பாடம் 4.2 பிள்ளைக்கூடம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 4.2 “பிள்ளைக்கூடம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- இரா.மீனாட்சி 1970-ல் இருந்து எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
- இவர் பாண்டிச்சேரி “ஆரோவில்” என்னும் இடத்தில் வாழ்ந்து வருகிறார்.
- ஆசிரியர் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.
- “கொடிவிளக்கு” என்னும் நூலிலிருந்து இக்கவிதை எடுத்தாளப்பட்டுள்ளது.
பாடநூல் வினாக்கள்
குறு வினா
இங்கே ஐம்தாண்டு வேம்பு
கோடையில் கொட்டும் பூக்களை
எண்ணச் சொல்கிறார்கள் – எண்ணச் சொல்கிறவர்கள் யார் எண்ணுபவர்கள் யார்?
- எண்ணச் சொல்கிறவர்கள் : தாழ்மொழியில் கற்பிப்போர்
- எண்ணுபவர்கள் : தாய்மொழியில் கற்போர்
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- கற்பிக்கும் – பெயரச்சம்
- பறந்து, நடக்க, இசைக்க, வீழ்ந்து – வினையெச்சங்கள்
பகுபத உறுப்பிலக்கணம்
1. வீழ்ந்து = வீழ் + த்(ந்) + த் + உ
- வீழ் – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
2. நடக்க = நட + க் + க் + அ
- நட – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
3. இசைக்க = இசை + க் + க் + அ
- இசை – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
4. பறந்து = பற + த்(ந்) + த் + உ
- பற – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
5. பயின்று = பயில்(ன்) + ற் + உ
- பயில் – பகுதி
- ன் – ஆனது விகாரம்
- ற் – இறந்த கால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
6. விரும்புகிறேனன் = விரும்பு + கின்று + ஏன்
- விரும்பு – பகுதி
- கின்று – நிகழ்கால இடைநிலை
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதிகள்
1. பள்ளிக்கூடம் = பள்ளி + கூடம்
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி பள்ளிக்கூடம் என்றாயிற்று.
2. ஐம்பதாண்டு = ஐம்பது + ஆண்டு
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” விதிப்படி ஐம்பத் + ஆண்டு என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஐம்பதாண்டு என்றாயிற்று.
3. தட்டுக்கூடை = தட்டு + கூடை
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி தட்டுக்கூடை என்றாயிற்று
4. சர்க்கரைப் பண்டம் = சர்க்கரை + பண்டம்
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி சர்க்கரைப் பண்டம் என்றாயிற்று
5. குறுஞ்செடி = குறுமை + செடி
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி குறு + செடி என்றாயிற்று.
- “இனமிகல்” என்ற விதிப்படி குறுஞ்செடி என்றாயிற்று.
பொருத்துக
1, கொட்டும் பூக்களை | அ. குறிக்கச் சொல்கிறார்கள் |
2. தியானிக்கும் நேரத்தை | ஆ. ஓவியமாகத் தீட்டச் சொல்கிறார்கள் |
3. எறும்புகளின் வேகத்தை | இ. கவிதை எழுதச் சொல்கிறார்கள் |
4. மழைத்துளிகளின் வடிவத்தை | ஈ. எண்ணச் சொல்கிறார்கள் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 ஈ, 4 – இ |
பலவுள் தெரிக
1. பிள்ளைக்கூடம் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை இடம்பெற்ற நூல் ………………..
- சுடுபூக்கள்
- மறுபயணம்
- வாசனைப்புல்
- கொடிவிளக்கு
விடை : கொடிவிளக்கு
2. பிள்ளைக்கூடம் என்னும் கவிதையை எழுதியவர் ………………
- இரா.மீனாட்சி
- சு.வில்வரத்தினம்
- மீ.ராசேந்திரன்
- இரா.மீனாட்சி
விடை : இரா.மீனாட்சி
3. பிள்ளைக்கூடம் கவிதையில் ஆசிரியர் ………………….. வேகத்தை அளக்கச் சொல்கிறார்.
- நத்தை
- முயல்
- எறும்பு
- சிறுத்தை
விடை : எறும்பு
4. கருங்கல் வேலியில் தியானிக்கும் உயிரி ………….. என இரா.மீனாட்சி குறிப்பிடுகிறார்.
- அணில்
- பல்லி
- எலி
- ஓணான்
விடை : ஓணான்
5. பள்ளிக்கு காலையில் …………… உடன் நடக்கச் சொல்ல வேண்டும்மென இரா. மீனாட்சி விரும்புகிறார்.
- மயில்
- குயில்
- பசு
- வண்ணத்துப்பூச்சி
விடை : மயில்
6. இரா.மீனாட்சி தம் கவிதையில் …………….. உடன் ஆடித்திரிய வேண்டும் என கூறுகிறார்
- மயில்
- குயில்
- பசு
- வண்ணத்துப்பூச்சி
விடை : வண்ணத்துப்பூச்சி
7. “பண்டம்” – சொல்லின் பொருள் தருக
- பாத்திரம்
- பொருள்
- இனிப்பு
- உலகம்
விடை : பொருள்
8. பிள்ளைக்கூடம் என்னும் கவிதை ……………… நூலில் இருந்து எடுத்தாளப்பட்டது.
- தீபாவளிப்பகல்
- மறுபயணம்
- வாசனைப்புல்
- கொடிவிளக்கு
விடை : கொடிவிளக்கு
9. காலையில் …………….. உடன் இசைக்க வேண்டுமென்று இரா. மீனாட்சி விரும்புகிறார்.
- மயில்
- குயில்
- பசு
- வண்ணத்துப்பூச்சி
விடை : குயில்
குறு வினா
1. இரா.மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல் உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு
2. பள்ளிகூடம் எவ்வாறு இருக்க வேண்டும் இரா.மீனாட்சி கருதுகிறார்?
இளமையின் சிறகை முறிக்காத இனிய சூழலில் கற்பிக்கும் பள்ளியே எனக்கும் மாணவர்களுக்கும் பிடித்த பள்ளிக் கூடம் என்று இரா.மீனாட்சி கருதுகிறார்.
சிறு வினா
1. பிள்ளைகள் எவற்றினைப்போல் நடக்க, இசைக்க, பறக்க வேண்டு என பிள்ளைக்கூடக் கவிதை கூறிகிறது?.
- பிள்ளைகள் காலையில் மயிலுடன் நடக்கவேண்டும்
- மாமரக் குயிலுடன் கூவி இசைக்க வேண்டும்
- வண்ணத்துப்பூச்சிகளுடன் பறக்கவேண்டுமெனப் பிள்ளைக்கூடக் கவிதை கூறுகிறது.
2. மாணவன் பயில விரும்பும் பள்ளி – என இரா. மீனாட்சி கூறுவது யாது?
- தாய்மொழியிலே கற்க வேண்டும்.
- இசையோடு இயைந்த கல்வியைக் கற்க வேண்டும்
- எல்லா ஊர்களும் எனது ஊர்களாக, எல்லா மக்களும் எனது உறவினார்களாக இருக்கு வேண்டும் என மாணவன் விரும்புகிறான்.
3. இரா. மீனாட்சி குறித்துக் குறிப்பெழுதுக
- இரா.மீனாட்சி 1970-ல் இருந்து எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
- இவர் பாண்டிச்சேரி “ஆரோவில்” என்னும் இடத்தில் வாழ்ந்து வருகிறார்.
- ஆசிரியர் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.