Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.1 – தமிழ் அமுது

பாடம் 1 தமிழ் அமுது

Hello, Parents and Students.,

Here, we have provided the CBSE Solutions for Class 3 Tamil Chapter 1 – Tamil Amuthu / தமிழ் அமுது, which will help you prepare for exams. These solutions are accurate and aligned with the CBSE syllabus & Samacheer Kalvi Syllabus.

Class 3 Tamil Text Books – Download

தமிழ் அமுது வினா விடை

தமிழ் அமுது பாடல்

தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே!
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே!
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ! பொருளோ!
போற்றி வைக்க வில்லையம்மா!.

தமிழ் அமுது பாடல் பொருள்

தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா.

வாங்க பேசலாம்

1. நீங்கள் நினைப்பதை எவ்வாறு வெளிப்படுத்துவீர்?

2. உமக்கு தெரிந்த தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்
ஒன்றை கூறுக.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. நித்திலம் இச்சொல்லின் பொருள் ………………………

  1. பவளம்
  2. முத்து
  3. தங்கம்
  4. வைரம்

விடை : முத்து

2. செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………… 

  1. செம்மை + தமிழ்
  2. செந் + தமிழ்
  3. செ + தமிழ்
  4. செம் + தமிழ்

விடை : செம்மை + தமிழ்

3. உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………….. 

  1. உன்னைத் தவிர
  2. உனைத்தவிர
  3. உன்னை தவிர
  4. உனை தவிர

விடை : உன்னைத் தவிர

ஆ. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

  1. தோண்டுகின்ற - வேண்டுகின்ற
  2. ன்னைத் – பொன்னோ
  3. காக்க – வைக்

இ. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

Class 3 Tamil Solution - Lesson 1 கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

பொள்ன்பொருபொன்பொருள்
செழ்மிந்செந்தமிழ்
குங்வணங்கு
போறிற்போற்றி
திம்த்நிநித்திலம்
கில்உலகில்

ஈ. மீண்டும் மீண்டும் சொல்லலாமா?

Class 3 Tamil Solution - Lesson 1 மீண்டும் மீண்டும் சொல்லலாமா?

ஆடிப்பாடி மகிழ்வோம்!

Class 3 Tamil Solution - Lesson 1 ஆடிப்பாடி மகிழ்வோம்!

உ. அறிந்து கொள்வோம்

1. எனது நாடுஇந்தியா
2. எனது மாநிலம்தமிழ்நாடு
3. எனது மாவட்டம்தென்காசி
4. எனது ஊர்வெங்கேடஸ்வரபுரம்
5. எனது மொழிதமிழ்
6. எனது பள்ளிஞானகுரு வித்தியா சாலை
7. எனது வகுப்புமூன்றாம்ம் வகுப்பு
8. என் ஆசிரியர்விக்டர்
9. என் நண்பர்கள்ராமு, சோமு
10. வீட்டில் எனக்குப் பிடித்தவைநண்பர்கள்
11. பள்ளியில் எனக்குப் பிடித்தவைபூந்தோட்டம்
12. எனது திறமைகள்பாடுதல், ஓவியம் வரைதல்
13. என் பெற்றோர்அருணாச்சலம் – காளியம்மாள்
14. பெற்றோர் அலைபேசி எண்.766 756 76 28

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. பொழுதெல்லாம் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பொழுது + தெல்லாம்
  2. பொழுது + எல்லாம்
  3. பொழுத் + எல்லாம்
  4. பொழுத + தெல்லாம்

விடை : பொழுது + எல்லாம்

2. ஊற்றைப்போல் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஊற்றை + போல்
  2. ஊற்று + போல்
  3. ஊற்றுப் + போல்
  4. ஊற் + போல்

விடை : ஊற்றை + போல்

3. இவ்வுலகம் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இவ் + வுலகம்
  2. இவ் + உலகம்
  3. இ + வுலகம்
  4. இ + உலகம்

விடை : இ + உலகம்

Grade 3 – கண்ணன் செய்த உதவி

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment