Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.15 – வீம்பால் வந்த விளைவு

பாடம் 15. வீம்பால் வந்த விளைவு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 15 – வீம்பால் வந்த விளைவு to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3 Tamil Text Books – Download

சரியான விடையை தேர்வு செய்வேன்

1. ஓய்வெடுக்க சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. ஓய் + எடுக்க
  2. ஓய்வு + வெடுக்க
  3. ஓய்வு + எடுக்க
  4. ஓய்வெ + எடுக்க

விடை: ஓய்வு + எடுக்க

2. வீரம் + குதிரை இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது  ________

  1. வீரம் குதிரை
  2. வீர் குதிரை
  3. வீரகுதிரை
  4. வீரக்குதிரை

விடை: வீரக்குதிரை

3. பதில் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________

  1. கேள்வி
  2. விடை
  3. பொருள்
  4. சொல்

விடை: விடை

வினாக்களுக்கு விடையளிப்பேன்

1. வணிகன் எதில் சென்று வாணிகம் செய்தான்?

வணிகன் குதிரையில் சென்று வாணிகம் செய்தான்.

2. வணிகன் வீரனிடம் என்ன கூறினான்?

வணிகன், வீரனிடம், “தன் குதிரை முரட்டுத்தனமானது, அதனால் சற்று தள்ளிக் கட்டு” என்று கூறினான்.

3. வணிகனின் குதிரை வீரனின் குதிரையை என்ன செய்தது?

வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்தது.

4. வீம்பால் வந்த விளைவு இக்கதையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?

வீம்பால் வந்த விளைவு இக்கதையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்” என்பதே ஆகும்.

பொருத்துவேன்

1. வாணிகம் செய்பவர்குதிரை
2. எட்டி உதைத்ததுவீரர்
3. வீம்பு பிடித்தவர்நீதிபதி
4. தீர்ப்பு கூறியவர்வணிகர்
விடை: 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து வட்டமிட்டு எழுதுவோம்

Class 3rd Book Back Answer - veembal vantha vilaivu Kaatathil ull Sorgalai kandupiduthu vatttam iduvom

  • வணிகன்
  • குதிரை
  • நீதிபதி
  • கால்
  • வீரன்
  • குணம்

முதலெழுத்தை மாற்றிச் சொல்லை உருவாக்கி எழுதுவோம்

சிரிநரி, பூரி, கீரி, பொரி
வில்கல், பல், வில், வெல், வேல்
படம்பாடம், கடம், தடம், வடம்
பார்தேர், பார், சீர், தார்
ஆறுமறு, உறு, ஊறு, மறு

பொருத்தமான சொல்லால் நிரப்புவோம்

(அவர்கள், அவன், அவள், அவை, அது)

ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள். அவள் கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது பரணி அங்கு வந்தான். அவன் கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. அவை பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். அது சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, அவர்கள் மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.

பாடலிலிருந்து உணவுப் பொருள்களின் பெயர்களை எழுதுவோம்

பருப்பு அடை பாரம்மா
பதமாய் எடுத்து உண்ணம்மா
இனிப்புப் பணியாரம் வேணுமா
இங்கு வந்து பாரம்மா
வெள்ளை நிற உப்புமா
வேண்டும் மட்டும் தின்னம்மா
கரக் முரக் முறுக்கையே
கடித்துத் தின்னு நொறுக்கியே
சுவை மிகுந்த கொழுக்கட்டை
சூடாய் இருக்கு தட்டிலே!
வெல்லம் தேங்காய் சேர்த்துமே
வெண்ணெய்ப் பிட்டும் ஈர்க்குமே!

  • பருப்பு அடை
  • பணியாரம்
  • உப்புமா
  • முறுக்கு
  • கொழுக்கட்ட்டை
  • பிட்டு

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment