Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 4.6 – பா இயற்றப் பழகலாம்

பாடம் 4.6 பா இயற்றப் பழகலாம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 4.6 “பா இயற்றப் பழகலாம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

1. கீழ்க்காணும் ஈற்றடிகளைக்கொண்டு நேரிசை (அ) இன்னிசை வெண்பா எழுதுக.

அ) என்றும் விரும்பியே கல்.

உலகில் உத்தமானா வாழ கல்வி
எத்திக்கும் உன் புகழை நாட்ட
ஏற்றமிகு கல்வியை கசடற கற்று
என்றும் விரும்பியே கல்

ஆ) ஒழுக்கம் உயர்வு தரும்.

உயிரை விட மேலானது ஒழுக்கம்
தயிரை விட மென்மையானது ஒழுக்கம்
பழகும் முறை அறிந்து வாழ்ந்தால்
ஒழுக்கமே உயிர்வு தரும்

இ) இன்னல் விலகி விடும்.

அன்பினால் அறம் பல செய்து
பண்பினால் பல புகழ் எய்து
உண்மை யினால் உழைத்துநீ வாழ்ந்தால்
இன்னல் விலகி விடும்

ஈ) உழவின்றி உய்யா உல(கு).

கோலும் குடையும் மன்னனுக்கு அவசியம்
எழுதும் கோலுக்கு கூர்முனை அவசியம்
உழும் விவசாயிக்கு ஏர்முனை அவசியம்
உழவின்றி உய்யா உலகு

உ) மொழியின் வழியது அறிவு.

வள்ளுவனின் வாய்மொழியை குற்றமக் கற்று
கம்பனின் காவியத்தை கசடறக் கற்று
இளங்கோவின் சிலம்பை சீர்தூக்கிப் பார்த்து
மொழியின் வழிய தறிவு

2. ‘இயற்கை’ என்னும் பொருண்மையில் வெண்பா எழுதுக.

தென்றல் வீச பூமணம் பரவும்
குன்றம் குளிர குளிரில் வாடும்
மயிலும் ஆட மழைமேகம் சொரியும்
மண்ணு லகைக் காண்

இலக்கணத் தேர்ச்சிகொள்

1. வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்? பொருத்தமான சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

அ) அன்பே _____________ (ஆர்வமாய் / தகளியாய்)

விடை : தகளியாய்

ஆ) வான்மழை ____________ (தூறலில் / பொழிந்திடின்)

விடை : தூறலில்

இ) கண்ணிரண்டும் _____________ (இலாதார் / இல்லார்)

விடை : இல்லார்

ஈ) வெண்ணிலவு ___________ (காய்கிறது / ஒளிர்கிறது)

விடை : காய்கிறது

உ) வெய்யோன் ______________ (காய்ந்திட / ஒளிர்ந்திட)

விடை : காய்ந்திட

2. மூன்றாவது சீர் அமைத்து எழுதுக.

அ) கல்வி கரையில ____________

விடை : கற்பவர்

ஆ) கல்லாரே ஆயினும் __________

விடை : கேட்க (கற்க)

இ) நல்லவை செய்யின் ___________

விடை : நலமே

ஈ) அவமதிப்பும் ஆன்ற ____________

விடை : பொருள்

உ) உண்ணாது நோற்பார் ___________

விடை : சான்றோர்

3. பொருத்துக.

அ) மாச்சீர்1) கருவிளம், கூவிளம்
ஆ) காய்ச்சீர்2) நாள், மலர்
இ) விளச்சீர்3) தேமாங்காய், புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர்4) தேமா, புளிமா
 1. 1,2,4,3
 2. 4,3,1,2
 3. 2,3,1,4
 4. 3,4,2,1

விடை : 4,3,1,2

4. கீழுள்ள சொற்களை ஈற்றுச் சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை வெண்பா / இன்னிசை வெண்பா எழுத முயற்சி செய்யவும்.

கடல்அலையென எழுந்து ஒலி யெழுப்பி
ஆர்பரிக்கும் பெருங்கடல்.
வாள்ஒளிவீசிக் கூர்மையொரு எதிரியை வீழ்த்த
பளிச்சிடும் வேந்தன் வாள்.
மழைவானின்று பொழிந்து மண்ணை வளமாக்கும்
தேன்சுவை அன்ன தமிழ்.
தேன்மணம்தரும் பூவில் சுவைதரும் இனிய
அமுத மெனும் தேன்.
மரம்இயற்கைத் தாய் உவந்து அளித்த
மறக்க வெண்ணா மரம்.

5. வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

இயற்சீர் வெண்டளையும், வெண் சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள் ஆகும்.

6. ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?

 • வெண்பாவில் நான்கடிகளும் ஒரெதுகையும் பெற்று வருவது ஒரு விகற்பம் ஆகும்.
 • வெண்பாவில் முதல் இரண்டி ஒரெதுகையும், அடுத்த இரண்டி ஒரெதுகையும் பெற்று வருவது பல விகற்பம் ஆகும்.

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. தளைத்தல் என்பதன் பொருள் யாது?

தளைத்தல் என்பதற்கு கட்டுதல், பிணித்தல் என்று பொருள்

2. ஈரசைச் சீர்களைக் குறிப்பிடுக.

 • மாச்சீர்  – தேமா, புளிமா
 • விளச்சீர்  – கூவிளம், கருவிளம்

3. மூவசைச் சீர்களைக் குறிப்பிடுக.

காய்ச்சீர் – தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்

4. வெண்பாவின் ஈற்றுச்சீர் எவ்வெவ் வாய்பாடுகளும் ஒன்றைக் கொண்டு முடியும்?

நாள், மலர், காசு, பிறப்பு

5. வெண்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வெண்பா ஏழு வகைப்படும்

v குறள் வெண்பா

v நேரிசை வெண்பா

v இன்னிசை வெண்பா

v நேரிசைச் சிந்தியல் வெண்பா

v இன்னிசைச் சிந்தியல் வெண்பா

v பஃறொடை வெண்பா

v கலி வெண்பா

6. வெண்பாவிற்கான இலக்கணம் விளக்குக

 • இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்.
 • ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.
 • ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.
 • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

7. பஃறொடை வெண்பா, கலிவெண்பா – குறிப்பு வரைக

நான்கடி சிற்றெல்லையாகவும், பன்னிரண்டடி பேரெல்லையாகவும் கொண்டது பஃறொடை வெண்பா ஆகும்

பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை கொண்டது கலிவெண்பா ஆகும்.

8. வெண்பா அடிவரையறைகளை எழுதுக

v இரண்டடி வெண்பா – குறள் வெண்பா

v மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

v நான்கடி வெண்பா – நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும்

v நான்கடி முதல் பன்னிரண்டடி வரை – பஃறொடை வெண்பா

v பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா

9. இன்னிசை வெண்பா எவ்வாறு அமைக்கடும்?

தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.

மொழியை ஆள்வோம்….

சான்றோர் சித்திரம்

மறைமலையடிகள் (1876-1950)

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர், “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு ச் சொல்லுங்கள்” என்று கேட்டார். அவர் “அஃது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘தெரியாது’ என்று சொன்னவரை, “எப்படித் தேர்வு செய்யலாம்?” என்று பிறர் கேட்டபோது, ‘அஃது’ எ ன்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், ‘எனக்கு’ என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், ‘தெரியாது’ என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

பரிதிமாற்கலைஞருடனான அவருடனான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். ‘சுவாமி வேதாசலம்’ எனும் தன்பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக் கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார். இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். முறையான பள்ளிக் கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.

வினாக்கள்:-

1. ஒரு நேர்காணலில் “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்டதற்கு மறைமலைஅடிகள் கூறியது என்ன?

2. சுவாமி வேதாசலம் என்பதன் தமிழாக்கம் என்ன?

3. மறைமலை அடிகள் நடத்திய இதழ் எது?

4. இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள எண்ணும்மையினை எடுத்து எழுதுக.

5. இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள உருவகத்தினை எடுத்து எழுதுக.

விடைகள்:-

1 “அஃது எனக்குத் தெரியாது”

2. மறைமலை அடிகள்

3. ஞானசாகரம்

4. வரலாறும் காலமும்

5. அறிவுக்கடல்

தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

1. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.

விடை : நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

2. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.

விடை : எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.

3. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

விடை : ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

4. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

விடை : வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

5. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.

விடை : ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது.

6. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.

விடை : இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்

தமிழாக்கம் தருக.

The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India’s status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural papulation is completely neglected; There are no travelling libraries to reach them of kind that are to be found even in some backward countries. The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits

விடை:-

இந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்திய விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொதுநூலகத்தை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது. மேலும், அது தலைநகரத்தில் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. இங்கு ஒருசில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலுமாக புறகணிக்கப்படுகிறார்கள். அவர்களை பயனடையச் செய்வதற்கு சில பின் தங்கிய நாடுகளில் உள்ளதை விட நூல்கள் ஏதும் இங்கு இல்லை.

இந்தியாவில் நூலகங்களின் வளர்ச்சி தாமதமாகவே உள்ளது. பின்னாளில் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்றம் இருந்தாலும், எழுத்தறிவில் பின் தங்கியே இருக்க நேரிடும். இந்தியாவில் பெருமளவு மக்களுக்குப் புத்தகங்கள், வார இதழ்கள், பத்திரிக்கை வாங்குவதற்கு வழி இல்லை மற்றும் போதுமான பொது நூலகங்கள், வாசிப்பு அறை, இல்லாமையால் பெரும்பாலனவர்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போகிறது.

பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

1. யானைக்கும் அடிசறுக்கும்

தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்து “யானைக்கும் அடிசறுக்கும்” போல ஆயிற்று

2. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும்.

வாழ்க்கையில் நாம் பிறருக்கு தீமை செய்து வந்தோம் என்றால் நமக்கும் தீமையே நடக்கும்.

இதையேதான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள்.

3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.

4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்

வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.

5. ஊழி பெயரினும் தாம் பெயரார்.

நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாற மாட்டார்கள்.

கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

ருசிக்காக, சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும்தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

நமது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை மற்றும் உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்ந்தெடுக்கவும் உடற்பயிற்சி செய்யவும் முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயது, பாலினம், உடல் உழைப்பு, உடல்நிலை, வாழும் இடம், பருவநிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்களின் தேவை மாறுபடும். தேவையான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சேர்த்து, அதிக காய்கறிகளுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.

பத்தியின் சுருக்கம்:-

இன்றைய சூழலில் ஓய்வின்மி, காலம் தவறி உணவு, மாற்றம் முதலானவை உடல் நலப் பாதிப்புக்குக் காரணம். மருத்துவத்திற்கென தொகை ஒதுக்கும் அளவுக்கு இயந்தரமாகிவிட்டோம். உணவே மருந்தாக உண்டு மகிழ்ந்தனர் முன்னோர். ஒவ்வொருவரும் சமச்சீர் உண்வு உட்கொள்வது கட்டாயமாகிவிட்டது. உணவுப் பொருளில் அடங்கியுள்ள சத்து பற்றி அறிவது நமது கடமை. ருசிக்காக அன்றி பசிக்காக மிகுதியாகச் சாப்பிடுவது பிணிக்கு காரணமாயிற்று. நமது எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தே உணவு முறையும் உடற்பயிற்சியும் அமைதல் வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலுழைப்பின் அடிப்படையில் ஊட்டச்சத்து தேவைப்படும். காய்கறி, தானியம், பயிறு இவற்றுடன் கூடிய உணவு முறையே சரியான தீர்ப்பு.

மொழியோடு விளையாடு…

மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடி

Class 12 Tamil Chapter 4.6 மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடி

போக்குவரத்துஏடுபாடை
பா-வடிவம்சுதேசமித்திரன்ரதி
ஒளவைகவிகாவலர்
துறைமுகம்முகம்படு
சேர்க்கையாழ்தணி
மேதைஓடைகை
வைகறைதுருவம்வைகை
மனனம்பயணிஓலை
ரவிதேடுஓதற்பிரிவு
விதைமுறைகைது
பணைஓர்கரு
வெற்றிஅன்புபணி
நடைமேடைபாடாண் திணைதுணி
வேங்கைகவிதைதுறை
குதிரைபாடுவிடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

Class 12 Tamil Chapter 4.6 எண்ணங்களை எழுத்தாக்குக. கல்வி ஒருவரை அறிவனால் மேதையாக்கும்.
கல்வி கற்றால் நீதியரசராக ஆகலாம்.
கல்வியின் காரணமாக காவல்துறை அதிகாரி ஆகலாம்.
கல்வி கற்பதால் மருத்துவர் ஆகலாம்.
கல்வி ஒருவரை நல்லாசிரியனாக்கும்.
கல்வியே ஒருவர்க்கு பெருமை சேர்க்கும்.
கல்வி கற்றவரை உலகம் போற்றும்.

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

1. பலகை

பலகைபலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்.
பல கைபல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின.

2. தாமரை

தாமரைதடாகத்தில் தாமரை மலர்ந்திருந்தன.
தா மரைதாவுகின்ற மானை(மரை)ப் பிடிக்க முடியாது.

3. கோவில்

கோவில்கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது..
கோ இல்அரசன் உறைவிடம் கோ இல் எனப்படும்.

4. வெங்காயம்

வெங்காயம்வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது.
வெங் காயம்வெம்மையால் உண்டான காயம்.

5. தலைமை

தலைமைபள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.
தலை மைதலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது.

நிற்க அதற்குத் தக …

படிப்போம் பயன்படுத்துவோம் (வானூர்தி நிலையம்)

Arrivalவருகை
Passportகடவுச்சீட்டு
Departureபுறப்பாடு
Domestic Flightஉள்நாட்டு வானூர்தி
Visaநுழைவு இசைவு
Conveyor Beltஊர்திப்பட்டை
Take Offவானூர்தி கிளம்புதல்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment