பாடம் 8.3 தொலைந்து போனவர்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 8.3 “தொலைந்து போனவர்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- அப்துல் ரகுமான்புதுக்கவிதை, வசனக்கவிதை, மரபுக்கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார்.
- வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
- இவர் வானம்பாடிக் கவிஞர்கள் ஒருவர்.
- பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
- தமிழபல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, “ஆலாபனை” என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
- இப்பாடல் “சுட்டுவிரல்” என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
இலக்கணக்குறிப்பு
- கற்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- உரைத்தாய் – முன்னிலை ஒருமை வினைமுற்று
- உடை அணிந்தேன் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
1. வென்றேன் = வெல் (ன்) + ற் + ஏன்
- வெல் – பகுதி
- “ல்” “ன்” எனத் திரிந்தது விகாரம்
- ற் – இறந்தகால இடைநிலை
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
2. நிற்கின்றாய் = நில் (ற்) + கின்று + ஆய்
- நில் – பகுதி
- “ல்” “ன்” எனத் திரிந்தது விகாரம்
- கின்று – எதிர்கால இடைநிலை
- ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
3. பெற்றேன் = பெறு (பெற்று) + ஏன்
- பெறு- பகுதி (பெற்று என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது)
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
4. அணிந்தேன் = அணி + த் (ந்) + த் + ஏன்
- அணி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. “கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………….
- அடி எதுகை, அடி மோனை
- சீர் மோனை, அடி எதுகை
- அடி மோனை, அடி இயைபு
- சீர் மோனை, அடி மோனை
விடை : சீர் மோனை, அடி மோனை
2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குகு
- நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகின்றேன்.
- இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
- இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகின்றேன்.
- இதழ்களில் பேசுகின்றேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
விடை : இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
குறு வினா
“கற்றேன் என்பாய் கற்றாயா?” என்று அப்துல் ரகுமான் யாரிடம் கேட்கிறார்?
நடக்காததை நடந்ததாகக் கருதிக் கொண்டு மாயையில் சிக்குண்ட மக்களிடம் கேட்கிறார்.
சிறு வினா
அப்துல்ரகுமானின் கவிதையிலிருந்து வினா – விடை ஏற்ற அடிகளைத் தருக
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றோர் என்பாய் எதைப் பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
என்பன வினா – விடை வடித்திற்கு ஏற்ற அடிகளாகும்
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- பெற்றேன், குளித்தேன், அளித்தேன், அணிந்தேன், தின்றேன், வென்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- நிற்கின்றாய், என்பாய், பேசுகிறாள் – முன்னிலை ஒருமை வினைமுற்று
- காகிதம் தின்பது, பிள்ளைகள் பெறுவது – இரண்டாம் வேற்றுமைத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
தோற்கின்றார் = தோல் (ற்) + கின்று + ஆர்
- தோல் – பகுதி
- “ல்” “ன்” எனத் திரிந்தது விகாரம்
- கின்று – எதிர்கால இடைநிலை
- ஆர் – படர்க்கைப் பால் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதிகள்
1. கல்வியில்லை = கல்வி + இல்லை
- “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “கல்வி + ய் + இல்லை” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “கல்வியில்லை” என்றாயிற்று.
2. பேகாவில்லை = போக + இல்லை
- “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “போக + வ் + இல்லை” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பேகாவில்லை” என்றாயிற்று.
பலவுள் தெரிக
1. “வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றி யில்தான் தோற்கின்றார்”- இவ்வடிகளில் பயின்று வருவது ………………..
- அடி எதுகை, அடி மோனை
- சீர் மோனை, அடி எதுகை
- அடி மோனை, சீர் எதுகை
- சீர் மோனை, சீர் எதுகை
விடை : அடி மோனை, சீர் எதுகை
2. “உரைத்தாய்” என்பது ………… வினைமுற்று
- தன்மை ஒருமை
- முன்னிலை ஒருமை
- தன்மை பன்மை
- முன்னிலை பன்மை
விடை : முன்னிலை ஒருமை
3. “வானம்பாடி” இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் ………………..
- அப்துல் ரகுமான்
- பிரமிள்
- பானுசந்திரன்
- புதுமைப்பித்தன்
விடை : அப்துல் ரகுமான்
4. சாகித்திய அகாதெமி விருது பெற்ற அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பு ……………….
- சுட்டுவிரல்
- மஸ்னவி
- நட்சத்திரவாசி
- ஆலாபனை
விடை : ஆலாபனை
5. அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள் ……………….
- தமிழன்னை விருது, அண்ணா விருது
- தமிழன்னை விருது, பெரியார் விருது
- தமிழன்னை விருது, காமராஜன் விருது
- தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது
விடை : தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது
6. கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை – இவ்வடிகளில் பயின்று வருவது ……………….
- அடி எதுகை, அடி மோனை
- அடி எதுகை, சீர் எதுகை
- அடி இயைபு, அடி மோனை
- சீர் மோனை, அடி மோனை
விடை : சீர் மோனை, அடி மோனை
7. “மரபுக்கவிதைகளில் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” – எனப் போற்றப்படுவர் ……………….
- பிரமிள்
- பானுசந்திரன்
- அப்துல் ரகுமான்
- புதுமைப்பித்தன்
விடை : அப்துல் ரகுமான்
8. தமிழ் பல்கலைக் கழகத்தின் “தமிழன்னை விருது” பெற்றவர் ……………….
- பிரமிள்
- பானுசந்திரன்
- புதுமைப்பித்தன்
- அப்துல் ரகுமான்
விடை : அப்துல் ரகுமான்
9. “கரைகளே நதியாவதில்லை” என்ற நூலின் ஆசிரியர் ……………
- அப்துல் ரகுமான்
- சுரதா
- பாரதியார்
- புதுமைப்பித்தன்
விடை : அப்துல் ரகுமான்
குறு வினா
1. எதனை உண்மையான விடியல் எனக் கவிஞர் கூறுகிறார்?
வானம் வெளுப்பது விடியல் அன்று. வாழ்க்கை விடிய வேண்டும். அதுவே உண்மையான விடியல் என்று அப்துல்ரகுமான் கூறுகிறார்.
2. கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளுள் நான்கினைக் கூறுக.
பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை
3. “உண்மையான உடை” என்று கவிக்கோ எதனைக் கூறுகிறார்?
உடலை அலங்கரிக்க அணிவது உடையன்று, மனதை அலங்கரித்து அழகுபடுத்தும் நல்ல எண்ணமே, உண்மையான உடை எனக் கவிக்கோ கூறுகிறார்.
4. “உண்மையான வெற்றி” என்பது எதில் இருப்பதாக கவிக்கோ கூறுகிறார்?
வென்று விட்டதாகக் கூறுவது, உண்மையான வெற்றி ஆகாது. உண்மையா வெற்றி என்பது, ஒருவன் மனிதனாக ஆவதில்தான் இருக்கிறது எனக் கவிக்கோ கூறுகிறார்.
5. பாரசீக ஞான காவியம் எது? அதனை எழுதியவர் யார்?
- மஸ்னவி என்பது உலகப் புகழ்பெற்ற பாரசீக ஞான காவியம்.
- இதனை இயற்றியவர், மெளலான ரூமி.
- இவர் ஆப்கானிஸ்தானில் 1207-ல் பிறந்தார்.
- தம் காவியத்தில் புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்துள்ளார்.
சிறுவினா
1. கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்து நீ அறிவன யாவை?
- கவிக்கோ அப்துல் ரகுமான், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
- இவர் வானம்பாடிக் கவிஞர்கள் ஒருவர்.
- புதுக்கவிதை, வசனக்கவிதை, மரபுக்கவிதை எனப் பல வடிவங்களில் கவிதைகளைப் படைத்துள்ளார்.
- பெயர் தெரியாத கல்லையும், மண்ணையும் கூடப் பெயர்களைச் சொல்லி அழைக்க விருப்பப்படுகிறார்.
- பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
- தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
2. மாயை என்று கவிக்கோ எவற்றை கருதுகிறார்?
- நாள்தோறும் காலையில் விடிந்து விட்டு எனக் கூறுவது
- எடுத்த செயல் ஒன்று முடிந்துவிட்டதாகச் சொல்வது
- சில நூல்களைப் படித்துவிட்டு அனைத்தையும் கற்றுவிட்டதாக கூறுவது
- பிள்ளைகளைப் பெற்றேன் எனக் கூறுவது
- காலம் காலமாய் தினமு் குளித்துவிட்டேன் எனச் சொல்வது
- “இதைக் கொடுக்கின்றேன்” என்று கூறி ஒன்றைக் கொடுப்பது
- உடலை அலங்கரிப்பதாகக் கூறி உடைகளை அணிவது
- விடை அறிந்து விட்டேன் எனக் கூறுவது
- வென்று விட்டேன் என்று சொல்லுவது
ஆகிய எல்லாவற்றையும் கவிக்கோ மாயை என்று கூறுகிறார்
3. மாயையிலிருந்து விடுபடக் கவிக்கோ கூறும் வழிமுறைகளை எழுதுக
- வாழ்க்கையில் விடிவு ஏற்படுவதுதான் உண்மையான விடியல்
- எந்தச் செயலும் முழுமையாய் முடிந்து விடுவதில்லை; செயலைத் தொடர்வதே நியதி.
- வாழ்க்கையைப் படிப்பதுதான் உண்மையான கல்வி.
- பெறுவது என்பது ஞானத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும்.
- மன அழுக்குப் போகுமாறு குளிப்பதே உண்மைக் குளியலாகும்.
- கொடுப்பவை எல்லாம் நம்முடையன அல்ல என, நினைவு கொள்ள வேண்டும்.
- உள்ளத்தை அலங்கரிக்கும் நல்ல எண்ணமேல நல்ல உடையாகும்.
- உண்மையான வெற்றி என்பது ஒருவன் மனிதனாக மாறுவது தான்.
- கேள்விளை ஒளியாக வைத்துக்கொண்டு தொலைந்து போன உன்னைத் தேடு என்று கவிக்கோ அப்துல் ரகுமான் மாயையில் இருந்து விடுபட வழிகாட்டுகிறார்.