Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 6.4 – மெய்ப்பாட்டியல்

பாடம் 6.4 மெய்ப்பாட்டியல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 6.4 “மெய்ப்பாட்டியல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

நூல் வெளி

  • நம்பாடப் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் என்பதை அறிவோம்.
  • அது பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூலாகும்.
  • தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.
  • தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர்,  “ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியன்” என்று போற்றுகின்றனர்.
  • நூல் முழுமைக்கும் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார்.

சொல்லும் பொருளும்

  • நகை – சிரிப்பு
  • இளிவரல் – சிறுமை
  • மருட்கை – வியப்பு
  • பெருமிதம் – பெருமை
  • வெகுளி – சினம்
  • உவகை – மகிழச்சி

இலக்கணக்குறிப்பு

  • நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை – தாெழிற்பெயர்கள்
  • தொல்நெறி – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

1. நகை = நகு + ஐ

  • நகு – பகுதி (நகை ஆனது விகாரம்)
  • ஐ – தொழிற்பெயர் விகுதி.

2. மருட்கை = மருள் + கை

  • மருள் – பகுதி (“ள்” “ட்” ஆனது விகாரம்)
  • கை – தொழிற்பெயர் விகுதி.

3. வெகுளி = வெகுள் + ஐ

  • வெகுள் – பகுதி
  • ஐ – தொழிற்பெயர் விகுதி.

பாடநூல் வினாக்கள்

குறு வினா

1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

1. நகை (சிரிப்பு)5. அச்சம் (பயம்)
2. அழுகை6. பெருமிதம் (பெருமை)
3. இளிவரல் (சிறுமை)7. வெகுளி (சினம்)
4. மருட்கை (வியப்பு)8. உவகை (மகிழ்ச்சி)

என்பன எண்வகை மெய்ப்பாடுகளாகும் – தொல்காப்பயிர்

சிறு வினா

ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.

வியப்பு:-

நீண்ட  நாளாக எனக்கு கால் முட்டியில் வலி தீரவில்லை என உறவுக்காரர் பக்கத்து ஊர் தர்காவில் மெளலவி ஒருவர் ஓதுகிறார். உடல் நோயெல்லாம் தீரந்து விடுகிறது போய் பார் என்றார். நம்பிக்கையோடு சென்றேன். வரிசையில் நின்றேன். என் முறை வந்தது. ஒரே வியப்பு! அழுகையும் வந்தது. அங்கே ஓதுகின்ற மெளலவி என் வாப்பா (தந்தை). வெட்கமும் வேதனையும் வந்தது. வாப்பாவிடம் இப்படியொரு மகத்துவமா!

அச்சம்:-

சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறையில் ஆசிரியல் கொடுத்த வேலைகளை முடிக்காமல் திங்கள் கிழமை காலையில் எழுந்ததும் நினைவுக்கு வந்து, அன்று விடுப்பு எடுத்துப் பணிகளை முடித்துவிட்டு, மறுநாள் பள்ளி செல்லலாம் என்று நினைத்து தன் பெற்றோரிடம் தனக்கு உடல் நலமில்லை என்று பொய் கூறவது, அச்சத்திற்கு நல்ல சான்றாக இருக்கும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. வெகுளி, உவமை – முதலிய சொற்களின் பொருள் முறையே ………… என்பதாகும்.

  1. சினம், மகிழ்ச்சி
  2. சிறுமை, சிரிப்ப
  3. வியப்பு, பெருமை
  4. மகிழ்ச்சி, சினம்

விடை : சினம், மகிழ்ச்சி

2. தொல்காப்பியர் குறிப்படும் மெய்ப்பாடு

  1. 7
  2. 8
  3. 9
  4. 10

விடை : 8

3. “சொற்கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல்” என்று உரையாசிரியர்

  1. பேராசிரியர்
  2. நச்சினார்கினியர்
  3. சேனாவரையர்
  4. அடியார்க்கு நல்லார்

விடை : பேராசிரியர்

4. கவி கண்காட்டும் என்று கூறிய உரையாசிரியர்

  1. நச்சினார்கினியர்
  2. பேராசிரியர்
  3. சேனாவரையர்
  4. அடியார்க்கு நல்லார்

விடை : பேராசிரியர்

5. பேராசியரியர் என்பார் …………….. உரையாசிரியர் ஆவார்.

  1. தொல்காப்பிய
  2. நன்னூல்
  3. சிலப்பதிகாரம்
  4. யாப்பருங்கல

விடை : தொல்காப்பிய

6. “ஈட்டுபுகழ் நந்தி பாணிநீ” – என்னும் நதிக் கலம்பக பாடலில் இடம் பெறும் மெய்ப்பாடு

  1. அழுகை
  2. நகை
  3. மருட்கை
  4. வெகுளி

விடை : நகை

7. தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் …………………. அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

  1. எழுத்து
  2. பொருள்
  3. சொல்
  4. யாப்பு

விடை : பொருள்

8. “ஐயோ எனின் யான் புலி அஞ்சுவேல்” என்னும் புறநானூற்று அடிகளில் இடம் பெறும் மெய்ப்பாடு

  1. நகை
  2. வெகுளி
  3. அழுகை
  4. இளிவரல்

விடை : அழுகை

8. “தொடப்பாட்டு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய”என்னும் புறநானூற்று அடிகளில் இடம் பெறும் சேரன் கணைக்கால் இரும்பொறை குறித்தான மெய்ப்பாடு …………………..

  1. நகை
  2. வெகுளி
  3. அழுகை
  4. இளிவரல்

விடை : இளிவரல்

9. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்

  1. புறநானூறு
  2. நன்னூல்
  3. சிலப்பதிகாரம்
  4. தொல்காப்பியம்

விடை : தொல்காப்பியம்

10. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் ……………..

  1. இளம்பூரணர்
  2. பேராசிரியர்
  3. சேனாவரையர்
  4. நச்சினார்கினியர்

விடை : இளம்பூரணர்

11. தொல்காப்பியத்தினை இயற்றிவர் …………….

  1. இளம்பூரணர்
  2. தொல்காப்பியர்
  3. சேனாவரையர்
  4. நச்சினார்கினியர்

விடை : தொல்காப்பியர்

12. ‘ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் பாராட்டப் பெற்றவர் …………….

  1. இளம்பூரணர்
  2. சேனாவரையர்
  3. தொல்காப்பியர் 
  4. நச்சினார்கினியர்

விடை : தொல்காப்பியர்

பொருத்துக

1. பாணன்அ. இளிவரல்
2. கணைக்காலிரும்பொறைஆ. உவகை
3. பாண்டியன் நெடுஞ்செழியன்இ. நகை
4. குந்திஈ. வெகுளி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – அ

பொருத்துக

1.அன்னைஅ. பாணன்
2. தோழிஆ. நரி
3. பிறர்இ. நாய்
4. தலைவிஈ. பேய்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. நகைஅ. பெருமை
2. இளிவரல்ஆ. வியப்பு
3. மருட்கைஇ. சிறுமை
4. பெருமிதம்ஈ. சிரிப்பு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. மெய்ப்பாடு என்றால் என்ன?

இலக்கியத்தைப்  படிக்கின்றபோது அதன் பொருளை ஆழப்படுத்தும் வகையில் காட்டப்படும் உணர்ச்சி வெளிப்பாட்டு சுவையே மெய்ப்பாடு என்பர்.

“சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்
கவி கண் காட்டும்” என்று உரையாசிரியர், பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

2. நாடகத்தில் மெய்ப்பாடு எவ்வாறு தோற்றுவிக்கப்படுகிறது?

நாடகத்தில் நடிப்பவரிடத்தில் தோன்றும் உணர்வுகளை மெய்ப்பாடுகள் காண்பவரிடத்திலும் உணர்வுகளை மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்கும்.

3. மெய்யுணர்ந்தோர் மெய்ப்பாடு எனக் கூறியது என்ன?

மெய்யுணர்ந்தோர் “உய்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் மெய்பாடாகும்” எனச் செப்புவர் என செயிற்றியம் கூறுகிறது.

4. தொல்காப்பியரைத் தமிழ்ச்சான்றோர் எவ்வாறு போற்றுகிறார்?

ஒல்காப் பெரும்புகழ் தந்த தொல்காப்பியன் என்று போற்றுகிறார்கள்

5. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார்?

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்று பாரதி இளங்கோவையும், சிலம்பையும் புகழ்கிறார்.

சிறு வினா

தொல்காப்பியம் – சிறுகுறிப்பு வரைக

  • தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் என்பதை அறிவோம்.
  • அது பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூலாகும்.
  • தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.
  • தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர்,  “ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியன்” என்று போற்றுகின்றனர்.
  • நூல் முழுமைக்கும் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார்.

நெடு வினா

எண்வகை மெய்ப்பாடுகளை இலக்கியச் சான்றுடன் விளக்குக.

நகை:-

ஈட்டுபுகழ் நந்தி பாணநீ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும்…

என்னும் பாடல் அடிகளில் பாணனின் குரலை தலைவி எள்ளி நகையாடுகிறாள்.

நீ இரவு முழுவதும் பாடியதை என் தாய் பேய் என்றாள், பிறர் நரி என்றார், தோழி நாய் என்றாள், ஆனால் நானோ நீ என்றேன்.

அழுகை:-

ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு…

என்னும் பாடல் அடிகளில் தலைவன் காட்டில் புலியுடன் போராடி
இறந்துபட, தலைவி துயரம் கொள்வதாக உள்ளது.

தலைவன் உடலைப் பார்த்து தலைவி, ஐயோ என்று கதறினால், காட்டில் உள்ள புலி வந்துவிடுமோ என அஞ்சுகிறாள். தூக்கி எடுத்துச் செல்லலாம் என்றால் அகன்ற மார்பு கொண்ட உன்னைத் தூக்க இயலாது என்று துன்புறுகிறாள்.

இளிவரல் (சிறுமை):-

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்…

என்னும் பாடல் அடிகளில் சேரனுக்கு ஏற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடுவதாக அமைகிறது.

நாயைச் சங்கிலியால் கட்டி வைத்து துண்புறுத்தியது போல என்னைத் துன்புறுத்தினர். சிறையிலிட்ட உன் உதவியால் வந்த தண்ணீரை நான் இரந்து உண்ணமாட்டேன்.

மருட்கை (வியப்பு):-

அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி….

எனும் பாடல் அடிகளில் கண்ணகி கோவலனோடு சென்ற காட்சி வியப்பை ஏற்படுத்துகிறது.

இந்திரன் கோவலனோடு வந்து பத்தினியாகிய கண்ணகியை விண்ணுக்கு அழைத்துச் சென்ற வியப்பான காட்சி

அச்சம்:-

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்வு இடம் அறியேம் ஆகி…..

எனும் பாடல் அடிகளில் அச்சம் ஏற்படுகிறது.

மதம் பிடித்த யானை மரங்களை முறித்தது; கார்மேகம் இடிப்பது போல் முழங்கியது. உயிர் பிழைப்பதற்கு வேறு இடம் இல்லாமல் மகளிர் தம் கை வளையல் ஒலிக்க மயில் போல் நடுங்கி நின்றார்கள்.

பெருமிதம் (பெருமை):-

உறுசுடர் வாதளாடு ஒருகால் விலங்கின்
சிறுசுடர் முறதபர் இருளாங் கைண்டாய்….

இப் பாடலடிகளில் தனியொரு வீரன் பெரும் படையை எதிர்த்த பெருமையை விளக்குகிறது.

ஒளிமிக்க வேலினையும், தேன் நிறைந்த மாலையும் உடைய வேந்தனே! வாளுடன் பெரும் படையைத் தடுப்பேன். அப்பெரும்படை சிறு விளக்கின் முன் இருள் ஓடுவது போல் ஓடும்.

வெகுளி (சினம்):-

உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை….

இப் பாடலடிகளில் நெடுஞ்செழியனின் சினம் கூறப்படுகிது.

தன்னை இளையவன் என்று எள்ளிய வேந்தர்களை சிதறி ஓடச் செய்து முரசையும் கைப்பற்றுவேன் என்று செழியன் சினங்கொள்கிறார்

உவகை (மகிழ்ச்சி):-

மண்டல மதியமன்ன மாசறு முகத்தினாளுந்
திண்டிற்ன் மருகன்….

இப் பாடலடிகளில் மழை மேகத்தைக் கண்ட மயில் போல மகிழ்ச்சி காணப்படுகிறது.

குந்தி தன் திறன் மிக்க மருமகன் கண்ணனைக் கண்ட காட்சி வெள்ளலைகள் நிறைந்த நீலக் கடலின் நீரை முகந்து வரும் மேகத்தைக் கண்ட தோகை மயில்போல மகிழ்ந்து வரவேற்றாள்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment