பாடம் 23. துணிந்தவர் வெற்றி கொள்வர்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 23 – துணிந்தவர் வெற்றி கொள்வர் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- வகுப்பு + அரை
- வகுப்பு + அறை
- வகு + அறை
- வகுப் + அறை
விடை : வகுப்பு + அறை
2. இயலவில்லை என்ற சொல் உணர்த்தும் பொருள் ________
- முடியும்
- செய்யலாம்
- முடியவில்லை
- உருவாக்குதல்
விடை : முடியவில்லை
3. பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________
- சிறிய
- நிறைய
- அதிகம்
- எளிய
விடை : சிறிய
4. வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________
- சாதனை
- மகிழ்ச்சி
- நன்மை
- தோல்வி
விடை : தோல்வி
5. பரிசுளித்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- பரிசு + அளித்து
- பரி + அளித்து
- பரிசை + அளித்து
- பரிசும் + அளித்து
விடை : பரிசு + அளித்து
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன?
மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி பெட்டியை தூக்கி வரும் போட்டியாகும்.
2. மாணவர்கள் போட்டியில் பங்கேற்காததற்குக் காரணங்கள் யாவை?
பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்ததால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை
3. கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?
கவியரசியின் வெற்றிக்குக் காரணம் முயற்சியாகும்.
பாடப்பொருளை வரிசைப்படுத்துவோம்
1. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர். | 3 |
2. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர். | 5 |
3. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள். | 4 |
4. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார். | 1 |
5. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது. | 2 |
ஒருமை, பன்மை அறிவோமா?
- ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை.
- ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது பன்மை.
ஒருமைக்குரிய பன்மைச் சொல்லை எழுதுவோம்
பந்து | பந்துகள் |
ஆமை | ஆமைகள் |
முயல் | முயல்கள் |
பூனை | பூனைகள் |
பூ | பூக்கள் |
விழா | ஆமைகள் |
பசு | பசுக்கள் |
வினா | வினாக்கள் |
படம் | படங்கள் |
மரம் | மரங்கள் |
சிங்கம் | சிங்கங்கள் |
காகம் | காகங்கள் |
பல் | பற்கள் |
கல் | கற்கள் |
சொல் | சொற்கள் |
புல் | புற்கள் |
முள் | முட்கள் |
தாள் | தாட்கள் |
ஆள் | ஆட்கள் |
பொருள் | பொருட்கள் |
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் பூமலர். விளையாடுவதற்காகத் தன் தோழி மாலதியின் வீட்டிற்குச் சென்றாள். வழியில் சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர். பூமலர் அவர்களிடம், “ஓணானை அடிக்காதீர்கள், உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? அதுபோல அதற்கும் வலிக்கும். பிற உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது அல்லவா?” என்றாள். சற்றே சிந்தித்த அச்சிறுவர்கள், கற்களைக் கீழே போட்டுவிட்டுத் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
1. பூமலர் தன்தோழியின் வீட்டிற்கு எதற்காகச் சென்றாள்?
- படிப்பதற்காக
- விளையாடுவதற்காக
- வரைவதற்காக
விடை: விளையாடுவதற்காக
2. உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? – இது யார் யாரிடம் கூறியது?
- சிறுவர்கள் மாலதியிடம்
- மாலதி பூமலரிடம்
- பூமலர் சிறுவர்களிடம்
விடை: விளையாடுவதற்காக
3. கவலை என்ற பொருள்தரும் சொல் எது?
- வருத்தம்
- செயல்
- உயிர்
விடை: வருத்தம்
4. இவ்வுரைப்பகுதியிலிருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
- உயிர்களைத் துன்புறுத்தல் வேண்டும்
- ஓணானை வைத்து விளையாடலாம்
- உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது
விடை: உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. போட்டியிலிருந்து பிரித்து எழுதக் கிடைப்பது
- போட்டி + இருந்து
- போட்டியில் + இருந்து
- போட்டியில் + லிருந்து
- போட்டி + லிருந்து
விடை : போட்டியில் + இருந்து
2. தயக்கம் என்பதன் பொருள்
- மயக்கம்
- உறக்கம்
- கலக்கம்
- இரக்கம்
விடை : கலக்கம்
3. நடுவில் எதிர்ச்சொல்
- விளிம்பில்
- மையத்தில்
- தூரத்தில்
- அருகில்
விடை : விளிம்பில்
4. வெற்றியின் அடையாளம் என கருதப்படுவது
- சாேதனை
- இகழ்ச்சி
- தோல்வி
- முயற்சி
விடை : முயற்சி
5. வென்றதில்லை பிரித்து எழுதக் கிடைப்பது
- வென்றது + இல்லை
- வென்ற + தில்லை
- வென்ற + இல்லை
- வென்றது + தில்லை
விடை : வென்றது + இல்லை
6. மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- மண் + பிளந்து
- மண்ணைப் + பிளந்து
- மண்ணை + பிளந்து
- மன் + பிளந்து
விடை : மண்ணை + பிளந்து
7. இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் ________
- மகிழ்ச்சி
- மதிப்பு
- அவமதிப்பு
- உயர்வு
விடை : அவமதிப்பு
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. ஆசிரியர் தன்னம்பிக்கை கருத்துகளை கூறுக
ஒரு செயலில் இறங்குவதற்குமுன் சிந்திக்க வேண்டும், ஆனால் முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.
“தோல்வியின் அடையாளம் தயக்கம்
வெற்றியின் அடையாளம் முயற்சி
துணிந்தவர் தோற்பதில்லை
தயங்கியவர் வென்றதில்லை”
நாம் விதைக்கும் விதைகளில் முயற்சியுடன் மண்ணைப் பிளந்து கொண்டு வருபவையே செடிகளாகின்றன. தயங்கி நிற்பவை தங்கி விடுகின்றன. அதுபோல கவியரசி தயங்காமல் துணிச்சலாகச் செயல்பட்டதால் வெற்றி பெற்றாள் என ஆசிரியை கூறினார்.
“முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.”
பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குவேன்
பெயர் | ஆதி | சிரி |
ஆடி | ஆசி | அடி |
ஆசிரியர் | பெட்டி | அதிசயம் |
சரி | சட்டி |
பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்பேன்
1. சிலர் x பலர் |
2. முடியாது x முடியும் |
3. கடினமாக x எளிதாக |
4. பொய் x உண்மை |
5. விலகினர் x சேர்ந்தனர் |
மாணவர்களுக்கு வேண்டிய குணங்களைக் கொண்ட மீன்களுக்கு மட்டும் வண்ணமிடுவேன்
(துணிச்சல், தயக்கம், மகிழ்ச்சி, சோம்பல், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை)
மாணவர்களுக்கு வேண்டிய குணங்கள் | |
துணிச்சல் | மகிழ்ச்சி |
சுறுசுறுப்பு | தன்னம்பிக்கை |
மொழியோடு விளையாடு
அம்புக்குறியுடன் கூடிய சுழல் அட்டையில் மொழிமுதல் எழுத்துகளை எழுதிக் கொள்ள வேண்டும். மாணவர்களை வட்ட வடிவில் அமர வைத்து இந்த அட்டையினைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அம்புக்குறியினை வேகமாகச் சுற்றி விடுவர். அம்புக்குறி எந்த எழுத்தில் நிற்கிறதோ, அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் ஒரு சொல்லை அந்த மாணவர் கூறவேண்டும். இவ்வாேற அனைத்து மாணவரையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும். பயன்படுத்திய பின்பு எழுத்துகளை மாற்றி மீண்டும் பயன்படுத்தவேண்டும்.
ம | மஞ்சள், மட்டை, மருந்து, மணல் |
ந | நட்பு, நண்பன், நன்மை |
இ | இமயம், இன்பம், இனிமை, இட்லி |
உ | உண்மை, உழைப்பு, உறுதி, உலகம் |
அ | அம்மா, அன்பு, அமைதி, அழகு |
எ | எறும்பு, எண்ணிக்கை, எட்டு, எலி, எண் |
த | தம்பி, தட்டு, தயிர், தக்காளி |
க | கம்பி, கட்டிடம், கதவு, கட்டில் |
ப | படம், பட்டம், பம்பரம், பம்பாய் |
ஆ | ஆசிரியர், ஆலயம், ஆகாயம், ஆனந்தம் |
கலையும் கைவண்ணமும்
பயன்படுத்திய மற்றும் உபயோகமற்ற பொருள்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் செய்து மகிழ்க.
செயல் திட்டம்
“முயற்சியுடையார், இகழ்ச்சியடையார்” என்பது போன்று தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் ஐந்து பொன்மொழிகள் மற்றும் பழமொழிகளை எழுதித் தொகுத்து வருக.
- முடியும் என்றால் முயற்சி செய்; முடியாது என்றால் பயிற்சி செய்.
- நேரத்தை, வீணாக்கும்போது
கடிகாரத்தை பார்
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை - முயற்சி இல்லா இடத்தில் எதுவும் விளங்காது.
- நல்ல காரியங்கள் தாமாக வந்து சேர்வதில்லை.
- எதுவும் தாமாக வருவதில்லை, எல்லாவற்றையும் தேடியே ஆக வேண்டும்.