரசர்
- கவிஞன்
- ஓவியன்
விடை : கவிஞன்
2. கண்ணதாசனின் இயற்பெயர் ……………
- முத்தரசன்
- முத்தையா
- முத்துக்குமார்
- முத்துசாமி
விடை : முத்தையா
3. கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ……………
- சிவகங்கை
- நெல்லை
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
விடை : சிவகங்கை
4. கண்ணதாசன் பிறந்த ஊர் ……………
- முக்கூடல்
- சிவகங்கை
- கூடல் மாநகர்
- சிறுகூடல்பட்டி
விடை : சிறுகூடல்பட்டி
5. கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்கு பாடல் எழுதிய ஆண்டு ……………
- 1939
- 1949
- 1959
- 1969
விடை : 1949
6. கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல் ……………
- வாழ நினைத்தால் வாழலாம்
- உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
- மலர்களைப் போல் தங்கை
- கலங்காதிரு மனமே
விடை : கலங்காதிரு மனமே
7. சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……………
- மாங்கனி
- சேரமான்காதலி
- இயேசு காவியம்
- சிவகங்கைச் சீமை
விடை : சேரமான்காதலி
8. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ……………
- பாரதியார்
- வைரமுத்து
- கண்ணதாசன்
- மேத்தா
விடை : கண்ணதாசன்
9. கண்ணதாசன் அட்சயப்பாத்திரம் என்று ……………க் குறிப்பிடுகிறார்
- தத்துவம்
- கொள்கை
- பண்பாடு
- ஞானம்
விடை : தத்துவம்
10. “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என்றவர் ……………
- பாரதியார்
- வைரமுத்து
- கண்ணதாசன்
- மேத்தா
விடை : கண்ணதாசன்
11. “கவிஞன் யானோர் காலக் கணிதம்” என்று கூறியவர் ……………
- பாரதியார்
- வைரமுத்து
- மேத்தா
- கண்ணதாசன்
விடை : கண்ணதாசன்
12. “வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்” எனக் கூறியவர் ……………
- கண்ணதாசன்
- பாரதியார்
- வைரமுத்து
- மேத்தா
விடை : கண்ணதாசன்
13. கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் வழியாக மக்களுக்கு …………… உணர்த்தினார்
- உலகியலை
- மெய்யியலை
- ஆன்மீகத்தை
- இலக்கணத்தை
விடை : மெய்யியலை
குறு வினா
1. கவிஞன் என்பவன் யார்?
மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக்களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.
2. எவர் கூறாத ஒன்றைத் தான் கூற முனைவதாக கண்ணதாசன் குறிப்பிடுகிறார்?
கம்பன், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத சிலவற்றை சொல்லிட முனைவேன் என்று கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.
3. எவையெல்லாம் மாறாதவை?
காடு, மேடு, மரம், கல், வனவிலங்குகள்
4. கண்ணதாசனின் சிறப்பியல்புகள் யாவை?
பாடல்கள் புனைவதில், இலக்கிய உலகில் சிறந்த கவிஞர், பேச்சாளர், இதழாளர் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.
5. கவிஞன் எதனால் காலத்தை வென்றவனாகிறான்?
கவிஞன் காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
6. கண்ணதாசன் எதற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.?
கண்ணதாசன் “சேரமான் காதலி” என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
சிறு வினா
கண்ணதாசன் குறிப்பு வரைக
- கண்ணதாசனின் இயற்பெயர் ‘முத்தையா’
- சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
- இவரது பெற்றாெர் சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர்.
- 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனேம’’ என்ற பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
- சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தவர்.
- தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய காெண்டு சேர்த்தவர்.
- சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.