Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 5.5 – தலைக்குளம்

பாடம் 5.5 தலைக்குளம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 5.5 “தலைக்குளம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

நூல் வெளி

  • தோப்பில் முகமது மீரான் எழுதிய ’ஒரு குட்டித் தீவின் வரைபடம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை இது.
  • தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் எனும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.
  • இவர் தமிழிலும், மலையாளத்திலும் படைப்பவர்.
  • புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வருபவர்.
  • இவர் எழுதிய ‘சாய்வு நாற்காலி’ எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
  • துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க. 

முன்னுரை:-

மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, புலம்பெயர்வு, தலைமுறை மாற்றம் இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் முகவரியை இழக்கின்றன

நகரத்தை நோக்கிச் செல்ல காரணம்:-

  • இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தலைமுறையினர் கால மாற்றத்தாலும், பல்வேறு காரணங்களினாலும் கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
  • பெரும்பாலும் கிராமங்கள் செயல்பாடுகள் அனைத்தும் கையேடு வாழ்க்கை போன்றது.
  • அங்கு கடினமான உழைப்பும், விவசாயமும் தவிர பிற தொழில் சார்ந்த வளர்ச்சி காணப்படுவதில்லை.
  • முறையான தொலைத்தொடர்பு, மருத்துவ வசதி சுகாதார அமைப்பு காணப்டுவதில்லை.
  • இந்தியாவில் 57 மில்லியன் குழந்துைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பவரே.
  • இன்றும் சில கிராமங்களில் கோயில் நுழைவு தீண்டாமை, சாதி அமைப்பு, மதக்கலவரம் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
  • நகரத்திலோ எந்தவித பாகுபாடு இல்லாமல் சம வாய்ப்போடு வாழ இயலுவதால் நகரத்தை நோக்கி புலம் பெயர்கின்றனர்.
  • மிகச்சரியான உள்கட்டமைப்புடன் கூடிய தரமானக் கல்வி, போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நோக்கி இடம் பெயர்கின்றன.

அடிப்படை வசதியை நோக்கி நகர்வு:-

  • வறுமை கல்வியல் பின்னடைவு, குழந்தைத் தொழிலாளர் போன்றவை இன்னும் கிராமங்களில் காண முடிகிறது.
  • மின்சாரம், பேருந்து வசதி, தொழிற்சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் நகர வாழ்க்கையை நாடுகின்றனர்.
  • சாதிப் பாகுபாடு இல்லாமல் தரமான கல்வியோடு தொழிற்கல்வி, போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் பயிலிகம், மின்னணு போன்ற நிறுவனங்கள் நகர்புறத்தில் மேலோங்கி வருவதால் கிராமங்களை மக்கள் வெறுக்கின்றனர்.
  • இன்று நகரம் என்பது கிராமத்தவிட பெரிய மனித குடியிருப்பு உள்ளதாக அமைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வங்கிகள், வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைகிறது.

முடிவுரை:-

இத்தகைய காரணங்களால் கிராமங்களை விட்டு மக்கள் நகர்ப்புறம் நோக்கிச் செல்கின்றன. இதனால் கிராமங்கள் தங்கள் அடையாளங்களை இழந்து முகவரியற்று கதியின்றி அமைகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. “தலைக்குளம்” என்னும் கதையின் ஆசிரியர் ………………..

  1. பீர்முகமது
  2. தோப்பில் முகமது மீரான்
  3. ஜெயகாந்தன்
  4. அப்துல் ரகுமான்

விடை : தோப்பில் முகமது மீரான்

2. “தலைக்குளம்” என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு

  1. துறைமுகம்
  2. கூனன் தோப்பு
  3. சிததன்போக்கு
  4. ஒரு குட்டித் தீவின் வரைபடம்

விடை : ஒரு குட்டித் தீவின் வரைபடம்

3. தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம் ……………… ஊர் ……………. ஆண்டு ……………..

  1. கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டினம், 1944
  2. தஞ்சாவூர், உத்தமதானபுரம், 1942
  3. திருவாரூர், வலங்கைமான், 1943
  4. சென்னை, மயிலாப்பூர், 1940

விடை : கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டினம், 1944

4. தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் வெளிவரும் மொழிகள் ……………

  1. தமிழ், ஆங்கிலம்
  2. தமிழ், இந்தி
  3. தமிழ், மலையாளம்
  4. தமிழ், கன்னடம்

விடை : தமிழ், மலையாளம்

5. தோப்பில் முகமது மீரான் “சாய்வு நாற்காலி” என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினை பெற்ற ஆண்டு

  1. 1994
  2. 1995
  3. 1996
  4. 1997

விடை : 1997

6. தமிழக அரசின் விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் படைப்புகள்

  1. சாய்வு நாற்காலி, துறைமுகம்
  2. ஒரு குட்டித் தீவின் வரைபடம்
  3. துறைமுகம், கூனன்தோப்பு
  4. கூனன்தோப்பு, சாய்வு நாற்காலி

விடை : துறைமுகம், கூனன்தோப்பு

7. சரியான கூற்றைக் கண்டறிக

அ) கி. ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைத் பயன்படுத்திப் படைத்தார்.

ஆ) தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் “சரிசல் இலக்கியம்” என்று பெயரிட்டார்.

இ) சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் “தஞ்சைக் கதைகள்” என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.

  1. அ, ஆ சரி
  2. ஆ, இ சரி
  3. அ, இ சரி
  4. இவையனைத்தும் சரி

விடை : இவையனைத்தும் சரி

7. தலைக்குளம் கதையின் கருப்பொருள்

  1. கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது
  2. தனக்கு உதவி செய் மனிதனை தேடிக்கொண்டு கண்டுபிடித்து நன்றி பாராட்டுவது
  3. பெண்களின் அவலநிலையும் ஆண்களின் அடக்குமுறையும்
  4. இறந்து போன மனிதனின் சிறப்புகளைப் பேசுவது

விடை : கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது

பொருத்துக

1. உம்மாஅ. அப்பா
2. வாப்பாஆ. அப்பா
3. ஏச்சுஇ. படித்துறை
4. கடவுஈ. திட்டுதல்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. புதுமைபித்தன்அ. மலைவெடிப்பு
2. சண்முகசுந்தரம்ஆ. சூரிய வெப்பம்
3. ஜெயகாந்தன்இ. அஞ்சிய
4. தி.ஜானகிராமன்ஈ. விரைவு
5. தோப்பில் முகமது மீரான்உ. நெல்லைத் தமிழ்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ, 5 – அ

சிறு வினா

1. கிராமங்கள் எவ்வாறு தங்கள் முகவரியை இழந்து வருகின்றன?

மக்கட்தொகைப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, நகரமயமாதல், புலம்பெயர்வு, இளைய தலைமுறையினரின் மனப்பான்மை ஆகியவற்றின் விளைவாகக் கிராமங்கள், தங்கள் முகவரியை இழந்து வருகின்றன.

2. நகரங்கள் எவ்வாறு தோன்றியது?

கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர், நகரமாக தோன்றியது.

குறு வினா

1. தோப்பில் முகமது மீரான் – குறிப்பு வரைக

  • 1944-ல் தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார்.
  • இவர் தமிழிலும், மலையாளத்திலும் படைப்பவர்
  • புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலகங்கியத் தளங்களிலும் இயங்கி வருபவர்.
  • இவர் 1997-ல் “சாய்வு நாற்காலி” என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினை பெற்றுள்ளார்.
  • இவரின் துறைமுகம், கூனன்தோப்பு ஆகிய படைப்புகள்  தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.
  • இவர் எழுதிய இப்பாடப் பகுதியிலுள்ள கதை “ஒரு குட்டித் தீவின் வரைபடம்” என்ற சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment