Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 2.3 – நெடுநல்வாடை

பாடம் 2.3 நெடுநல்வாடை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 2.3 “நெடுநல்வாடை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

நூல் வெளி

  • பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை.
  • இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ;
  • 188 அடிகளைக் கொண்டது;
  • ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது.
  • தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.

சொல்லும் பொருளும்

  • புதுப்பெயல் – புதுமழை
  • ஆர்கலி – வெள்ளம்
  • கொடுங்கோல் – வளைந்த கோல்
  • புலம்பு – தனிமை
  • கண்ணி – தலையில் சூடும் மாலை
  • கவுள் – கன்னம்
  • மா – விலங்கு

இலக்கணக்குறிப்பு

  • வகைஇ – சொல்லிசை அளபெடை
  • பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்;
  • புதுப்பெயல், கொடுங்கோல் – பண்புத்தொகைகள்

உறுப்பிலக்கணம்

கலங்கி = கலங்கு + இ

  • கலங்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. இனநிரை = இனம் + நிரை

  • ம்வ்வீறு ஒற்றழிந்து உயரீறு ஒப்பவும்” என்ற விதிப்படி “இனநிரை” என்றாயிற்று

2. புதுப்பெயல் = புதுமை + பெயல்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “புது + பெயல்” என்றாயிற்று
  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “புதுப்பெயல்” என்றாயிற்று

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.பொருத்துக

அ) குரங்குகள்1) கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) விலங்குகள்2) மேய்ச்சலை மறந்தன
இ) பறவைகள்3) மேய்ச்சலை நடுங்கின
ஈ) பசுக்கள்4) மரங்களிலிருந்து வீழ்ந்தன
  1. 1, 3, 4, 2
  2. 3, 1, 4, 2
  3. 3, 2, 1, 4
  4. 2, 1, 3, 4

விடை : 3, 1, 4, 2

2. பொய்யா வானம்” புதுப்பெயல் பொழிந்தென” – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு

  1. வினைத்தொகை
  2. உரிச்சொல் தொடர்
  3. இடைச்சொல் தொடர்
  4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறு வினா

இனநிரை – பிரித்து புணர்ச்சி விதி எழுதுக

இனநிரை = இனம் + நிரை

  • ம்வ்வீறு ஒற்றழிந்து உயரீறு ஒப்பவும்” என்ற விதிப்படி “இனநிரை” என்றாயிற்று

சிறு வினா

வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

  • வாடைக் காலத்தில் மேகம் மழைய வலப்பக்கமாக சூழ்ந்து பூமி குளிரும் படி மழையைப் பெய்தது.
  • தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருகியது.
  • கோலர்கள் தாங்கள் மேயவிட்டிருந்த எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களுக்கு மாற்றினார்.
  • பழகிய நிலத்தை விட்டுப் புது இடத்தை அடைத்தால் வருந்தினர்.
  • தண்ணீர் தாழ்வான பகுதியில் நிரம்பிவிடும் என்பதால் பாதுகாப்பிற்காக மேடான பகுதிக்குச் சென்றனர். நீர்த்துளிகள் மேலபடுவதாலும், வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.

நெடு வினா

நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லி வடிக்க?

  • ஐப்பசி மாதம் அடை மழைக்காலம் என்பார்கள். பழந்தமிழர் ஐப்பசி,கார்த்திகை மாதங்களை கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர். பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழை குளிரால் ஏற்படும் தாக்கத்தினை நெடுநல்வாடை வருணனை செய்கிறது.
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • பழகிய நிலத்தை விட்டுப் புது இடத்தை அடைத்தால் வருந்தினர்.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றியபோதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.
  • மலையையே குளிரச் செய்வன போன்றிருந்தது  என்று நக்கீரர் மழைக்கால வருணனையினை நெடுநல்வாடையில் பதிவு செய்கிறார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • முனைஇய – சொல்லிசை அளபெடை
  • புடையூஉ – இன்னிசையளபெடை
  • பெரும்பணி – பண்புத்தொகை
  • பனிப்ப, பரப்பி, கலங்கி, நலிய, மறப்ப, வீழ – வினையெச்சங்கள்

உறுப்பிலக்கணம்

1. படிவன = படி + வ் + அன் + அ

  • படி – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • அன் – சாரியை
  • அ – வினையெச்சவிகுதி

புணர்ச்சி விதி

1. பெரும்பனி = பெருமை + பனி

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + பனி” என்றாயிற்று
  • இனமிகல்” என்ற விதிப்படி “பெரும்பனி” என்றாயிற்று

2. கொடுங்கோல் = கொடுமை + கோல்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “கொடு + கோல்” என்றாயிற்று
  • இனமிகல்” என்ற விதிப்படி “கொடுங்கோல்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. “ஆர்கலி” என்ற சொல்லின் பொருள் …………………

  1. சூரியன்
  2. வெள்ளம்
  3. கடல்
  4. நிலா

விடை : வெள்ளம்

2. வாடைக்காற்று ……………. திசையில் இருந்து வீசும் 

  1. கிழக்கு
  2. மேற்கு
  3. தெற்கு
  4. வடக்கு

விடை : வடக்கு

3. வெற்றியின் அடையாளமாகச் சூடுவது …………………

  1. வாகைப் பூ
  2. காந்தள் பூ
  3. கரந்தைப் பூ
  4. வஞ்சிப் பூ

விடை : வாகைப் பூ

4. வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ ……………………..

  1. வாகை
  2. மல்லிகை
  3. காந்தள்
  4. குறிஞ்சி

விடை : வாகை

5. போர் மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு ………..

  1. கூதிர்பாசறை
  2. கடவை
  3. சிவிரம்
  4. வீடாரம்

விடை : கூதிர்பாசறை

6. ஆயர்கள் சூடியிருந்த மாலை ……………………..

  1. வாகை மாலை
  2. மல்லிகை மாலை
  3. காந்தள் மாலை
  4. குறிஞ்சி மாலை

விடை : காந்தள் மாலை

7. சரியானதைத் தேர்வு செய்க

  1. வாகை – துறை
  2. கூதிர்பாசறை – திணை
  3. கண்ணி – கன்னம்
  4. கொடுங்கோல் – வளைந்த கோல்

விடை : கொடுங்கோல் – வளைந்த கோல்

8. பொருந்தாததைத் தேர்வு செய்க

  1. புலம்பு – தனிமை
  2. மா – விலங்கு
  3. புதுப்பெயல் – புதிய வயல்
  4. கவுள் – கன்னம்

விடை : புதுப்பெயல் – புதிய வயல்

9. நெடுநல்வாடையை இயற்றியவர் ………………… 

  1. கபிலர்
  2. நக்கீரர்
  3. பரணர்
  4. திருமூலர்

விடை : நக்கீரர்

10. நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன் ………………… 

  1. பாண்டியன் நெடுஞ்செழியன்
  2. சோழன் கரிகாலன்
  3. மாங்குடி மருதனார்
  4. கூடலூர்கிழார்

விடை : பாண்டியன் நெடுஞ்செழியன்

11. நெடுநல்வாடை ………………… நூல்களுள் ஒன்று

  1. எட்டுத்தொகை
  2. பதினெண்கீழ்க்கணக்கு
  3. பதினெண்மேல்கணக்கு
  4. பத்துப்பாட்டு

விடை : பத்துப்பாட்டு

12. நெடுநல்வாடை ………………… அடிகளைக் கொண்டது.

  1. 188
  2. 196
  3. 150
  4. 101

விடை : 188

13. நெடுநல்வாடை அமைந்துள்ள பா ………………… 

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா

விடை : ஆசிரியப்பா

14. கூதிர் பருவத்திற்குரிய மாதங்கள் ………………… 

  1. தை, மாசி
  2. மார்கழி, தை
  3. பங்குனி, சித்திரை
  4. ஐப்பசி, கார்த்திகை

விடை : ஐப்பசி, கார்த்திகை

குறு வினா

1. நெடுநல்வாடை குறிப்பு வரைக

  • தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால்  நெடுவாடை (நீண்ட வாடை)யாக இருந்தது.
  • பாேர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருந்தது.

2. வாகைத்திணை விளக்குக

வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடுவதாகும்.

தாங்கள் பெற்ற வெற்றியைக் கொண்டது வாகைத் திணை.

3. கூதிர்ப்பாசறை என்றால் என்ன?

போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.

4. கூதிர்ப்பருவம் என்பது என்ன?

ஐப்பசி, கார்த்திகை இரண்டு மாதங்களும் கூதிர்ப் பருவமாகும்.

5. குளிரினைப் போக்க கோவலர்கள் என்ன செய்தார்கள்?

கோவலர்கள் பலரும் கூடிக் கொள்ளி நெருப்பினில் கைகளைக் காட்டி சூடாக்கி போக்க முயற்சித்தார்கள்.

சிறு வினா

1. நக்கீரர் – குறிப்பு வரைக

  • மதுரை கணக்காயனாரின் மகன் நக்கீரர்
  • அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள், புற நானூற்றில் 3 பாடல்கள் பாடியுள்ளார்.
  • இறையனார் களவியலுக்குச் சிறந்த உரையினை தந்தவர்.
  • கபிலர், பரணர் காலத்தினைச் சார்ந்தவர்
  • பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக கெண்டு 188 அடிகளை உடைய நெடுநல்வாடையினை இயற்றினார்.

2. கூதிர் காலத்தின் தன்மையான நெடுநல்வாடை குறிப்பிடுபவை யாவை?

  • விலங்குகள் மேய்ச்சலை மறந்தன.
  • பெண் குரங்குகளிள் உடல் குளிரால் நடுங்கி கூனின் போயின
  • பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து நிலத்தில் வீழந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் உதைத்து தள்ளின.
  • குன்றே குளிர்ந்தது போல கூதிர்காலத்தின் தன்மை இருந்தது

3. வாகைத் திணையை சான்றுடன் விளக்குக

திணை விளக்கம்:-

வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை.

சான்று:-

‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

– என்ற நெடுநல்வாடைப் பாடல்

பொருத்தம்:-

வாடைக் காலத்தில் மேகம் மழைய வலப்பக்கமாக சூழ்ந்து பூமி குளிரும் படி மழையைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடற்றினர். அவர்களோடு அரசனும் குளிர் காலத்தில் வெற்றியைக் கொண்டாடினான்

4. “கூதிர்ப்பாசறை” துறையைச் சான்றுடன் விளக்குக

திணை விளக்கம்:-

போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.

சான்று:-

‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

– என்ற நெடுநல்வாடைப் பாடல்

பொருத்தம்:-

வாடைக் காலத்தில் மேகம் மழைய வலப்பக்கமாக சூழ்ந்து பூமி குளிரும் படி மழையைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடற்றினர். அவர்களோடு போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு கூதிர்ப்பாசறை

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment