Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 3.7 – திருக்குறள்

பாடம் 3.7 திருக்குறள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 3.7 “திருக்குறள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

1. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை கண்டுபிடிக்க

Class 11 Tamil Chapter 3.7 - படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை கண்டுபிடிக்க

அ) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
       ஈண்டு முயலப்படும்

ஆ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
       இல்லாகித் தோன்றாக் கெடும்

இ) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
      மலையினும் மாணப் பெரிது.

விடை:-

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

2. துன்பப்படுவர் ………………

  1. தீக்காயம் பட்டவர்
  2. தீயினால் சுட்டவர்
  3. பொருளைக் காக்காதவர்
  4. நாவைக் காக்காதவர்

விடை : நாவைக் காக்காதவர்

3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளை கண்டறிக

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையார் – நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்

அ) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
      பொன்றாது நிற்பதொன்ற இல்

ஆ) நெருங்கல் உளனொருவன் இன்றில்லை என்னும்
       பெருமை உடைத்துஇவ் வுலகு

இ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
      இல்லாகித் தோன்றாக் கெடும்

விடை :

நெருங்கல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

4. கீழ்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க

பூக்களும் முட்களுக்கும் இடையில்
புழங்குகிறது யோசனை
பாசத்துக்கும் நியாத்துக்ககும் நடுவில்
நசுங்கிறது அறம்
இன்பத்தக்கும் பேராசைக்கும் நடக்கும்
போராட்டத்தில் வெடிக்கின்றன
வெளியில் குண்டுகளம்
வீட்டில் சண்டைகளும்
ஆசை அறுத்தல் எளிதல்ல!
முன்ற பார்க்கலாம் வா!

அ) அருவினை யென்ப உளவோ கருவியான்
       காலம் அறிந்து செயின்

ஆ) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
       சால மிகுத்துப் பெயின்

இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
      துன்பத்துள் துன்பம் கெடின்.

விடை :

இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

5. ஒப்புரவு என்பதன் பொருள்__________

  1. அடக்கமுடையது
  2. பண்புடையது
  3. ஊருக்கு உதவுவது
  4. செல்வமுடையது

விடை : நாவைக் காக்காதவர்

6. பொருத்துக 

அ) வாழ்பவன்i. காத்திருப்பவன்
ஆ) வாழாதவன்ii. மருந்தாகும் மரமானவன்
இ) தோன்றபவன்iii. ஒத்ததறிபவன்
ஈ) வெல்ல நினைப்பவன்iv. புகழ் தரும் பண்புடையவன்
உ) பெரும் பண்டையவன்v. இசைபொழிந்தவன்
vi. வீழ்பவன்
விடை : அ – iii. ஆ – v, இ – iv, ஈ – i, உ – ii

7. இலக்கணக் குறிப்புத் தருக

  • சுடச்சுடரும் – மூன்றாம் வேற்றுமைத்தொகை
  • சுடச்சுடரும் பொன் – எதிர்காலப் பெயரெச்சத் தொடர்
  • சுடச்சுட – அடுக்குத்தொடர்

8. விரைந்து கெடுபவன் யார்?

  1. பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
  2. பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
  3. பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
  4. பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்

விடை : பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்

9. வேளாண்மை செய்தற் பொருட்டு – பொருள் கூறுக

  • உதவிசெய்வதற்கே அறம்

10. பற்று நீங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது

  1. பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும்
  2. பற்றுகள அகலும் – பொருள்களின் துன்பம் அகலும்
  3. பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
  4. பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும்

விடை : பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்

11. அருவினை புணர்ச்சிவிதி கூறுக

அருவினை = அருமை + வினை

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “அருவினை” என்றாயிற்று

பாடநூல் வினாக்கள்

குறு வினா

1. தீயினால் சுட்டதைப் “புண்” என்றும் நாவினால் சுட்டதை “வடு” என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?

  • தீயினால் சுட்டது உடலில் வடுவாக இருந்தாலும் உள்ளத்தில் ஆறிவிடும்.
  • நாவினால் சுட்டது மனதில் என்றும் ஆறாத வடுவாக நிலைத்துவிடும்.

எனவே வள்ளவர் தீயினால் சுட்டதை “புண்” என்றும், நாவினால் சுட்டதை “வடு” எனவும் கூறுகிறார்.

2. மருந்தாகிப் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின் – இக்குறட்பாவின் உவமையப் பொருளோடு பொருத்துக

  • மருந்தாகித் தப்பா மரம், தன் எல்லா உறுப்புகளாலும் மருந்தாகப்ப பயன்படும் மரம் என்பது உவமை.
  • செல்வம், பிறருக்குப் பயன்படும் வகையில் வாழும் பெருந்தகையானுக்கு உவமையாக கூறப்பட்டது.
  • மரம் – உவமானம்; பெருந்தகையான் – உவமேயம்; பயன்படல் – பொதுத்தன்மை; “அற்று” – உவமை உருபு

3. எதற்கு முன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது?

நாக்கு அடைத்து, விக்கல் வந்து உயிர்க்கு இறுதி வருமுன், நல்ல செயல்களை விரைந்து செய்யவேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது.

4. சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?

செயலின் வலிமை, தன்னின் வலிமை, பகைவனின் வலிமை, துணாயானவரின் வலிமை

5. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?

  • மருந்து – செல்வம்
  • மருந்து மரமாக இருப்பவர் – பெருந்தகையாளர்

சிறு வினா

1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக

இக்குறட்ப்பாவில் பயின்று வந்துள்ள அணி வேற்றுமை அணி ஆகும்

அணி விளக்கம்

ஒரு பொருளின் ஒற்றுமையைக் கூறி பின் அவற்றின் வேற்றுமையைக் கூறவது வேற்றுமை அணி ஆகும்

பொருள் விளக்கம்

  • தீயினால் சுட்ட புண்ணும், நாவினால் சுட்ட வடுவும் சுடுதலால் ஒற்றுமை உடையன
  • புண் என்பது ஆறும்; வடு என்பது ஆறாது என்பது வேற்றுமை
  • எனவே இப்பாடலில் வரும் அணி வேற்றுமை அணி ஆகும்.

2. புகழுக்குரிய குணங்களாக நீவீர் கருதுவன யாவை? புகழின் பெருமையைப் பொதுமறைவழி நின்று கூறுக.

  • உலகநடை அறிந்து அடக்கத்தோடு பிறருக்கு உதவி செய்வது வாழ்வதே புகழுக்குரிய குணங்கள் ஆகும்.
  • இணையற்ற இந்த உலகத்தில் உயர்ந்த புகழே அல்லாமல், உயர்ந்து ஒப்பற்று நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை
  • எனவே வாழ்ந்தால் புகழ் தரும் பண்புகளுடன் வாழ வேண்டும். இல்லையெனில் தோன்றாமல் இருப்தே நல்லது. ஏனெனில், பழி இல்லாமல் வாழ்பவரே வாழ்பவராவார். புகழ்பெற இயலாமல் வாழ்பவர், வாழாதவரேயாவர் எனப் புகழின் பெருமையைப் பொதுமறை விளக்குகிறது.

3. நாச்செற்று விளக்குள்மேல் வாராமுன் நல்வினை
   மேற்சென்று செய்யப் படும் – இக்குறட்பாவை அலகிட்ட வாய்ப்பாடு கூறுக

சீர்அசைவாய்ப்பாடு
நாச் / செற் / றுநேர் நேர் நேர்தேமாங்காய்
விக் / குள் / மேல்நேர் நேர் நேர்தேமாங்காய்
வ / ரா / முன்நேர் நேர் நேர்தேமாங்காய்
நல் / வினைநேர் நிரைகூவிளம்
மேற் / சென் / றுநேர் நேர் நேர்தேமாங்காய்
செய் / யப்நேர் நேர்தேமா
படும்நிரைமலர்
இக்குறட்பா “மலர்” என்னும் வாய்பாட்டால் முடிந்துள்ளது

4. சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்கிக் கழ்காணும் குறளுக்கு இவ்வணியை பொருத்து எழுதுக?

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

அணி விளக்கம்

ஒரு செய்யுளில் வந்த சொல் மீண்டும், மீண்டும் வந்து ஒரே பொருளில் வருவது சொற்பொருள் பின்வரும் நிலையணி ஆகும்

பொருள் விளக்கம்

  • இக்குறளில் “வலி” என்னும் சொல் “வலிமை” என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது
  • எனவே இச்செய்யுள்ளில் “சொற்பொருள் பின்வருநிலையணி” பயின்று வந்துள்ளது

5. விரும்பியதை அடைவது எப்பபடி? குறள்வழி விளக்குக

  • செய்ய முடிந்த தவத்தை முயன்ற பார்த்தால் விரும்பியதை விரும்பியபடி பெற முடியும். பொன்னை நெருப்பில் இட்டுச் சுடும்போது, அது மாசு நீங்கி ஒளிவிடுவதுவோலத் தவத்தை மேற்கொண்டு வருந்தினால், ஞானம் என்னும் அறிவுஒளி பெறலாம்.
  • உரிய காலத்தில் பொருத்தமான இடத்தில் தக்க செயலை மேற்கொண்டால், உலகத்தையே பெறக் கருதினாலும் கிடைத்து விடும் எனக் குறள் வழிகாட்டுகிறது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • அடங்கியான், அறிவான், வாழ்வான், வாழ்வாரே, நீங்கியான், வியந்தான், கருதுபவர் – வினையாலணையும் பெயர்கள்
  • தோற்றம், நோதல், வாழ்க்கை – தொழிற்பெயர்கள்
  • நா காக்க (நாவைக் காக்க), நாச்செற்று (நாவினைச் செற்று), அவா நீப்பின் (அவாவை நீப்பின்) – இரண்டாம் வேற்றுமைத் தொகை)
  • சுடச்சுடரும் (சுடுவதல் சுடரும்) – மூன்றாம் வேற்றுமைத் தொகை
  • நெருநல் உளன் (நேற்றைக்கு உளன்), இன்று இல்லை – நான்காம் வேற்றுமைத் தொகை
  • வினைவலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி – ஆறாம் வேற்றுமைத்தொகைகள்
  • காக்க, தோன்றுக, பற்றுக – வியங்கோள் வினைமுற்றுகள்
  • சோகப்பர் – பலர்பால் வினைமுற்று
  • சொல்லிழுக்கு (சொல்லால் உண்டாகும் இழுக்கு) – மூன்றன் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • காவாக்கால், பொன்றாது, இடையறாது, கலங்காது – எதிர்மறை வினையெச்சங்கள்
  • சுட்ட புண், சுட்ட வடு, தந்த பொருள் – இறந்தகால பெயரச்சங்கள்
  • ஆறும் – உடன்பாடு ஒன்றன் பால் வினை முற்று

புணர்ச்சி

1. தாளாற்றி = தாள்  + ஆற்றி

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி தாளாற்றி” என்றாயிற்று

2. பொருளெல்லாம் = பொருள்+ எல்லாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி பொருளெல்லாம்” என்றாயிற்று

3. அச்சிறும் = அச்சு+ இறும்

  • “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி “அச்ச் + இறும்” என்றாயிற்று
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “அச்சிறும்” என்றாயிற்று

குறு வினா

1. மலையினும் மாணப்பெரியது எது

ஓருவர் தனக்குரிய நேர்வழியில் மாறாது அடக்கமாக இருப்பவனின் உயரிய தோற்றமானது மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியதாகும்.

2. பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் எதைப் போன்றது.

பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளையும் மருந்தாகத் தரும் மரத்தைப் போன்றது.

3. நாவை ஏன் காக்க வேண்டும்?

எதனை அடக்கிக் காக்காவிட்டாலும் நாவை மட்டுமாவது அடக்கி காக்க வேண்டும். அவ்வாறு காக்காவிட்டால் சொற்குற்றம் ஏற்பட்டுத் துன்பப்படுபவர்.

4. உயிர் வாழ்வார், செத்தார் எவர் எவர்?

உலக நடைமுறையோடு பொருந்தி ஒத்து வாழ்பவரே உயிரி வாழ்பவராவர். அவ்வாறு வாழாதவர் செத்தவர்.

5. நன்று என வள்ளுவர் எதனைக் கூறகிறார்?

தோன்றினால், புகழ்தரும் பண்புகளுடன் தோன்ற வேண்டும். இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நன்று என வள்ளுவர் கூறுகிறார்.

6. மருத்துவத்தின் பிரிவுகளாக குறள் கூறுவன யாவை?

நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர்

7. ஞாலம் கருதினும் கைகூடும் எப்போது?

ஒருவன் உரிய காலத்தில், பொருத்தமான இடத்தில், ஒரு செயலைச் செய்தால் உலகத்தையே வெல்ல நினைத்தாலும் அது நிறைவேறும்.

8. எவன் விரைவில் கெடுவான்?

மற்றவருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னைப் பெரிதாக நினைப்பவன் விரைவாகக் கெடுவான்.

9. எது தொலைந்துபோனால் இன்பத்தை இடைவிடாமல் பெறலாம்.?

பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்துபோனால் இன்பத்தை இடைவிடாமல் பெறலாம்.

10. நிலையான இன்பம் எப்போது இயல்பாய் வரும்?

ஒருபோதும் நிறைவுசெய்ய முடியாத இயல்புடைய ஆசையை விட்டொழித்தால், நிலையான இன்பம் இயல்பாய் வரும்.

11. திருக்குறளின் பால், அதிகாரம், இயல், இயல்களின் பெயர்கள் பற்றி எழுதுக

பால்அதிகாரம்இயல்இயல்களின் பெயர்கள்
அறம்384பாயிரவியல் 04, இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 01
பொருள்703அரசு இயல் 25, அமைச்சு இயல் 32, ஒழிபியல் 13
இன்பம்252  களவியல் 07, கற்பியல் 18

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment