பாடம் 24. மழைநீர்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 24 – மழைநீர் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. விண் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________
- மண்
- பொன்
- வானம்
- மேகம்
விடை : மண்
2. வானின் அமுதம் இச்சொல் குறிப்பது ________
- அமிழ்தம்
- அமிர்தம்
- சோறு
- மழைநீர்
விடை : மழைநீர்
3. மழை + நீர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- மழையின் நீரு்
- மழைனீர்
- மழைநீர்
- மழைணீர்
விடை : மழைநீர்
4. உயர்வு இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ________
- தாழ்வு
- உழைப்பு
- வாழ்வு
- வியப்பு
விடை : தாழ்வு
அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுவேன்
- பொழியும் – பெய்யும்
- செம்மை – சிறப்பு
- ஓங்குதல் – வளரவே
- இல்லம் – வீடு
பொருத்துவேன்
1. நாடும் வீடும் | வேண்டுமே |
2. வளமும் நலமும் | சேமிப்போம் |
3. இல்லத்தின் நீரை | மழையாகுமே |
4 .உற்ற துணை | செழிக்கவே |
5. உயிராய் எண்ண | நிறைந்திட |
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – இ, 5 – அ |
ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுவேன்
செல்லுதே – சேமித்தே | ஓடியே – இல்லையே – தேவையே |
போலவே – செழிக்கவே – ஓங்கவே | வேண்டுமே – தீர்ப்பமே – செய்வமே |
2. முதலெழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுவேன்
பொன்னும் – பொழியும் | விண்ணின் – வியப்பு |
குளங்கள் – குருவி | மழைநீர் – மண்ணில் |
வானின் – வாழ்வைச் | உழைப்பின் – உயர்வாய் |
உழவும் – உற்ற |
இரண்டாவது எழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுஎழுதுவேன்
- மனிதர் – இனிவரும்
- மழைநீர் – உழைப்பின்
- நாடும் – வீடும்
சேர்ந்துவரும் சொற்களைப் பாடலிருந்து எடுத்து எழுதுவேன்
வீடும் – நாடும் | உழவும் – தாெழிலும் |
வளமும் – நலமும் | ஓடும் – முழுதும் |
பொன்னும் பொருளும் |
எதிர்ச்சொல் எழுதுவேன்
1. பனிக்கட்டி குளிர்ச்சியாய் இருக்கும். நெருப்பு வெப்பமாய் இருக்கும். | ![]() |
குளிர்ச்சியாய் x வெப்பமாய் |
2. பூனை மேசையின் மேல் இருந்தது. எலி மேசையின் கீழ் இருந்தது | ![]() |
மேல் x கீழ் |
3. தங்கை வெளியே சென்றாள். அண்ணன் உள்ளே வந்தான் | ![]() |
வெளியே x உள்ளே |
4. சிறுவன் பேருந்தில் ஏறினான். சிறுமி பேருந்திலிருந்து இறங்கினாள் | ![]() |
ஏறினான் x இறங்கினாள் |
முதல் எழுத்து ஒன்றி வரும் சொற்களை எடுத்து எழுதுவேன்
குட்டி யானை
அழகுக் குட்டி யானை
அசைந்து வரும் யானை
குட்டி வாலை ஆட்டி
குதித்து வரும் யானை
தேங்காய் எங்கே என்று
தேடி வந்த யானை
அழகு – அசைந்து | குட்டி – குதித்து |
தேங்காய் – தேடி | எங்கே – என்று |
இரண்டாம் எழுத்து ஒன்றி வரும் சொற்களை எடுத்து எழுதுவேன்
சிட்டுக்குருவி
சிட்டுக் சிட்டுக் குருவிக்கு
பட்டுப் பட்டு இறகுகள்
எங்கு பறந்து செல்கிறாய்?
அங்கு நானும் வருகிறேன்!
சின்ன அழகுக் குருவியே
தின்ன எதுவும் வேண்டுமா?
செல்லம் உனக்கு நானுமே
நெல்லை அள்ளித் தருகிறேன்
சிட்டு – பட்டு | எங்கு – அங்கு |
சின்ன – தின்ன | செல்வம் – நெல்லை |
கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுவோம்
|
|
செடிகள் | கொடிகள் | மரங்கள் |
கத்திரிக்காய் செடி | பூசணிக்கொடி | தென்னைமரம் |
மிளகாய் செடி | திராட்சைகொடி | வாழைமரம் |
தக்காளி செடி | பாகற்காய் கொடி | ஆலமரம் |
சொல்லக் கேட்டு எழுதுக
1. மழைநீர் | 2. வெள்ளம் | 3. குளங்கள் |
4. தண்ணீர் | 5. கொடை | 6. வியர்வை |
7. ஓங்குதல் | 8. போற்றுவோம் |
8. இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் படித்து பார்ப்போம். விடுபட்ட இடத்தை நிரப்பி மகிழ்வோம்.
மாலா போலாமா? | குடகு |
யானை பூனையா? | பாப்பா |
மேளதாளமே | தாத்தா |
மாறுமா | காக்கா |
5. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “தேக்குதல்” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ______________
- நீக்குதல்
- தெளிதல்
- சேமித்தல்
- பாதுகாத்தல்
விடை : நீக்குதல்
2. “வானின் அமுதம்” இச்சொல் குறிப்பது ____________
- அமிழ்தம்
- அமிர்தம்
- சோறு
- மழைநீர்
விடை : மழைநீர்
3. “மழையாகுமே” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
- மழை + யாகுமே
- மழையாய் + யாகுமே
- மழை + ஆகுமே
- மழையாய் + ஆகுமே
விடை : மழை + ஆகுமே
4. “நினைத்தல்” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ___________________
- கூறுதல்
- எண்ணுதல்
- மறத்தல்
- நனைத்தல்
விடை : மறத்தல்