பாடம் 4.3 காவியம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 4.3 “காவியம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் இலங்கையில் பிறந்தவர்.
- இவர் பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர்.
- புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.
- ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
- இவர் கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல் உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
- இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
- லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
பாடநூல் வினாக்கள்
குறு வினா
காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது.
கூடுதல் வினாக்கள்
பகுபத உறுப்பிலக்கணம்
1. பிரிந்த = பிரி + த் (ந்) + த் + அ
- பிரி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
புணர்ச்சி விதிகள்
1. சிறகிலிருந்து = சிறகில் + இருந்து
- உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே விதிப்படி சிறகிலிருந்து என்றாயிற்று.
2. இறகொன்று = இறகு + ஒன்று
- உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே விதிப்படி இறகொன்று என்றாயிற்று.
பலவுள் தெரிக
1. ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது
- சிறகு
- இறகு
- காற்று
- பறவை
விடை : இறகு
2. பிரமிள் என்னும் பெயரில் எழுதியவர்
- இராசேந்திரன்
- அரவிந்தன்
- சிவராமலிங்கம்
- முத்துலிங்கம்
விடை : சிவராமலிங்கம்
3. பிரமிள் எழுதிய சிறுகதை தொகுப்பு
- அழகி
- வைக்கோல்
- வானம்
- லங்காபுரி ராஜா
விடை : லங்காபுரி ராஜா
4. பிரமிள் எழுதிய நாடகம்
- பறவைகள் உறங்கலாம்
- நக்ஷத்திரவாசி
- சிட்டுக்குருவி
- இருள் சூழ்ந்த உலகம்
விடை : லங்காபுரி ராஜா
5. பிரமிள் எழுதிய கட்டுரை தொகுப்பு
- வெயிலும் நிழலும்
- மழையும் வெயிலும்
- நிழலும் மரமும்
- காற்றும் மரமும்
விடை : வெயிலும் நிழலும்
6. இறகுகளின் தொகுதியை ______ என்பர்
- சிறகு
- இறகு
- காற்று
- பறவை
விடை : சிறகு
7. ______ என்பது காவியத்துக்கான பொதுவான பாடுபொருள்
- தாழ்வு
- வாழ்வு
- அன்பு
- அறிவு
விடை : வாழ்வு
7. கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல் உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளவர்
- இராசேந்திரன்
- அரவிந்தன்
- சிவராமலிங்கம்
- முத்துலிங்கம்
விடை : சிவராமலிங்கம்
குறு வினா
1. இறகு எழுதியது காவியமானதைப் பிரமிள் பார்வையில் விளக்குக
- நிலத்துக்கும் வானுக்கும் இடையில், காற்று இடைவிடாது தழுவி, மண்ணில் விழாமல் காக்கிறது. அதனால் இறகு, பறவையின் வாழ்வை எழுதுவது போல் உள்ளது.
- காவியங்களுள் பொதுவான பாடபொருள் வாழ்வுதானே! அதனால் பிரமிள் பார்வையில் சிறகின் இடையறாத இருப்பு நிரந்த வாழ்வாகிறது.
2. சிறகிலிருந்து பிரிந்த இறகு தன் வாழ்வை எவ்வாறு எழுதுகிறது?
சிறகிலிருந்து பிரிந்த இறகு நிலத்துக்கும் வானுக்கும் இடைப்பட்ட பகுதியில் தழுவல்களால் மண்ணில் வீழாது தன் வாழ்வை எழுதுகிறது
சிறு வினா
பிரமிள் குறிந்து நீ அறிவன யாவை?