பாடம் 1 வா வா முயலே
Hello, Parents and Students.,
Here, we have provided the CBSE Solutions for Class 3 Tamil Chapter 1 – Vaa vaa muyale / வா வா முயலே, which will help you prepare for exams. These solutions are accurate and aligned with the CBSE syllabus & Samacheer Kalvi Syllabus.
வா வா முயலே
வா வா முயலே! பாடல்
குட்டி குட்டி முயலே
குதித்து ஓடும் முயலே
சின்னஞ் சிறிய முயலே
சிரித்து வா வா முயலே
பட்டு பட்டு முயலே
பஞ்சு வண்ண முயலே
கிழங்கும் பழமும் தந்திடுவேன்
கிட்ட வா வா முயலே
அன்பாய் நாமும் பழகலாம்
ஆற்றுநீரில் குளிக்கலாம்
கொட்டும் மழையில் நனையலாம்
குதித்து ஆட்டம் போடலாம்
பட்டம் விட்டுப் பார்க்கலாம்
பம்பரம் நாமும் சுற்றலாம்
ஊரைச்சுற்றிப் பார்க்கலாம்
ஊஞ்சல் ஆடி மகிழலாம்
பொருத்தமானதை இணைப்பேன்
குறியீடுகளைக்கொண்டு சொற்களை உருவாக்குவோம்
படிப்போம்; உரிய சொல்லை எழுதுவோம்
தீ | மணி | விசிறி | வானவில் |
திமிங்கலம் | பலா | சக்கரம் | கடல் |
காகம் | நீ | அகல் | மிளகாய் |
மஞ்சள் | ஓணான் | காளான் | நாய் |
மான் | மிதிவண்டி |
1. அடுப்பில் எரிவது – தீ
2. சுவையான பழம் – பலா
3. வானில் பறப்பது – காகம்
4. காரமாக இருப்பது – மிளகாய்
5. இரு சக்கர வாகனம் – மிதிவண்டி
6. கடலில் வாழ்வது – திமிங்கலம்
படிப்போம்; உரிய சொல்லை வட்டமிட்டு எழுதுவோம்
முட்டை | சிறுத்தை | ஆமை |
செங்கல் | கைத்தடி | தேங்காய் |
வேலி | தொலைபேசி | வானொலி |
பேருந்து | சோளம் | மேகம் |
சேவல் | கொடி | வௌவால் |
1. நான் நீந்துவேன் – ஆமை
2. வீடு கட்ட உதவுவேன் – செங்கல்
3. கூவி ஒலி எழுப்புவேன் – சேவல்
4. பயணம் செய்ய உதவுவேன் – பேருந்து
5. தலைகீழாகத் தொங்குவேன் – வௌவால்
6. பாடல் கேட்க உதவுவேன் – வானொலி
7. பயிருக்குப் பாதுகாப்பு தருவேன் – வேலி
படித்து மகிழ்வோம்
இணைத்து எழுதுவேன்
- நீர் + யானை = நீர் யானை
- மயில் + ஆட்டம் = மயில் ஆட்டம்
- இலை + ஊதல் = இலை ஊதல்
- மண் + பானை = மண் பானை
- கடல் + ஆமை = கடல் ஆமை
- மழை + மேகம் = மழை மேகம்