பாடம் 5.3 தேவாரம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 5.3 “தேவாரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- பாடப்பகுதியாக உள்ள பாடல், இரண்டாம் திருமுறையில் உள்ள திருமயிலாப்பூர் பதிகத்தில் இடம் பெற்றுள்ளது.
- பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.
- இவர் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன.
- இப்பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.
- இப்பாடல்களுக்குத் தேவாரம் என்று பெயர்.
- சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.
சொல்லும் பொருளும்
- மலிவிழா – விழாக்கள் நிறைந்த
- மடநல்லார் – இளமை பாெருந்திய பெண்கள்
- கலிவிழா – எழுச்சி தரும் விழா
- பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
- ஒலிவிழா – ஆரவார விழா
இலக்கணக்குறிப்பு
- மாமயிலை – உரிச்சாெற்றாெடர்
உறுப்பிலக்கணம்
1. கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்
- காண் – பகுதி (கண் எனக் குறுகியது விகாரம்
- ட் – இறந்தகால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
2. அமர்ந்தான் = அமர் + த் (ந்) + த் + ஆன்
- அமர் – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்த கால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி
பூம்பாவாய் = பூ + பாவாய்
- “பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும்” என்ற விதிப்படி “பூம்பாவாய்” என்றாயிற்று
பாடநூல் வினாக்கள்
குறு வினா
கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக
கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா.
ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆராவார விழா.
சிறு வினா
பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
- கோவில் திருவிழா மகிழ்ச்சியைப் பகிரந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு.
- ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று.
- விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை.
- இங்கு இளம் பெண்கள் ஆராவாரத்தோடு கொண்டாடும் விழாக்கள் நிறைந்த வீதியுடைய ஊர்.
- எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும்.
- மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் மிசையிடும் பங்குனி உத்திர ஆரவாா விழாவினைக் கண்டு இறைவன் அருள்பெற திருஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு
- பூம்பாவாய் – அண்மை விளி
பலவுள் தெரிக
1. மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா ………………..
- திருக்கார்த்திகை விழா
- சித்திரா பெளர்ணமி விழா
- பங்குனி உத்திர விழா
- தைப்பூச விழா
விடை : பங்குனி உத்திர விழா
2. திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ……………….
- திருச்சதகம்
- திருவாசகம்
- திருத்தொண்டத்தொகை
- தேவாரம்
விடை : தேவாரம்
3. தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முத்துபல்லக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள 17-ம் நூற்றாண்டுச் சுவரோவியம் அமைந்துள்ள இடம் ……………..
- மயிலாப்பூர்
- திருநெல்வேலி
- திருவெற்றியூர்
- வள்ளியூர்
விடை : மயிலாப்பூர்
4. மயிலையில் வீற்றிருக்கும் இறைவன் ………………
- தான்தோன்றிநாதர்
- லிங்கேசுவரர்
- பெருவுடையார்
- கபாலீசுவரர்
விடை : கபாலீசுவரர்
5. “மாமயிலை” என்பதன் இலக்கணக் குறிப்பு ……………..
- உரிச்சொற்றொடர்
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- உவமைத்தொடர்
விடை : உரிச்சொற்றொடர்
6. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் ……………….
- திருநாவுக்கரசர்
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
விடை : திருஞானசம்பந்தர்
7. திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர் ……………..
- நம்பியாண்டார் நம்பி
- சேக்கிழார்
- இராசராச சோழன்
- கூடலூர் கிழார்
விடை : நம்பியாண்டார் நம்பி
8. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் ………………. என்று அழைக்கப்படுகின்ற்து
- திருவாசகம்
- திருச்சதகம்
- திருத்தொண்டத்தொகை
- தேவாரம்
விடை : தேவாரம்
9. “கோவில்” என்பது ஓர் ஊரின் ………………… உரிய அடையாளங்களுள் ஒன்று
- திருவிழாக்களுக்கு
- மகிழ்ச்சிக்கு
- நாகரிகத்திற்கு
- பெருமைக்கு
விடை : திருவிழாக்களுக்கு
10. திருமயிலையில் அமைந்துள்ளது ……………………
- சிவன்கோவில்
- கந்தக்கோட்டம்
- கபாலீச்சரம்
- தெய்வமணி
விடை : கபாலீச்சரம்
11. கபாலீச்சரம் அமைந்தான் கண்டது ………..
- மலி விழா
- கலி விழா
- பலி விழா
- ஒலி விழா
விடை : கலி விழா
12. திருஞானசம்பந்தர் தம் தேவராத்தில் பாடிய விழா ………………
- திருவாதிரை விழா
- தைப்பூச விழா
- கடலாட்டு விழா
- பங்குனி உத்திர விழா
விடை : பங்குனி உத்திர விழா
13. “ஒலிவிழா” காணாது போனவள் ………..
- மடநல்லார்
- வீதி விழா
- பூம்பாவை
- பாடல் செய்தாள்
விடை : பூம்பாவை
விடை : கலி விழா
14. “கண்டான்” என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ………………
- காண்டு + ஆன்
- காண்(கண்) + ட் +ஆன்
- கண் + ட் + ஆன்
- காண் + ட் + ட் + ஆன்
விடை : காண்(கண்) + ட் +ஆன்
பொருத்துக
1. ஒலி விழா | அ. எழுச்சிதரும் விழா |
2. கலி விழா | ஆ. பூசையிடும் விழா |
3. மலி விழா | இ. ஆரவார விழா |
4. பலி விழா | ஈ. விழாக்கள் நிறைந்த விழா |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ |
பொருத்துக
1. ஐப்பசி | அ. விளக்குத் விழா |
2. கார்த்திகை | ஆ. திருவாதிரை விழா |
3. மார்கழி | இ. ஓண விழா |
4. மாசி | ஈ. கடலாட்டு விழா |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – ஈ |
குறு வினா
1. திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இடமாகக் குறிப்பிடுவன யாவை?
- கோவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக உள்ளது.
- ஊரின் பெருமைக்குரி அடையாளங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
2. திருஞானசம்பந்தர் எங்கு வீற்றிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திரவிழா கொண்டாடுகிறார்?
திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூரில் நகரில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திரவிழாவினை திருஞானசம்பந்தர் கொண்டாடுகிறார்
3. மலி விழா, கலி விழா, பலி விழா, ஒலி விழா விளக்கம் தருக
- ஒலி விழா – விழா விழாக்கள் நிறைந்தது
- கலி விழா – எழுச்சி தரும் விழா
- பலி விழா – பூசையிடும் உத்திர விழா
- ஒலி விழா – ஆரவார விழா
4. திருமுறைகள் எத்தனை? அதனைத் தொகுத்தவர் யார்?
திருமுறைகள் மொத்தம் பன்னிரெண்டு. அதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
5. திருஞானசம்பந்தர் பாடிய தேவராம் திருமுறையில் எந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன?
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடியவை.
6. சம்பந்தர் பாடலில் விரவிக் கிடக்கும் செய்திகள் சிலவற்றை கூறு
சமயக் கோட்பாடுகள், இசைத் தத்துவம், தமிழுக்கு இருந்த உயிர்நிலை, சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள்
சிறு வினா
1. திருஞானசம்பந்தர் – குறிப்பு வரைக
- பெயர் – சம்பந்தன்
- சீர்காழியில் பிறந்தவர்
- இவரது பெற்றோர் சிவபாதவிருதயர் – பகவதி அம்மையார்
- இவரது காலம் ஏழாம் நூற்றாண்டு
- அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்டும் நால்வருள் ஒருவர். முதல் மூன்று திருமுறைகள் எழுதியவர்.
2. தேவாரம் – குறிப்பு வரைக
- தேவாரம் = தே + வாரம் – பாமாலை; தே + ஆரம் – பூமாலை
- அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்பு
- தேவாரம் மொத்த பாடல்கள் – 8227
- நம் பாடப்பகுதி முதல் மூன்று திருமுறையில் இரண்டாவது திருமுறை ஞானசம்பந்தர் பாடிய திருமயிலாப்பூர் பதிகம்.
- தேவாரத்தினை தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி
3. மயிலாப்பூரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுக
- மடலார்ந்த தெங்கின் மயிலை
- கருங்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
- இருளகற்றும் சோதித் தொன்மயிலை
- மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
- கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
- ஊர்திரை வேலை உலாவும் உயர்மலை
- கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
4. மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களை குறிப்பிடுக
- ஐப்பசி – ஓண விழா
- கார்த்திகை – விளக்குத் திருவிழா
- மார்கழி – திருவாதிரை விழா
- தை – தைப்பூச விழா
- மாசி – கடலாட்டு விழா
- பங்குனி – பங்குனி உத்திர விழா