Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 1.1 – யுகத்தின் பாடல்

பாடம் 1.1 யுகத்தின் பாடல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 1.1 “யுகத்தின் பாடல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

நூல் வெளி

  • சு. வில்வரத்தினம் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார்
  • இவர் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன
  • இவர் கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர்.
  • வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம் பெறுகின்றன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
     காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” – அடிமோனையை தெரிவு செய்க

  1. கபாடபுரங்களை – காவுகொண்ட
  2. காலத்தால் – கனிமங்கள்
  3. கபாடபுரங்களை – காலத்தால்
  4. காலத்தால் – சாகாத

விடை : கபாடபுரங்களை – காலத்தால்

குறு வினாக்கள்

1. “என் அம்மை ஒற்றியெடுத்த
    நெற்றிமண் அழகே!
    வழிவழி நினதடி தொழுதவர்,
    உழுதவர், விதைத்தவர்,
    வியர்த்தவர்க்கெல்லாம்
    நிறைமணி தந்தவளே! – இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்

2. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக

“தன் இனத்தையும், மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை”

குறு வினா

சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எற்றைக் குறிப்பிடுகிறார்?

  • பல தலைமுறை கடந்தும் தனது திருவடிகளைத் தொழச் செய்தவள். தமிழ்ப்பயிர் தழைத்தோங்க காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவர். தமிழ் மொழியாகிய வயலினை அறிவு கொண்டு உழுது, நற்பருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உதவியவள்.
  • ஒலிக்கும் கடலையும், நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலை, தொன்மையான கபாடபுரங்களைப் பலி கொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமைச் சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டி எழுதக் கற்பித்தவள்.
  • ஆதலால், தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என பாடத்தான் வேண்டும் என்கிறார் சு.வில்வரத்தினம்

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • வழிவழி, தீட்டித்தீட்டி – அடுக்குத்தொடர்கள்
  • தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர் – வினையாலணையும் பெயர்கள்
  • நிறைமணி, கனைகடல் – வினைத்தொகைகள்
  • சாகாத, எழுகின்ற, எழுத்துவித்த – பெயரச்சங்கள்
  • உரமெல்லாம்  – தொகுத்தல் விகாரம்
  • தொல்கனிமங்கள் – பண்புத்தொகை
  • மலைமுகடு (மலையின்கண் உள்ள முகடு) – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • விரல் முனை (விரலினது முனை) – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தந்தவளே – விளித்தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. தொடக்கி = தொடக்கு + இ

  • தொடக்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. தீட்டி = தீட்டு + இ

  • தீட்டு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

3. எழுகின்ற = எழு + கின்று + அ

  • எழு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

4. கடந்து = கட + த்(ந்) + த் + உ

  • கட – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

5. தோய்த்து = தோய் + த் + த் + உ

  • தோய் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

6. வைத்து = வை + த் + த் + உ

  • வை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

7. அடுத்த = அடு + த் + த் + அ

  • அடு – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. உரமெலாம் = உரம் + எலாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி உரமெலாம் என்றாயிற்று.

2. சுவரமெலாம் = சுவர் + எலாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி சுவரமெலாம் என்றாயிற்று.

3. பல்லாண்டு = பல + ஆண்டு

  • “பல சில எனும் இவைமுன் பிறவரின் அகரம் ஏகலும்” விதிப்படி பல் + ஆண்டு என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” விதிப்படி பல்ல் + ஆண்டு என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பல்லாண்டு என்றாயிற்று.

4. நினதடி = நினது + அடி

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” விதிப்படி நினத் + அடி என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி நினதடி என்றாயிற்று.

5. ஒற்றியெடுத்த = ஒற்றி + எடுத்த

  • “இ, ஈ, ஐ வழி யவ்வும்” விதிப்படி ஒற்றி + ய் + எடுத்த என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஒற்றியெடுத்த என்றாயிற்று.

6. காற்றிலேறி = காற்றில் + ஏறி

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி காற்றிலேறி என்றாயிற்று.

7. நெருப்பாற்றை =  நெருப்பு + ஆற்றை

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” விதிப்படி நெருப்ப் + ஆற்றை என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி நெருப்பாற்றை என்றாயிற்று.

8. தீட்டித்தீட்டி = தீட்டி + தீட்டி

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” விதிப்படி தீட்டித்தீட்டி என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. சு.வில்வரத்தினம் …………………….. எழுத்தாளர்

  1. தமிழகத்து
  2. ஈழத்து
  3. பாரசீக
  4. வடநாட்டு

விடை : ஈழத்து

2. கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைத்தொகுப்பு ……………..

  1. இசையமுது
  2. அழகின் சிரிப்பு
  3. உயிர்த்தெழும் காலத்துக்காக
  4. மூங்கில் காடு

விடை : உயிர்த்தெழும் காலத்துக்காக

3. தன் இனத்தையும் மொழியையும் பாடதாத கவிதை, வேரில்லா மரம், கூடில்லா பறவை” என்று கூறியவர் ………………..

  1. பாரதிதாசன்
  2. சு.வில்வரத்தினம்
  3. அப்துல் ரகுமான்
  4. இரசூல் கம்சதோவ்

விடை : இரசூல் கம்சதோவ்

4. மரபு சார்ந்த செய்யுட்களின் கட்டுபாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளை ……………….. என்பர்.

  1. புதுக்கவிதை
  2. மரபுக்கவிதை
  3. செய்யுள்
  4. பாடல்

விடை : புதுக்கவிதை

5. கவிஞர் சு.வில்வரத்தினம் பிறந்த புங்குடுத்தீவு _______________ உள்ளது

  1. இங்கிலாந்தில்
  2. யாழ்ப்பாணத்தில்
  3. வங்கதேசத்தில்
  4. ஆப்கானிஸ்தானில்

விடை : யாழ்ப்பாணத்தில்

6. கவிஞர் சு.வில்வரத்தினம் பிறந்த நாடு ……………….

  1. அமெரிக்கா
  2. இலங்கை
  3. அந்தாமான் தீவு
  4. பிரேசில்

விடை : இலங்கை

7. “கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்” – இவ்வடியில் “காவு” என்பதை குறிக்கம் சொல் ……………..

  1. வலிமை
  2. திண்மை
  3. வலி
  4. பலி

விடை : பலி

குறு வினா

1. கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றி எழுதுக

  • சு.வில்வரத்தினம் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார்
  • இவர் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன
  • இவர் கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர்

2. புதுக்கவிதை என்பதன் விளக்கம் யாது?

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிைகளைப் புதுக்கவிதை என்பர்.

3. பன்முகத்தன்மை கொண்டது எது? எவ்வாறு?

  • பன்முகத்தன்மை கொண்டது புதுக்கவிதை
  • படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது.

4. எத்தகைய வாய்ப்பினை தந்தது புதுக்கவிதை என கூறலாம்?

எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.

5. அந்நிய தேசத்தின் நம் நாட்டு மக்களின் நிலை என்ன?

தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலை மற்றும் உதற முடியாத நிலை, உரக்க குரல் எடுக்க முடியாத நிலை

சிறு வினா

1. சு.வில்வரத்தினம் தமிழ்தாய்க்கு எவ்வாறு பல்லாண்டு பாடுகிறார்?

  • “என் அம்மையே” எனத் தமிழ்த்தாயை அழைத்து, “வழிவழி உனது அடியைத் தொழுதவர், உழுதவர், விதைத்தவர், உழைத்து வியர்த்தவர் என அனைவருக்கும் நிறைமணி தந்தவளே! உனக்குப் பல்லாண்டு பாடத்தான் வேண்டும்” என்று சு.வில்வரத்தினம் பாடுகிறார்.

2. சு.வில்வரத்தினம் தமிழன்னையை எவ்வாறு பாடவேண்டுமென்கிறார்?

  • சுழன்றடிக்கும் காற்றையும், வீசும் அலை கடலையும், எழுமம் நெருப்பையும், மலையளவு எழும் பகைகையும் வென்று தமிழ்தாயின் தொன்மத்தைக் காலத்தான் அழியா வகையில் வலிமை சேர்க்க பாட வேண்டும் என்கிறார் சு.வில்வரத்தினம்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment