பாடம் 20. வீம்பால் வந்த விளைவு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 20 – வீம்பால் வந்த விளைவு to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
1. வீம்பால் வந்த விளைவு கதையை உமது சொந்த நடையில் கூறுக.
வணிகன் ஒருவன் தன் குதிரையின் மீது ஏறி வாணிகம் செய்து வந்தான். களைப்பாக இருந்ததால், சற்றுநேரம் ஓய்வெடுக்க எண்ணி மரத்தடியில் குதிரையை கட்டிவிட்டு ஒய்வெடுத்தான். அச்சமயம் வீரன் ஒருவன் தன் குதிரையுடன் மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தான்.
வணிகன், அந்த வீரனிடம், “தன் குதிரை முரட்டுத்தனமானது, அதனால் சற்று தள்ளிக் கட்டு” என்று கூறினான். சற்று நேரம் கழித்து வணிகனின் குதிரை வீரனின் குதிரை எட்டி உதைத்தது. அதன் கால் உடைந்தது. வீரனும் தூங்கி கொண்டிருந்து வணிகனை எழுப்பி நடந்தைக் கூறி நஷ்டஈடு கேட்டான். வணிகணோ நஷ்டஈடு தர மறுத்து விட்டான்.
இருவரும் நீதபதியிடம் சென்றனர். வணிகன் நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் நின்றான். வீரன் நடந்ததை அப்படியே கூற நீதிபதி வீரணிடம் நீ கூறிய பதிலிலே தீர்ப்பு அமைந்துள்ளது. வணிகன் முன்பே கூறினாலும் வீம்புக்காக செய்தவன் நீ. எனவே, வணிகன் உனக்கு நஷ்டஈடு தரமாட்டான் என்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதியிடம் வணிகன் தான் அமைதியாக இருந்ததற்கு மன்னிப்பும், சரியான தீர்ப்பு வழங்கியதற்கு நன்றியும் கூறிச்சென்றான்.
2. பால் பண்ணையில் வரிசையில் நின்று, பால் வாங்கும்போது ஒருவன் இடையில் வந்து பால் வங்கினால் நீ என்ன செய்வாய்?
அவனை வரிசையில் வந்து மற்றவர்களைப்போல அமைதியாக பால் வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்துவேன்.
1. வினாக்களுக்கு விடையளிக்க
1. வணிகன் எதில் சென்று வாணிகம் செய்தான்?
வணிகன் குதிரையில் சென்று வாணிகம் செய்தான்.
2. வணிகன், வீரனிடம் என்ன கூறினான்?
வணிகன், வீரனிடம், “தன் குதிரை முரட்டுத்தனமானது, அதனால் சற்று தள்ளிக் கட்டு” என்று கூறினான்.
3. வணிகனின் குதிரை வீரனின் குதிரையை என்ன செய்தது?
வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்தது.
4. வீம்பால் வந்த விளைவு இக்கதையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?
வீம்பால் வந்த விளைவு இக்கதையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்” என்பதே ஆகும்.
2. புதிருக்குப் பொருத்தமான படத்தை பொருத்துக
எதிரிகளை வீழ்த்துவான் நாட்டைக் காப்பான் – அவன் யார்? | |
பந்தயத்தில் வேகமாய் ஒடுவான். பரிசுகள் பல வென்றிடுவான் – அவன் யார்? | |
நான் இல்லை என்றால் நீங்கள் யாரையும் பார்க்க முடியாது. நான் யார்? | |
பெரிய தேரைத்தாங்கும், ஒரு சிறிய பையன் – அவன் யார்? | |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 -ஆ |
3. கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து, வட்டமிட்டுப் பழங்களுக்குள் எழுதுக.
Class 3 Tamil Solution – Lesson 20
வணிகன் | குதிரை | நீதிபதி |
கால் | வீரன் | குணம் |
4. விடுபட்ட சொற்களைப் படத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு நிரப்புக.
1. வணிகன் ……………. அயர்ந்துவிட்டான்.
விடை : கண்
2. ……………………. படைத்த உனக்கு நஷ்டஈடு தரத் தேவையில்லை
விடை : வீம்புக் குணம்
3. வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ………………. உதைத்துத் தள்ளிவிட்டது.
விடை : எட்டி
4. வணிகன், வாணிகம் செய்துவிட்ட …………………. எடுக்க நினைத்தான்.
விடை : ஓய்வு
5. வீரனுடைய குதிரையின் ………………. உடைந்து விட்டது.
விடை : கால்
5. கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுக.
துளசி | பிரண்டை |
வல்லாரை | தூதுவளை |
வெற்றிலை | கற்றாழை |
மணத்தக்காளி |
6. எதிலிருந்து எதைப் பெறுவோம் என்பதை விடுபட்ட இடத்தில் நிரப்புக
மரம் | கொடி | செடி |
தென்னை மரம் | வெற்றிலை | கத்தரி |
பலா மரம் | பூசணி | தக்காளி |
வாழை மரம் | அவரை | வெண்டை |
உயர்திணையும் அஃறிணையும்
7. எது உயர்திணை? எது அஃறிணை பிரித்தறிவோமா?
வாளி | கன்று | மீன் |
வண்டு | தேனீ | செல்வி |
சிறுமியர் | நாற்காலி | மேசை |
முருகன் | பசு | கழுதை |
ஒட்டகம் | எறும்பு | குழந்தை |
மின்விசிறி | சிறுவர் | விலங்கு |
குருவி | மரங்கள் | பறவை |
முருகன், செல்வி, குழந்தை, சிறுமியர், சிறுவர் |
வாளி, கன்று, மீன், பசு, கழுதை, குருவி, வண்டு, தேனீ, ஒட்டகம், எறும்பு, மரங்கள், நாற்காலி, மேசை, மின்விசிறி, விலங்கு, பறவை |
கூடுதல் வினாக்கள்
1. திணை என்பதன் பொருள் யாது?
திணை என்ற சொல்லுக்கு “ஒழுக்கம்” என்பது பொருள்.
2. திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
திணை இரண்டு வகைப்படும்.
1. உயர்திணை
2. அஃறிணை
3. உயர்திணை என்றால் என்ன?
ஒழுக்கமுடைய மனிதர்களை உயர் திணை என்பர். (மக்கள், தேவர்)
4. அஃறிணை என்றால் என்ன?
ஒழுக்கமில்லா உயிர் உள்ளவையும், உயிர் அற்றவையும் அஃறிணை ஆகும். (பொருள், பறவை, விலங்குகள்)