Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.2 – கண்ணன் செய்த உதவி

பாடம் 2. கண்ணன் செய்த உதவி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 2 – கண்ணன் செய்த உதவி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3 Tamil Chapter 2 "கண்ணன் செய்த உதவி" solution for CBSE / NCERT Students

Class 3 Tamil Text Books – Download

அ. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “கதிரவன்” இச்சொல் உணர்த்தும் பொருள் …………….. 

  1. சந்திரன்
  2. சூரியன்
  3. விண்மீன்
  4. நெற்கதிர்

விடை : சூரியன்

2. “மகிழ்ச்சியடைந்தான்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..

  1. மகிழ்ச்சி + அடைந்தான்
  2. மகிழ்ச்சி + யடைந்தான்
  3. மகிழ்ச்சியை + அடைந்தான்
  4. மகிழ்ச்சியை + யடைந்தான்

விடை : மகிழ்ச்சி + அடைந்தான்

3. “ஒலியெழுப்பி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..

  1. ஒலி + யெழுப்பி
  2. ஒலி + எழுப்பி
  3. ஒலியை + யெழுப்பி
  4. ஒலியை + எழுப்பி

விடை : ஒலி + எழுப்பி

ஆ. பொருத்தமான குறியிடுக – சரி ü தவறு û

Class 3 Tamil Solution - Lesson 2 பொருத்தமான குறியிடுக

1. கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான். சரி
2. கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான். தவறு
3. பெரியவர் அலைபேசியில் 107ஐ அழைத்தார். தவறு
4. ஆசிரியரும் மாணவர்களும் கண்ணனைப் பாராட்டினர். சரி

இ. அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக

Class 3 Tamil Solution - Lesson 2 அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக ஒலி : சத்தம்
ஒளி : வெளிச்சம்
Class 3 Tamil Solution - Lesson 2 அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக பள்ளி : கல்வி கற்கும் இடம்
பல்லி : ஒரு சிறிய உயிரி
Class 3 Tamil Solution - Lesson 2 அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக காலை : சூரியன் உதிக்கும் நேரம்
காளை :எருது

ஈ. சரியான சொல்லால் நிரப்பிப் படி

(வலிமை, கத்த, இலைதழைகளைத், நீளமாக, உயரமானது)

Class 3 Tamil Solution - Lesson 2 சரியான சொல்லால் நிரப்பிப் படி

1. ஒட்டகச்சிவிங்கி மிகவும் ………………..

விடை : உயரமானது

2. அதன் கழுத்து …………….. இருக்கும்.

விடை : நீளமாக

3. ஒட்டகச்சிவிங்குக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு ……………….. முடியாது.

விடை : கத்த

4. ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு ……………………….. வாய்ந்தது.

விடை : வலிமை

5. ஒட்டகச்சிவிங்கி ………………………… தின்னும்.

விடை : இலைதழைகளைத்

உ. சரியான சொல்லால் நிரப்பிப் படி

1. கண்ணன் எங்குப் புறப்பட்டான்?

கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்

2. பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?

பள்ளி செல்லும் வழியில் கண்ணன் ஒரு பெரியவரைப் பார்த்தான்

3. பேருந்து எதில் மோதியது?

பேருந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியது

4. பெரியவர் எந்த எண்ணிற்குச் செல்பேசியில் பேசினார்?

பெரியவர் 108 என்ற எண்ணிற்குச் தொடர்பு கொண்டு பேசினார்

5. ஆசிரியர் கண்ணனை எதற்காகப் பாராட்டினார்?

கண்ணன் விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களுக்கு உதவினான். அதனால் கண்ணனை ஆசிரியர் பாராட்டினார்.

கூடுதல் வினா

1. ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கூறியது யாது?

“மாணவர்களே! நீங்களும் கண்ணனைப் போல் உங்களால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். அதுவே மகிழ்ச்சியைத் தரும்” என்றார் ஆசிரியர்.

உன்னை அறிந்துகொள்

நீ உன் வீட்டில் யாருக்கு என் உதவிகளை செய்கிறாய்? வகுப்பறையில் கலந்துரையாடு.

அசோக் : அம்மாவுக்கு காயப்போட்ட துணிகளை மடித்து வைப்பேன்.

மணி : கடைக்கு சென்று பொருள் வாங்கி வருவேன்.

ராம் : துணிக்கு சோப்பு போடும்போது தண்ணீர் பிடித்துக் கொடுப்பேன்.

மார்டின் : என் அண்ணனுக்கு ஷு பாலிஷ் போட்டுக் கொடுப்பேன்.

கோமதி : என் அக்காவின் மிதி வண்டியை துடைத்து வைப்பேன்.

கார்த்திக் : என் அப்பாவின் ஸ்கூட்டரை துடைப்பேன்.

ராஜேஷ் : என் அம்மாவுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தம் செய்வேன்.

சங்கரி : என் அக்காவிற்கு கூந்தலில் சடை பின்னி விடுவேன்.

ரமேஷ் : என் தம்பிக்கு வண்ணம் தீட்ட சொல்லிக் கொடுப்பேன்.

சித்ரா : என் தம்பியின் விளையாட்டுப் பொருளை சரிசெய்து தருவேன்.

நாகராஜன் : என் அம்மாவுக்கு உதவியாக பாய், தலையணைகளை மடித்து வைப்பேன்.

சொல் விளையாட்டு

வாத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

Class 3 Tamil Solution - Lesson 2 வாத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

நup புகை சிரிப்பு
நடிப்பு திரிப்பு நகைப்பு

சிந்திக்கலாமா?

அகில் பள்ளியில் படிக்கும் சிறுவன். அவனுக்கு உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதும், பிறருக்கு உதவி செய்வதும் பிடிக்கும். ஆனால் அவன் பெற்றோர்கள், அகில் சிறுவன் என்பதால், அவனுக்கு ஆபத்து ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகின்றனர்.

அவர்களின் பயம் சரியானதா? இல்லையா? ஏன்?

அவர்களின் பயம் சரியானது இல்லை

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: