பாடம் 5.5 நடிகர் திலகம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 5.5 “நடிகர் திலகம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- இப்பாடப்பகுதி, மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ஸ்மரண என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
- இவரின் இந்நூலை கே.வி.சைலஜா சிதம்பர நினைவுகள் என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
நடிகர் திலகத்தை கண்ட பாலச்சந்திரனின் நினைவலைகளை நயத்துடன் புலப்படுத்துக
முன்னுரை:
நவரச உணர்வுகளைத் தன் முகக் குறிப்புகளாலும் உடல் மொழிகளாலும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த மகா நடிகன் சிவாஜி கணேசன். அவரை நேரில் கண்ட பாவச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் மனவோட்டத்தை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
பிறவிக்கலைஞர்:
கட்டுரை ஆசிரியர் பாவச்சந்திரன் சுள்ளிக்காடு, சிவாஜி கணேசனைச் சந்திக்க ஒருமுறை ஜான்பால், ராஜீவ்நாத் ஆகியோருடன் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். இதுவரை திரையில் மட்டுமே பார்த்த உருவத்தை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் அவர் முகத்தில் வெளிப்பட்டது. சிவாஜி நடந்து வந்த காட்சியை, “கைகள் வீசி, பார்வை இமை அசையாது, மெல்ல மெல்ல சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்தபொழுது, இராஜராஜசோழனைப் போலவே இருந்தது” என்று அப்படியே விவரிக்கிறார். இது நடிப்பன்று; இயல்பு. இயல்பான நடையே இத்தகைய கம்பீரமாக இருப்பதால், அவரைப் பிறவிக் கலைஞர் என்று கூறுவது பொருத்தமே என்று, பாலச்சந்திரனின் மனம் நினைத்தது.
இளமையும் நடிப்பும்:
இன்று, மாபெரும் நடிகனை நேரில் கண்டுவியந்தபோது, அவரது இளமையும் நடிப்பும் கண்முன் நிழலாடின. சின்னையா கணேசன், பின்னாளில் நடிப்பின் இமயம்’, ‘நடிப்புப் பல்கலைக்கழகம்’ என வியந்து போற்றப்பட்டவர் தன் தந்தையைத் தனது ஒன்பதாவது வயதில்தான் முதன்முதலாகப் பார்த்திருக்கிறார். பள்ளிக்கூடம் செல்லாத கணேசன், ஐந்து வயதாகும்போதே குடும்பச் சூழ்நிலை காரணமாக, நாடகக் குழுவில் இணைந்தார் என்பதை அறிந்து பாவச்சந்திரன் சுள்ளிக்காடு வியந்தார்.
எளிய மனிதர்:
திரையில் பார்த்து மகிழ்ந்து வியந்த அந்த மகா நடிகரின்முன் தான் அமர்ந்திருப்பதை எண்ணி, பாலச்சந்திரன் பரவசமடைந்தார். எவ்விதப் பெருமிதமும் இவ்வாமல், மிக எளிய மனிதராய் தங்களின் வருகையைக் குறித்துக் கேட்டறிந்து காத்திருந்தார். எங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மனாய் வசனம் பேசி நடித்துக் காட்டினார். கட்டபொம்மன் திரைப்படத்தினும் நாடகத்தில் நடித்ததே திருப்தியளித்தது என்று சிவாஜி கூறியதை மனத்தில் பதித்தார். இவையெல்லாம் பாவச்சந்திரன் நினைத்துப் பார்க்க இயலாத உண்மைகளாய் இருந்தன.
பாராட்டும் பண்பாளர்:
சிவாஜி கணேசன் மாபெரும் நடிகர்; பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்; உலகின் மிகப்பெரிய மனிதர்களிடம் தொடர்பில் இருக்கும் நடிப்பு ஆளுமை! பாலச்சந்திரன் எழுதிய நாடகத்தின் வசனத்தைப் பேசிக் காட்டிய இராவணனின் பாத்திரத்தை அவர் கைதட்டிப் பாராட்டியது பாலச்சந்திரனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. “உன் குரல் நன்றாக இருக்கிறது” என்று நடிப்பின் சிகரம் பாராட்டியதைப் பாலச்சந்திரன் பெரும்பேறாகக் கருதினார்.
விருந்தோம்பல் பண்பு:
அவர் தங்களோடு இரவு விருந்து உண்டதையும், வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்ததையும் எண்ணிப் பாவச்சந்திரன் அகம் மகிழ்ந்தார். எவ்வளவு பெரிய ஒரு நடிப்பு ஆளுமை, எளிமையாக இனிமையாகத் தன்னுடன் பேசியதைப் பாலச்சந்திரன் மிகப்பெரும் பேறாகக் கருதினார். சிவாஜியின் இல்லத்தை விட்டுப் பிரியும்போது, கேரளத்தின் முக்கிய நகரத் தெருக்களில் அவருக்காகக் குரல் விற்றுப் பிழைத்த சிறுவயது பையன் பாலச்சந்திரன் கள்ளிக்காடுவின் நினைவில் வந்து சென்றான்.
முடிவுரை:
“என்னைப்போல் சிவாஜி நடிப்பார். ஆனால், என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது” என, மார்லன் பிராண்டோ என்ற ஹாலிவுட் நடிகரால் புகழப்பட்ட நடிப்புலகச் சக்கரவர்த்தியைக் கண்டு திரும்பிய அனுபவத்தைப் பாலச்சந்திரனால் அவ்வளவு எளிதாக மறக்க இயலவில்லை.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. நடிகர் திலகம் என்னும் பாடப்பகுதி மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ______ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
- சிதம்பரசித்த
- சிதம்பர ஸ்மரண
- பாலச்சந்திர ஸ்மரண
- சிவாஜி ஸ்மரண
விடை ; சிதம்பர ஸ்மரண
2. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய நூலை சிதம்பர நினைவுகள் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
- ராஜீவ்நாத்
- ஜான்பால்
- வெ. ஸ்ரீராம்
- கே.வி. சைலஜா
விடை ; கே.வி. சைலஜா
3. நடிப்புலகின் சக்கரவரத்தி எனப்படுபவர்
- சார்லி சாப்ளின்
- சிவாஜிகணேசன்
- அர்னால்டு
- வெ. ஸ்ரீராம்
விடை ; சிவாஜிகணேசன்
4. என்னைப் போல் சிவாஜி நடிப்பார், ஆனால் அவரைப்போல் என்னால் தான் நடிக்கமுடியாது என்று குறிப்பிட்ட நடிகர்
- மார்லன் பிராண்டோ
- அர்னால்டு
- அமிதாப் பச்சன்
- ஜாக்சிசான்
விடை ; அமிதாப் பச்சன்
5. சிவாஜி கணேசனுக்குச் செவாலியர் விருந்தளித்த அரசு
- தமிழக அரசு
- இந்திய அரசு
- பிரெஞ்சு அரசு
- ஆங்கில அரசு
விடை ; பிரெஞ்சு அரசு
6. சிவாஜி கணேசன் பிறந்த ஊர்
- தென்காசி
- திருநெல்வேலி
- மதுரை
- விழுப்புரம்
விடை ; விழுப்புரம்
7. சிவாஜி கணேசன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நாடக கம்பெனியில் சேர்ந்த போது வயது
- 4
- 5
- 6
- 7
விடை ; 5
8. சிவாஜி கணேசன் கல்வித் தகுதி
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி
- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
- இளங்கலை பட்டம்
- பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை
விடை ; பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை
9. அண்ணாத்துரையின் நாடகத்தில் சத்திரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தவர்
- சார்லி சாப்ளின்
- சிவாஜிகணேசன்
- அர்னால்டு
- வெ. ஸ்ரீராம்
விடை ; சிவாஜிகணேசன்
10. வி.சி.கணேசனுக்கு சிவாஜி கணேசன் என்று பெயரிட்டவர்
- தந்தை பெரியார்
- அண்ணா
- காமராசர்
- கருணாநிதி
விடை ; தந்தை பெரியார்
11. சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- பராசக்தி
- பாசமலர்
- கர்ணன்
விடை ; பராசக்தி
12. சிவாஜி கணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றிய திரைப்படம்
- பராசக்தி
- பாசமலர்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- கர்ணன்
விடை ; வீரபாண்டிய கட்டபொம்மன்
13. (கெய்ரோ) ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட விருது
- சிறந்த நடிகருக்கான விருது
- செவாலியர்
- தாாசாகெப்
- ஆஸ்கார்
விடை ; சிறந்த நடிகருக்கான விருது
பொருத்துக
1. ஊழித்தாண்டவம் | அ. பாரதி |
2. கவச குண்டலம் | ஆ. காளிதாசன் |
3. காளமேகம் | இ. கர்ணன் |
4. உன்னதக்கவி | ஈ. ருத்ரன் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ |
சிறு வினா
1. சிவாஜிகணேசன் பெற்ற விருதுகள் யாவை?
- ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது
2. சிவாஜிகணேசனைப் பற்றிய மார்லன் பிராண்டோவின் கருத்து என்ன?
என்னைப் போல் சிவாஜி நடிப்பார். ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது சிவாஜிகணேசனைப் பற்றிய மார்லன் பிராண்டோவின் கருத்தாகும்.