Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 9.4 – ஒருவன் இருக்கிறான்

பாடம் 9.4 ஒருவன் இருக்கிறான்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 9.4 “ஒருவன் இருக்கிறான்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

நூல் வெளி

  • ஒருவன் இருக்கிறான் கதை “கு.அழகிரிசாமி சிறுகதைகள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • கு.அழகிரிசாமி அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர். மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்.
  • கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
  • கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.
  • படைப்பின் உயிரை முமுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியுள்ளர்.
  • மலேசியாவில் இருந்தபோத அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்.
  • இவர் பதிப்பு பணி, நாடகம் என பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
  • தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.

பாடநூல் வினாக்கள்

கு.அழகிரிசாமியன் “ஒருவன் இருக்கிறான்” சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுதம் கதைமாந்தர் குறித்து எழுதுக

முன்னுரை:-

கு.அழகிரிசாமியின் “ஒருவன் இருக்கிறான்” சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுதம் கதைமாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தம் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார்.

அன்பாளர்:-

வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகு கடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன் குப்புசாமி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அனாதையான குப்புசாமிக்கு அவன் உறவினர்களும் உதவ முன்வரவில்லை. ஆனால் தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் வீரப்பன், குப்புசாமியுடன் மனித நேயத்துடன் இருக்கின்றார்.

கொடையாளர்:-

குப்புசாமி நோய்வாய்ப்பட்டு வேலை இழந்தபோது வீரப்பன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுப்பார். மேலும் தான் கடன் வாங்கி அதனைக் குப்புசாமிக்குக் கொடுப்பார். சென்னைக்கு செல்லும் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் மூன்று ரூபாயையும் குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினார் வீரப்பன்.

பண்பாளர்:-

வீரப்பன் குப்புசாமி குணமடைய நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வேண்டுகிறார். அவருக்கு வேலை இல்லாதபோதும் நண்பர் குப்புசாமிக்கு கொடுக்க ஒருவரிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி சென்னைக்கு செல்லும் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பினார். குப்புசாமியைப் பார்க்க வரலாம் என்றால், இந்த மூன்று ரூபாய் பேருந்துக்கு செலவாகிவிடம் என்பதால் கொடுத்தனுப்புகிறேன். இன்னோரு இடத்திலும் பணம் கேட்டிருப்பதாகவும் கிடைத்தவுடன் குப்புசாமியைப் பார்க்க விரைவாக வருவதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.

முடிவுரை:-

ஏழ்மையிலும் நட்பைப் பாராட்டி உதவும் வீரப்பன் மனித நேயத்தின் மாமாகுடமாகத் திகழ்கின்றார். அவரின் செயல்பாடுகள் கல் மனதையும் கரைத்து மனிநேயத்தை சுரக்க வைக்கின்றது. ஒருவன் இருக்கிறான், மனித நேயத்திற்குச் சான்றாக அவன் இருக்கின்றான்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் …………

  1. அண்ணாதுரை
  2. அழகர்சாமி
  3. அழகிரிசாமி
  4. சுஜாதா

விடை : அழகிரிசாமி

2. அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………..

  1. அண்ணாதுரை
  2. அழகர்சாமி
  3. சுஜாதா
  4. அழகிரிசாமி

விடை : அழகிரிசாமி

3. ………….. வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி

  1. கரிசல் எழுத்தாளர்கள்
  2. கணையாழியில் எழுதியவர்கள்
  3. மணிக்கொடி
  4. வானம்பாடி

விடை : கரிசல் எழுத்தாளர்கள்

4. அழகிரிசாமி ………………… நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்பு பயிற்சி அளித்தார்

  1. இந்தியா
  2. இலங்கை
  3. தாய்லாந்து
  4. மலேசியா

விடை : மலேசியா

5. “ஒருவன் இருக்கிறான் கதை” வெளியான இதழ் …………

  1. கணையாழி
  2. கலைமகள்
  3. ஆனந்தவிகடன்
  4. குமுதம்

விடை : கலைமகள்

6. “ஒருவன் இருக்கிறான் கதை” வெளியான ஆண்டு …………

  1. 1956
  2. 1976
  3. 1966
  4. 1986

விடை : 1966

7. வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் …………

  1. ஆறு ரூபாய்
  2. ஐந்து ரூபாய்
  3. நான்கு ரூபாய்
  4. மூன்று ரூபாய்

விடை : மூன்று ரூபாய்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment