பாடம் 4.1 தமிழகக் கல்வி வரலாறு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 4.1 “தமிழகக் கல்வி வரலாறு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ……………….. என்பதாகும்
- நூல்
- ஓலை
- எழுத்தாணி
- தாள்
விடை : நூல்
2. சரியான விடையை தேர்ந்தெடுக்க
அ. வெள்ளிவீதியார் | i. தொல்காப்பியம் சிறப்பாயிர உரைப்பாடல் |
ஆ. அண்ணாமலையார் | ii. திருமந்திரம் |
அ. சு.ச. செல்லப்பா | iii. ஆத்திச்சசூடி |
ஈ. இளம்பெருவழுதி | iv. திருக்குறள் |
v. நாலடியார் |
- அ – ii, ஆ – iii, இ – iv, ஈ – i
- அ – iii, ஆ – iv, இ – i, ஈ – ii
- அ – v, ஆ – iii, இ – ii, ஈ – i
- அ – ii, ஆ – iii, இ – iv, ஈ – v
விடை : அ – v, ஆ – iii, இ – ii, ஈ – i
குறு வினா
1. சங்ககாலத்தில் தமிழ்மொழியன் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?
- சங்க காலத்தில் தமிழகத்தில் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் தமிழ் விளங்கியுள்ளது.
- மேலும், தமிழ் மொழியே சமயம், வாணிகம் முதலான எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது என இராமாணிக்கனார் கூறியுள்ளார்.
2. உ.வே.சா அவர்கள் பயின்ற கல்வி முறை குறித்துக் குறிப்பு வரைக
- மரபு வழிக்கல்வி முறைகளுள் ஒன்றான உயர்நிலைக் கல்வி முறையில் உ.வே.சா. பயின்றார்.
- இக்கல்வி முறை, தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்வி முறையாகும்.
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் உ.வே.சா. பாடம் பயின்றமுறை இம்முறையாகும்.
சிறு வினா
1. தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக
- தொல்காப்பியம், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை “ஓதற்பிரிவு” எனக் குறிப்பிடுகிறது.
- அத்துடன் “கல்வியின் பொருட்டு ஒருவருக்குப் பெருமிதம் தோன்றும்” எனவும் குறிப்பிடுகிறது.
- ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களைத் தொல்காப்பியமும் நன்னூலும் வகுத்துள்ளன.
- சங்க இலக்கியங்களும் கல்வியின் சிறப்பை பெரிதும் போற்றுகின்றன. புறநானூறு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” எனக் குறிப்பிடுகிறது.
- “துணையாய் வருவது தூயநற் கல்வியே” எனத் திருமந்திரமும், “கல்வி அழகே அழகு” என நாலடியாரும், “இளமையில் கல்” என ஆத்திசூடியும் கல்வியின் சிறப்புக் குறித்துக் கூறுகின்றன.
2. சமணப் பள்ளிகளும், பெண்கல்வியும் – குறிப்பு வரைக
சமணப் பள்ளி
- கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் என்பன சமண சமயத்தின் அறக்கொடைகள், மலைக்குகைகளில் தங்கிய சமணத் திகம்பரத் துறவிகள், அங்கிருந்தே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்க்குப் போதித்தனர்.
- சமணப் பள்ளிகளில் கல்வி கற்றதனால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டது.
பெண்கல்வி
- வந்தவாசிக்கு அருகிலுள்ள “வேடல்” கிராமத்திலிருந்து சமணப் பள்ளியின் பெண் சமண ஆசிரியர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துள்ளார்.
- சமணப்பெண் ஆசிரியர் “பட்டினிக்குரத்தி” விளாப்பாக்தில் பள்ளி ஒன்றை நிறுவியுள்ளார்.
- இவற்றால் சமணப் பள்ளிகளில் பெணகள் ஆசிரியர்களாக இருந்துள்ளமை வெளிப்படுகிறது.
- அத்துடன், பெண்களுக்கு எனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப்பள்ளிகள் இருந்தமை புலப்படுகிறது.
நெடு வினா
தமிழ் பெளத்தக் கல்வி, சமணக்கல்வி, மரபுக்வழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க
தலையாய அறம்:
கல்வி, மருத்துவம், உணவு, அடைக்கலம் என்பன சமண சமயத்தின் தலையாய அறங்கள். காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் சமண, பெளத்தப் பள்ளிகள் இருந்துள்ளன.
சமண, பெளத்தப் பள்ளிகள்:
- சமண, பெளத்தத் துறவிகள் தங்கிய இடம் “பள்ளி” எனப்பட்டது. அங்கு மாணவர்கள் சென்ற கற்றதால் கல்வி கற்பிக்கும் இடம் பிற்காலத்திலல் “பள்ளிக்கூடம்” எனப்பட்டது.
- சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர் சிலர் சமணப்படுக்கைகள் அமைத்தமை குறித்துத் திருச்சி மலைக்கோட்டை, கழுமலைக் கல்வெட்டுகள்
கல்வி கற்பித்தல்:
- சமண சமயத் திகம்பரத் துறவிகள் தாங்கள் தங்கி இருந்த மலைக்குகைப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கல்வியையும், சமயக்கருத்துகளையும் போதித்துள்ளனர்.
- பள்ளி என்பது சமண, பெளத்தச் சமயங்களின் கொடையாகும். “வேடல்” என்னும் ஊரில் பெண் சமயத்துறவி 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்துள்ளார். விளாப்பாக்கத்தில், பட்டினிக்குரத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர் பள்ளியை நிறுவிக் கற்பித்துள்ளார்.
மரபுவழிக் கல்வி:
- மரபுவழிக் கல்வியில் “குருகுலக்கல்வி” முறையில் மாணவர்கள் குருவோடு தங்கி, அவருக்குரிய பணிகளைச் செய்து கல்வி கற்றனர். செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் ஆகிய அடிப்படையில் இக்கல்விமுறை அமைந்தது.
- போதனை முறையத் தாண்டி, வாழ்வியலைக் கட்டமைப்பதில் குருகுலக்கல்வி முறை, உறுதியாக விளங்கியது.
ஆங்கிலேயர் போற்றிய திண்ணைப்பள்ளி:
- 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிராமங்களில் திண்ணைப் பள்ளிகள் என்னும் தெற்றிப்பள்ளிகள் மரபுவழிக் கல்வி என்னம் அமைப்புக் கல்வியைக் கற்பித்தன.
- மரபுவழிக் கல்விக் கூடங்களான திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்றவற்றை ஆங்கிலேயர் நாட்டுக்கல்வி அமைப்பு என அழைத்தனர்
- அப்பள்ளிகளில் பள்ளிநேரம், பயிற்று முறை எல்லாம் ஆசிரியர் விருப்பப்படி அமைந்திருந்தன.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. “பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்னும் அடிகள் இடம் பெற்ற நூல் ………………..
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- வளையாபதி
- சீவகசிந்தாமணி
விடை : மணிமேகலை
2. தனிமனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாக மாற்றுவது ………………
- வேலை
- கல்வி
- பணம்
- வியாபாரம்
விடை : கல்வி
3. கல்வி கற்பதற்காகப் பிரிநது செல்வதை, “ஓதற் பிரிவு” எனக் கூறும் நூல் ………………
- ஆத்திச்சூடி
- திருமந்திரம்
- தொல்காப்பியம்
- மணிமேகலை
விடை : தொல்காப்பியம்
4. கல்வியினால் ஒருவற்கு தோன்றுவது ………………
- அறிவு
- செருக்கு
- செல்வம்
- பெருமிதம்
விடை : பெருமிதம்
5. ஆசிரியர், மாணவர்க்கான இலக்கணம் வகுத்த நூல்கள் ………………
- தொல்காப்பியம், திருக்குறள்
- நன்னூல், ஆத்திச்சூடி
- நன்னூல், திருமந்திரம்
- தொல்காப்பியம், நன்னூல்
விடை : தொல்காப்பியம், நன்னூல்
6. மன்னராட்சிக் காலத்தில் முக்கிய கல்வியாகக் கருதப்பட்டது ………….
- போர்ப் பயிற்சி
- குருகுலப் பயிற்சி
- தொழிற் பயிற்சி
- சமயக் கல்வி
விடை : போர்ப் பயிற்சி
7. எழுத்தும் இலக்கியமும், உரிச்சொல்லும் கணக்கும் கற்பித்தோரைக் ………………. என அழைத்தனர்.
- ஆசிரியர்
- குரு
- கணக்காயர்
- குரவர்
விடை : கணக்காயர்
8. மூவகை இலக்கணத்தையும், அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளான பேரிலக்கியங்களையும் கற்பித்தோர் …………… என அழைக்கப் பெற்றனர்.
- ஆசிரியர்
- கணக்காயர்
- குரவர்
- குரு
விடை : ஆசிரியர்
9. சமய நூல்களையும், தத்துவ நூலையும் கற்பித்தோர் …………… என அழைக்கப்பட்டனர்.
- சான்றோர் அவைகள்
- கூடங்கள்
- மன்றங்கள்
- பள்ளிகள்
விடை : பள்ளிகள்
10. கலைகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை ……………..
- மன்றங்கள்
- பள்ளிகள்
- சான்றோர் அவைகள்
- கூடங்கள்
விடை : பள்ளிகள்
11. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்வது ………………
- பள்ளி
- மன்றங்கள்
- சான்றோர் அவை
- பட்டிமன்றம்
விடை : மன்றங்கள்
12. இளமையில் கல் எனக்கூறியவர் ___________
- ஒளவையார்
- தொல்காப்பியர்
- நாலடியார்
- நாடக மகளிர்
விடை : ஒளவையார்
13. “கண்ணுடையர் என்பவர் கற்றோர்” எனக் கூறும் நூல் ___________
- திருக்குறள்
- நன்னூல்
- நாலடியார்
- சிலப்பதிகாரம்
விடை : திருக்குறள்
14. செயல்களை சீர்தூக்கி பார்க்கும் அவை ……………….
- பள்ளி
- மன்றங்கள்
- சான்றோர் அவை
- பட்டிமன்றம்
விடை : சான்றோர் அவை
15. கல்வி கற்பிக்கப்டும் இடங்களைப் “பள்ளி” என்று குறித்தது ………………….
- திவாகர நிகண்டு
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- பெரிய திருமொழி
விடை : பெரிய திருமொழி
16. கல்வி கற்பிக்கப்படும் இடங்களைக் “கல்லூரி” என்று குறித்தது ………………….
- திவாகர நிகண்டு
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- பெரிய திருமொழி
விடை : சீவகசிந்தாமணி
17. தற்காலக் கல்வி முறையும், தேர்வு முறையும் உருவெடுக்க காரணம் …………..
- ஹண்டர் கல்விக்குழு
- லண்டன் பாராளுமன்றம்
- தாமஸ் மன்றோ ஆய்வு
- சார்லஸ் உட் அறிக்கை
விடை : சார்லஸ் உட் அறிக்கை
18. பள்ளிகளில் சீருடை முறை, தாய்மொழிவழிக் கல்வி போன்றவை கட்டாயமாக்கியது …………….
- ஹண்டர் கல்விக்குழு
- லண்டன் பாராளுமன்றம்
- தாமஸ் மன்றோ ஆய்வு
- சார்லஸ் உட் அறிக்கை
விடை : ஹண்டர் கல்விக்குழு
19. புதுப்பள்ளிகளைத் தொடங்கி நடத்தும் பொறுப்பைத் தனியாருக்கு வழங்கப் பரிந்துரைத்தது …………….
- லண்டன் பாராளுமன்றம்
- ஹண்டர் கல்விக்குழு
- தாமஸ் மன்றோ ஆய்வு
- சார்லஸ் உட் அறிக்கை
விடை : ஹண்டர் கல்விக்குழு
20. “துணையாய் வருவது தூயநற் கல்வி” எனக் கூறும் நூல் …………….
- தொல்காப்பியம்
- புறநானூறு
- நாலடியார்
- திருமந்திரம்
விடை : திருமந்திரம்
21. “கல்வி அழகே அழகு” என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் …………….
- தொல்காப்பியம்
- புறநானூறு
- நாலடியார்
- திருமந்திரம்
விடை : நாலடியார்
22. “கற்றில னாயினும் கேட்க” எனக் கூறியவர் …………….
- தொல்காப்பியர்
- திருவள்ளுவர்
- நன்னூலார்
- திருமூலர்
விடை : திருவள்ளுவர்
23. “கண்ணுடையர் என்பவர் கற்றோர்” எனக் கூறும் நூல் …………….
- தொல்காப்பியம்
- புறநானூறு
- நாலடியார்
- திருக்குறள்
விடை : திருக்குறள்
24. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகளை விவாதிக்கும் இடம் என்று சுட்டும் நூல் ………………
- தொல்காப்பியம்
- மணிமேகலை
- நாலடியார்
- திருக்குறள்
விடை : மணிமேகலை
25. “கணக்காயர் இல்லாத ஊர், நன்மை பயக்காது” என்று கூறும் நூல் …………
- தொல்காப்பியம்
- மணிமேகலை
- திரிகடுகம்
- திருக்குறள்
விடை : திரிகடுகம்
பொருத்துக
1. ஆசிரியர் | அ. நடனமும், நாட்டிமும் கற்பிப்போர் |
2. கணக்காயர் | ஆ. சமய, தத்துவ நூல் கற்பிப்போர் |
3. குரவர் | இ. இலக்கணம், பேரிலக்கியம் கற்பிப்போர் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ |
பொருத்துக
1. கல்வியில் சிறந்த தமிழ்நாடு | அ. சமண முனிவர் |
2. பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே | ஆ. திருவள்ளுவர் |
3. துணையாய் வருவது தூயநற் கல்வி | இ. நெடுஞ்செழியன் |
4. கல்வி அழகே அழகு | ஈ. பாரதியார் |
5. கண்ணுடையார் என்பவர் கற்றோர் | உ. ஒளவையார் |
6. இளமையில் கல் | ஊ. திருமூலர் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஊ, 4 – அ, 5 – ஆ, 6 – உ |
குறு வினா
1. தமிழகத்தின் சங்க காலத்திய கற்பித்தல் பணி பற்றி எழுதுக?
சங்கம் என்னும் அமைப்பு, பலர் கூடி விவாதிக்கும் பாங்குடையது. சங்கம் தவிர மன்றம், சான்றோர், அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பெளத்தப்பள்ளி போன்ற அமைப்புகள் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியைச் செய்து வந்துள்ளன.
2. எவர் ஆசிரியர் எனப்பட்டனர்?
பிற்காலத்தில் ஐந்தாக விரித்து உரைக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும், அவற்றுக்கு எடுத்துக்காட்டுகளான பேரிலக்கியங்களையும் கற்பித்தோர் ஆசிரியர் எனப்பட்டனர்
3. குரவர் என அழைக்கப்பட்டோர் எவர்?
சமய நூலும், தத்துவநூலம் கற்பித்தோர் குரவர் என அழைக்கப்பட்டனர்
4. கல்வியின் நோக்கம் யாது?
கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள சிந்தனைகளைத் தோண்டி வெளிக்கொணர்வதே கல்வியின் நோக்கமாகும்.
5. கல்வி கற்பிக்கும் இடங்களைத் தமிழ்நூல்கள் எவ்வாறு வழங்கின?
- கல்வி கற்பிக்கப் பெற்ற இடங்களைப் “பள்ளி” எனப் பெரிய திருமொழியும்
- “ஓதும் பள்ளி” எனத் திவாகர நிகண்டும்
- “கல்லூரி” எனச் சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன.
6. கற்றலுக்கு உரிய சுவடிகள் எவ்வாறு வழங்கப்பெற்றன?
கற்றலுக்கு உரிய ஏட்டுக் கற்றைகள் ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல் என வழங்கப்பெற்றன.
7. தமிழகத்து பட்டிமண்டபம் என மணிமேகலை எதனை சுட்டுகிறது?
சமய கருத்துகளை விவாவதிக்கும் இடத்திற்கு தமிழகத்து பட்டிமண்டபம் என மணிமேகலை சுட்டுகிறது
சிறு வினா
1. திண்ணைப் பள்ளிகளை யார், எப்படி பாராட்டினர்?
- சென்னை மாகாணத்தில் 12,498 திண்ணைப் பள்ளிகளின் கல்வித்தரத்தை சென்னை மாகாண கவர்னர் சர் தாமஸ் மன்றோ ஆராய்ந்தார்.
- திண்ணைப் பள்ளிகளின் கல்வித்தரம் பல ஐரோப்பிய நாடுகளின் அப்போதைய கல்வித்தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே உள்ளது” எனப் பாராட்டி ஆய்வு அறிக்கை தந்தார்.
2. தமிழகத்தில் விடுதலைக்கு முன் கல்வி வளர்ச்சி பற்றி குறிப்பெழுதுக
1826 | சென்னை ஆளுநர் சர். தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது. |
1835 | சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இரண்டு மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்று. |
1854 | பொதுக்கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பொதுக்கல்வி இயக்குநர் (DPI) நியமிக்கப்பட்டார். |
1857 | சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. |
1859 | 1794இல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், 1859இல் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது. |
1910 | தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது. |
1911 | பள்ளியிறுதி வகுப்பு – மாநில அளவிலான பொதுத்தேர்வில் நடைமுறைக்கு வந்தது. |