Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 1.5 – மொழி முதல், இறுதி எழுத்துக்கள்

பாடம் 1.5 மொழி முதல், இறுதி எழுத்துக்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 1.5 “மொழி முதல், இறுதி எழுத்துக்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

இலக்கணத் தேர்ச்சி செய்க

1. தவறான இணையத் தேர்வு செய்க

  1. மொழி + ஆளுமை + உயிர் + உயிர்
  2. கடல் + அலை + உயிர் + மெய்
  3. தமிழ் + உணர்வு + மெய் + உயிர்
  4. மண் + வளம் + மெய் + மெய்

விடை : கடல் + அலை + உயிர் + மெய்

2. கீழ்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக

அ) கீழ்காணும் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)

விடை : அறிஞர் அண்ணா

ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10) 

விடை : திரு.வி.கல்யாணசுந்தரனார்

இ) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர் (6)

விடை : பாரதிதாசன்

ஈ) பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளுள் ஒருவர் (2)

விடை : ஜீவானந்தம்

3. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

அ) காலங்காத்தால எந்திரிச்சி படிச்சா ஒரு தெளிவு கிடைக்கும்.

விடை : அதிகாலையில் எழுந்திருந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்

ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பல் வராம போவாது.

விடை : முயற்சி செய்தால் அதற்கேற்ற பயன் வராமல் போகாது

இ) காலத்துகேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்

விடை : காலத்திற்கேற்ற மாதிரி புதிது புதிதாக மொழிவடிவத்தை மாற்ற வேண்டும்

ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமா பதிய வைக்கனும்.

விடை : ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, எல்லாவற்றையும் கவனமாக பதியவைக்க வேண்டும்.

உ) தேர்வெழுத வேகமாகப் போங்க, நேரங்கழிச்சி போனா பதட்டமாயிருக்கும்.

விடை : தேர்வெழுத வேகமாப் போங்கள், நேரம் கழித்துபோனால் பதற்றமாகிவிடும்.

4. வினாக்கள்

அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

  • மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 22

அவை

  • உயிரெழுத்துகள் பன்னிரெண்டு (அ முதல் ஒள)
  • மெய்யெழுத்துக்கள் மெய் வடிவிலேயே சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துகளோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன.
  • மெய்களில் க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும்.

ஆ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்தக்காட்டு தருக.

  • மொழிக்கு இறுதில் வரும் எழுத்தக்கள் 24

அவை

  • உயிரெழுத்துகள் பன்னிரென்டும், மெய் எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினாறும் சொல்லின் இறுதியில் வரும்.
  • பழைய இலக்ண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்து கொள்வர்.

இ) உயிரீறு, மெய்யீறு – விளக்குக

உயிரீறு

  • சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு
  • மணி (ண் + இ) + மாலை = மணிமாலை

மெய்யீறு

  • சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் மெய்யெழுத்து அமைவது மெய்யீறு
  • பொன் + வண்டு = பொண்வண்டு

ஈ) உயிர்முதல், மெய்முதல் – எடுத்துக்காட்டுடன் விளக்குக

உயிர் முதல்

  • சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் உயிரெழுத்து அமைவது உயிர்முதல் ஆகும்
  • வாழை + இலை =  வாழையிலை

மெய் முதல்

  • சொல்லுக்கு (வருமொழியின்) முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது மெய்முமதல் எனப்படும்
  • தமிழ் + நிலம் (ந்+இ) = தமிழ்நிலம்

உ) குரங்குக்குட்டி – குற்றியலுகரப் புணர்ச்சியை விளக்குக

குரங்கு + குட்டி = குரங்குக்குட்டி.

  • “மென்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும்” எனும் விதிப்படி “க்” மிகுந்து குரங்குக்குட்டி என்றானது.

உ) “ங்” என்னம் மெய் எவ்வாறு சொல்லுக்கு முதலில் வரும்?

  • “ங்” என்னம் மெய், அகரத்துடன் சேர்ந்து (ங் + அ) “ங” எனச் சொல்லக்கு முதலில் “ஙனம்” (விதம்) என வரும்.
  • இச்சொல்லும், சுட்டெழுத்துக்கள், வினா எழுத்துக்களுடன் இணைந்தே வரும்.
  • (எ.கா) அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்

பலவுள் தெரிக

மொழிமுதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க

  1. அன்னம், கிண்ணம்
  2. டமாரம், இங்ஙனம்
  3. ரூபாய், லட்சாதிபதி
  4. றெக்கை, அங்ஙனம்

விடை : அன்னம், கிண்ணம்

குறுவினா

உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் – இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்தக்கள் அமைந்துள்ளன?

  • உயிரெழுத்து (த் + உ), பன்னிரண்டு (ட் + உ); உயிர் எழுத்து (குற்றியலுகர) ஈறு
  • திருக்குறள், நாலடியார் – மெய்எழுத்து ஈறு.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துக்கள் ………….

  1. 12
  2. 18
  3. 22
  4. 24

விடை : 22

2. மொழி முதலில் வரும் மெய்யெழுத்துக்கள் …………..

  1. க் ச் ட் த் ப் ற்
  2. ங் ஞ் ண் ந் ம் ன்
  3. ய் ர் ல் வ் ழ் ள்
  4. க் ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ்

விடை : க் ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ்

3. மொழி இறுதியில் வரும் தமிழ் எழுத்துக்கள் ……..

  1. 12
  2. 18
  3. 24
  4. 22

விடை : 24

4. மொழி இறுதியில் வரும் மெய்ழுத்துக்கள் ………………….

  1. ய் ர் ல் வ் ழ் ள்
  2. க் ச் ட் த் ப் ற்
  3. ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
  4. க் ச் ட் த் ப் ம் ய் ஞ் ங்

விடை : ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்

பொருத்துக

1. யுகத்தின் பாடல்அ. இந்திரன்
2. பேச்சு மொழியும் எழுத்து மொழியும்ஆ. சு. வில்வரத்தினம்
3. நன்னூல் – பாயிரம்இ. அ. முத்துலிங்கம்
4. ஆறாம் திணைஈ. பவணந்தி முனிவர்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

சிறு வினா

1. புணர்ச்சி என்பது யாது?

நிலைமொழியும் வருமொழியுமான இருச்சொற்கள் இணைவது புணர்ச்சி எனப்படும்

2. சொல்லுக்கு இறுதியில் வராத எழுத்துக்கள் எவை?

க்,ச், ட், த், ப், ற் என்னும் வல்லின மெய்களும், “ங்” என்னும் மெல்லின மெய்யும் சொல்லுக்கு இறுதியில் வராத எழுத்துக்கள் ஆகும்.

3. இலக்கணவகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பெயர்ச்சொல், வினைச்சொல்,  இடைச்சொல், உரிச்சொல் என இலக்கண வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்

4. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்கள் எவை?

  • இடைச்சொற்குளம் உரிச்சொற்களும் தனித்து வராது.
  • பெயர்ச் சொற்களையும், வினைச் சொற்களையும் சார்ந்து வரும்.

5. குற்றியலுகர எழுத்துக்கள் யாவை?

வல்லின மெய்களின் மேல் ஊர்ந்த கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு எழுத்துகளும் குற்றியலுகர எழுத்துகள் எனப்படும்.

6. குற்றியலுகர நிலைமொழி என்பதை விளக்குக.

குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி, குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலைமொழி எனப்படும்.

எ.கா.

பாக்கு + இல்லை =  பாக்கில்லை, இதில் “பாக்கு” என்பது குற்றியலுகர நிலைமொழி

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

தமிழ் இலக்கிய வரலாற்றில், “புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர் திருவாவடுதுறை மடத்தின் தலைமை புலவராக விளங்கினார்.

மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர் திருத்தணிக விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார். அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யகம அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப்பெருமை அடைந்தார். உ.வே.சாமிநாதர், தியாகராசர், குலாம் காதிறு நாவலர் போன்றோர் இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் உள்ளவரையிலும் வாழும்.

1. தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் – இத்தொடரில் “புலமைக்கதிரவன்” என்பதற்கு இலக்கணக்குறிப்பு தருக

புலமைக்கதிரவன் = உருவகத்தொடர்

2. மேற்கண்ட பத்தியில் இடம் பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களை கண்டறிக

புலமைக்கதிரவன் = உருவகத்தொடர்

தேனுண்ணும் வண்ட போல் – உவமைத் தொடர்

3. மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களில் பாடுவதில் சிறந்தவர் – விடைக்கேற்ற வினாவை அமைக்க

தல புராணங்களில் பாடுவதில் சிறந்தவர் யார்?

4. பத்தியில் மொழிமுதல் எழுத்துக்களைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் என்று சுட்டுக

புராணங்கள், மகாவித்தவான், யமக அந்தாதி, திரிபந்ததாதி, கலம்பகம்

5. “விளங்கினார்” – பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக

விளங்கினார் = விளங்கு + இன் + ஆர்

  • விளங்கு – பகுதி
  • இன் – இறந்த கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

தமிழாக்கம் தருக

1. The Pen is mightier than the Sword.

விடை : எழுதுகோலின் முனை, வாளின் முனையை விட வலிமையானது.

2. Winners don’t do different things, they do things differently.

விடை : வென்றோர், வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் செயல்களை வேறுவிதமாக செய்வார்கள்

3. A picture is worth a thousand words.

விடை : ஒரு படம் என்பத, ஆயிரம் வாரத்தைகளை விட மதிப்புள்ளது.

4. Work while you work and play while you play.

விடை : உழைக்க வேண்டிய நேரத்தில் உழை! விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடு!

5. Knowledge rules the world.

விடை : அறிவே உலகை ஆளுகிறது

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துக

பிறமொழிச்சொற்கள்தமிழ்ச்சொற்கள்
வாடகைகுடிக்கூலி
மாதம்திங்கள்
போலீஸ்காவலர்
நிச்சயம்உறுதி
உத்திரவாதம்பொறுப்பு
சந்தோஷம்மகிழ்ச்சி
சம்பளம்ஊதியம்
ஞாபகம்நினைவு
வருடம்ஆண்டு
தேசம்நாடு
வித்தியாசம்வேறுபாடு
உற்சாகம்ஊக்கம்
விசாநுழைவாணை, நுழைவிசைவு
பாஸ்போர்ட்கடவுச்சீட்டு
கம்பெனிகுழுமம்
பத்திரிகைசெய்தித்தாள்
கோரிக்கைவேண்டுகோள்
யுகம்காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று
ராச்சியம்ஆட்சி
சரித்திரம்வரலாறு
முக்கியத்துவம்இன்றியமையாமை
சொந்தம்தனக்குரியது, உரியது
சமீபம்அண்மை
தருணம்தக்க சமயம்

நிகழ்ச்சி நிரலினை செய்திக் கட்டுரையாக மாற்றுக. அச்செய்தியை நாளிதழில் வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

Class 11 Tamil Chapter 1.5 நிகழ்ச்சி நிரல்

அனுப்புனர் :

மாணவர் இலக்கிய மன்றத் தலைவர்
அரசு மேல்நிலைப் பள்ளி
சென்னை – 600 001.

பெறுநர் :

முதன்மை ஆசிரியர்
தினமணி நாளிதழ்
சென்னை – 600 002.

ஐயா,

எம் பள்ளியில் நடைபெற இருக்கும் திங்கள கூடுகை நிகழ்வு குறித்த செய்தி அனுப்பியுள்ளேன். அதனை வெளியிட்டு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

உங்கள்
வேலன்
(மாணவர் தலைவர்)

ஜீலைத் திங்கள் வார இறுதி வெள்ளிக்கிழமை அன்று, அரசு மேனிலைப் பள்ளியில் பிற்பகல் 2.30 மணிக்கு “அரியன கேள் புதியன செய்” என்னும் அமைப்பின் திங்கள் கூடுகை நிகழ்வு. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. மாணவர் இலக்கியச் செல்வன். 2.35 மணிக்கு வரவேற்புரை நிகழ்த்துகிறார். தலைமை ஆசிரியர் திரு.எழிலன் அவர்கள், “புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை” என்னும் தலைப்பில், 2.50 மணிக்கு சிறப்புரை நிகழ்த்துவார். 3.45 மணிக்கு மாணவர் ஏஞ்சலின் நன்றியுரை கூறி முடித்தவுடன், 4.00 மணிக்கு நாட்டுப் பண்ணுடன் கூடுகை நிகழ்வு நிறைவு பெறும்.

பத்தியினைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

“தமிழ்” என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. இனிமையும் நீர்மையும் தமிழெனல்” ஆகும் என்று பிங்கில நிகண்டு குறிப்பிடுகிறது.  “தமிழ்” என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற புறநானூற்றுப் பாடலடியில் “தமிழ்” எனும் சொல் மொழி, கவிதை என்பவற்றை தாண்டிப் “பல்கலைப்புலமை” என்ற பொருளில் ஆளப்பட்டது. “தமிழ்கெழு கடல்” என்றவிடத்திலும் “கலைப்புலமை” என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. கம்பன் தமீஇய சாயலவர்” என்னும் இடத்து, “தமிழ்” என்பதற்கும் அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் “தமிழ்” பாட்டு  என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ஞானசம்பந்தன் சொன்ன “தமிழ் இவை பத்துமே” மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டக்களாலான திருப்பாவையை ஆண்டாள் “தமிழ்மாலை” என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும் (பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்)

1. தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை?

இனிமை, பண்பாடு, அகப்பொருள், அழகு, கலைப்புலமை, மென்மை

2. பத்தியில் உள்ள அளபெடைகளைக் கண்டறிக

  • அதூஉம் – இசைநிறையளபெடை/ செய்யுளிசை அளபெடை
  • தழீஇய – சொல்லிசையளபெடை

3. தமிழ் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவதை ஒரு வரியில் குறிப்பிடுக

தமிழ் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது தமிழின் இனிமை, எளிமை, புதுமை, தமிழ் மொழியில் உள்ள இலக்கிய இலக்கணங்கள்

4. திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர் யாது?

தமிழ்மாலை

5. பத்தியின் மையக்கருத்திற்கேற்ப ஒரு தலைப்பிடுக

தமிழின் பெருமை

மொழியோடு விளையாடு

தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக

எ.கா. ஓர் பயிர் பறவை வளர வேண்டும் அழகான தண்ணீர் மயில்

விடை :

  • மயில் ஓர் அழகான பறவை
  • பயிர் வளர தண்ணீர் வேண்டும்

1. பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி

விடை :

  • ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போக வேண்டும்.
  • கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.

2. நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனத்தை

விடை :

  • மாலை நிலவு மனதை மகிழ்விக்கும்.
  • தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.

3. பிறர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை.

விடை :

  • பிறர் செய்த உதவியை, நன்மையை மறக்கக்கூடாது.
  • நன்மையை செய்யாவிட்டாலும் தீமை செய்யக்கூடாது.

4. நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா

விடை :

  • நேற்று வந்த பையன் யார் தெரியுமா?
  • ஏன் பக்கத்தில் இருக்கவில்லை?

5. கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழந்த் நாடு வந்தனர்.

விடை :

  • கோசல நாடு ஒரு சிறந்த நாடு.
  • மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடர்களாக மாற்றுக

வாபேசுதாஓடுபாடு

எ.கா. : வா – வேர்ச்சொல்

  • அருணா வீட்டுக்கு வந்தாள் (வினைமுற்று)
  • அங்கு வந்த பேருந்தில் அனைவரும் ஏறினர் (பெயரச்சம்)
  • கருணாகரன் மேடையில் வந்து நின்றார் (வினையெச்சம்)
  • என்னைப் பார்க்க வந்தவர் என் தந்தையின் நண்பர் (வினையாலணையும் பெயர்)

அ. பேசு – வேர்ச்சொல்

  • கண்ணன் நன்றாகப் பேசு (வினைமுற்று)
  • மேடையில் பேசிய புத்தகம் கயல்விழிக்குப் பிடித்திருந்தது (பெயரச்சம்)
  • குழந்தை நினைத்தவற்றையெல்லாம் பேசி முடித்தார். (வினையெச்சம்)
  • வானொயில் பேசியவர் யார் என்று அண்ணன் தம்பியிடம் கேட்டான் (வினையாலணையும் பெயர்)

ஆ. தா – வேர்ச்சொல்

  • வேல்விழி கயல்விழிக்குப் புத்தகம் தந்தாள் (வினைமுற்று)
  • வேல்விழி தந்த புத்தகம் கயல்விழிக்குப் பிடித்திருந்தது (பெயரச்சம்)
  • தலைமையாசிரியர் சான்றிதழ்களைத் தந்து முடித்தார் (வினையெச்சம்)
  • தானமாகப் பொருள்களை தந்தவர் மகிழ்ந்தார் (வினையாலணையும் பெயர்)

இ. ஓடு – வேர்ச்சொல்

  • மாணவர்கள் வேகமாக ஓடினார் (வினைமுற்று)
  • வேகமாக ஓடிய மாணவர்கள் வெற்றி பெற்றான் (பெயரச்சம்)
  • குமரன் வேகமாக ஓடி விழுந்தான் (வினையெச்சம்)
  • மெதுவாக ஓடியவர் தோற்றார் (வினையாலணையும் பெயர்)

ஈ. பாடு – வேர்ச்சொல்

  • கீதா பாட்டுப் பாடினாள் (வினைமுற்று)
  • பாட்டு பாடிய கீதா நடனம் ஆடினாள். (பெயரச்சம்)
  • கீதா பாட்டுப் பாடி முடித்தாள். (வினையெச்சம்)
  • வகுப்பில் பாடியவள் அனைவராலும் பாராட்டப்பட்டாள். (வினையாலணையும் பெயர்)

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்

அழகியல் – Aestheticsஇதழாளர் – Journalist
 கலை விமர்சகர் – Art Criticபுத்தக மதிப்புரை – Book Review
புலம்பெயர்தல் – Migrationமெய்யியலாளர் – Philosopher

அறிவை விரிவு செய்

நாடற்றவன் – அ. முத்துலிங்கம்
நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – அ.கி. பரந்தாமனார்
உயிர்த்தெழும் காலத்துக்காக – சு. வில்வரத்தினம்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment