Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 2.2 – பிறகொரு நாள் காேடை

பாடம் 2.2 பிறகொரு நாள் காேடை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 2.2 “பிறகொரு நாள் காேடை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

நூல் வெளி

  • “பிறகொரு நாள் கோடை” இக்கவிதை “அய்யப்ப மாதவன் கவிதைகள்” என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்;
  • இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்;
  • “இன்று” என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

  1. சூரிய ஒளிக்கதிர்
  2. மழை மேகங்கள்
  3. மழைத்துளிகள்
  4. நீர்நிலைகள்

விடை : மழைத்துளிகள்

குறு வினா

‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக. 

  • மழை மேகத்தால் நகரம் இருள் சூழந்தது. பெய்யென மழை பெய்தது.
  • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
  • சில மழைத்துளிகளின் மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

சிறு வினா

“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’ – இக்கவிதையின் அடி,
‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.

தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே:-

  • ஏற்றம் இறைப்பவர்கள் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
  • விடியும் போது மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனிநீர் வைரம் வைத்தது போல் இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த ஒரு துளி நீரையும் விட்டு வைக்காமல் தானே எடுத்துக் கொள்வான்.
  • அதிகாலையில் மூங்கில் இலையில் இருக்கும் பனிநீரை மீண்டும் சூரியன் வாங்கிக் கொள்கிறான்

“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’

  • நீர் நிலைகளை வந்தடையும் மழை நீரைச் சூரியன் தன் ஒளிக்கதிர் என்ற உதடுகளால் உறிஞ்சுகிறான்.
  • வானில் இருந்து விழும் மழை நீரை மீண்டும் வானுக்கே எடுத்துக் கொள்கிறான் சூரியன். இது ஒரு நீர் வட்டம்.

நயம்:-

  • நாட்டுப்புறப் பாடலில் ஒரு துளி பனிநீரைக் கூட சூரியன் விடுவதில்லை; தன் ஒளிக்கதிர்களால் எடுத்துக் கொள்கிறான் எனக் குறிப்பிடுகிறது.
  • “பிறகொரு நாள் கோடை” கவிதையில் கவிஞர் மழையாக வந்து நீர்நிலைகளை நிரப்பு நீரைத் தன் கதிர்களால் இதழ் குவித்து உறிஞ்சுகிறது சூரியன் என்கிறார்.
  • பனித்துளியை வாங்கிக் கொண்டான் கதிரவன் – நாட்டுப்புறப்பாடல்.
  • நீர்நிலை மழைத்துளிகளை உறிஞ்சுக் கொண்டான் கதிரவன் –  பிறகு ஒரு நாள் கோடை.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • காய்கிறது, உறிஞ்சுகிறது, உதறுகிறது, தோய்கிறது, விடுபடுகிறது – படக்கை ஒன்றன்பால் வினைமுற்றுகள்
  • இசைக்கின்றன – படக்கை பலவின்பால் வினைமுற்று
  • இருக்கிறேன், அலைகிறேன் – தன்மை ஒருமை நிகழ்கால வினைமுற்றுகள்
  • நனைந்து, குதித்து, அசைந்து, ஏந்தி – வினையெச்சங்கள்
  • இருந்த, தீட்டிய, அழிந்த, இறங்கிய, வாங்கிய, போன – பெயரெச்சங்கள்

உறுப்பிலக்கணம்

1. அசைத்து = அசை + த் + த் + உ

  • அசை – பகுதி
  • த் – சந்தி ;
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி.

2. உதறுகிறது = உதறு + கிறு + அ + து

  • உதறு – பகுதி ;
  • கிறு – நிகழ்கால இடைநிலை
  • அ – சாரியை
  • து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

3. இசைக்கின்ற = இசை + க் + கின்று + அன் + அ

  • இசை – பகுதி
  • க் – சந்தி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அன் – சாரியை
  • அ – பலவின்பால் வினைமுற்று விகுதி.

4. இறங்கிய = இறங்கு + இ (ன்) + ய் +அ

  • இறங்கு – பகுதி
  • இ (ன்) – நிகழ்கால இடைநிலை
  • ன் – புணர்ந்து கெட்டது விகாரம்
  • ய் – (உடம்படுமெய்) சந்தி
  • அ – பெயரெச்ச விகுதி.

5. அலைகிறேன் =  அலை + கிறு + ஏன்

  • அலை – பகுதி
  • கிறு- நிகழ்கால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

1. தலையசைத்து = தலை + அசைத்து

  • இஈஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “தலை + ய் + அசைத்து” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தலையசைத்து” என்றாயிற்று

2. வீட்டுச்சுவர் = வீடு + சுவர்

  • நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் டறஒற்று இரட்டும்” என்ற விதிப்படி “வீட்டு + சுவர்” என்றாயிற்று
  • வன்றொடர்க் குற்றிய லுகரத்தின் முன் வலிமிகும்” என்ற விதிப்படி “வீட்டுச்சுவர்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. பகலும் இரவும் சந்திப்பது …………..

  1. வைகறை
  2. யாமம்
  3. இரவு
  4. அந்தி

விடை : அந்தி

2. நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை ………………….. எடுத்துக் கொண்டது.

  1. உதடுகள் குவித்து
  2. கரங்களால் பருகி
  3. குவளையில் பிடித்து
  4. நீரில் மூழ்கி

விடை : உதடுகள் குவித்து

3. அய்யப்ப மாதவன் இயங்கி வரும் துறைகள் ………………….., ……………………….

  1. கல்வித்துறை, இதழியல் துறை
  2. இசைத்துறை, இதழியல் துறை
  3. இதழியல் துறை, திரைத்துறை
  4. ஒளித்திறை, திரைத்துறை

விடை : இதழியல் துறை, திரைத்துறை

4. கூற்று சரியா? தவறா?

கூற்று 1 : நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது.

கூற்று 2 : செங்குத்தாய் இறங்கிய மழையைக் கரத்தினுள் வழிய விடுகிறேன்.

  1. கூற்று 1 சரி, 2 தவறு
  2. கூற்று 1 தவறு, 2 சரி
  3. கூற்று இரண்டும் சரி
  4. கூற்று இரண்டும் தவறு

விடை : கூற்று 1 சரி, 2 தவறு

5. கூற்று சரியா? தவறா?

கூற்று 1 : மீதான சொட்டுகளை ஈரமான மரங்கள் தலையசைத்து உதறுகிறது.

கூற்று 2 : வெயில் கண்ட பறவைகள் வெயில் தாங்காமல் வீழகின்றன.

  1. கூற்று 1 தவறு, 2 சரி
  2. கூற்று இரண்டும் சரி
  3. கூற்று 1 சரி, 2 தவறு
  4. கூற்று இரண்டும் தவறு

விடை : கூற்று 1 சரி, 2 தவறு

6. கூற்று சரியா? தவறா?

கூற்று 1 : கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புகளுக்கு மத்தளம் அடிக்கின்றது.

கூற்று 2 : போன மழை மீண்டும் திரும்பாது என அலைகிறேன்.

  1. கூற்று 1 தவறு, 2 சரி
  2. கூற்று இரண்டும் சரி
  3. கூற்று 1 சரி, 2 தவறு
  4. கூற்று இரண்டும் தவறு

விடை : கூற்று இரண்டும் தவறு

7. சரியானதைத் தேர்க

  1. நகரம் – அமைதியாயிருந்து
  2. நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன
  3. மரங்கள் – வேர்விட்டன
  4. பறவைகள் – சங்கீதம் இசைக்கவில்லை

விடை : நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன

8. சரியானதைத் தேர்க

  1. மரங்கள் – தலையசைத்து உதறுகிறது
  2. பறவைகள் – சங்கீதம் இசைத்தன
  3. சுவர் – நீர்ச்சுவடுகள் அழித்தன
  4. நரம்புகள் – மத்தளம் இசைத்தன

விடை : நரம்புகள் – மத்தளம் இசைத்தன

9. “பிறகொரு நாள் கோடை” இடம் பெற்றுள்ள நூல் ………………..

  1. நீர்வெளி
  2. மழைக்குப் பிறகு மழை
  3. நானென்பது வேறொருவன்
  4. அய்யப்ப மாதவன் கதைகள்

விடை : அய்யப்ப மாதவன் கதைகள்

10. அய்யப் மாதவனின் “இன்று” என்பது ………………..

  1. கவிதைத்தொகுப்பு
  2. கவிதைக் குறும்படம்
  3. ஆவணப்படம்
  4. புதினம்

விடை : கவிதைக் குறும்படம்

11. போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அழைகிறேன் என்று பாடியவர் …………….

  1. அய்யப்ப மாதவன்
  2. வேணுகோபாலன்
  3. இ.ரா.மீனாட்சி
  4. ஆத்மாநாம்

விடை : அய்யப்ப மாதவன்

12. சங்கப்பாடல்களில், தொடரியில் பிறழ்வு பெரிது காணப்படுவது ………………

  1. பாடலின் முதலில்
  2. பாடலின் நடுவில்
  3. பாடலின் இறுதியில்
  4. பாடலின் மூவிடத்தும்

விடை : பாடலின் இறுதியில்

13. ஒரு பொருளை குறித்து வரும்  பலசொல், பல பொருள் குறித்து வரும் ஒருசொல் ………………… எனப்படும்

  1. சொற்புலம்
  2. ஒலிக்கோலம்
  3. சொற்றொடர் நிலை
  4. சொற்பொருள் தொடர்நிலை

விடை : சொற்புலம்

1. பொருத்துக

இன்றுஅ. அய்யப்ப மாதவன்
நீர்வெளிஆ. கவிதைக் குறும்படம்
சிவகங்கைஇ. கவிதை நூல்
நரம்புகள்ஈ. வீணை
விடை : 1- ஆ, 2 – இ, 3 – அ, 4 – ஈ 

2. பொருத்துக

நகரம்அ. நரம்புக்குள் மீட்டுதல்
பறவைகள்ஆ. உதடுகள்
வீனைஇ. வைரம்
ஒளிக்கதிர்கள்ஈ. சங்கீதம்
விடை : 1- இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. அய்யப்ப மாதவன் வெளியிட்டுள்ள கவிதை நூல்கள் யாவை?

மழைக்குப் பிறகு மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி

2. ஒளிக்கதிர் எதனை உறிஞ்சுகிறது?

ஒளிக்கதிர் உதடுகளைக் குவித்து நீர்நிலைகளிலிருந்து மழை பெய்தால், தேங்கிய நீரை உறிஞ்சுகிறது.

3. எதனால் வருத்தம் தோய்கிறது?

பெய்த மழையால் சுவர் எங்கும் இருந்த நீர்ச்சுவடுகள், அழிந்து மாய்ந்ததில் தோய்கிறது.

4. வெளியில் கண்ட பறவைகளின் செயல் யாது?

வெளியில் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட சங்கீதம் இசைகின்றன

5. சூரியனைக் கண்ட ஈரமான மரங்களின் செயல் யாது?

சூரியனைக் கண்ட ஈரமான மரங்கள் தங்கள் மீதமுள்ள சொட்டுகளை தலையசைத்து உதறுகின்றன.

6. வீணை மீட்டிக் கொண்டிருப்பவை?

கை ஏந்தி வாங்கிய மழைத்தளிகள், நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கின்றன.

சிறு வினா

1. மழையிலிருந்து விடுபடும் ஊரின் தன்மையைக் கவிஞர் அய்யப்ப மாதவன் எக்குறியீடுகளின் மூலம் வெளிப்படுத்துகின்றார்?

  • மழை நின்றதால் சுவர்கள் மீது வழிந்தோடிய மழைநீர் நின்றது.
  • கொஞ்சம் இருந்த நீர் சுவடுகளையும் சுவர் வேகமாகத் தன் வசம்படுத்திக் கொண்டது.
  • ஈரமான மரங்கள் தங்கள் கிளைகளை அசைத்து தன் மீது படர்ந்திருந்த மீதான நீர்த்துளிகளையும் உதறியது.
  • வெயிலைக் கண்டதால், மழைநீருக்கு அஞ்சியிருந்த பறவை உற்சாகம் வெளிப்பட தன்குரலால் சங்கீதம் இசைத்தது
  • இவையே அவ்வூர் மழையிலிருந்து விடுபடுவதைக் குறிப்பிடும் குறியீடுகளாக அய்யப்ப மாதவன் குறிப்பிடுகிறார்.

2. கவிஞர் அய்யப்ப மாதவன் – குறிப்பு வரைக

  • சிவகங்கை மாவட்டத்தின் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர்
  • இதழியல் துறை, திரைத்துறை, சார்ந்து இயங்கி வருபவர்
  • “இன்று” என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகு மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: