பாடம் 18. திருக்குறள் கதைகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 18 – திருக்குறள் கதைகள் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. ஞாலம் இச்சொல்லுடன் பொருந்தாத சொல் ________
- உலகம்
- வையகம்
- புவி
- மலை
விடை : மலை
2. கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது ________
- அறம்
- தீமை
- கொடை
- ஈகை
விடை : தீமை
3. என்பு இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல் ________
- முகம்
- எலும்பு
- கை
- கால்
விடை : எலும்பு
4. அன்பு + இல்லாத இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________
- அன்பிலாத
- அன்பல்லாத
- அன்பில்லாத
- அன்புஇல்லாத
விடை : அன்பில்லாத
5. இன்சொல் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- இனிமை + சொல்
- இன் + சொல்
- இன்மை + சொல்
- இனிமை + செல்
விடை : இனிமை + சொல்
6. நல்ல + செயல் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________
- நல்லசெயல்
- நல்செயல்
- நற்செயல்
- நல்லச்செயல்
விடை : நற்செயல்
குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுவேன்
ஞாலம் – காலம் | என்பி – அன்பி |
பணிவுடையன் – அணியல்ல | மற்றை – மற்று |
முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுவோம்
1. இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு ஆதல்
பிற மற்றுப் அணியல்ல
விடை :
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
2. தகவிலர் தக்கார் அவரவர் என்பது
படும் எச்சத்தாற் காணப்
விடை :
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
வந்த பாதை
பாடி மகிழ்வோம்
1. பறக்கும் பட்டம்
பட்டம் பார்க்கும் பாப்பா
பாப்பா வளர்க்கும் ஆடு
ஆடு அருகில் மரம்
மரம் தந்த பழம்
2. கடலோரத்தில் அலை உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது.
கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட
முட்ட கட்ட முட்ட
இலந்தப் பழத்திற்கு ஆசப்பட்ட கொழந்த
வாழப்பழம் தின்றது
ஒத்த ஓசையை உடைய சொல்லைக் கண்டுபிடித்து எழுதுவேன்
(ஆணி, துள்ளி, பெட்டி, பந்து)
1. வள்ளி செல்வாள் துள்ளி
2. சிந்து ஆடினாள் பந்து
3. வேணி சுவரில் அடித்தாள் ஆணி
4. பாட்டி தந்து பெட்டி
கண்டுபிடித்து எழுதுவோம்
1. பெயரில் மரம் உள்ள பறவை
விடை: மரங்கொத்தி
2. பெயரில் கல் உள்ள உணவு
விடை: பொங்கல்
3. பெயரில் மை உள்ள தானியம்
விடை: கோதுமை
4. பெயரில் கை உள்ள பூ
விடை: மல்லிகைப்பூ
கூடுதல் வினாக்கள்
1. ஒருவர் நடுவுநிலைமை உடையவர், இல்லாதவர் என்பது எவ்வாறு அறியப்படும்?
ஒருவர் நடுவுநிலைமை உடையவர், இல்லாதவர் என்பதனை அவருக்குப்பின் நிலைத்து நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும்.
2. உலகமே வேண்டும் எனக் கருதினால் அது எப்படி கைகூடும்?
செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் அது கைகூடும்.
3. எது அன்பு இல்லாத உயிர்களை வருத்தும்?
அன்பு இல்லாத உயிர்களை அறம் வருத்தும்.
4. ஒருவருடைய நிலைத்த செல்வம் எது?
ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது அவர் கற்ற கல்வியே ஆகும். அதனைத் தவிர வேறு எந்த செல்வமும் நீடித்து இருக்காது.
5. ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன் எது?
பணிவு உடையவராகவும் இனிமையான சொற்கள் பேசுபவராகவும் இருப்பதே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்.
6. திருக்குறள் பற்றிய குறிப்பு வரை
- திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
- இவர் இயற்றிய இந்நூல், எக்காலத்துக்கும் ஏற்ற அறவுரைக் கருத்துகளைக் கொண்டுள்ளது.
- இந்நூலில் அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகள் உள்ளன.
- 133 அதிகாரங்களும் அதிகாரத்திற்குப் பத்துக் குறளென 1330 குறட்பாக்களும் உள்ளன.
- ஒவ்வொரு குறட்பாவும் ஈரடியால் ஆகிய வெண்பாவாகும்.