பாடம் 3.5 பொருள் மயக்கம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 3.5 “பொருள் மயக்கம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
இலக்கணத் தேர்ச்சிகொள்
1. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
- தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.
- தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
- நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
- வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
விடை : நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
2. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
அ) பாலை பாடினான் | 1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான். |
ஆ) பாலைப் பாடினான் | 2) தேரினைப் பார்த்தான் |
இ) தேரை பார்த்தான் | 3) பாலினைப் பா டினான் |
ஈ) தேரைப் பார்த்தான் | 4) பாலைத் திணை பாடினான் |
- 4, 1, 3, 2
- 2, 3, 1, 4
- 4, 3, 1, 2
- 2, 4, 1, 3
விடை : 4, 3, 1, 2
3. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
விடை:- அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர்.
4. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க.
எ.கா. :-
முன் | அவன் முன்வந்து கூறினான் |
அவன்முன் வந்து கூறினான் |
தானே | அவன்தானே செய்தான் |
அவன் தானே செய்தான் |
கொண்டு | கததிக் கொண்டு வந்தான் |
கததிக்கொண்டு வந்தான் |
விட்டான் | அண்ணன் அடித்து விட்டான் |
அண்ணன் அடித்துவிட்டான் |
5. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
எழுதும்போது காற்புள்ளியிடாமல் எழுதினாலோ இடம் மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ தொடரில் உள்ள சொற்கள், அத்தொடருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வேறுபொருளைத் தந்துவிடும்.
சான்று
அவள், அக்காள் வீட்டிற்குச் சென்றாள் – அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்
6. சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக் கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.
- இரட்டைக்கிளவித் தொடர்கள் – சலசல, கலகல
- இரட்டைக்கிளவிச் சொற்களை சேர்த்து எழுத வேண்டும்
தவறான முறை | சரியான முறை |
நீர் சல சலவென ஓடியது | நீர் சலசலவென ஓடியது |
கல கலவென சிரித்தாள் | கலகலவென சிரித்தாள் |
7. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
- “திருவளர் செல்வன்” என்பதே சரியான தொடராகும்
- “திருவளர் செல்வன்” என்பது வினைத்தொகை
- வினைத் தொகைக்கு சொல்லுக்கிடையில் வல்லினம் மிகக்கூடாது என்ற இலக்கண விதியின்படி திருவளர்செல்வன் எனபதே சரியான தொடராகும்.
கூடுதல் வினாக்கள்
குறு வினா
1. மொழிப்புலமை எவ்வாறு பெறுவர்?
தமிழ் மொழியை எழுதும் போதும் படிக்கும் போதும் பேசும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் சில உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மாணவர்கள் பொருள்மயக்கம் இல்லாமல் மொழிப்புலமை பெறுவர்
2. படிப்போர்க்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பம் எப்போது ஏற்படும்?
எழுதும் போதோபேசும் போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போர்க்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
3. இடைவெளி விட்டு எழுதும் போது பொருள் வேறுபடுவதற்கு சான்று தருக
எம் மொழி யார்க்கும் எளிது | எம்மொழியார்க்கும் எளிது |
அப் பாவின் நலங் காண்க | அப்பாவின் நலங்காண்க |
ஐந்து மாடிவீடு | ஐந்துமாடி வீடு |
அன்றுமுதல் பாடம் கற்றோம் | அன்று முதல்பாடம் கற்றோம் |
4. வல்லின மெய்களால் ஏற்படும் பொருள் வேறுபாட்டிற்கு சான்று தருக
பிட்டுத் தின்றான் | பிட்டு தின்றான் |
உள்ளக் கருத்து | உள்ள கருத்து |
ஈட்டிக் கொண்டு வந்தான் | ஈட்டி கொண்டு வந்தான் |
5. இடைச்சொற்களை சேர்த்தும், பிரித்தும் எழுதினால் ஏற்படும் தவற்றிற்கு சான்று தருக
இடைச்சொற்கள் : பற்றி, முன், முதல், பால்
பற்றி
- குகன் இராமனைப் பற்றிக் கூறினான்
- குகன் இராமனைப் பற்றிக் கூறினான்
முன்
- சில குறைகளை மக்கள் முன்வைத்தனர்
- சில குறைகளை மக்கள் முன் வைத்த னர்
முதல்
- அன்றுமுதல் அமைச்சர் வந்தார்
- அன்று முதல் அமைச்சர் வந்தார்
பால்
- அவன்பால் கொண்டு சென்றான்
- அவன் பால்கொண்டு சென்றான்
5. உரிச்சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
உரிச்சொற்களைப் பெயருடன் வினையுடன் பயன்படுத்தும் போது சேர்த்தே எழுத வேண்டும்.
சான்று :
- கடிமணம் (சரி)
- கடி மணம் (தவறு)
சிறு வினா
1. பிழை தவிர்க்கச் சில குறிப்புகளைத் தருக.
- ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதிப் பழகுதலும் உதவும்.
- சொல்லுக்கான பொருளை நினைவில் கொள்ளுதல் சிறந்த பயிற்சியாகும்.
- மரபுச்சொற்களைக் கற்றல் இன்றியமையாத ஒன்றாகும். (யானை – கன்று ; குதிரை – கனைக்கும்)
- இலக்கண விதிகளை மனத்துள் பதித்து வைப்பதும் நமது கடமை.
- எழுதியதை மீளப் படித்துப் பார்த்துப் பிழையிருப்பின் திருத்துதலும் கடமையாகும்.
கற்றவை கற்றபின்
தொடர்களைப் பொருள் மயக்கமின்றி எழுத வழிகாட்டும் உரைநடை நெறிகளைப் பின்பற்றி ஐந்து தொடர்களை எழுதுக.
- பணி முடித்து நேற்று மாலை வீடு திரும்பினேன்.
- நேற்று நான் வைகையில் குளித்தேன்.
- மாநில அளவில் தமிழ்நாடு கல்வியில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
- ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
- என் அம்மாவின் சமையல் என்றுமே சுவையாய்
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
பரிதிமாற் கலைஞர் (1870 – 1903)
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், “நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக” என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் ‘திராவிட சாஸ்திரி’ என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் ப யின்றார்; எப்.ஏ (F.A – First Examination in Arts) தேர்வில் முதல் மா ணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெ ற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாட கவியல் என்னும் நாடக இலக்கணநூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந் து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மா ற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.
உயர்தனிச் செம்மொழி’ என்னும் கட்டுரையிலிருந்து:-
“பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம். “
வினாக்கள்
1. சி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு போற்றினார்?
2. பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடக நூல்கள் யாவை?
3. கீழ்வரும் சொல்லின் இலக்கணத்தையும், புணர்ச்சி விதியினையும் எழுதுக.
4. பரிதிமாற்கலைஞர் தமிழுக்கு தந்திட்ட பெருமைமிகு வரிகளுள் ஒன்றினை எழுதுக.
5. சூரிய நாராயணர் – இதன் தமிழாக்கம் என்ன?
விடைகள்
1. திராவிட சாஸ்திரி
2. ரூபாவதி, கலாவதி
3. செம்மொழி – பண்புத்தொகை
செம்மொழி = செம்மை + மொழி
“ஈறுபோதல்” என்ற விதிப்படி “செம்மொழி” என்றாயிற்று.
4. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தாய்மொழி செம்மொழி
5. பரிதிமாற்கலைஞர்
தமிழாக்கம் தருக.
In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life-and that is the main theme of this chapter-let it be clearly stated that educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.
In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life. Educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.
கல்வி என்பது மனித வளர்ச்சி அடிப்படையில் ஒன்று. அதுவே இறுதியானது. ஆயினும் அது முடிவானது அன்று. கல்வி என்பது மனிதனுடைய அடிப்படை உரிமை. இது மக்களின் பொருளாதாரம் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த துறைகளினுடைய கதவுகளைத் திறக்க உதவும் திறவுகோல். இது வேலை வாய்ப்புகளைப் பற்றி பொருளாதார வல்லுநர்கள் விரிவாக ஆய்ந்துள்ளனர். மக்களுக்கு கல்வியறிவு வழங்குவது சிறந்த குறிக்கோளாகும். அது எந்த விதமான பொருள் மதிப்பையும் திருப்பி அளிக்காது.
இலக்கிய நயம் பாராட்டுக.
பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெ டுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பா ய் என்று
கம்பனொ டு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணை த் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.
– நாமக்கல் கவிஞர்
திரண்ட கருத்து:-
தாய்மொழியாகி தமிழைப் பின்னுக்குத் தள்ளி பிறமொழிக்கு நாம் செய்யும் சிறப்பை நீக்குவோம். தமிழுக்கு நகர் உலகில் எம்மொழியும் இல்லை. அம்மொழியைக் கற்று இனிமைக் காண்போம் என்று கம்பன், வள்ளுவன் போன்றோர் சுட்டி காட்டிய சிறப்பினை உடையதாக தமிழ்மொழி விளங்குகிறது.
தொடை நயம்:-
தொடையற்ற பாக்கள் நடையற்று போகும்
என்பதற்கேற்ப இப்பாடலில் தொடை நயங்கள் மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரன் அமைந்துள்ளது.
மோனை:-
குயவனக்கு யானை, செய்யுளுக்கு மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று : கற்றுணர்ந்த – கம்பனோடு, தெற்றென – தெய்வக்கவி
இயைபு:-
இறுதி எழுத்தோ, ஓசையோ ஒன்றி வரத்தொடுப்பது இயையு
சான்று : உண்டோ – விட்ட
அணி நயம்:-
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு, செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு இப்பாடலில் கம்பன், பாரதி, வள்ளுவன் புகழும், தமிழின் புகழும் பாடுவதால் உயர்வு நவிற்சி அணி ஆகும்.
முடிவுரை:-
கற்றாரும், கல்லாருக்கும் ஏற்ற வகையில எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
கவிதையைப் படித்தபின், அக்கவிதை கிளர்த்தும் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வு உரை ஒன்றை எழுதுக.
எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
வெறுமணல் ப ரப்பாய் விரிந்துகிடக்க
ஓணான்கள் முட்டையிட
கள்ளிகள் பிழைத்திருக்க
பிள்ளைகள் விளையாட
பன்றிகள் மேய்ந்திருக்க
வானத்தில் மேகமுண்டு
சூரியனில் மழையுண்டு
காகமோ குருவியோ
நிழல் ஒதுங்க
ஆறெங்கும் முள்மரமுண்டு
எங்க ளுக்கும் ஓர் ஆறுண்டு
ஆற்றுக்கோர் ஊருண்டு
ஊருக்கோர் சனமுண்டு
வாழ்வைப்போல் ஒன்றுண்டு.
– இளங்கோ கிருஷ்ணன்
விழிப்புணர்வு உரை
இயற்கையின் கொடையாம் மழைநீரை நாம் சேகரிக்காமல் விடுகிறோம். மழை நீர் சேகரிப்பு பகுதிகளில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் என எத்தனையோ கட்டிடங்கள் கட்டப்படுள்ளன. விண்ணிலிருந்து புறப்பட்டு மண்ணில் தங்கலாம் என வந்த மழை வீணாக கடலில் கலக்கிறது.
ஆற்றுநீரை சேகரிக்க மறந்தோம். ஆனால் மணலை கொள்ளையடிக்க துணிந்தோம். மரம் வளர்க்க மறந்தோம். மரம் வெட்டத் துணிந்தோம். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி. ஆனால், இன்று மழையும், மரமும் இல்லாதலால் ஏதிலியாய் காக்கை குருவிகள் எங்கோ போயின?
வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
1. என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான் ; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
விடை:-
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதிய தலைமுறை மீதுதான் ; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டு தீர்ப்பார்கள்.
2. எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
விடை:-
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கைக் கொள்.
3. நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும்பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.
விடை:-
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும்பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.
4. மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
விடை:-
மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாக பாவித்து நட்பு கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
5. ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
விடை:-
ஆசிரியருக்குக் கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்து கொண்டு, அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்று கொடுக்கும்.
கீழ்க்காணும் பகுதியைப் படித்து அறிவிப்புப் பலகைக்கான செய்தியை உருவாக்குக.
வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா, மே – 5, 2019
திருச்சிராப்பள்ளி
வேலை காரணமாக வெளிநாடுகளில் பிரிந்து வாழும் உறவினர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
திருச்சி உறையூர் அன்பு நகரில் வசிக்கும் தங்கவேல் – பொன்னம்மாள் இணையரின் மூன்று தலைமுறை வழித்தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு மே-5 ஆம் தேதி இனிதே நடைபெற உள்ளது.
உறவினர் கூட்டத்தில் தங்கவேல் – பொன்னம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் சந்தித்துப் பெரியோர்களிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள். இந்நிகழ்ச்சியைத் தங்கவேல் அவர்களின் கொள்ளுப் பேத்தி செல்வி கண்மணி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.
வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா“இணைந்த உறவும்” “கசிந்த கண்ணீரும்”
“உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்” |
மொழியை விளையாடு
பட்டிமன்றம்
தலைப்பு : தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா?
பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? (மறுத்துக்கூறல்)
- மகாபாரத காலத்திலிருந்தே பங்காளிச் சண்டை இன்றும் நடந்தேறி வருவது தெரிந்ததே.
- பசியைப் பகைவரிடம் சொல், பங்காளியிடம் சொல்லாதே என்பது பழமொழி
- தான் வாழ பிறரைக் கெடுப்பவன் தான் உறவினர்
- பாச வார்த்தை முன்னால் பேசி பழித்துக் தூற்றுவான் பின்னால் அவன் உறவினன்.
- எனவே உறவு என்பது உதவுவதற்கு அல்ல, நம்மை உதறித் தள்ளுவதற்கே.
பெரிதும் உதவுபவர்கள் நண்பர்களா? (உடன்பட்டுக் கூறுதல்)
- உறவும் இல்லை ஒட்டும் இல்லை, ஒரே பலகையில் உட்கார்ந்து கற்றோம் பாடத்தை உறவாக்கினோம் உள்ளத்தை.
- துன்பத்தில் துவளும் போது தோள் கொடுத்துத் துவளாமல் பாதுகாத்தது நட்பு
- செய்வதறியாமல் தவித்தபோது அமைச்சனாய் எனக்கு அறிவுரை தந்தது நட்பு
- தோல்வி கண்டபோது, துயரம் போக்குி, உற்சாக மூட்டி ஊக்கமளித்தது நட்பு
- தன் உதிரத்தையும் கொடுத்து உயிர் கொடுத்து தியாகத்தின் உச்சமாய் நிற்பது நட்பு
சுழி குளம்
நவமதி மேவிடவே வசிகுற ளுடனட மகுடன ருளடவி திறனறி வருளுமே! |
விளக்கம்:-
புதிய ஒளிமிக்க அறிவினைப் பெற வேண்டுமென்றால் , அறிவுச்சுரங்கமாக விளங்கும் திருக்குறளைக் கற்று அதன்வழி வாழ்க்கையை மேற்கொள்வாய்! மேலும், சிறந்த தலைவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுத் திறன்மிக்க பல்துறை அறிவினையும் பெறலாம்.
- நவ மதி – புதுமையான ஒளிமயமான அறிவு
- வசி – உயர்ந்த; மகுடன் – தலைவன்
- அடவி – பெருகுதல்
பொதுமதி பலமேவு துணிதரம் தரமே மததவிர முதல திரவிய நிரம்ப |
விளக்கம்:-
பல துறைகளிலும் பொது அ றிவை வளர்த்துக்கொள் . அது நல்லதொரு துணிச்சலைத் தரும். முனைப்பு தவிர்ந்தால் முதன்மைப் படுத்தப்படுவாய். செல்வமும் நிரம்பும்.
- மத(ம்) தவிர – முனைப்பு நீங்க
- திரவியம் – செல்வம்
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக
எ.கா. குமரன் வீடு பார்த்தேன்.
விடை : குமரனை வீட்டில் பார்த்தேன்.
1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
விடை : மாறனின் பேச்சுத்திறனை யார் வெல்ல முடியும்.
2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
விடை : போட்டி வெற்றி பெற்றதற்காக கலைச்செல்விக்கு பாராட்டுகள் குவிந்தன.
3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
விடை : காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
4. அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்.
விடை : அனைவரையும் அன்புடன் அழைத்தவனுக்கு துன்பம் தர யாருக்கு மனம் வரும்?
5. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
விடை : சான்றோருக்கு மதிப்புக் கொடுத்து வாழ்ந்தால் உயரலாம்.
எண்ணங்களை எழுத்தாக்குக
இருப்பதோ ஒரு அறை செய்வதோ நேறு மாறு தொழிலோ வேறு வேறு தொந்தரவோ பல நூறு ஆகுமோ நல்ல ஆறு தருமோ தேர்ந்து பாரு. |
நிற்க அதற்குத் தக
படிப்போம் பயன்படுத்துவோம் (உணவகம்)
Lobby | ஓய்வறை |
Tips | சிற்றீகை |
Checkout | வெளியேறுதல் |
Mini meals | சிற்றுணவு |