பாடம் 2.1 இயற்கை வேளாண்மை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 2.1 “இயற்கை வேளாண்மை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பலவுள் தெரிக
1. மண்ணுக்கு வளம் சேர்ப்பன ____________
- மண்புழு
- ஊடுபயிர்
- இயற்கை உரங்கள்
- இவை மூன்றும்
விடை : ஆ, ஈ
2. “வான் பொய்த்தது” – என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் ____________
- வானம் இடிந்தது
- மழை பெய்யவில்லை
- மின்னல் வெட்டியது
- வானம் என்பது பொய்யானது
விடை : மழை பெய்யவில்லை
3. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை ____________
அ) மதிப்புக் கூட்டுப் பொருள்கள் | ஆ) நேரடிப்பொருள்கள் |
- அ – மட்டும் சரி
- ஆ – மட்டும் சரி
- இரண்டும் சரி
- அ-தவறு, ஆ சரி
விடை : அ – மட்டும் சரி
4. பிழையான தொடரை கண்டறிக ____________
- பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
- ஏதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத கருவிகளாகும்.
- குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.
- யானைகளால் வெகுதொலைவில் உள்ள நீரினை, வாசனை மூலம் அறிய முடியும்.
விடை : குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.
குறு வினா
தமிழ்நாட்டின் மாநில மரம் – சிறுகுறிப்பு வரைக
- நம் தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம்
- இது, ஏழைகளின் கற்பக விருட்சம்.
- சிறந்த காற்றுத் தடுப்பான்
- ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மையுடையது.
சிறு வினா
வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? – நும் கருத்தை எழுதுக.
- வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி, நடைமுறைக்குச் சாத்தியமே
- பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதால், மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
- வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை ஆகிய அனைத்தையும் நன்றாக இடித்து கோமியத்தில் ஊற வைத்துப் பயிர்களில் தெளித்தால், பூச்சிகள் காணாமல் போய்விடும்.
- வேதிக் கலப்பில்லாத பூச்சிக் கொல்லியால், நுண்ணுயிர்ப் பெருக்கம் ஏற்பட்ட, மண்வளம் பெருகும்.
நெடு வினா
“சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே” என்னம் தலைப்பில் மேடைப் பேச்சிற்கான உரையை உருவாக்குக.
- மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளங்குவது வேளாண்மை அதனால் தான் உலகிற்கு அச்சாணி என்று வள்ளுவரும் போற்றுகிறார். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று முண்டாசுகவி பாரதியாரும் போற்றுகிறார்.
- இயற்கையிலிருந்து விலகுகிறது இம்மண்ணுலகம், இதனால் இம்மண்ணில் வாழும் ஊறு விளைவிக்கின்ற இந்நிலை மாறவும் இயற்கை வேளாண்மையை புதுப்பொலிவும் பெறபும் வலியுறுத்துகிறது என்னுடைய கன்னிப்பேச்சு
- அண்மையில் நம்மை விட்டு மறைந்தாலும்; நம் கண்ணைவிட்டு மறைந்தாலும் என்றும் தமிழர் நெஞ்சில் நிலைத்து வாழும் இயற்கை வேளாண்மை மீண்டும் இம்மண்ணில் விதையூன்ற நம்மாழ்வார் ஐயாவின் வழியை பின்பற்றி இயற்கை வேளாண்மை செய்ய முயன்றால் நம்நாடு நோயில்லா நாடாக மாறும். இயற்கை வளமை கொழிக்கும்.
- இன்றைக்கு செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி என்று மண்ணையையே நஞ்சாக்கி அதில் விளையும் பயிர்கள் எல்லாம் பாழ்படுத்துகின்றன. பூச்சிக்கொல்லி பயிரில் இருக்கும் பூச்சியை மட்டும் கொல்லவில்லை. அதனைச் சாப்பிடுகின்ற மக்களுக்கு அதிகமாக நோய்வருகிறது. புற்றுநோய் வயிற்றுப்புண், மலட்டுத்தன்மை இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள்.
- வேதிக்கலப்பே இல்லாமல் நம் முன்னோர்கள் வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை ஆகிய அனைத்தையும் நன்றாக இடித்து கோமியத்தில் ஊற வைத்துப் பயிர்களில் தெளித்தால், பூச்சிகள் பயிர்களைத் தாக்காது. காய்ந்த இலைச் சருகு, சாம்பல் ஆகியவற்றைக் கலந்து போட்டால் போதும். இது புன்செய் நிலத்திற்கு உகந்ததாகும். ஆடு, மாடு முதலிய கால்நடைச்சாணத்தை எரிப்பதனால் கிடைக்கும் சாம்பல் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். உளுந்து நெல்லுக்கு ஊடுபயிராகப் போடுவது இதை அறுவடை செய்தபின், அதன் வேர்முடிச்சுகளில் இருக்கும் நைட்ரஜன் நிலத்தின் வளத்தைப் பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும். இயற்கை உர பூச்சிகொல்லியை பயன்படுத்தினால் நுண்ணுயிர்ப் பெருக்கம் குறைமாமல், மண் சத்து வீணாகாமல் மண்வளமும் அதிகமாகும்
- உழப்படாத நிலம், இரசாயன உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல்சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயிர்விளைச்சல் என்னும் ஐந்து விவசாய மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர் “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலை எழுதிய மசானபு ஃபுகோகோ
- சுற்றுச்சூழலை வளப்படுத்துவதே இயற்கை வேளாண்மை, இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதே நேரத்தில் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும் வட நித்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும். எனவே நம்மை நமது சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையை என்ற கூறி விடை பெறுகிறேன். நன்றி!
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. மதிப்புக் கூட்டுப்பொருள் என்பது …………..
- பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள்
- பனங்கற்கண்ட கருப்பட்டி போன்றவற்றை விற்பது
- ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவது
- மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்வது
விடை : ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவது
2. “உழவர் உலகிற்கு அச்சாணி” எனக் கூறிவர் ………………
- சுரதா
- பாரதிதாசன்
- திருஞானசம்பந்தர்
- திருவள்ளுவர்
விடை : திருவள்ளுவர்
3. “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” எனப் போற்றியவர் …………….
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- திருவள்ளுவர்
விடை : பாரதியார்
4. “ஒற்றை வைக்கோல் புரட்சி” என்னும் நூலின் ஆசிரியர் ……………
- நம்மாழ்வார்
- மசானபு ஃபிகோகோ
- பாமயன்
- ஆர்.எஸ்.நாராயணன்
விடை : மசானபு ஃபுகோகோ
5. தமிழகத்தின் மாநில மரம் ……………
- அரசமரம்
- ஆலமரம்
- பனைமரம்
- வேப்பமரம்
விடை : பனைமரம்
6. மண்ணுக்கு நைட்ரஜன் சத்து அளிப்பது ……………
- பனைமரம்
- இயற்கை மரம்
- சாணத்தை எரித்த சாம்பல்
- உளுந்தின் வேர்முடிச்சு
விடை : உளுந்தின் வேர்முடிச்சு
7. இயற்கை வேளாண்மை செய்ய மங்கை பின்பற்றி வழி …………………
- நம்மாழ்வர்
- முன்னோர்
- மல்லிகா
- சொக்கலிங்கம்
விடை : நம்மாழ்வர்
8. கீழ்கண்டவற்றில் இயற்கை உரம் எது?
- யூரியா
- பொட்டாசியம்
- சாணம்
- சல்பேட்
விடை : சாணம்
9. “ஏழைகளின் கற்பகவிருட்சம்” எனப் போற்றப்படும் மரம் ……………….
- தென்னைமரம்
- பனைமரம்
- வேப்பமரம்
- புளியமரம்
விடை : பனைமரம்
10. புஞ்சை நிலத்திற்கு இடும் சாம்பல் என்பது ……………….
- கால்நடைச் சாணத்தை எரித்தது
- தொழிற்சாலை கழிவு
- சாணம், சிறுநீர்
- வைக்கோல்
விடை : கால்நடைச் சாணத்தை எரித்தது
11. “கருப்பட்டி” என்பது ……………….
- தென்னை சாறில் தயாரிப்பது
- கரும்புச்சாறில் தயாரிப்பது
- பதநீரில் தயாரிப்பது
- நுங்கில் தயாரிப்பது
விடை : பதநீரில் தயாரிப்பது
12. கூற்று 1 : பனைமரம் ஏழைகளின் கற்பக விருட்சம் என்று சொல்லலாம்.
கூற்று 1 : பனைமரத்திலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்களும் உருவாக்கலாம்.
- கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
- கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
- கூற்று இரண்டும் தவறு
- கூற்று இரண்டும் சரி
விடை : கூற்று இரண்டும் சரி
குறுவினா
1. தொழுஉரம் என்பது என்ன?
நன்செய்நிலத் தொழுஉரம் :
மாட்டுச்சாணமும், கோமியமும் வைக்கோலுடன் கலந்து மங்கச் செய்த உருவாக்குவது
புன்செய்நிலத் தொழுஉரம் :
காய்ந்த இலை, சருகு, கால்நடைச்சாணத்தை எரிப்பதால் கிடைக்கும் சாம்பல் கலந்தது.
2. ஊடுபயிர் என்பது என்ன?
- நெல்கதிர் சாயும் போது ஊடுபயிராக உளுந்த போன்றவற்றை விதைப்பர்.
- அவற்றின் வேர் முடிச்சுகளில் சேர்ந்திருக்கும் நைட்ரஜன் நிலத்தின் வளத்தை பெருக்கும்.
3. மதிப்புக் கூட்டுப்பொருள் என்பது யாது?
ஒருபொருளை மேம்படுத்தி, மாற்றும் பொருளாக மாற்றுவதை மதிப்புக் கூட்டுப்பொருள் என அழைக்கின்றனர்.
சான்று : பனைமரப் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி தயாரிப்பது.
4. எதனால் மண் நஞ்சாகிப்போனது?
விவசாயத்திற்கு வேதிஉரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியதனால் மண் நஞ்சாகிப்போனது.
5. நிலத்தை நஞ்சு நீக்கி சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
நிலத்தை நஞ்சு நீக்கி சரி செய்ய, அறுவடை முடிந்ததும் வைக்கோலை வயிலி சமமாக பரப்பி மடிச் செய்து, மறு பருவம் வந்தவுடன் மழைநீரைத் தேக்கி உழ வேண்டும்.
6. பூச்சுக் கொல்லியால் விளையும் கேடுகள் யாவை?
பூச்சிக்கொல்லி பூச்சிகளை மட்டும் கொல்லுவதில்லை விளைபொருளுக்குள்ளும் அது ஊடுருவுகிறது. அந்த விளைபொருள்களை மக்கள் உண்ணும்போது மக்களுக்கு புற்றுநோய், வயிற்றுப்புண் முதலான நோய்களை உண்டாக்குகிறது.
7. எது இயற்கை வேளாண்மை?
விதை விதைப்பதிலிருந்து விளைவை அறுவடை செய்கிறவரை, ஒட்டுமொத்தாக வேதிப் பொருளான உரத்தையோ, பூச்சிக் கொல்லியையோ பயன்படுத்தாது இருப்பது இயற்கை வேளாண்மை ஆகும்.
8. இயற்கை விவசாய பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பு பற்றி எழுதுக?
வேப்பங்கொட்டை, நொச்சி இலை, பிரண்டை, கற்றாழை ஆகியவற்றை இடித்து கோமியத்தில் ஊற வைத்து எடுத்த சாற்றில் நீர் கலந்து இயற்கை விவசாய பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கின்றன.
9. ஐந்து விவசாய மந்திரங்கள் எவை?
- உழப்படாத நிலம்
- இரசாயன உரம் இல்லாத உற்பத்தி
- பூச்சிக்கொல்லி தெளிக்கப்படதாத பயிர்பாதுகாப்பு
- தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி
- ஒட்டவிதை இல்லாமல் உயர் விளைச்சல்
10. இயற்கை விவசாய பூச்சிக் கொல்லிகள் பயன்கள் யாவை?
- பூச்சிகள் வருவது படிப்படியாக் குறையுது.
- அதோட நிலத்துல இருக்குற மண்புழு போன்ற சின்ன உயிர்கள் அழியறது தடுக்கப்படுகிறது.
- மண்ணில் உள்ள நுண்ணுயிர்ப் பெருக்கத்துனால, மண்ணும்
தன்னோட வளத்தை இழப்பதில்லை.
சிறு வினா
1. இயற்கை வேளாண்மை சிறக்க சித்தப்பா சொக்கலிங்கம் கூறம் நெறிகள் யாவை?
- நிலத்தில் இடைவிடாமல் மாறிமாறிச் சாகுபடி செய்தல் கூடாது.
- நிலத்தை ஆறப்போட வேண்டும்.
- சரியான இடைவெளியில் மாறிமாறிப் பயிரிட வேண்டும்.
- நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பண்ணைகளைப் பார்வையிட வேண்டும்.
- வேளாண்மை அலுவலகம் மூலம் அரசு செய்துள்ள வழிமுறைகளைத் தெரிந்து கொள் வேண்டும்.
- வேளாண்துறை தரும் பயிற்சிகளில் கலந்து கொண்டு நல்ல வழிமுறைகளை அறிந்து பயிரிட வேண்டும் என, இயற்கை விவசாயம் சிறக்க சித்தப்பா சொக்கலிங்கம் நெறிமுறைகளைக் கூறுகிறார்.
2. இயற்கை வேளாண்மை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்? அவர் உலகிற்குச் சொன்னது என்ன?
- இயற்கை வேளாண்மை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் மசானபு ஃபுகோகோ
- ஜப்பான் நாட்டு அறிஞரான மசானபு ஃபுகோகோ “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலை எழுதினார்.
- உழப்படாத நிலம். இரசாயன உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக்கொல்லி தெளிக்கப்படதாத பயிர் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி, ஒட்டவிதை இல்லாமல் உயர் விளைச்சல்