பாடம் 3.1 மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 3.1 “மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
கூற்று : “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் : “கோடு” என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை பொருள்களும் உண்டு
- கூற்று சரி, விளக்கம் தவறு
- கூற்று சரி, விளக்கமும் சரி
- கூற்று தவறு, விளக்கம் சரி
- கூற்று தவறு, விளக்கம் தவறு
விடை : கூற்று சரி, விளக்கமும் சரி
குறு வினா
கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் சொல், கோட்ட, கோடு, கோண்டே, க்வாட் என எடுத்தாளப்பட்டுள்ளது
சிறு வினா
மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க?
- மனித சமூகத்தின் ஆதிநிலம் மலை
- மலைநிலத்தைத் தமிழ் இலக்கியம் “குறவஞ்சி” என்றே குறிப்பிடுகிறது.
- திராவிடர்களைக் கமில் சுவலபில், “மலைநில மனிதர்கள்” என்கிறார்.
- இந்தியப் பழங்குடியினர் பெயர்கள், மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.
- பழங்குடியினர், உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறு, ஓடைகளை ஒட்டிக் குடியிருப்பை அமைத்துள்ளனர்.
- அவை பழங்குடியினரின் மலை சார்ந்த சமூக, சமயக் கூறுபாடு சார்ந்த புரிதலை தருகின்றன.
நெடு வினா
“இயற்கையோடு இயைந்த வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன” கூற்றினை மெய்பிக்க
மனிதன் தோன்றிது மலைநிலம்
- மலை, மனித சமூகத்தின் ஆதி நிலமாகும், தமிழரின் பண்டைப் பதிவுகள், கடவுளையும், மலையையும் வாழ்வில் தொடர்புபடுத்துவனவாக விளங்குகின்றன.
- மலை, தமிழ் இலக்கியங்களில் “குறவஞ்சி” எனக் குறிக்கப்படுகிறது. திராவிட இனக்குழுப் பெயர்கள், மலைசார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.
- இயற்கையோடு இயைந்த வாழ்வு
- பழங்குடியினர் ஓடும் நீரையே குடிநீராகப் பயன்படுத்தினர். தம் குடியிருப்புப் பகுதியை விட உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறுகள், ஓடைகளில் நீர் எடுத்துப் பருகினர்.
- மலை உச்சியில் அமைந்த பழங்குடித் தலைவரின் வீடு, வாழ்விட வடிவமைப்பு வாழ்வியல் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தை காட்டுகின்றன.
சொல்வழக்கு
- சிந்துவெளி, திராவிட மலைவாழ் மக்களின் அன்றாடப் புழங்கு சொற்களின் தொடர்ச்சி சிந்திக்கத்தக்கதாகும்.
- தென்னிந்திய மலைவாழ் மக்களிடையே மலை, மலா, மலே என்னும் செற்கள் வழங்குகின்றன.
- “மலை”, “குன்று” என்னும் சொல்லாட்சி, மலை சார்ந்த மக்களிடம் வழங்குகிறது சிறப்பாகும்.
கோட்டை
“கோட்டை” என்னும் சொல், செயற்கையான காப்பு அரண்களான கோட்டைகளைக் கட்டி எழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியல் தோன்றின என்பதை விட, தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதே உண்மை
மலைப் பெயர்களின் நீட்சி
- வடமேற்கு நாடுகளில் கண்டறியப்பட்ட சான்றுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நெடுமலைகளோடு பொருந்திப் போகும் திராவிடர்களின் மலைப் பெருமிதத்தின் நீட்சியாக உள்ளன. அப்பகுதியில் திராவிடர் வாழ்ந்த சான்றுகளை உறுதி செய்கின்றன.
- இவற்றால், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வினால் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தமை புலப்படும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. அகத்திணை இயல், மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை ………….. எனக் குறித்தது.
- பாலை
- முல்லை
- குறிஞ்சி
- மருதம்
விடை : குறிஞ்சி
2. மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை ……………….. என்னும் கலைச்சொல் குறிக்கும்.
- Biology
- Orology
- Zoology
- Botany
விடை : Orology
3. முருகனைச் “சேயோன் மேய மைவரை உலகம்” எனக் கூறும் நூல் …………..
- நற்றிணை
- குறுந்தொகை
- தொல்காப்பியம்
- பரிபாடல்
விடை : தொல்காப்பியம்
4. “விண்பெரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் ………..
- நற்றிணை
- திருமுருகாற்றுப்படை
- தொல்காப்பியம்
- பரிபாடல்
விடை : திருமுருகாற்றுப்படை
5. திராவிடர்களை “மலைநில மனிதர்கள்” என அழைத்தவர் ……………..
- கமில் சுவலபில்
- ஆர்.பாலகிருஷ்ணன்
- தி.சு. செல்லப்பா
- அண்ணாமலையார்
விடை : கமில் சுவலபில்
6. பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாக கருதுபவர் …………..
- குறும்பர்
- ஜதாப்பு
- கோட்டா
- தோடர்
விடை : தோடர்
7. கடையெழு வள்ளல்கள் வாழ்ந்த இடம் ……………
- பாலை
- மலை
- காடு
- தீவு
விடை : மலை
8. “கொண்டா தோரா” இனக்குழுவினர் வாழும் பகுதி ………….
- ஆந்திரப்பிரதேசம்
- உத்திரப்பிரதேசம்
- மத்தியபிரதேசம்
- தமிழ்நாடு
விடை : தமிழ்நாடு
9. வீடுகளில் மேடைகள் அமைக்க முக்கியத்துவம் கொடுத்தோர் …………..
- குறும்பர்
- தோடர்
- ஜதாப்பு
- கோட்டா
விடை : தோடர்
10. தாழ்வாரத்தை மெட்டு எனக் குறிப்பிட்டவர் …………….
- குறும்பர்
- தோடர்
- ஜதாப்பு
- கோட்டா
விடை : குறும்பர்
11. “மலை” என்னும் திராவிடச் சொல் வடமொழியல் ………….. என வழங்கப்படுகிறது.
- நுனி
- மலய
- வரை
- அடி
விடை : மலய
12. “விளிம்பு” என்னும் பொருள் தரும் சொல் ……………..
- நுனி
- முதல்
- வரை
- அடி
விடை : வரை
13. “தோணிமலை” என்னும் பெயர் உள்ள இடம் ……………
- கர்நாடகம்
- கேரளம்
- ஆந்திரம்
- தமிழ்நாடு
விடை : கர்நாடகம்
14. காவல்மிகு காப்பரண் கொண்ட மதில் சூழந்த கட்டமைப்பு …………… என வழங்கப்பட்டது.
- தோணிமலை
- மலையரண்
- காட்டரண்
- கோட்டை
விடை : கோட்டை
15. “மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு” கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் ……………
- கொற்கை, வஞ்சி, தொண்டி வளாக ஆய்வு
- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
- அன்புள்ள அம்மா
- சிறகுக்குள் வானம்
விடை : சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
16. கீழ்காணும் கூற்றுகளுள் தவறானதைக் தேர்க
கொற்கை, வஞ்சி, தொண்டி என்பன
- பழந்தமிழ் ஊர்ப்பெயர்கள்
- அரசியல், பொருளியல், பண்பாட்டில் உருவானவை
- ஆணிவேர் அடையாளங்கள்
- வடமொழி இலக்கியப்பிரிவுகள்
விடை : வடமொழி இலக்கியப்பிரிவுகள்
17. கீழ்காணும் கூற்றுகளுள் தவறானதைக் தேர்க
- மலை, மனித சமூகத்தின் ஆதிநிலம்
- மலை, மனித முன்னேற்த்திற்கு ஒரு தடை
- மலை, மற்றும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி
- மலை, திராவிடப் பழங்குடிகளின் வாழிடம்
விடை : மலை, மற்றும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி
குறு வினா
1. திராவிடப் பழங்குடி இனப்பெயர்கள் எதன் அடிப்படையில் ஆக்கப்பெற்றுள்ளன?
இந்தியாவில் வாழும் பல்வேறு திராவிடப் பழங்குடி இனக்குழுப் பெயர்கள் மலை, குன்று என்று பொருள்தரும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்றுள்ளன
2. திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள் எவற்றை உணர்த்துகின்றன?
திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், அப்பழங்குடியினரின் மலை சாரந்த் வாழ்வியல் சமூக, சமயக் கூறுபாடுகளைக் குறித்த புரிதலை உணர்த்துகின்றன
3. மலை, குன்று சொல்லாட்சியை உறுதி செய்வது எது?
- ‘மலை’ என்பது ‘உயரமானதையும் ‘குன்று’ என்பது ‘உயரம் குறைவானதையும் குறிக்கின்றன.
- மலை , குன்று என்னும் இரண்டு சொல்லாட்சிகள் வெளிப்படுத்தும் உயர வேறுபாட்டை வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் மலை சார்ந்த இடப்பெயர்கள் உறுதிசெய்வது வியப்பளிக்கின்றது.
4. “வரை” என்னும் சொல்வழக்குக் குறித்து அறிப்படுவது யாது
“நுனி முதல் அடி வரை” “அடி முதல் நுனி வரை” என்னும் தொடர்களில் “வரை” என்னும் சொல் “விளிம்பு” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது
5. பழந்தமிழ்ச் சமூகத்திற்கு ஆணிவேர் அடையாளங்களாகத் திகழும் ஊர்கள் எவை?
பழந்தமிழ்ச் சமூகத்திற்கு கொற்கை, வஞ்சி, தொண்டி என்னும் ஊர்கள் ஆணிவேர் அடையாளங்களாகத் திகழும்
சிறு வினா
1. “மலை”, “கோட்டை” என்னும் சொற்களை அடிப்படையாகக் கொண்ட திராவிட இனப்பெயர்கள் யாவை?
மால் பஹாடியா | ஜார்கண்ட் |
மல அரயன் | மேற்குத்தொடர்ச்சி மலைகள் – (கேரளம்) |
மல குறவன் | நெடுமங்காடு (கேரளம்) |
மல மூத்தன் | எர்நாட் (கேரளம்) |
மல கணிக்கர் | வட கேரளம் |
மலயன் | பாலக்காடு (கேரளம்) |
மல வேடா | இடுக்கி (கேரளம்) |
மலேரு | தட்சிண கன்னா (கர்நாடகம்) |
கோட்டா | நீலகிரி (தமிழ்நாடு) |
கொண்டா தோரா | ஆந்திரப்பிரதேசம் |
கோண்டு, கொய்ட்டெர் | ஒடிஸா |
2. கொற்கை, வஞ்சி, தொண்டிவளாகம் – குறிப்பு தருக
- விளைவால் கொற்கை, வஞ்சி, தொண்டி என்னும் ஊர்கள் அரசியல், பொருளியல், பண்பாடுகளின் விளைவால் உருவானவை.
- சங்ககாலப் பழந்தமிழ் சமுகத்திற்கு இவையாவும் ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்
- சங்கால மன்னர்கள், குறுநிலத்தலைவர்கள் ஆகியவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயரோடு, வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்பெயர்கள் பொருந்திப் போகின்றன. இவை, கடந்த கால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள்.
3. வடமேற்குப் பகுதிகளில் திராவிட மலைப்பெயர்கள் அட்டவணைப்படுத்துக
திராவிடச் சொற்கள் | மாநிலம் | மாவட்டம் |
மலை | உத்திராஞ்சல் | சமோலி |
ஜார்கண்ட் | கும்லா | |
உத்திரப்பிரதேசம் | ஜவுன்பூர் | |
வரை | குஜராத் | வல்ஸ்ட் |
மஹாராஷ்டிரா | தாணே | |
ஹிமாசலப்பிரதேசம் | காங்க்ரா | |
மலா | பஞ்சாப் | ஜலந்தர் |
ராஜஸ்தான் | அஜ்மீர் | |
கர்நாடகம் | உடுப்பி |
4. வடமேற்குப் பகுதிகளில் திராவிட மலைப்பெயர்கள் அட்டவணைப்படுத்துக
தமிழ் | கோட்டை, கோடு |
மலையாளம் | கோட்ட, கோடு |
கன்னடம் | கோட்டே, கோண்டே |
தெலுங்கு | கோட்ட |
துளு | கோட்டே |
தோடா | க்வாட் |
மேலும் “கோடை” என்னும் தமிழ்ச்சொல் “மலை” என்னும் பொருளில் வழங்கப்படுகிறது