Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 3.3 – குறுந்தொகை

பாடம் 3.3 குறுந்தொகை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 3.3 “குறுந்தொகை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

நூல்வெளி

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை கொண்டது.
  • “நல்ல குறுந்தொகை” என சிறபித்து உரைக்கப்படுகிறது
  • உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கபட்ட தொகை நூலாக கருதப்படுகிறது.
  • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
  • வெள்ளிவீதியார் சங்காலப் பெண் புலவர்களுள் ஒருவர்.
  • சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

சொல்லும் பொருளும்

  • சிதவல் – தலைப்பாகை
  • தண்டு – ஊன்றுகோல்

இலக்கணக்குறிப்பு

  • பிறந்தோர்– வினையாலணையும் பெயர்
  • நன்றுநன்று – அடுக்குத்தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

பிரிந்தோர் = பிரி + த்(ந்) +த் + ஓர்

  • பிரி – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் –  பலர்பால் வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

தண்டுடை = தண்டு + உடை

  • “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி தண்ட் + உடை என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி தண்டுடை  என்றாயிற்று.

பாடநூல் வினாக்கள்

குறு வினா

குறுந்தொகை குறிந்து நீங்கள் அறியும் செய்தி யாது?

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு
  • அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை கொண்டது.
  • “நல்ல குறுந்தொகை” என சிறபித்து உரைக்கப்படுகிறது
  • உரையாசிரியர்கள் பலரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
  • இந்நூலே முதலில் தொகுக்கபட்ட தொகை நூலாக கருதப்படுகிறது.
  • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

சிறு வினா

சங்ககாலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டள்ளது. இச்சங்ககாலச் சமூக நிகவுகள் எழுத்தில் காட்சிபடுத்துப்படுள்ளமையை ஒப்பிட்டு விளக்குக

  • சங்ககாலத் தமிழகத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுகளுள் ஒன்றான திருமணத்திற்கு, மணமகன் முதியர்வர்கள் மூலம் தலைவியின் இல்லத்திற்குப் பரிசுப்பொருள்களை அனுப்பித் திருமணத்தை உறுதி செய்ததை, வெள்ளிவீதியார் பாடலால் அறிய முடிகிறது.
  • அதாவது, அக்காலத்தில் பெண்ணுக்க, மணமகன் பொன்பொருள் அளித்த மணந்தமை புலப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் இதே சமூக நிகழ்வு, மணம் பேசுதல் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவிதைகளும் சிறுகதைகளும் நாவல்களும் சுட்டிக் காட்டுகின்றன.
  • பெண்ணை மணப்பதற்கு மணமகனுக்கு மணக்கொடை அளித்தால்தான் திருமண நிச்சயம் நடைபெறும் என்ற இழிநிலை காணப்படுகிறது.
  • பொன் கொடுத்துப் பெண் கொண்டதைப் பெருமையாகக் கருதிய அதே தமிகத்தில் தான் இன்று, “பொன் கொடுத்தால்தான் பெண் கொள்வேன்” என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
  • எனினும் எங்கோ சில இடங்களில் வரதட்சணை பெறாமல் மணம்புரியும் நிகழ்வும் நடைபெறுகிறது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • வாழி – வியங்கோள் வினைமுற்று
  • வெண்டலை – பண்புத்தொகை
  • அம்ம – முன்னிலை விளி
  • புணர்ப்போர்– வினையாலணையும் பெயர்
  • கொல்லோ (கொல் + ஓ) – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. இருந்தனர் =இரு + த்(ந்) + த் + அன் + அர்

  • இரு – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அர் –  பலர்பால் வினைமுற்று விகுதி

2. வாாி = வாழ் + இ

  • வாழ் – பகுதி
  • இ – வியங்கோள் வினைமுற்று விகுதி

3. மேவி = மேவு + இ

  • மேவு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. நம்மூர்  = நம் + ஊர்

  • “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி நம்ம் + ஊர் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி நம்மூர் என்றாயிற்று.

2. வெண்டலை =வெண்மை + தலை

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி வெண் + தலை என்றாயிற்று.
  • “ணளமுன் டணவும் ஆகுத் தநக்கள்” விதிப்படி வெண்டலை என்றாயிற்று.

3. மக்களோடு = மக்கள் + ஓடு

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி மக்களோடு என்றாயிற்று.

IV. பலவுள் தெரிக

1.  சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர் …………………

  1. ஆண்டாள்
  2. மணிமேகலை
  3. வெள்ளிவீதியார்
  4. காரைக்காலம்மையார்

விடை : வெள்ளிவீதியார்

2. தொகை நூல்களுள் முதலில் தொகுக்கபட்டது ……………….

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : குறுந்தொகை

3. “குறுந்தொகை” நூலைத் தொகுத்தவர் ……………..

  1. அருணகிரியார்
  2. உமறுப்புலவர்
  3. பாரதியார்
  4. பூரிக்கோ

விடை : பூரிக்கோ

4. குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் ……………

  1. பாரதம் பாடிய பெருந்தேவனார்
  2. உமறுப்புலவர்
  3. பாரதியார்
  4. பூரிக்கோ

விடை : பாரதம் பாடிய பெருந்தேவனார்

5. குறுந்தொகை …………… திணை சார்ந்த நூல்

  1. புறத்
  2. அகத்
  3. உயிர்
  4. அல்

விடை : அகத்

6. “தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்” – இத்தொடரில் “தலைப்பாகை” என்னும் பொருளடைய சொல் ………………..

  1. தண்டு
  2. கையர்
  3. வெண்டலை
  4. சிதவல்

விடை : சிதவல்

7. எட்டுத்தொகை நூல்களுள் புறம் சார்ந்த நூல்கள் ……………….

  1. 3
  2. 4
  3. 2
  4. 5

விடை : 2

சிறு வினா

1.  குறுந்தொகைத்தலைவன் பரிசுப்பொருள்களை எவ்வாறு அனுப்பினார்?

தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் சென்ற முதியவர்கள் வாயிலாகப் பெண்வீட்டார் பேசும் போதும் என்றும் கூறும் அளவுக்கு பரிசுப் பொருள்களைக் குறுந்தொகைத் தலைவன் அனுப்பினான்

2. குறிஞ்சித்திணை – விளக்குக

  • தலைவன் தலைவியர் கூடுதலையும், அதற்கு காரணமான நிகழ்வுகளையும் உரிப்பொருளாக கொண்ட ஒழுக்கம் குறிஞ்சித் திணையாகும்.
  • இந்நிகழ்வுக்கு மலையும் மலைசார்ந்த நிலமும், குளிர்காலமும் முன்பனிக் காலமுமாகிய பெரும்பொழுதுகளும், யாமம் என்னும் சிறுபொழுதும் பின்புலமாக அமையும்.
  • அத்துடன் குறிஞ்சித் தெய்வம் (முருகன்), உணவு ( மலைநெல், தினை), விலங்கு (புலி, கரடி), பறவை (கிளி, மயில்), தொழில் (தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்) முதலான கருப்பொருளும் பின்புலமாகும்.

3. துறை : “தலைமகள் தமர் வரைவோடு வந்து சொல்லாடுகின்றுழி வரைபு மறுப்பவோ” எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது விளக்குக

  • தலைவியை மணம் முடிப்பது குறித்துப் பேசத் தலைவன், அவனுடைய சுற்றத்தாரன சான்றோரை அனுப்புகிறான். அப்போது தன் பெற்றோர் மணம் பேச மறுத்துவிடுவார்களோ, எனத் தலைவி மனம் கலங்குகிறார்.
  • இந்நிலையில் தலைவியிடம் தோழி, “தலைவனின் தரப்பினராகிய சான்றோரைத் தலைவியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்” என்று சொன்னதைக் குறித்து விளக்குவதாகும்.

4. குறுந்தொகைத் தோழி தலைவியை எவ்வாறு தேற்றினாள்?

  • மணம் பேசத் தலைவன் சார்பாக வந்தவர்களைத் தன் பெற்றோர் மறுத்து அனுப்பி விடவார்களோ எனத் தலைவி கவலை கொண்டாள். அவைளத் தேற்றும் வகையில் தோழி, “ஊர் மக்களின் அவையில், முன்பு பலமுறை தலைவனின் பரிசுப்பொருள்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
  • இன்றோ, தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் சென்ற முதியவர்கள் மூலமாகப் பரிசுப் பொருள்களைக்  தலைவன் அனுப்பி, அவை முன் வைத்துள்ளான்.
  • நம் உறவினரும் அவற்றைக் கண்டு, நன்று நன்று எனக் கூறி மகிழ்ந்தனர். எனவே, “தோழி! நம் ஊரில் முன்பெல்லாம் பரிசுத்தொகை போதாதென்று பிரித்து விடப்பட்ட தலைவன் தலைவியரைப் போதிய பரிசுத்தொகை அளித்ததும் சேர்த்து வைப்போர் இருந்தனரா?” என் வினா எழுப்பி, விரைவில் மணம் முடியும் என்பதைத் தோழி உறுதிப்படுத்தித் தலைவியைத் தேற்றி மகிழ்வித்தாள்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment