பாடம் 19. தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 19 – தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
1. நட்பை வலியுறுத்தும் கதையை வகுப்பறையில் அங்க அசைவுகளுடன் சரியான ஒலிப்புடனும் கூறுக.
மார்க் டிவெய்ன் ஒரு சமயம் குதிரைப் பந்தயத்தில் தோற்றுப் போய் வந்து கொண்டிருந்த தனது முன்னாள் நண்பரைச் சந்திக்க நேரிட்டது. அந்த நண்பர் குதிரைப் பந்தயத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும், ஊருக்குப் போகக்கூடப் பணமில்லை என்றும் கூறி மார்க் டிவெய்னிடம் உதவுமாறு வேண்டினார். மார்க் டிவெய்ன் அவரிடமும் என்னிடமும் அவ்வளவு பணமில்லை. ஆனால், ஓர் உதவி செய்யலாம் என்றார்.
இரயிலில் எனது சீட்டுக்கு கீழே என் காலுக்கடியில் நீ ஒளிந்து கொள்ளலாம் என்று ஐடியாக் கொடுத்தார். நண்பரும் ஒத்துக் கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். டிக்கெட் பரிசோதகர் வந்தார். மார்க் டிவெய்ன் தன்னிடமிருந்த இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தார். பரிசோகர், மற்றொருவர் எங்கே? என்று கேட்க “அவர் கொஞ்சம் வித்தியாசமானவர். அவரது செயல்களும் வித்தியாசமானது. அதனால் என் காலுக்குக் கீழே உட்கார்ந்து இருக்கிறார்” எனந்று சொல்லி அறிமுகப்படுத்தினாரை். மார்க் டிவெய்னின் நண்பருக்குத் தனது சூதாட்டப் பழக்கத்தின் வேதனை இப்போது புரிந்தது. மீண்டும் இருவரும் உற்ற நண்பர்களாக மாறினார்.
2. தவளையின் நற்குணத்தை உன் சொந்த நடையில் கூறுக.
தூக்கணாங்குருவியும், தேனீயும் ஒட்டகச்சிவிங்கியின் செயலைத் தவளையிடம் கூறியதும், தவளை அவர்களுக்கு உதவி செய்ய எண்ணியது.
மறுநாள் ஒட்டகச்சிவிங்கி அவர்களைத் துன்புறுத்தியதும் தேனீக்கள் அதன் காதைக் கடித்தன. ஒட்டகச்சிவிங்கி வலி தாங்க முடியாமல் அருகிலுள்ள குளத்தில் விழுந்தது. குளத்திலிருந்து தவளைகள் ஒட்டகச்சிவிங்கியின் மீது ஏறி இறங்கின. மீண்டும் வெளிவந்த ஒட்டகச்சிவிங்கியை தேனீக்கள் கொட்ட அது மீண்டும் தண்ணீரில் விழ தவளைகள் அதன் மீது ஏறின. இச்செயலைக் கண்ட ஒட்டகச்சிவிங்கி தன் செயலை எண்ணி வருந்தியது. அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுடன் இணைந்து மகிழ்வாய் வாழத் தொடங்கியது.
1. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. மரக்கிளையை உலுக்கியது ______________
- தேனி
- ஒட்டகச்சிவிங்கி
- தவளை
- சிட்டுக்குருவி
விடை : ஒட்டகச்சிவிங்கி
2. “மரத்தூள்” என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- மரம் + தூள்
- மர + தூள்
- மர்த்து + தூள்
- மரத் + தூள்
விடை : மரம் + தூள்
3. “திட்டம் + படி” இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது
- திட்டபடி
- திட்டப்படி
- திட்டம்படி
- திட்டுபடி
விடை : திட்டப்படி
4. “மிதிபட்டு” இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
- மிதி + பட்டு
- மிதிப் + பட்டு
- மீதி + பட்டு
- மீதிப் + பட்டு
விடை : மிதி + பட்டு
5. “இணைந்து” என்ற சொல்லின் எதிர்ச்சொல்
- மகிழ்ந்து
- பிரிந்து
- சேர்ந்து
- சிறந்து
விடை : பிரிந்து
2. வினாக்களுக்கு விடையளிக்க
1. தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ஏன் கத்தின?
ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையை உலுக்கியதால் தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் கத்தின.
2. தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் யார் யார்?
தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் தவளையும், தேனீயும் ஆவார்கள்.
3. தேனீ எதன் காதைக் கடித்தது?
தேனீ ஒட்டகச்சிவிங்கியின் காதருகே கடித்தது.
4. இக்கதையின் மூலம் நீ அறியும் நீதிக்கருத்து யாது?
நல்லதை நினைப்போம்! நன்மை பெறுவோம்!
3. அகர முதலியைப் பார்த்து பொருள் அறிக
- புத்திசாலி – அறிவாளி
- அடாத செயல் – தகாத செயல்
4. குருவிக்கேற்ற கூட்டைத் தேர்ந்தெடுப்போமோ?
வந்தனர் – மாணவர்கள் | நீந்தியது – மீன் |
மேய்ந்தது – ஆடு | பறந்தன – பறவைகள் |
5. சரியான சொல்லை நிரப்பிப் படித்து காட்டுக
1. தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ……………………….. என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தன. (கீச்… கீச்… / கூக்கு… கூக்கு)
விடை : கீச்… கீச்…
2. மரத்தின் அடியில் ……………………….. ஒதுங்கியது (ஒட்டகம் / ஒட்டகச்சிவிங்கி)
விடை : ஒட்டகச்சிவிங்கி
3. தூக்கணாங்குருவிக்கு முதலில் ……………………… உதவிக்கு வந்தது. (மரங்கொத்தி / மீன்கொத்தி)
விடை : மரங்கொத்தி
4. ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த …………………….. தொப்பென்று விழந்தது. (ஆற்றில் / குளத்தில்)
விடை : குளத்தில்
6. வினை மரபினை அறிந்து கொள்வோமா? பொருத்தமானதை உரிய கோட்டில் எழுதுக
(மாத்திரை விழுங்குதல், உணவு உண்ணுதல், பழம் தின்னுதல், பால் பருகுதல், தண்ணீர் குடித்தல்)
மாத்திரை விழுங்குதல் | |
தண்ணீர் குடித்தல் | |
பால் பருகுதல் | |
உணவு உண்ணுதல் | |
பழம் தின்னுதல் |
சொல் விளையாட்டு
7. ஒன்றை மாற்றினால் மற்றொன்று கிடைக்குமே!
1. “வெயில்”-இச்சொல்லில் “வெ” வை மாற்றி “ம” வை நிரப்பு
ஆடும் பறவை வரும் ஆழகாய் இருக்கும் –
விடை : “மயில்”
2. “மரம்”-இச்சொல்லில் “ம” வை மாற்றி “அ” வை நிரப்பு
அறுக்க உதவும் கருவியை பெறுவாய் –
விடை : “அரம்”
3. “கூச்சம்”-இச்சொல்லில் “கூ” வை மாற்றி “ம” வை நிரப்பு
உன் அடையாளங்களில் ஒன்றைப் பெறுவாய்-
விடை : “மச்சம்”
4. “குருவி“-இச்சொல்லில் “கு” வை மாற்றி “அ” வை நிரப்பு
குளிந்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய் -“
விடை : “அருவி”
5. “பணம்” -இச்சொல்லில் “ப” வை மாற்றி “ம” வை நிரப்பு
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய் –
விடை : “மணம்”
அறிந்து கொள்வோம்
தலை கீழாகக் கூடு கட்டி வாழும் பறவை தூக்கணாங்குருவியாகும் |
சிந்திக்கலமா?
உன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரத்தில் பறைவையோ, அணிலே கூடு கட்டினால் அதற்குத் தொல்லை தராமல் எவ்விதம் நடந்து கொள்ளலாம்? சிந்தித்து விடை கூறுக.
வீட்டுத் தோட்டத்தல் உள்ள மரத்தில் அணிலோ, பறவையே கூடு கட்டினால் அதற்கு தொல்லை தராமல் இருப்பேன். அதன் அருகில் செல்லவோ, பட்டாசு வெடிக்கவோ மாட்டேன்.
கூடுதல் வினாக்கள்
1. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஒட்டகச்சிவிங்கியின் காதில் கொட்டியது ______________
- தேனீ
- குழவி
- தவளை
- சிட்டுக்குருவி
விடை : தேனீ
2. ஒட்டகச்சிவிங்கியின் மேல் ஏறி விளையாடியது ______________
- தேனீ
- குழவி
- தவளை
- சிட்டுக்குருவி
விடை : தவளை
2. வினாக்களுக்கு விடையளிக்க
1. ஒட்டகச்சிவிங்கியிடம் நண்பர்களாக இருப்போம் என்று கூறியது எது?
ஒட்டகச்சிவிங்கியிடம் நண்பர்களாக இருப்போம் என்று கூறியது தேனீயாகும்.
2. ஒட்டகச்சிவிங்கி மனம் மாறியது எவ்வாறு?
தனக்கு எற்பட்ட துன்பம் போல் தானே குருவிகக்கும், தேனீக்கும், தவளைக்கு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணி மனம் மாறியது.