Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.17 – நாயும் ஓநாயும்

பாடம் 17. நாயும் ஓநாயும்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 17 – நாயும் ஓநாயும் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - Naaum Onaaum

Class 3 Tamil Text Books – Download

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. மகிழ்ச்சி இச்சொல் உணர்த்தும் பொருள் ________

  1. இன்பம்
  2. துன்பம்
  3. வருத்தம்
  4. அன்பு

விடை : இன்பம்

2. ஒன்றுமில்லை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. ஒன்று + இல்லை
  2. ஒன்றும் + இல்லை
  3. ஒன்றுமே + இல்லை
  4. ஒன்று + மில்லை

விடை : ஒன்றும் + இல்லை

3. அப்படி+ ஆனால் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________

  1. அப்படியானால்
  2. அப்படியனால்
  3. அப்படியினால்
  4. அப்படிஆனால்

விடை : அப்படியானால்

4. விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________

  1. வெறுப்பு
  2. கருப்பு
  3. சிரிப்பு
  4. நடிப்பு

விடை : வெறுப்பு

வினாக்களுக்கு விடையளிப்பேன்

1. பசியால் மெலிந்த ஓநாய் எங்குச் சுற்றித் திரிந்தது?

பசியால் மெலிந்த ஓநாய் உணவு தேடிக் காடு முழுவது சுற்றித் திரிந்தது

2. நாய், ஓநாயை எங்கு வரச் சொன்னது?

நாய், ஓநாயை காட்டை விட்டு வெளியே வந்து வீட்டக்காவல் புரிவதற்கு வரச் சொன்னது

3. நாயின் கழுத்தில் என்ன இருந்தது?

நாயின் கழுத்தில் கருப்புப்பட்டை இருந்தது

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுவேன்

  1. விதவிதமான – வகை வகையான
  2. சுதந்திரம் – விடுதலை
  3. வருடுதல் – தடவுதல்
  4. பிரமாதம் – பெருஞ்சிறப்பு
  5. சந்தேகம் – ஐயம்

சரியான தொடரை எனவும் தவறான தொடரை X எனவும் குறியிடுவேன்

Class 3 Tamil Solution - Lesson 16 சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை X எனவும் குறியிடுக.

1. ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் மெலிந்திருந்தது.சரி
2. நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காதுதவறு
3. ஓநாயின் கழுத்தில் கருப்புப் பட்டை இருந்தது.தவறு
4. ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை.தவறு
5. ஓநாயை நாய் வீட்டிற்கு அழைத்ததுசரி

சொற்களை இணைத்து எழுதுவோம்.

Class 3 Tamil Solution - Lesson 16 சொற்களை இணைத்து எழுதுவோம்.Class 3 Tamil Solution - Lesson 16 சொற்களை இணைத்து எழுதுவோம்.
நல்ல எண்ணம்மெலிந்த சிறுவன்
நல்ல உணவுமெலிந்த உடல்
நல்ல புத்தகம்மெலிந்த ஓநாய்

பொருத்தமான நிறுத்தக் குறியிடுவேன்

1. ஆகா என்ன சுகம் தெரியுமா

விடை : ஆகா! என்ன சுகம் தெரியுமா?

2. ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது

விடை : ஒன்றுமில்லை என்றால், கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?

5. நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது

விடை : “நல்ல உணவு உனக்கும் கிடைக்கும்” என்று சொன்னது.

4. நான் என்ன வேலை செய்ய வேண்டும்

விடை :  நான் என்ன வேலை செய்ய வேண்டும் ?

5. என்ன கட்டிப் போடுகிறார்களா

விடை : என்ன, கட்டிப் போடுகிறார்களா!

6. நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்.

விடை : நம் விருப்பம் போல போக முடியாது. அது என்ன பிரமாதம்?

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லால் நிரப்புவேன்

(கருப்புப்பட்டை, சுதந்திரமாக, அழகாக, ஓநாய், அன்பாக)

Class 3 Tamil Solution - Lesson 16 சரியான சொல்லால் நிரப்புக

1. நீ எவ்வளவு ______ இருக்கிறாய்?

விடை : அழகாக

2. நாயின் கழுத்தில் ______ இருந்தது.

விடை : கருப்புப்பட்டை

3. வீட்டுக்காரர்கள் நாயை ______ வருடிக் கொடுப்பார்கள்

விடை : அன்பாக

4. வீட்டில் மாட்டிக்கொள்வதைவிட ______ காட்டில் அலைவதே மேல்.

விடை : சுதந்திரமாக

5. என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று ______ கூறியது.

விடை : ஓநாய்

சொல்லக்கேட்டு எழுதுவேன்

1. நல்ல உணவு கிடைக்கும்

2. கழுத்தில் பட்டை எப்படி வந்தது?

3. நாய் மகிழ்ச்சியாய் ஓடிவந்தது.

4. ஆகா! என்ன சுகம் தெரியுமா!

உன்னை அறிந்துகொள்

நாம் பொருள் உணர்ந்து படிப்பதற்கு நிறுத்தக்குறிகள் உதவுகின்றன.

? – வினாக்குறி, – காற்புள்ளி
; – அரைப்புள்ளி: – முக்காற்புள்ளி
. – முற்றுப்புள்ளி! – வியப்புக்குறி

சொல் விளையாட்டு

Class 3 Tamil Solution - Lesson 16 சொல் விளையாட்டுClass 3 Tamil Solution - Lesson 16 சொல் விளையாட்டு
கரும்பு, கரடி, கடல்கலை, விலை, தங்கம்
Class 3 Tamil Solution - Lesson 16 சொல் விளையாட்டுClass 3 Tamil Solution - Lesson 16 சொல் விளையாட்டு
 பட்டு, பழம், பறவைமத்தளம், மகுடம், சத்தம்

சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரை உருவாக்குவேன்

1. சுதந்திரத்தை கொடுக்க என் மாட்டேன் விட்டு

விடை :  என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

2. கொழு, கொழு அழகையும் புகழ்ந்தது நாயின் உடம்பையும்.

விடை :  ஓநாய் நாயின் கொழு, கொழு அழகையும் உடம்பையும் புகழ்ந்தது.

3. பார்த்தால் வீட்டுக்காரர்களைப் ஆட்ட வாலை வேண்டும்.

விடை : நாய் வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்.

சூழலுக்கேற்ற உணர்வைத் தெரிவு செய்வேன்

(சிரிப்பு, மகிழ்ச்சி, வருத்தம், வியப்பு, அச்சம்)

1. பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது ஏற்படுவது ………….

விடை : மகிழ்ச்சி

2. மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது ……………….

விடை : வியப்பு

3. கோமாளி செய்யும் செயல்களைக் காணும்போது ………………

விடை : சிரிப்பு

4. நம்முடைய நண்பர் கீழே விழுவதைக் காணும்போது ……………

விடை : வருத்தம்

5. திடீரென எதிரில் பாம்பைக் காணும்போது ………………

விடை : அச்சம்

சிந்திக்கலாமா?

எந்தக் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்? ஏன்?

காட்டில் வாழும் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்

காட்டில் வாழும் கிளி சுதந்திரமாய் காட்டில் திரியும். கூட்டில் வாழும் கிளி தன் சுதந்திரத்தை இழந்து வாடும்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment