பாடம் 5.4 பிம்பம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 5.4 “பிம்பம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- புதுச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம்.
- இவர் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.
- 1995இல் இவருடைய வரலாற்றுப் புதினமான ‘வானம் வசப்படும்’ சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
- இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
பிம்பம் கதையின் வாயிலாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்களை விவரிக்க
முகமூடி அணிதல் மனித இயல்பு
மனிதன் ஒருவன் மற்றவர் இயல்புக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளும்போது அவர் அவனாக இருப்பதில்லை. அவ்வேளைகளில் அவரவருக்கு ஏற்ப வெவ்வேறு முகமூடியை அணிந்து கொள்கிறான். சில சமயங்களில் மனிதன், இப்படி அடிக்கடி முகமூடியை மாற்றி மாற்றி வாழ்வதால், அவனது உண்மைத் தன்மையை, உண்மை முகத்தையே இழந்து விடுகிறான். அதனால் சமுதாயத்தில் அடையாளம் தெரியாமல் போய்விடுகிறான்.
வேண்டாத விருந்தினர்
பிம்பம் கதையைப் பிரபஞ்சன், தம்மையே முன்னிலைப்படுத்திக் கொண்டு எழுதுகிறார். காரணம் ஏதுமின்றி எந்த நேரத்திலும் அது வெளிவருகிறது. தன் கட்டளைக்கு உடன்படாமல், வீட்டில் உரையாடி மகிழ்வதற்கு என்றில்லாமல், விரும்பும்போது இம்சிக்க வருவதுபோல் இருக்கிறது. அது வேண்டாத விருந்தாளியாகத் தன் விருப்பம்போல் சுற்றி அலைந்து எதையும் துருவித்துருவிக் கேட்கிறது.
கேள்விகளால் துளைத்தல்
மனிதன் தன்னையும், தன் மனசாட்சியையும் ஏமாற்றுவதை வெளிபடச் செய்கிறது. நிதானமாக எண்ணிப்பார்த்தால், ஒரு மனிதன் எத்தனை வண்ணங்களில், வெவ்வேறு அளவுகளில், பல்வேறு கோணங்களில், பல முகங்களோடு வாழ்வது வெளிப்படும். எதிரில் உள்ளவர் தாயானாலும், அவர் காட்டும் முகபாவத்திற்க ஏற்பத் தன் முகபாவத்தை மாற்றிக் கொள்ளும் மனிதர்கள் தாம் உள்ளனர்.
முகங்களின் குவியல்
ஒவ்வொருவர் காலடியிலும் பல முகங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் தேவையானதைத் தேவையானபோது பயன்படுதிக் கொள்வதே சகஜம். இத்துணை நிகழ்வுகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு வந்த பிம்பம் விடைபெறுவதோடு பிரபஞ்சன் பிம்பம் கதையை முடித்துள்ளார். விடைபெறும் பிம்பத்தால் சொந்த முகம் என்று எதுவும் மனிதனிடம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
மனசாட்சி
ஒவ்வொரு மனிதனிடமும் விருப்பு வெறுப்புகள் உள்ளன. எனினும் பிறருடன் உறவு பாராட்டும் போது, அவரவர் இயல்புக்கு ஏற்ப தன்னை மறைத்து மாற்றிக் கொள்கிறான். எனினும் அவனவன் மனச்சாட்சி என்பது உண்மையை நினைவூட்க்கொண்டே இருக்கும். இவ்வகையில் மனிதன் வாழ்க்கையில் இப்படி முகம் மாற்றித் தன் உண்மை முகத்தை இழந்து அடையாளமற்ற தன்மையில் காட்சியளிக்கிறான்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. வைத்தியலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட எழுத்தாளர் ………..
- பிரமிள்
- பிரபஞ்சன்
- சுரதா
- புதுமைபித்தன்
விடை : பிரபஞ்சன்
2. பிரபஞ்சனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் ………..
- வணக்கம் வள்ளுவ
- காந்தள் நாட்கள்
- சுதந்திரதாகம்
- வானம் வசப்படும்
விடை : வானம் வசப்படும்
3. வானம் வசப்படும் என்பது …………………ப் புதினம்
- வரலாற்று
- வட்டார
- சமுதாய
- அரசியல்
விடை : வரலாற்று
4. வைத்தியலிங்கம் பிறந்த ஊர் ………………..
- நெல்லை
- மதுரை
- கோவை
- புதுவை
விடை : கோவை
5. “பிம்பம்” சொல்லின் பொருள் ……………
- முகம்
- உருவம்
- தலை
- தீ
விடை : உருவம்
6. “இந்த உலகமே நாடக மேடை; அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே” – என்று கூறிய ஆங்கில எழுத்தாளர் …………………
- மில்டன்
- சாமுவேல்
- ஷேக்ஸ்பியர்
- ஜான்கீட்ஸ்
விடை : ஷேக்ஸ்பியர்
சிறு வினா
1. பிரபஞ்சனின் படைப்புகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஜெர்மன்
2. 1995-ல் பிரபஞ்சனுக்கு சாகித்திய விருது எந்த புதினத்திற்காக வழங்கப்பட்டது
1995-ல் பிரபஞ்சனுக்கு சாகித்திய விருது “வானம் வசப்படும்” என்ற புதினத்திற்காக வழங்கப்பட்டது
குறு வினா
பிரபஞ்சன் பற்றி சிறு குறிப்பு வரைக
- புதுச்சேரியை சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம்
- இவர் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுதை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.
- 1995-ல் இவருடைய வரலாற்றுப் புதினமான “வானம் வசப்படும்” சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
- இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.