Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 5.2 – சீறாப்புராணம்

பாடம் 5.2 சீறாப்புராணம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 5.2 “சீறாப்புராணம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

நூல்வெளி

 • இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம்.
 • “சீறா” என்பது “சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.
 • “சீறா” என்பதற்கு “வாழ்க்கை என்பது பொருள்.
 • “புராணம்” என்பது பழைய வரலாறு.
 • சீறாப்புராணம் என்பதற்கு, “நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது” என்பது பொருள்
 • இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் பாடினார்.
 • விலாதத்துக்காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும், 5027 விருத்தப்பாக்களையும் கொண்டது.
 • நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தினால் “பனி அகமது மரைக்காயர்” இதன் தொடர்ச்சியாக “சின்னச்சீறா” என்ற நூலைப் படைத்துள்ளார்.
 • உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப்புலவர்.
 • கடிகை முத்துப் புலவரின் மாணவர்
 • நபிகள் நாயகத்தின் மீது “முதுமொழிமாலை” என்னும் நூலை இயற்றியுள்ளார்.
 • உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர்

சொல்லும் பொருளும்

 • வரை – மலை
 • கம்பலை – பேரொலி
 • புடவி – உலகம்
 • எய்துதல் – பெறுதல்
 • வாரணம்  – யானை
 • பூரணம் – நிறைவு
 • நல்கல் – அளித்தல்
 • வதுவை – திருமணம்
 • கோன் – அரசன்
 • மறுவிலா – குற்றம் இல்லாத
 • துன்ன – நெருங்கிய
 • பொறிகள் – ஐம்புலன்
 • தெண்டிரை – தெள்ளிய நீரலை
 • விண்டு – திறந்து
 • மண்டிய – நிறைந்த
 • காய்ந்த – சிறந்த
 • தீன் – மார்க்கம்

இலக்கணக்குறிப்பு

 • மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
 • ஈடன் – ஈற்றுப்போலி
 • தரும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
 • பெரும்புகழ், தெண்டிரை – பண்புத்தொகைகள்
 • பொன்நகர்  – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
 • மாநகர், உறுபகை – உரிச்சொல் தொடர்கள்
 • ஐந்தும் – முற்றுமை
 • தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் – எண்ணும்மைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

1. மலிந்து = மலி+ த்(ந்) + த் + உ

 • மலி – பகுதி
 • த் – சந்தி
 • ந்- ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • உ –  வினையெச்ச விகுதி

2. நெருங்கின = நெருங்கு + (இ) ன் + அ

 • நெருங்கு – பகுதி
 • (இ) ன் – இறந்தகால இடைநிலை
 • அ –  பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. அரும்பொருள் = அருமை + பொருள்

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படி அரு + பொருள் என்றாயிற்று.
 • “இனமிகல்” என்ற விதிப்படி அரும்பொருள் என்றாயிற்று.

2. மனையென = மனை + என

 • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி மனை + ய் + என என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஐம்பதாண்டு என்றாயிற்று.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு ………………..

 1. உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி
 2. வினைத்தொகை, இடவாகுபெயர்
 3. வினையெச்சம், வினைத்தொகை
 4. பெயரெச்சம், பண்புத்தொகை

விடை : உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி

2. சரியானவற்றைத் தேர்ந்தெடு

அ) வரை – மலைஆ) வதுவை – திருமணம்
இ) வாரணம் – யானைஈ) புடவி – கடல்
 1. அ, ஆ, இ – சரி; ஈ – தவறு
 2. ஆ, இ, ஈ – சரி; அ – தவறு
 3. அ, இ, ஈ – சரி; ஆ – தவறு
 4. அ, ஆ, ஈ – சரி; இ – தவறு

விடை : அ, ஆ, இ – சரி; ஈ – தவறு

குறு வினா

1. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக

 • மேருமலைபோல் மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன.
 • அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி, பெருங்கடல்போல் இருந்தது.
 • மதீனா நகரின் வீதிகள், பிரபஞ்சம்போல் பரந்து விரிந்திருந்தன.
 • அத்துடன் பெரிய மாளிகைகள் சிறிதும் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்திருந்தன.
 • தோரணங்களும், கொடிகளும் கட்டப்பட்டுப் பொன்னகர்போல் பொலிந்தது.
 • அதனால் மதீனா நகரம், “ஒரு மாளிகை நகரம்” என்பது உறுதிப்பட்டது.

2. “ஊனமில் ஊக்கம் ஒளிரக் காய்த்தநல்
     தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்” – இப்பாடலடிகளில் ஒளிரக் காய்த்தது எது? பழுத்தது எது?

மதீனா நகரில், திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், அவ்வெற்றியைத் தரும் குறைவற்ற ஊக்கமும் காய்ந்திருந்தன; தீன் என்னும் செல்வம் பழுத்திருந்தது.

சிறு வினா

1. கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது – யாது?

மதினா நகரில் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டோர் நிறைந்திருந்தால் கலைஞர்களும், மறையவர்களும் தாம் எண்ணிய பொருள் வளத்தைக் கொண்டிருந்தனர் என்பதாம்

2. “மறுவிலா அரசென இருந்த மாநகர்” – உவமையைப் பொருளுடன் விளக்குக

“குற்றம் குறை இல்லாத அரசன் ஆட்சி நடத்துவதுபோல” என்பது உவமையின் பொருள்

 • மதீனா நகருக்கு இது உவமையாகக் கூறப்பட்டுள்ளது
 • மதினா நகரில் பகை, வறுமை, நோய் முதலானவை இல்லை. அவை ஓடி மறைந்த நிலையில் குறைவில்லாத மானுட அறம், அந்நகரில் செங்கோலாட்சி புரிந்தது. அதனால் மதீனா நகரம், சிறந்த அரைசப்போல் பொலிவுடன் இருந்தது என உமறுப்புலவர் கூறுகிறார்.

நெடு வினா

“மதீனா நகரம் ஒரு வளமான நகரம்” என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளை தொகுத்து எழுதுக

மதீனா நகர வீதிகள்

மதினா நகரில், மாளிகைகளின் மேல்மாடங்கள், மேருமலைபோல் உயர்ந்திருந்தன. அங்காடித் தெருக்களில் பெருங்கடல் ஒலிபோல் மக்கள் ஆரவாரம் செய்தனர். வீதிகள், பிரபஞ்சம்போல் பரந்து விரிந்து கிடந்தன.

கொடைநகர் மதீனா

கலைஞர்களும், மறையவர்களும் எண்ணிய வளத்தைப் பெறும் வகையில் வாரி வழங்கும் வள்ளல்கள் பலர், பழமையான மதீனா நகரிலும் இருந்தனர். அவர்களால் மதீனா மேலும் புகழ்பெற்றது. தோரணங்களாலும் கொடிகளாலும் மதீனா நகரின் வீதிகள் ஒழுங்குடன் காணப்பட்டன

செங்கோலாட்சி நகர்

பொன்னகர்போல் விளங்கிய மதீனா நகர மாளிகைகள், வெண்சுண்ணச் சாந்தில் பொலிந்து ஒளிர்ந்தன. வீதிகளில் புதிய மலர்கள் சிந்திக் கிடந்தன. விருந்தினர் உபசரிக்கப்பட்டதால், வீடுகள் திருமண வீடுகள்போல் பொலிந்தன. பகை, வறுமை, நோய் இல்லாத மதீனா நகரம், மானுட அறத்தைக் கடைபிடிக்கும் செங்கோல் ஆட்சி புரிவதுபோல் பெரும்புகழ் பெற்றுச் சிறந்தது.

தீன் பழுத்த நகர் மதீனா

பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் நிறைந்திருந்ததால் மணி, முத்து அணிகளைச் சிதறும் கடல்போல் மதீனா நகர் காட்சி தந்தது. தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம் எங்கும் பூத்துத் திண்ணிய வலிமை நல்கும் வெற்றி குறையாத ஊக்கம் செழித்துத் “தீன்” என்னும் பழம் பழுத்துச் செம்மை பொருந்திய நகராகத் திகழ்ந்தது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

 • படைத்த – பெயரெச்சம்
 • ஈடன் – ஈற்றுப்போலி
 • அரும்பொருள், தொன்னகர், புதுமலர் – பண்புத்தொகைகள்
 • யாவும் – முற்றுமை
 • சிந்தி, பணிந்து – வினையெச்சங்கள்
 • வறுமைநோய் – உருவகம்
 • மலைவிலா, தொலைவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
 • இடுவிருந்து – வினைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. அளந்தன = அள + த்(ந்) + த் + அன் + அ

 • அள – பகுதி
 • த் – சந்தி
 • ந்- ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அன் – சாரியை
 • அ –  பலவின்பால் வினைமுற்று விகுதி

2. படைத்த = படை + த் + த் + அ

 • படை – பகுதி
 • த் – சந்தி
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ –  பெயரெச்ச விகுதி

3. மலிந்த = மலி+ த்(ந்) + த் + அ

 • மலி – பகுதி
 • த் – சந்தி
 • ந்- ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ –  பெயரெச்ச விகுதி

4. பொலிந்த = பொலி+ த்(ந்) + த் + அ

 • பொலி – பகுதி
 • த் – சந்தி
 • ந்- ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ –  பெயரெச்ச விகுதி

5. பணிந்து = பணி + த்(ந்) + த் + உ

 • பணி- பகுதி
 • த் – சந்தி
 • ந்- ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • உ –  வினையெச்ச விகுதி

6. இருந்த = இரு + த்(ந்) + த் + அ

 • இரு – பகுதி
 • த் – சந்தி
 • ந்- ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ –  பெயரெச்ச விகுதி

7. காய்ந்து = காய் + த்(ந்) + த் + அ

 • காய்- பகுதி
 • த் – சந்தி
 • ந்- ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ –  பெயரெச்ச விகுதி

8. பழுத்து = பழு + த் + த் + அ

 • பழு – பகுதி
 • த் – சந்தி
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ –  பெயரெச்ச விகுதி

9. சிந்து = சிந்து + இ

 • சிந்து – பகுதி
 • இ – வினையெச்ச விகுதி

10. உண்டார் = உண் + ட் + ஆர்

 • உண் – பகுதி
 • ட் – இறந்த கால இடைநிலை
 • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

11. மண்டிய = மண்டு + இ(ன்) + ய் + அ

 • மண்டு – பகுதி
 • இன் – இறந்தகால இடைநிலை
 • ய் – உடம்படு மெய்
 • அ –  பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. மலைவிலாது = மலை + இலாது

 • “முற்றும் அற்று” என்ற விதிப்படி மலைவ் + இலாது என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி மலைவிலாது என்றாயிற்று

2. தொலைவிலா = தொலைவு + இலா

 • “முற்றும் அற்று” என்ற விதிப்படி தொலைவ் + இலா என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி தொலைவிலா என்றாயிற்று

3. குறைவற = குறைவு + அற

 • “முற்றும் அற்று” என்ற விதிப்படி குறைவ் + அற என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி குறைவற என்றாயிற்று

4. கம்பலைப்புடவி = கம்பலை + புடவி

 • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி கம்பலைப்புடவி என்றாயிற்று.

5. கடெலன = கடல் + என

 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி கடெலன என்றாயிற்று.

6. இடனற = இடன் + அற

 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி இடனற என்றாயிற்று.

7. பெரும்புகழ் = பெருமை + புகழ்

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படி பெரு + புகழ் என்றாயிற்று.
 • “இனமிகல்” என்ற விதிப்படி பெரும்புகழ் என்றாயிற்று.

8. தொன்நகர் = தொன்மை + நகர்

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படி தொன் + நகர் என்றாயிற்று.
 • “னல முன் றனவும் ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி தொன்நகர் என்றாயிற்று.

9. பொன்னகர் = பொன் + நகர்

 • “னல முன் றனவும் ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி பொன்னகர் என்றாயிற்று

10. புதுமலர் = புதுமை + மலர்

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படி புதுமலர் என்றாயிற்று.

11. மனையென = மனை + என

 • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி மனை + ய் + என என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி மனையென என்றாயிற்று

12. அரசென = அரசு + என

 • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி அரச் + என என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி அரசென என்றாயிற்று

13. ஒண்ணகர் = ஒண்மை + நகர்

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படிஒண் + நகர் என்றாயிற்று.
 • “னள முன் டணவும் ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி ஒண்ணகர் என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் ………….

 1. சீறாப்புராணம்
 2. சின்னச் சீறா
 3. முதுமொழிமாலை
 4. தேம்பாவணி

விடை : சீறாப்புராணம்

2. பகையும், வறுமையும் நோயும் தீண்டாப் பொருள் வளம் நிறைந்த நகர் ……………

 1. பாக்தாத் நகர்
 2. மக்கா நகர்
 3. மதீனா நகர்
 4. முத்து நகர்

விடை : மதீனா நகர்

3. மதீனா நகர மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறுவது ……………

 1. ஆரணிய காண்டம்
 2. ஹிஜிரத்துக் காண்டம்
 3. நுபுவ்வத்துக் காண்டம்
 4. விலாத்த்துக் காண்டம்

விடை : ஹிஜிரத்துக் காண்டம்

4. “சீறத்” என்னும் அரபுச்செல் …………… எனத் திரிந்தது.

 1. சிறா
 2. சீரா
 3. சீற்
 4. சீறா

விடை : சீறா

5. “வாழ்க்கை” என்னும் பொருளை உணர்த்தும் சொல் ……………

 1. சீறக்
 2. புராணம்
 3. சீரா
 4. சீறா

விடை : சீறா

6. உமறுப்புலவர் சீறாப்புராணத்தை வள்ளல் …………… வேண்டுகோளுக்கு இணங்க இயற்றினார்

 1. சீதக்காதி
 2. சடையப்பர்
 3. பனு அகமது மரைக்காயர்
 4. அப்துல்காசிம் மரைக்காயர்

விடை : சீதக்காதி

7. “முதுமொழிமாலை”யை நபிகள் நாயகம் மீது பாடியவர் ……………….

 1. கடிகை முததுப் புலவர்
 2. உமறுப்புலவர்
 3. பனு அகமது மரைக்காயர்
 4. அப்துல்காசிம் மரைக்காயர்

விடை : உமறுப்புலவர்

8. “சின்னச் சீறா” என்னும் நூலை பாடியவர் ___________ 

 1. கடிகை முததுப் புலவர்
 2. உமறுப்புலவர்
 3. பனு அகமது மரைக்காயர்
 4. அப்துல்காசிம் மரைக்காயர்

விடை : பனு அகமது மரைக்காயர்

9. எட்டையபுரத்தின் அரசவைப் புலவராகப் பதவி வகித்தவர் ………….

 1. சீதக்காதி
 2. உமறுப்புலவர்
 3. பனு அகமது மரைக்காயர்
 4. அப்துல்காசிம் மரைக்காயர்

விடை : உமறுப்புலவர்

10. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் …………….

 1. அப்துல் சாகிம் மரைக்காயர், பனு அகமது மரைக்காயர்
 2. வள்ளல் சீதக்காதி, கடிகை முததுப் புலவர்
 3. வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர்
 4. பனு அகமது மரைக்காயர், வள்ளல் சீதக்காதி

விடை : வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர்

11. கடிகை முத்துப் புலவரின் மாணவர் ……………

 1. சீதக்காதி
 2. பனு அகமது மரைக்காயர்
 3. அப்துல்காசிம் மரைக்காயர்
 4. உமறுப்புலவர்

விடை : உமறுப்புலவர்

12. முகம்மது நபி, மதீனாவிற்கு …………… சென்றார்

 1. அகுமதுவுடன்
 2. அப்துல்காசிமுடன்
 3. அபூபக்கருடன்
 4. பனு அகமதுவுடன்

விடை : அபூபக்கருடன்

13. மதீனாநகரின் வீதிகள் …………….. போன்று பரந்திருந்தன.

 1. குறிஞ்சி
 2. மேருமலை
 3. பிரபஞ்சம்
 4. முல்லை

விடை : பிரபஞ்சம்

14. “உமறுப்புலவர் நபிகள்மீது பாடிய பாடல்கள் …………….

 1. தேம்பாவணி, சீறாப்புராணம்
 2. சீறாப்புராணம், முதுமொழிமாலை
 3. நொண்டி நாடகம், முதுமொழிமாலை
 4. தேம்பாவணி, முதுமொழிமாலை

விடை : சீறாப்புராணம், முதுமொழிமாலை

பொருத்துக

1. துன்னஅ. அளித்தல்
2. எய்துதல்ஆ. நிறைந்த
3. மண்டியஇ. நெருங்கிய
4. நல்கல்ஈ. பெறுதல்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. மதினா நகரம் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

மளிகை நகரம், கொடை நகரம், பொன்னகரம், மனைநகரம், மாநகரம், ஒண்ணகரம், செம்மைநகரம்

2. நபிகள் நாயகம், மதீனாவுக்கு எவ்வாற சென்றார்?

மதினா நகர மக்களின் அழைப்பை ஏற்று, தம் துணைவரான அபூபக்கர் முதலானவர்களுடன் முல்லை, குறிஞ்சி நிலங்களை கடந்து நபிகள் நாயகம் மதீனாவுக்குச் சென்றார்.

3. சீறாப்புராணம் பொருள் விளக்குக.

 • “சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரபான “சீறா” என்பதற்கு “வாழ்க்கை என்பது பொருள்.
 • “புராணம்” என்பது பழைய வரலாறு. எனவே சீறாப்புராணம் என்பதற்கு, “நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது” என்பது பொருள்

4. மதீனா நகரத்தை எவை தீண்டவில்லை?

மதீனா நகரத்தை பகை, வறுமை, நோய்கள் தீண்டவில்லை

சிறு வினா

1. “பூரணப் பலி” என மதீனா பொலிந்ததை எழுதுக

 • தோரணங்களாலும், கொடிகளாலும் மதீனா நகர வீதிகள் காடுகள் போல் நெருங்கி இருந்தன.
 • அவ்வீதிகள் மலை போன்ற யானைகள் நிறைந்திருந்தன.
 • வீதிகள் யாவும் ஒழுங்குடன் காணப்பட்டன.
 • இவற்றால் பொன்போல் பொலிந்த மதீனா நகரமானது, “பூரணப் புவி” எனப் பொலிந்தது.

2. மதீனா நகர் எவற்றால் ஒளி பெற்றுத் திகழ்ந்தது?

 • அலைவீசும் கடலானது முத்துகளையும் பல்வேறு அணி வகைகளையும் சிதறுவது போல், மதீனா நகரத்தில் வாழ்ந்த மக்ள் பல்வேறு மொழிகளைப் பேசினார்கள்.
 • பல்வேறு பொருள் வளத்தால் நிறைந்திருந்தால், தேன் உண்டவர் மயங்குவதுபோல் மதீனா நகர் ஒண்ணகராய் ஒளி பெற்றுத் திகழ்ந்தது.

3. மதீனா, செம்மையான நகராகத் திகழ்தமையை விளக்குக.

 • தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம் முதலானவை மதீனா நகரில் பூத்திருந்தன.
 • திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், வெற்றியைத் தரும் குறைவற்ற ஊக்ககும் காய்த்திரந்தன.
 • தீன் என்னும் செல்வமு் பழந்திருந்தால் மதீனா, செம்மை பொருந்திய நகரமாக இருந்தது.

4. சீறாப்புராணம் குறிப்பு வரைக?

 • இந்நூல் நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது
 • இந்நூலை உமறுப்புலவர் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க பாடினார்.
 • இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையான நூலாக விளங்கிறது.
 • விலாதத்துக்காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும், 5027 விருத்தப்பாக்களையும் கொண்டது.

5. உமறுப்புலவர் – குறிப்பெழுதுக

 • இசுலாமியத் தமிழ்ப்புவலர் உமறுப்புலவர்
 • இவர் எட்டையபுர அரசவைப் புலவர் கடிகைமுத்து புலவரின் மாணவர்.
 • வள்ளல் சீதக்காதியின் வேண்டுதலால் சீறாப்புராணத்தைப் பாடியவர்
 • நபிகள் நாயகத்தின் மீது “முதுமொழிமாலை” என்னும் நூலை இயற்றியுள்ளார்.
 • உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment