Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 7.2 – அதிசய மலர்

பாடம் 7.2 அதிசய மலர்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 7.2 “அதிசய மலர்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

நூல் வெளி

 • இக்கவிதை ‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
 • இதைப் படைத்த தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்.
 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்.
 • தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
 • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்), ஈழம் : கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார்.
 • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்வது 

 1. கடந்தகாலத் துயரங்களை
 2. ஆட்களற்ற பொழுதை
 3. பச்சையம் இழந்த நிலத்தை
 4. அனைத்தையும்

விடை : அனைத்தையும்

சிறு வினா

1. அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக, தமிழ்நதி கூறுகிறார்?

 • புலம் பெயர்ந்த மக்களின் எண்ணத்தில் மீதமிருக்கும் மரங்களில், நீரில்லா பொட்டல் வெளிப் பகுதியில், போருக்கு பின் பிறந்த குழந்தை போல முகை (மொட்டு) அவிழ்ந்து மலர்ந்து சிரிக்கிறது அதிசய மலர் ஒன்று.
 • ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தல், உலாவிய யானையின் எச்சத்த்திலிருந்து வளர்ந்திருக்கலாம் இச்செடி.
 • எவரோ ஒருவருடைய கால் சப்பாத்தின் (காலுறை) பின்புறம் விதை ஒட்டிக்கொண்டு இங்கு வந்து உயிர் பெற்றிருக்கலாம் – என்று தமிழ்நதி கூறுகிறார்.

2. எங்கிருந்தோ வருகிறது
   வண்ணத்துப்பூச்சியொன்று
   பறவைகளும் வரக் கூடும் நாளை – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக. 

இடம்:-

தமிழ்நதியின் “அதன் பிறகு எஞ்சும்” கவிதை தொகுப்பில் “அதிசய மலர்” என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளன.

பொருள்:-

மலரைத்தேடி வண்ணத்துப்பூச்சியும், பறவையும் வரக்கூடும் என்பது பொருள்.

விளக்கம்:-

மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் உலவிய யானையின் எச்சத்திலோ அல்லது காலனியின் பின்புறம் ஒட்டிக்கிடந்து முளைத்தது அதிசயமலர். அப்பூச்செடியின் அடையாளத்தைக் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சியும், பறவையும் நாளை வரக்கூடும் என்று தமிழ்நதி கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

உறுப்பிலக்கணம்

1. சிரிக்கிறது = சிரி + க் + கிறு + அ + து

 • சிரி – பகுதி
 • க் – சந்தி
 • கிறு – நிகழ்கால இடைநிலை
 • அ – சாரியை
 • து – படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

2. வருகிறது = வா (வரு) + கிறு + அ + து

 • வா – பகுதி
 • வரு – ஆனது விகாரம்
 • கிறு – நிகழ்கால இடைநிலை
 • அ – சாரியை
 • து – படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

3. உலவிய = உலவு + இ (ன்) + ய் + அ

 • உலவு – பகுதி
 • இன் – இறந்த கால இடைநிலை, “ன்” புணர்ந்து கெட்டது
 • ய் – சந்தி (உடம்படுமெய்)
 • அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. முகையவிழ்ந்து =  முகை + அவிந்த்து

 • “உயிர்வரின்…. இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “முகைய் + அவிந்து” என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “முகையவிந்து” என்றாயிற்று.

2. மீந்திருக்கும் = மீந்து + இருக்கும்

 • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடு” என்ற விதிப்படி “மீந்த் + இருக்கும்” என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “மீந்திருக்கும்” என்றாயிற்று

3. ஏதொன்றை =  ஏது + ஒன்றை

 • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடு” என்ற விதிப்படி “ஏத் + ஒன்றை” என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “ஏதொன்றை” என்றாயிற்று

4. புன்னகை=  புன்மை + நகை

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “புன் + நகை” என்றாயிற்று.
 • “னல முன்றன ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “புன்னகை” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. “அதிசய மலர்” என்னும் கவிதையின் ஆசிரியர்

 1. ஆத்மாநாம்
 2. தமிழ்நதி
 3. நாகூர்ரூமி
 4. இரா.மீனாட்சி

விடை : தமிழ்நதி

2. “அதிசய மலர்” என்னும் கவிதை இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

 1. சூரியன் தனித்தலையும் பகல்
 2. அதன் பிறகும் எஞ்சும்
 3. கைவிட்ட நேரம்
 4. கானல் வரி

விடை : கானல் வரி

3. கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர்

 1. கலைவாணி
 2. கலைச்செல்வி
 3. கலையரசி
 4. கலையமுதா

விடை : கலைவாணி

4. கவிஞர் தமிழ்நதியின் பிறப்பிடம்

 1. கேரளத்தின் திருவனந்தபும்
 2. கர்நாடாகாவின் மாண்டியா
 3. ஈழத்தின் திருகோணமலை
 4. தமிழகத்தின் திருச்செந்தூர்

விடை : ஈழத்தின் திருகோணமலை

5. கவிஞர் தமிழ்நதி கலைத்துறையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்

 1. சென்னை
 2. கொலம்பியா
 3. யாழ்ப்பாணம்
 4. ஆஸ்திரேலியா

விடை : யாழ்ப்பாணம்

6. கவிஞர் தமிழ்நதி புலம்பெயர்ந்து சென்றுள்ள நாடு

 1. சிங்கப்பூர்
 2. மலேசியா
 3. ஆஸ்திரேலியா
 4. கனடா

விடை : கனடா

7. கவிஞர் தமிழ்நதி எழுதிய “ஈழம், கைவிட்ட தேசம்” என்பது

 1. நாவல்
 2. சிறுகதைகள்
 3. கவிதைகள்
 4. குறுநாவல்

விடை : நாவல்

8. பச்சையம் இழந்த சாம்மல் நிலத்தில் மலரை அடையாளம் கண்டு வருவது

 1. யானை
 2. எறும்பு
 3. வண்ணத்துப்பூச்சி

விடை : வண்ணத்துப்பூச்சி

9. பொருத்துக

1. நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியதுஅ. நாவல்
2. சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனிஆ. குறுநாவல்
3. கானல்வரிஇ. கவிதைகள்
4. பார்த்தீனியம்ஈ. சிறுகதைகள்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தில் மலர்ந்த மலர் உலகிற்கு சொல்லும் செய்தி யாது?

போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தல் மலர்ந்த மலரின் புன்னகை, வண்ணத்துப்பூச்சி வந்தது போல, நாளை பறவைகளும், செடியிலிருந்து பெருகும் காடுகள், அவை கொணரும் பெருமழையும் வரும் என்னும் செய்தியை உலகிற்கு சொல்லியது

2. அதிசய மலர் என்ற கவிதை தமிழ்நதியின் எத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன?

“அதன் பிறகு எஞ்சும்” என்னும் கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

3. தமிழ் நதியின் மொழிநடை எதனை அடிப்படையாகக் கொண்டது?

புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும், வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

4. அதிசய மலரின் புன்னகை எங்கிருந்து தொடங்குகிறது?

அதிசய மலரின் புன்னகை இதழ்களிலிருந்து தொடங்குகிறது

5. அதிசய மலர் எப்போது சிரித்தது?

போருக்கு பிறகு முகையை அவிழ்த்துப் சிரித்தது

6. எவருடையவோ
   சப்பாத்தின் பின்பும்
   விதையாக ஒட்டிக் கிடந்து
   உயிர் தரித்திருக்கலாம் – இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம்:-

தமிழ்நதியின் “அதன் பிறகு எஞ்சும்” என்னும் கவிதை தொகுப்பில் “அதிசய மலர்” என்ற இப்பாடல் இடம் பெற்றுள்ளன.

விளக்கம்:-

யாருடைய செருப்பின் பின்புறமாக விதையாக ஒட்டிக்கொண்டு வந்து தன் வாழ்வை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.

குறு வினா

1. கவிஞர் தமிழ்நதி குறிப்பு வரைக

 • ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாக கொண்ட கவிஞர்.
 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்.
 • தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார்
 • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்), ஈழம் : கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார்.
 • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment