Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 6.6 – காப்பிய இலக்கணம்

பாடம் 6.6 காப்பிய இலக்கணம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 6.6 “காப்பிய இலக்கணம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

இலக்கணத் தேர்ச்சி கொள்

1. ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்

  1. சிவஞான முனிவர்
  2. மயிலைநாதர்
  3. ஆறுமுகநாவலர்
  4. இளம்பூரணர்

விடை : மயிலைநாதர்

2. கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.

கூற்று 2 : ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
  3. இரண்டும் சரி
  4. இரண்டும் தவறு

விடை : கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

3. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க :

அ) காதை1) கந்தபுராணம்
ஆ) சருக்கம்2) சீவகசிந்தாமணி
இ) இலம்பகம்3) சூளாமணி
ஈ) படலம்4) சிலப்பதிகாரம்
  1. 4, 3, 2, 1
  2. 3, 4, 1, 2
  3. 3, 4, 2, 1
  4. 4, 3, 1, 2

விடை : 4, 3, 2, 1

4. தவறான இணையைத் தேர்க

பாவகைஇலக்கியம்
அ) விருத்தப்பா1) நாலடியார்
ஆ) ஆசிரியப்பா2) அகநானூறு
இ) கலிவெண்பா3) தூது
ஈ) குறள்வெண்பா4) திருக்குறள்

விடை : அ

குறு வினா

5. காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

காப்பியம் இரு வகைப்படும். அவை

ஐம்பெருங்காப்பியம்:-

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி

ஐஞ்சிறுகாப்பியம்:-

நீலகேசி, சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம்

6. காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் யாவை?

இதிகாசம், புராணம், இலக்கியம், சரிதம், காவியம் ஆகியன காப்பியத்தின் வேறு பெயர்கள்

7. காப்பியச் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக.

காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை காப்பியச் சிற்றுறுப்புகளாகும்

8. பாவிகம் – விளக்குக.

காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.

காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.

சான்று:-

“பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது கம்பராமாயணத்தின் பாவிகம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. EPOS என்பதன் என்பது பொருள்

  1. சொல் அல்லது பாடல்
  2. எழுத்து அல்லது கவிதை
  3. வாக்கியம் அல்லது வரலாறு
  4. பக்தி அல்லது பண்பாடு

விடை : சொல் அல்லது பாடல்

2. நன்னூலுக்கு உரை எழுதியவர் …………….

  1. சி.வை. தாமோதரனார்
  2. சேனாவரையர்
  3. மயிலைநாதர்
  4. இளம்பூரணர்

விடை : மயிலைநாதர்

3. “பஞ்சகாப்பியம்” என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்ட நூல் 

  1. நன்னூல்
  2. பொருள்தொகை நிகண்டு
  3. திருத்தணிகை உலா
  4. தமிழ்விடு தூது

விடை : தமிழ்விடு தூது

4. சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழக்கம் சி.வை.தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பன அறிய செய்வது …………

  1. சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை
  2. மயிலைநாதரின் நன்னூல் உரை
  3. பொருள்தொகை நிகண்டு
  4. திருத்தணிகை உலா

விடை : சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை

5. வடமொழியில் “காவ்யதரிசனம்” என்ற நூலைத் தழுவித் தமிழில் எதுதப்பட்ட அணியிலக்கண நூல்

  1. மாறனலங்காரம்
  2. இலக்கண விளக்கம்
  3. தண்டியலங்காரம்
  4. இலக்கண விளக்கம்

விடை : தண்டியலங்காரம்

6. தண்டியலங்காரம் காப்பிய வகை …………… பகுக்கின்றது.

  1. இரண்டாக
  2. மூன்றாக
  3. நான்காக
  4. ஐந்தாக

விடை : இரண்டாக

7. “பாவிகம் என்பது காப்பிய பண்பே” என்று கூறும் நூல்

  1. மாறனலங்காரம்
  2. தண்டியலங்காரம்
  3. இலக்கண விளக்கம்
  4. தொன்னூல் விளக்கம்

விடை : தண்டியலங்காரம்

8. பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப்பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியம்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. குண்டலகேசி

விடை : சீவகசிந்தாமணி

9. “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது …………. பாவீகம்.

  1. சிலப்பதிகாரத்தின்
  2. சீவகசிந்தாமணியின்
  3. கம்பராமாயணத்தின்
  4. குண்டலகேசியின்

விடை : கம்பராமாயணத்தின்

10. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது ……………….

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. குண்டலகேசி

விடை : சிலப்பதிகாரம்

11. தண்டியலங்காரம் கூறும் “தொடர்நிலை” என்னும் செய்யுள் வகை …….. குறிப்பதாகும்.

  1. சிற்றிலக்கியத்தை
  2. அக இலக்கியத்தை
  3. காப்பியத்தை
  4. புற இலக்கியத்தை

விடை : அக இலக்கியத்தை

12. “ஆட்டனத்தி ஆதிமந்தி” என்னும் குறுங்காப்பியத்தை இயற்றியவர்

  1. பாரதிதாசன்
  2. கண்ணதாசன்
  3. வண்ணதாசன்
  4. பாரதி

விடை : கண்ணதாசன்

13. பொருள் தொடர்நிலைக்கான நூல்கள்

  1. சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
  2. அந்தாதி இலக்கியங்கள்
  3. சிற்றிலக்கியங்கள்
  4. பேரிலகக்கியங்கள்

விடை : சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

13. விருத்தம் என்னும் ஒரேவகைச் அச்செய்யுளில் அமைந்தவை …………

  1. சிலப்பதிகாரம், மணிமேகலை
  2. குண்டலகேசி, மணிமேகலை
  3. சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
  4. இராவணகாவியம்

விடை : சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்

பொருத்துக

1. காதைஅ. சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
2. சருக்கம்ஆ. கந்தபுராணம், கம்பராமாயணம்
3. இலம்பகம்இ. சீவக சிந்தாமணி
4. படலம்ஈ. சூளாமணி, பாரதம்
5. காண்டம்உ. சிலப்பதிகாரம், மணிமேகலை
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ, 5 – அ

பொருத்துக

1. பாரதியார்பாஞ்சாலி சபதம்
2. பாரதிதாசன்மருமக்கள் வழி மான்மியம்
3. கவிமணிபாண்டியன் பரிசு
4. கண்ணதாசன்மாங்கனி
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

பொருத்துக

1. கவியோகி சுத்தானந்த பாரதியார்அ. ஏசுகாவியம்
2. புலவர் குழந்தைஆ. பராசக்தி மகாகாவியம்
3. இலம்பகம்இ. இராவண காவியம்
4. படலம்ஈ. இருண்ட வீடு
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

குறு வினா

1. தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணத்தை விளக்குக

வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், ‘தண்டியலங்காரமாகும்’. இந்நூலில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

காப்பியங்கள் ஒரேவகைச் செய்யுளாலும் அமையும்; பல்வகைச் செய்யுட்களாலும் அமையும்.

2. சிறுகாப்பியத்திற்குரிய இலக்கணம் தருக

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.

3. பாவிகம் என்றால் என்ன?

காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.

4. கம்பராமாயணத்தின் பாவிகம் யாது?

அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர். “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது கம்பராமாயணத்தின் பாவிகம்.

4. சிலப்பதிகாரத்தின் பாவிகம் யாது?

  • “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
  • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  • ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பது சிலப்பதிகாரத்தின் பாவிகம்.

5. காப்பியம் என்பது யாது?

  • ஒரு மொழியின் வளத்தைக் காப்பியங்களே புலப்படுத்தும்.
  • எளிய நடை, இனிய, கதை, அழகியல், கற்பனை ஆகிய ஒரு சேர அமைந்த இலக்கிய வடிவமே காப்பியமாகும்.

6. தொடர்நிலை என்பது யாது?

தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும்.

7. தொடர்நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.

பொருள்தொடர்நிலை : சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

சொல்தொடர்நிலை : அந்தாதி, இலக்கியங்கள்

8. குறுங்காப்பியம் என்றால் என்ன?

இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதைக் குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம் என்பர்.

சிறு வினா

1. காப்பியம் பெயர்க்காரணம் கூறுக.

ஆங்கிலத்தில் EPIC என்பர்

  • EPOS என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள்.
  • இது வடமொழியில் காவியம் என வழங்கப்படுகிறது.
  • காப்பியம் என்னும் சொல்லை, காப்பு + இயம் எனப் பிரித்து மரபைக் காப்பது, இயம்புவது
  • மொழியைச் சிதையாது காப்பது என்றும் காரணம் கூறுவர்.

2. காப்பியத்தை குறிக்கும் பிற பெயர்களை கூறு.

  • பொருட்டொடர்நிலைச் செய்யுள்
  • கதைச் செய்யுள்
  • அகலக்கவி
  • தொடர்நடைச் செய்யுள்
  • விருத்தச் செய்யுள்
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
  • மகாகாவியம்

3. காப்பிய அமைப்பு முறையை விளக்கிப் பட்டியல் இடுக.

காப்பியச் சிற்றுறுப்புகளாக காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை சிற்றுறுப்புகளாக அமைந்திருக்கின்றன. காண்டம் என்பது பல சிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் (பெரும்பிரிவு) குறிக்கும்.

  • காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
  • சருக்கம் – சூளாமணி, பாரதம்
  • இலம்பகம் – சீவக சிந்தாமணி
  • படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
  • காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

3. பெருங்காப்பியத்திற்குண்டான இலக்கணம் தருக.

1. வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.

2. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருளாக அமைந்திருக்க வேண்டும். எனினும் இவற்றுள் பாவிகத்திற்கு ஏற்ற வண்ணம் ஒன்றும் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.

3. தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல்வேண்டும்.

4. மலை (1), கடல் (2), நாடு (3), நகர் (4), சிறுபொழுது (5-10), பெரும்பொழுது (11-16), கதிரவன் தோற்றம் (17), சந்திரனின் தோற்றம் (18) ஆகிய பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்..

5. திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

6. அமைச்சர்களுடன் கலந்துரையாடல், தூது செல்லல், போர்ப் புரிய படைகள் அணிவகுத்தல், போர்நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேண்டும்.

7. சந்தி எனப்படும் கதைப்போக்கு (தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.

8. அமைப்பு முறையில் பெருங்காப்பிய உட்பிரிவுகளுள் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

9. எண்வகைச் சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

வை.மு. கோதைநாயகி (1901-1960)

ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்தியபோது, அவரது தோழி, நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான ‘இந்திர மோகனா’ என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் ‘நாவல் ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (‘வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்’) ஆவார்.

இவர் ‘ஜகன் மோகினி’ என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார். தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குடும்பமே உலகம்’ என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.

அவருடைய எழுத்தாற்றலுக்கொரு சான்று :

”என்ன வேடிக்கை! அடிக்கடி பாட்டி ‘உலகானுபவம்… உலகம் பலவிதம்… என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே… பாட்டி சொல்லிய வசனங்களைவிடக் க டிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கிவிடும் போலிருக்கிறதே! பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்துவிட்டாள்… நான் கிராமத்தை வெறுத்துச் சண்டையிட்டு வீணாக அவர் மனதை  வடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்துத் தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே!.. என்ன உலக விசித்திரம்!.. என்று கட்டுமீறிய வியப்பில் சித்ரா மூழ்கினாள்.”

(‘தபால் வினோதம்’ குறுநாவலில் இருந்து)

வினாக்கள்:-

1. வை.மு. கோதைநாயகின் முதல் நூலகம் எது?

2. தொடர்ந்து – உறுப்பிலக்கணம் தருக

3. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள உவம உருபினை எடுத்து எழுதுக.

4. பிரித்தறிக ;  பங்கேற்று

5. தன்னுடைய – புணர்ச்சி விதி கூறுக

விடைகள்:-

1.  இந்திர மோகனா

2. தொடரந்து = தொடர் + த் (ந்) + த் + உ

  • தொடர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ வினையெச்ச விகுதி

3. போலவே (போல

4. பங்கேற்று = பங்கு + ஏற்று

5. தன்னுடைய = தன் + உடைய

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “தன்ன +உடைய” என்றாயிற்று.
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “தன்னுடைய” என்றாயிற்று.

தமிழாக்கம் தருக.

Popular as the ‘Cultural Capital’ of India, Tamil Nadu is extremely well-known for its marvellous temples and other architectural gems. The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished at the time of Chola dynasty in ancient Tanjavoor. In this traditional art form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with glass pieces, pearls, semi-precious stones, and gold and other vibrant colours. In the modern times, Tanjore paintings look up to human figures, animals, floral motifs and birds as muses.

தமிழாக்கம்:-

இந்தியாவில் தமிழகம் கலாச்சாரத் தலைநகரமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு பிரம்மாண்டமான கோவில்களுக்கும் மற்றும கட்டடக்கலைக்களுக்கும் புகழ் பெற்றது. குறிப்பாக தஞ்சாவூர் ஓவியங்கள் சோழ வம்சத்தின் கலாச்சாலங்களையும் பண்டைய தஞ்சாவூரின் பாரம்பரிய கலை, ஓவியங்கள் மற்றும் புனித தெய்வங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. தெய்வங்களின் உருவங்கள் கண்ணாடித் துண்டுகள் ஓவியங்கள், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றில் பல வண்ணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் மனித உருவங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பறவைகள் – உருவங்கள் கொண்டதாகப் பரிணாமம் பெற்றுள்ளன.

கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.

எ.கா. கபிலன் திறமையானவர் என்று ____________ (குமரன்) தெரியும்.

விடை : கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.

1. நேற்று முதல் ____________ (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

விடை : நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

2. உங்களுக்கு ____________ (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.

விடை : உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்.

3. முருகன் ____________ (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.

விடை : முருகன் வேகமாகச் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.

4. நம்முடைய ____________ (தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.

விடை : நம்முடைய தேவையின் அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.

பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க.

எ.கா.

களம், கலம்

விடை : போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு கலத்தில் நீர் தரப்பட்டது.

வலம், வளம்

விடை : ஆற்றின் வலப்புறம் உ ள்ள வயல்கள் நீர் வளத்தால் செழித்திருந்தன.

1. புல் – புள்

விடை : புல் தரையில் புட்கள் (புள்கள்) கூட்டம் அமர்ந்து விளையாடின.

2. உழை – உளை

விடை : தனது முதலாளிக்காக உழைக்கும் குதிரையின் உளை (பிடரி மயிர்) மிகவும் அழகாக இருக்கிறது.

3. கான் – காண்

விடை : கானகத்தில் வாழும் விலங்குளைக் காண்பது மகிழ்ச்சித் தரக்கூடியது.

4. ஊண் – ஊன்

விடை : ஊண் (மாமிசம்) உணவை உண்டு ஊனை (உடலை) வளர்ப்பது பாவம்.

5. தின்மை – திண்

விடை : திண்மை (வலிமை) கொண்ட ஒருவன் எளியவருக்கு தின்மை (தீமை) செய்தல் மறமாகாது

மொழியை ஆள்வோம்

எண்ணங்களை எழுத்தாக்குக.

Class 12 Tamil Chapter 6.6 - எண்ணங்களை எழுத்தாக்குக.உன்னையே நீயே உற்றுப்பார்
நீ ஒரு நிலாகூர்மையான முட்கள்
மூடியிருக்கின்றது உன்னைஅவைகளை விலக்கி விட்டுப்பார்
உன்னை சுவாசம் செய்யநன்தவனமாய் நான்

இலக்கிய நயம் பாராட்டுக.

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்

பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்

சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி

இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?

– பாரதிதாசன்

தலைப்பு:-

வெண்ணிலவு

ஆசிரியர் குறிப்பு:-

இப்பாடலினை எழுதியவர் பாரதிதாசன். இவரது இயற்பெயர் கனகசுப்புபரத்தினம். இவரின் பெற்றோர் கனகசபை – இலக்குமி ஆவர். 29.04.1891-ல் பிறந்தார். இவருக்கு புரட்சிக்கவி என்ற சிறப்பு பெயரும்  உண்டு. குடும்ப விளக்கு, இருண்டு வீடு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், அழகின் சிரிப்பு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

திரண்ட கருத்து:-

மாலை இருளினால் கருமையாகும் உலகினைக் கண்டன். அதுபோலு வானம் இருளாவதைக் கண்டேன். திசைகள் எட்டும் இருளில் மறைவதைக் கண்டேன். பின்னர் கருமையான இருள் சிரிப்பதில்லை. பெருஞ்சிரிப்பு ஒளியின் முத்துக்களாகிய முழு நிலவே நீதான் அழகெல்லாம் ஒன்று சேர்த்துக் காட்சி தருகிறாய். உலகிற்குக் குளிர் ஏற்றி, ஒளியும் ஊட்டுகிறாய். இயற்கையாகிய அன்னை தனது எழில் வாழ்வைச் சித்தரிக்கும் அழகோ நீ நிலவே – என்கிறார் பாரதிதாசன்.

மோனை:-

குயவனக்கு யானை, செய்யுளுக்கு மோனை

முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்

சான்று : ருந்தியிருளால் – வ்வாறே, பிந்தியந்த – பெருஞ்சிரிப்பின்

எதுகை:-

மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

சான்று : அருந்தியிருளால் – பெருஞ்சிரிப்பின், சிந்தாமல் – சிந்தாவென்று

அணி நயம்:-

இயற்கை அன்னைத் தனது எழில் வாழ்வைக் காட்டவே நிலவாக சித்தரித்துக் காட்டுகிறாள் என்னும் அடிகளில் இயற்கை உயர்வாகப் பாடியிருப்பதால் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

கற்பனை நயம்:-

கவிஞர்க்கு கற்பனை கைவந்த கலை. இருளால் மூழ்கும் இவ்வுலகைப் படம் பிடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன். வானில் தோன்றும் வெண்ணிலவை இயற்கையின் அழகு என்று வர்ணிக்கிறார் பாரதிதாசன்

நான்கரைச் சக்கர வடிவம் 

மேனி திடமே விடுமே!
மேடு விளையா டுவமே!
மேவ டுவோட சாருமே!
மேரு சாதுதூ தினிமே!

Class 12 Tamil Chapter 6.6 - நான்கரைச் சக்கர வடிவம் 

விளக்கம்:-

காடு மேடு என்று பாராமல் நன்றாக விளையாடுவோம். அதனால், நம் உடம்பு (மேனி) திடமாகும். மேவிவரும் நோய்களும் (வடு) ஓட, இமயமலை (மேரு) போன்ற சான்றோர் பாராட்டும் படியான செய்தியும் (தூது) இனி மேவிவரும்.

உரிய இடத்தில் எழுதுக.

தேடு தேனீபோ லாவதே
தேவ லாமென நாடுதே!
தேடு நாநய மாடுதே!
தேடு மாநிலை தேடுதே!

Class 12 Tamil Chapter 6.6 - உரிய இடத்தில் எழுதுக.

விளக்கம்:-

பூக்கள் தோறும் தேனைத் தேடிஅலைகின்ற தேனீயைப் போல, சுறு சுறுப்பாகும் நிலைதான் சிறந்ததென்று நாட வேண்டும். எவரிடமும் நயத்தோடு பேசவேண்டும். இவ்வாறிருந்தால் உயர்ந்தோர் நம்மைத் தேடிவருவர்

கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.

1. வானம், பற, நிலவு, தொடு

வானத்தில் பறப்போம்
பறந்து நிலவைத் தொடுவோம்

2. சருகு, விழு, மண், அலை

காய்ந்த இலைச்சருகுகள் மண்ணில் கிடந்தன.
மண்ணில் கிடந்த சருகுகள் அலைபோல அசைந்தன.

3. விண்மீன், ஒளிர், எரி, விழு

விண்மீன் வானத்தில் அழகாக ஒளிர்ந்தது.
ஒளிர்ந்த விண்மீன் எரிந்து விழுந்தது.

4. குதிரை, வேகம், ஓடு, தாவு

குதிரை அதிவேகமாக ஓடியது.
ஒடிய குதிரையத் தாவிப்பிடிக்க இயலாது.

5. குழந்தை, நட, தளிர்நடை, விழு

குழந்தை தளிர் நடை நடந்தது.
நடந்த குழந்தை தடுமாறி விழுந்தது.

6. திரை, காண், கைதட்டல், மக்கள்

திரை அரங்கில் திரை விலகியதைக் கண்டார்கள்.
திரை விலகுவதைக் கண்ட மக்கள் கைதட்டினார்கள்.

நிற்க அதற்குத் தக

படிப்போம் பயன்படுத்துவோம் (திரைத்துறை)

Artistகவின்கலைஞர்
Animationஇயங்குபடம்
Newsreelசெய்திப்படம்
Cinematographyஒளிப்பதிவு
Sound Effectஒலிவிளைவு
Multiplex Complexஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment