Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 1.5 – தமிழாய் எழுதுவோம்

பாடம் 1.5 தமிழாய் எழுதுவோம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 1.5 “தமிழாய் எழுதுவோம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

நூல்வெளி

இலக்கணத் தேர்ச்சிகொள்

1. பிழையான தொடரைக் கண்டறிக.

  1. காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
  2. மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
  3. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
  4. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

விடை : காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

2. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.

  1. அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
  2. புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
  3. வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
  4. மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.

விடை : அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

3. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் – இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.

முடிந்தால் தரலாம்:-

  • முடிந்தால் –  கொடுக்கும் எண்ணம் (இயன்றால்)
  • ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது.
  • உன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி முடித்தால் தரலாம்.

முடித்தால் தரலாம்:-

  • முடித்தால் – செயல் முடித்த பின்
  • தரப்பட்டுள்ள வேலையை முடித்து விட்டேன் என்று பொருளைத் தருகின்றது.
  • வீட்டின் திறவுகோலை வேலைகளை முடித்தால் தரலாம்.

4. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

  • எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
  • தமிழில் இவ்வெழுத்துகள் வரும் முறையையும், அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.
  • தொடக்கத்தில் சிலகாலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.
  • வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும்.
  • கெ, கே, கொ, கோ போன்று கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுதவேண்டும்

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. எழுதும்போது ஏற்படும் பிழைகளை எவ்வாறு பிரிக்கலாம்?

எழுத்துப் பிழை, சொற்பொருட்பிழை, சொற்றொடர்ப்பிழை, பொதுவான பிழைகள்

2. எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் யாது?

  • எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுத முடியாது.
  • பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம்.

3. தமிழில் உயிரெழுத்துகள் எத்தனை? அதன் வகைகளை கூறுக.

  • உயிரெழுத்துகள் 12.
  • குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.

4. தமிழில் மெய்யெழுத்துகள் எத்தனை? அதன் வகைகளை கூறுக.

  • மெய்யெழுத்துகள் 18.
  • வல்லின மெய்கள் – க், ச், ட், த், ப், ற்
  • மெல்லின மெய்கள் – ங், ஞ், ண், ந், ம், ன்
  • இடையின மெய்கள் – ய், ர், ல், வ், ழ், ள் என்று மூன்று வகைப்படும்.

5. தமிழில் உயிர்மெய் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

உயிர்மெய் எழுத்துகள் 216.

அவை உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126 என இரு வகையாக பிரிப்பர்.

சிறு வினா

1.லகர ளகர விதிகள் சிலவற்றை எழுதுக?

  • வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொ டர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு. கல் + சிலை = கற்சிலை, கடல் + கரை = கடற்கரை.
  • லகரத்தைத் தொடர்ந்து மெ ல்லினம் வரின் லகரம் னகரமா ய்த் திரிவதுண்டு. பல் + முகம் = பன்முகம்.
  • ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு. மக்கள் + பேறு = மக்கட்பேறு.
  • ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு. நாள் + மீன் = நாண்மீன்.
  • வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மா றும். சொல் + துணை = சொற்றுணை.
  • வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு நகரமும் னகரமாக மாறும். பல் + நூல் = பன்னூல்.
  • அல்வழியில், தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை = அஃறிணை; பல் + துளி = பஃறுளி.

2. பிழை தவிர்க்கச் சில குறிப்புகள் யாவை?

  • எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
  • தமிழில் இவ்வெழுத்துகள் வரும் முறையையும், அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.
  • தொடக்கத்தில் சிலகாலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.
  • வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும்.
  • கெ, கே, கொ, கோ போன்று கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

ஆறுமுக நாவலர் (1822-1879)

வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஒருவர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார். அவர் உடனே ‘அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி’ என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். ‘சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது அவர் கூறியதற்குப் பொருள். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.

‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர். தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணிநிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார். தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு ‘நாவலர்’ பட்டம் வழங்கியது. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.

வினாக்கள்

1. “எல்லி” என்பதன் பொருள் என்ன?

சூரியன்

2. ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம்?

24 நிமிடம்

3. ஆழி, கால் பொருள் தருக

  • ஆழீ – கடல், மோதிரம்
  • கால்  – உடல் உறுப்பு, காற்று

4. ஆறுமுக நாவலர் எவ்வாறு புகழப்பட்டார்? அவர் அறிந்திருந்த மொழிகள் யாவை?

  • வசனநடை கைவந்த வள்ளலார் எனப் புகழப்பட்டார்
  • தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகியவை அவர் அறிந்திருந்த மொழிகளாகும்

5. பெற்றவர் இலக்கணக்குறிப்பு தருக

பெற்றவர் – வினையாலணையும் பெயர்

6. விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

பெர்சிவல் பாரதியார்

7. ஆறுமுக நாவலரின் இயற்பெயர் என்ன? நாவலர் என்ற பட்டத்தை யார் வழங்கினார்?

ஆறுமுகம்

8. ஆறுமுக நாவலருக்கு நாவலர் என்ற பட்டத்தை யார் வழங்கினார்?

திருவாவடுதுறை ஆதீனம்

தமிழாக்கம் தருக.

1. Learning is a treasure that will follow its owner everywhere.

விடை : கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

2. A new language is a new life.

விடை : புதிய மொழி புதிய வாழ்க்கை

3. If you want people to understand you, speak their language.

விடை : பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு

4. Knowledge of languages is the doorway to wisdom.

விடை : மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்

5. The limits of my language are the limits of my world

விடை : என் மொழியின் எல்லை உன் உலகத்தின் எல்லை

இலக்கிய நயம் பாராட்டுக.

முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி

சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி

அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!

-கண்ணதாசன்

முன்னுரை:-

இப்பாடலின் ஆசிரியர் கவியரசர் கண்ணதாசன் ஆவார். இவர் திரைப்பட பாடலாசரியரும், கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.

திரண்ட கருத்து:-

தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமைய காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும், நல்ல அறிவும் கொண்ட புலவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிட முடியாத பொருள்களைக் கூட்டி நீ உன்னுடைய சொற்களை அதிகரித்து அதே நேரத்தில் சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைந்த பெருமகளே! தமிழன்னையே!

தொடை நயம்:-

மோனை:-

காட்டுக்கு யானை, பாட்டுக்கு மோனை

முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்

சான்று : முச்சங்கக் – முதுபுலவர், ச்சங்கத் – ளப்பரிய,  ற்புதங்க – மைந்த

எதுகை:-

மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும்

சான்று : முச்சங்கக் – அச்சங்கத்,  அற்புதங்க – சொற்சங்க

இயைபு:-

கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது

சான்று : பெருமாட்டி – கவிகூட்டி – பொருள்கூட்டி – தமைக்கூட்டி

அணி நயம்:-

அணியற்ற பாக்ககள் பிணியுள்ள வணிதை

தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்து

சந்த நயம்:-

சந்தம் தமிழுக்கு சொந்தம்

ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையைத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல்

சுவை நயம்:-

நா உணரும் சுவை ஆறு, மனம் உணரும் சுவை எட்டு

என்ற வகையில் இப்பாடலில் சொற்சங்கமாகச் சுவை மிகுந்த கவி கூட்டி பெருமிதச் சுவை மிகுந்துள்ளது.

முடிவுரை

கற்றாரும், கல்லாருக்கும் ஏற்ற வகையில எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.

– மொழி வரலாறு (மு.வரதராசனார்)

வினாக்கள்

1. மக்கள் படைத்துக் காத்துவரும் அரிய கலை எது?

2. தாயின் முதல் விருப்பம் என்ன?

3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது?

4. மொழியை வளர்ப்பவரும், மொழியால் வளர்பவரும் யார்?

5. மொழி வளர்ச்சி எதனைப் பொறுத்தது?

உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

(தாமரை இலை நீர் போல, கிணற்றுத் தவளை போல, எலியும் பூனையும் போல, அச்சாணி இல்லாத தேர் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல)

1. தாமரை இலை நீர் போல

விடை : இவ்வுலக ஆசைகளின் மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும்.

2. கிணற்றுத் தவளை போல

விடை : இன்னும் சில கிராமங்களில் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்

3. எலியும் பூனையும் போல

விடை : சோமுவும், சந்துருவும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

4. அச்சாணி இல்லாத தேர் போல

விடை : நாட்டை வழி நடத்த சரியான தலைவர் இல்லாத நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்

5. உள்ளங்கை நெல்லிக்கனி போல

விடை : தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் விளங்கியது.

மொழியாேடு விளையாடு

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கணடுபிடிப்போம்.

தமிழ் ஒளிஅம்பைகோதை
அசோகமித்திரன்புதுமைபித்தன்சூடாமணி
ஜெயகாந்தன்மறைமலை அடிகள்

1. கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்

விடை : கவிமணி

2. தமிழறிஞர்; முதலிரு எழுத்துக்களால் மறைக்கலாம்

விடை : மறைமலை அடிகள்

3. தாய்மொழி; ஈற்றிரு எழுத்துக்களால் வெளிச்சம் தரும்

விடை : தமிழ் ஒளி

4. சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்

விடை : புதுமைப்பித்தன்

5. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம்

விடை : கோதை

நிற்க அதற்குத் தக

படிப்போம் பயன்படுத்துவாேம் (நூலகம்)

Subscriptionஉறுப்பினர் கட்டணம்
Fictionபுனைவு
Biographyவாழ்க்கை வரலாறு
Archiveகாப்பகம்
Manuscriptகையெழுத்துப் பிரதி
Bibliographyநூல் நிரல்

 

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment