Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 9.1 – ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

பாடம் 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 9.1 “ஜெயகாந்தம் (நினைவு இதழ்)” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

  1. அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
  2. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
  3. அறிவியல் முன்னேற்றம்
  4. வெளிநாட்டு முதலீடுகள்

விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் –இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:

  1. தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
  2. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
  3. அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
  4. அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

விடை : தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

குறு வினா

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.

நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு. நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.

சிறு வினா

ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

“தாகத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:-

கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன்

மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்பிக்கும் செயல்:-

இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைகாரனுக்கு இரண்டனாவை அவர் போட்டார். அதை பெற்றுக் கொண்டவர் கைகள் குவித்து “சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்த பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யமாமல் இருந்திருந்தாலோ அல்லது தரம்ம் செய்ய ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில் தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதை தர்மம் செய்தவன் உணர்ந்தான்.

தர்மம் தந்தவனும் அதைப் பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.

நெடு வினா

ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க

Class 10 Tamil Chapter 9.1 "ஜெயகாந்தம் (நினைவு இதழ்)"

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ……………..

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

விடை : ஜெயகாந்தன்

2. சாகித்திய அகாதெமி விருது ஜெயகாந்தனின் புதினம் …………….

  1. சிலநேரங்களில் சில மனிதர்கள்
  2. கங்கை எங்கே போகிறாள்
  3. இமயத்துக்கு அப்பால்
  4. யாருக்காக அழுதாள்

விடை : சிலநேரங்களில் சில மனிதர்கள்

3. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே …………. பாரதத்தை எழுதியவர்.

  1. வில்லிபுத்துரார்
  2. பாரதியார்
  3. வியாசர்
  4. கம்பர்

விடை : வியாசர்

4. “நாற்பொருட் பயத்தலொடு” இதில் “நாற்பொருட்” என்பது ………………

  1. அறம், மானம், கல்வி, புகழ்
  2. அறம், மறம், மானம், புகழ்
  3. புகழ், கல்வி, வீரம், பெருமை
  4. அறம், பொருள், இன்பம், வீடு

விடை : அறம், பொருள், இன்பம், வீடு

5. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ………………

  1. 1936 – 2016
  2. 1934 – 2015
  3. 1938 – 2018
  4. 1940 – 2018

விடை : 1934 – 2015

6. பிரெஞ்சு மொழியில் வந்த ” காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் ………………

  1. உண்மை சுடும்
  2. தேவன் வருவார்
  3. வாழ்விக்க வந்த காந்தி
  4. ஒரு கதாசிரியரின் கதை

விடை : வாழ்விக்க வந்த காந்தி

7. முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ………………

  1. இனிப்பும் கரிப்பும்
  2. ஒரு கதாசிரியரின் கதை
  3. பிரளயம்
  4. யுகசந்தி

விடை : ஒரு கதாசிரியரின் கதை

8. “தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு ………………

  1. யுகசந்தி
  2. ரிஷிமூலம்
  3. யுகசந்தி
  4. ஒருபிடி சோறு

விடை : யுகசந்தி

9. தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையர் ………………

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

விடை : ஜெயகாந்தன்

10. ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?

  1. வாலி
  2. கண்ணதாசன்
  3. புலமைபித்தன்
  4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

விடை : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

11. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல் ………….

  1. உன்னைப்போல் ஒருவன்
  2. புதிய வார்ப்புகள்
  3. இமயத்துக்கு அப்பால்
  4. யாருக்காக அழுதாள்

விடை : இமயத்துக்கு அப்பால்

12. சமகாலக் கருத்துகளையும், நிகழ்வுகளையும், சமகால மொழியல் சமகால உணர்வில் தந்தவர் ………………

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

விடை : ஜெயகாந்தன்

13. உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது ………….

  1. குடியரசுத்தலைவர் விருது
  2. சாகித்ய அகாதெமி விருது
  3. ஞானபீட விருது
  4. தாமரைத் திரு விருது

விடை : குடியரசுத்தலைவர் விருது

14. “சிறுகதை மன்னன்” என்று சிறப்பிக்கக்கூடியவர் ………………

  1. அகிலன்
  2. புதுமைப்பித்தன்
  3. ஜெயகாந்தன்
  4. சுஜாதா

விடை : ஜெயகாந்தன்

15. “படிக்காதமேதை” என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளார் ………………

  1. அகிலன்
  2. புதுமைப்பித்தன்
  3. சுஜாதா
  4. ஜெயகாந்தன்

விடை : ஜெயகாந்தன்

16. ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ………..

  1. 1971
  2. 1972
  3. 1975
  4. 1977

விடை : 1972

பொருத்துக

1. தேவன் வருவாராஅ. குறும்புதினம்
2. சினிமாவுக்கு போன சித்தாளுஆ. சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம்இ. மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்திஈ. புதினம்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ,  4 – இ

சிறு வினா

1. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

  • குடியரசுத்தலைவர் விருது
  • சாகித்திய அகாதெமி விருது
  • சோவியத் நாட்டு விருது
  • ஞானபீட விருது
  • தாமரைத்திரு விருது

2. ஜெயகாந்தன் என்ற தமிழனின் சிறந்த அடையாளங்கள் என்று கா. செல்லப்பன் குறிப்பிடுவது யாது?

நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமரிந்த ஞானச் செருக்கு, கம்பீரமானக குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் –  இவைகள் தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழினின் சிறப்பான அடையாளங்கள்.

3. அசோக மித்திரன் பார்வையில் ஜெயகாந்தன் பற்றி எழுதுக

ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்த பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்று ஒவ்வாது, அவர் அரசியிலில் தொடர்நது பங்கு பெறமால் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.

4. ஜெயகாந்தனின் சாதனையாக தீபம் இதழ் வாசகர்கள் கூறியது யாது?

சிறுகதைகளில் பலதறப்பட்ட சூழ்நிலைகளையும், பதிய கருத்துகளையும் வெற்றிகராமக சித்தரிப்பது ஜெயகாந்தனின் அரிய சாதனை என்று பாராட்டுகின்றனர்.

5. திரைப்படமான ஜெயகாந்தனின் படைப்புகள் யாவை?

  • யாருக்காக அழுதான்
  • ஊருக்கு நூறு பேர்
  • சில நேரங்களில் சில மனிதர்கள்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • உன்னைப்போல் ஒருவன்

6. “பாயிரந் தோன்றி மும்மை யினொன்றாய்” – இவ்வடிகளில் உள்ள “மும்மை” எவை?

இறப்பு, நிகழ்வு, எதிர்வு

7. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு யாவை?

குருபீடம்யுகசாந்தி
ஒரு பிடி சோறுஉண்மை சுடும்
இனிப்பும் கரிப்பும்தேவன் வருவாரா
புதிய வார்ப்புகள்

8. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் யாவை?

பிரளயம்கருணையினால் அல்ல
ரிஷிமூலம்பிரம்ம உபதேசம்
யாருக்காக அழுதான்?கைவிலங்கு
சினிமாவுக்குப் போன சித்தாளு

9. ஜெயகாந்தன் எழுதிய புதினங்களை எழுதுக.

பாரீசுக்குப் போஉன்னைப் போல் ஒருவன்
சுந்தர காண்டம்கங்கை எங்கே போகிறாள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
இன்னும் ஒரு பெண்ணின் கதை
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

10. ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதுக.

வாழ்விக்க வந்த காந்தி,  ஒரு கதாசிரியனின் கதை

11. ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?

  • மகத்தான சாதனை –  பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்தல்
  • அதுவே மிகப்பெரிய சவால் என்கிறார் ஜெயகாந்தன்

12. நாற்பொருள் பயத்தன் – என்பது எவற்றை குறிப்பிடுகிறது?

  • நூல் என்பது நாற்பொருள் தருவதாய், பயனுடையதாய் இருத்தல் வேண்டும்.
  • அறம், பொருள் இன்பம், வீடு என்பதே நாற்பொருள் ஆகும்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment