Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 7.4 – சிந்தனை பட்டிமன்றம்

பாடம் 7.4 சிந்தனை பட்டிமன்றம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 7.4 “சிந்தனை பட்டிமன்றம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகளைச் சுவை குன்றாமல் தொகுத்து எழுதுக

சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகள்:-

அரசு மேல்நிலைப்பள்ளியில் இளைஞர்களை முதன்மைப்படுத்தி, “இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்னும் தலைப்பின் பட்டிமன்றம் நடைபெற்றது.

மொத்த மக்கள் தொகையில், சரிபாதியாக உள்ள இளைஞர்களின் துணையின்றி நாடு வளர்ச்சி பெற முடியாது என்பதை எடுத்துரைத் நடுவர், “இளைஞர் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடே எனப் பேச எழிலை அழைத்தார்.

இளையோர் முன்னேற்றத்தில் பெரிதும் உதவுவது வீடே:-

இளையோர் முன்னேற்றத்தில் முதல்படி வீடு. பிறக்கும் குழந்தைக்கு உலகை அறிமுகப்படுத்துவது வீடு. அன்பையும், அறிவையும் உணர்த்தி அடித்தளமிட்டு, வெற்றிகளை கட்டி எழுப்ப உதவுவது வீடு.

“எத்தனை உயரம் இமயமலை! அதில் இன்னொரு சிகரம் உனது தலை” என்பதை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உணர வைப்பது! வீடே எனவே, இளையோர் முன்னேற்றத்தின் முகமும் அகமுமாக அமைவது வீடே எனத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டிக் கொண்டு, எழில் தன் உரையை முன் வைத்தாள்.

வீடு அன்று நாடே:-

நடுவர் அழைப்பை ஏற்று, அடுத்ததாகத் தன் கருத்தோட்டத்தைக் கூற வந்த எலிசபெத், தனக்கு வீட்டினுள்ளே உலகை அறிமுகப்படுத்தி பெற்றோரைப் போற்றி உரையைத் தொடங்கினார்.

சிறு கூடு அன்று வீடு! நம் பண்பாட்டையும், மரபையும் காத்து நிற்கும் கருவூலம்! எத்தேடலுக்கும் தலைவாசல்! அறிவின் நாற்றாங்கால்!

வீட்டில் கேட்ட தாலாட்டும், நுங்கு தின்றது, பனையோலைக் காற்றாடி செய்யப் பழகியது எனப் பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகள், வளமான பல நெறிகளைக் கற்பித்து வீடே என்பதை நினைவில் கொண்டு, தீர்ப்பு வழங்குமாறு எலிசபெத் தன் உரையை முடித்தாள்.

பெண்களுக்கு விடியலைத் தந்தது பள்ளி:-

விடியலுக்கான வெளிச்சமாக உரையாற்ற வருமாறு அமுதாவை நடுவர் அழைத்தார். நாட்டு நலனைப் புதிய தடத்தில் வழி நடத்தக் கற்றுக் கொடுத்த முண்டாசுக் கவிஞனை வணங்கி, அமுதா தன் உரையைத் தொடங்கினாள்

வீடு பெண்களுக்குத் தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட் கூடுதான். பள்ளிக்கு வந்தபின் தான் “பெண்மை வெல்க” எனக் கூத்திட முடிந்தது. இன்று விஞ்ஞானிக்களாக, கல்வியாளர்களாக, கவிஞர்களாகப் பெண்கள் கம்பீரமாக நடைபோட நாடே காரணம். நாடே இளையோரை நம்பிக்கையோடு வழி நடத்துகிறது. எதிர்காலம் வளமாகத் துணை புரிகிறது. எனத் தன் வாதங்களை முன் வைத்தாள்.

இரு பக்க வாதங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்த நடுவர் “ஆண் பெண் சமத்துவச் சிந்தனை, பேதங்களை கடந்த தோழமை, கல்வி சார்ந்த உயர்ந்த காருத்துகள் என எல்லாவற்றையும் வழங்கி முழுமையான முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவது நாடே!” என்று தீர்ப்பு வழங்கினார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” – எனப் பாடியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கண்ணதாசன்
  4. வைரமுத்து

விடை : பாரதிதாசன்

2. “பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என …………. குறிப்பிடுகிறது

  1. நற்றிணை
  2. பதிற்றுப்பத்த
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : மணிமேகலை

3. “வீட்டுக்கு உயிர் வேலி!
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டை மதில்!
நடமாடும் கொடிமரம் நீ” எனப் பாடியவர் …………. 

  1. தாதாபாரதி
  2. பாரதியார்
  3. கண்ணதாசன்
  4. கவிஞர் வாலி

விடை : தாதாபாரதி

4. “எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?” – இவ்வரிகளுக்கு சொந்தக்காரர் …………. 

  1. பாரதிதாசன்
  2. கண்ணதாசன்
  3. தாதாபாரதி
  4. கவிஞர் வாலி

விடை : தாதாபாரதி

5. எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா” – எனப் பாடியவர் …………. 

  1. பாரதியார்
  2. கண்ணதாசன்
  3. நாராயண கவி
  4. கவிஞர் வாலி

விடை : பாரதியார்

6. “வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்” – எனப் பாடியவர் …………. 

  1. வள்ளலார்
  2. தாதாபாரதி
  3. கவிஞர் வாலி
  4. பாரதியார்

விடை : பாரதியார்

7. வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?” – என நாட்டு நலத்திற்குப் புதிய வழித்தடம் அமைத்தவர் …………. 

  1. கண்ணதாசன்
  2. முண்டாசுக் கவிஞன்
  3. ஒளவையார்
  4. கவிஞர் வாலி

விடை : முண்டாசுக் கவிஞன்

8. “பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்” – என்று பாடியவர் …………. 

  1. சுரதா
  2. தாதாபாரதி
  3. சுப்பிரமணிய பாரதி
  4. கவிஞர் வாலி

விடை : சுப்பிரமணிய பாரதி

9. “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” – இப்பாடலுக்கு சொந்தக்காரர் ……………..

  1. புரட்சிக்கவிஞர்
  2. கண்ணதாசன்
  3. தாதாபாரதி
  4. அறிஞர் அண்ணா

விடை : புரட்சிக்கவிஞர்

10. “நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” – எனக் கூறியவர் ……………..

  1. நாவேந்தர்
  2. சொல்வேந்தர்
  3. பாவேந்தர்
  4. நாவலர்

விடை : பாவேந்தர்

11. “வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்” – என்று கூறியவர் ……………..

  1. பாரதியார்
  2. சொல்வேந்தர்
  3. பேரறிஞர்
  4. நாவலர்

விடை : பேரறிஞர்

12. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – என்னும் மேன்மையான பார்வைக்கு வழி கூறியவர் ……………..

  1. தொல்காப்பியர்
  2. திருவள்ளுவர்
  3. திருமூலர்
  4. கணியன் பூங்குன்றன்

விடை : கணியன் பூங்குன்றன்

13. “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து; பொதுவில் நடத்து!”  – எனக் கூறி உலகத்தை வீடாகக் கட்டியவர் ……………..

  1. புரட்சிக்கவிஞர்
  2. திருவள்ளுவர்
  3. திருமூலர்
  4. தாதாபாரதி

விடை : புரட்சிக்கவிஞர்

சிறு வினா

1. தமிழர் சிந்தனைக்கான வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பானதொரு வடிவம் என்ன?

தமிழர் சிந்தனைக்கான வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பானதொரு வடிவம் பட்டிமன்றம்

2. பட்டிமன்றம் எதற்கு உதவுகின்றது?

முரண்பாடான பல கருத்துகளை விளக்கவும், நிலைநாட்டவும் உதவுகின்றது.

3. பட்டிமன்றம் எவற்றையெல்லாம் வளர்த்தெடுக்கிறது?

பண்பட்ட முறையில் கருத்துகளை முன் வைத்து பேசுகையில் சிந்தனையாற்றலையும், பேச்சுத்திறனையும், மொழியாளுமையையும் வளர்த்தெடுக்கிறது.

4. பட்டிமன்றம் பற்றி சிறு  குறிப்பு வரைக

  • பட்டிமன்றம் ஒரு சுவையான விவாதக்களம்
  • அது தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக்கலை வடிவம்.
  • வாழ்வியில சிந்தனைகளை மக்கள் முன்பு வலிமையாக வைக்கும் வாதுரை அரங்கம்
  • “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்று மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment