பாடம் 10. சான்றோர் மொழி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 10 – சான்றோர் மொழி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
இனியவை நாற்பது
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது
– பூதஞ்சேந்தனார்
பாடல் பொருள்
கற்றவர்களின்முன் தான் கற்ற கல்வியைக் கூறுதல் இனிமையானது. அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பது மிகவும் இனிமையானது. எள் அளவு சிறியதாயினும் தான் பிறரிடம் கேட்டுப் பெறாமல், பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும்விட இனிமையானதாகும்.
பொருள் அறிவோம்
- மிக்கார் : அறிவில் மேம்பட்டவர்
- எள்துணை : எள் அளவு
- எத்துணையும் : எல்லாவற்றிலும்
- மாண்பு : பெருமை
நூலைப்பற்றி…
இந்நூல் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனாரால் எழுதப்பட்டது. வாழ்க்கைக்கு நன்மை தரும் இனிய கருத்துகளைக் கூறுவது. நாற்பது பாடல்களைக் கொண்டது. எனவே இனியவை நாற்பது என்று அழைக்கப்படுகிறது.
1. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் ________
- பாடுதல்
- வரைதல்
- சொல்லுதல்
- எழுதுதல்
விடை : சொல்லுதல்
2. ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள் ________
- கொடுத்தல்
- எடுத்தல்
- தடுத்தல்
- வாங்குதல்
விடை : கொடுத்தல்
3. மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________
- அறிவிலாதார்
- அறிந்தோரை
- கற்றோரை
- அறிவில்மேம்பட்டவர்
விடை : அறிவிலாதார்
4. இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள் ________
- பிறரிடம் கேட்டுப் பெறாது
- பிறரிடம் கேட்டுப் பெறுவது
- பிறருக்கு கொடுக்காது
- பிறரிடம் கொடுப்பது
விடை : பிறரிடம் கேட்டுப் பெறாது
5. சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் ________
- தேடுதல்
- பிரிதல்
- இணைதல்
- களைதல்
விடை : இணைதல்
வந்தபாதை
புதிருக்கு பொருத்தமான படத்தை பொருத்துவோம்
படக்குறியீடுகளை கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலமா
புன்னகை | சிந்தனை | பயம் |
கவலை | அழுகை | சினம் |
சொற்களை உரிய வரிசையில் எடுத்து எழுதுவோம்
(கண்ணாடித்துண்டு, நெகிழிப்பை, காகிதத்தாள், சணல்பை, பீங்கான் தட்டு, இலை)
- காகிதத்தாள்
- சணல்பை
- இலை
- கண்ணாடித்துண்டு
- பீங்கான் தட்டு
- நெகிழிப்பை